பெண்கள் சனநாயக முன்னணி
உருவாக்கம் | 2018 |
---|---|
வகை | பெண்கள் அமைப்பு |
நோக்கம் | சமுதாயப் பெண்ணியம் |
தலைமையகம் | |
பொது செயலாளர் | அல்யா பக்சல் |
தலைவர் | இசுமத் சாஜகான்[1] |
வலைத்தளம் | wdfpk |
பெண்கள் சனநாயக முன்னணி (WDF) பாக்கித்தானை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன சோசலிச - பெண்ணிய அமைப்பாகும். இது மத்திய தலைநகர் இசுலாமாபாத்தில் மார்ச் 8, 2018 அன்று சிந்து, பலுசிசுதான், பஞ்சாப் மற்றும் கைபர்-பக்துன்க்வாவிலிருந்து நூற்றுக்கணக்கான பிரதிநிதிகளால் நிறுவப்பட்டது.
பாக்கித்தான் பன்னாட்டு மகளிர் தின கொண்டாட்டத்தை உண்மையான நடவடிக்கையாக மாற்ற ஒரு சோசலிச பெண்ணிய இயக்கத்தை உருவாக்க நாடு முழுவதும் உள்ள பெண்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தை பெண்கள் ஜனநாயக முன்னணி கொண்டுள்ளது.இக்கட்சியின் அறிக்கை மற்றும் அரசியலமைப்பு முதலாளித்துவம், ஆணாதிக்கம், மத பாசிசம், தேசிய ஒடுக்குமுறை மற்றும் பாக்கித்தானின் சர்வாதிகார அரசியல் அமைப்புக்கு எதிரான பரந்த அடிப்படையிலான போராட்டத்திற்கு முயற்சிக்கிறது. [2]
பெண்கள் சனநாயக முன்னணி 2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினம் அன்று தொடங்கி வைக்கப்பட்டது. [3] மாணவர்கள், வேலை பார்க்கும் பெண்கள் , அறிஞர்கள், அரசியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் கூடி 2018 ஆம் ஆன்டு பெரும் எண்ணிக்கையிலான அவுரத் அசாதி மார்ச் எனப்படும் பெண்கள் விடுதலைப் பேரணியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
[தொகு]பெண்கள் சனநாயக முன்னணி பாக்கித்தானை தளமாகக் கொண்டு ஒரு பெண்கள் அமைப்பாக இயங்குகிறது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து தொழிலாள வர்க்கப் பெண்களின் மன அல்லது உடல் உழைப்புப் போராட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஒரு சோசலிச-பெண்ணிய மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முன்னணி சனநாயக முறையில் அமைதியான மற்றும் எதிர்ப்பு வழிமுறைகளை ஏற்றுக்கொள்கிறது. [4]
அறக்கட்டளை
[தொகு]2018 ஆம் ஆண்டின் மார்ச்சு 8 அன்று சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தின் போது பெண்கள் சனநாயக முன்னணி முறையாக ஒரு எதிர்ப்பு இயக்கமாக நிறுவப்பட்டது, 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மாகாண அலகுகளின் பிரதிநிதிகளால் இந்த அற்க்கட்டளை மாநாடு இசுலாமாபாத்தில் [5] நடந்தது. பாக்கித்தானில் அவுரத் ஆசாதி பேரணி எனப்படும் பெண்கள் சுதந்திர அணிவகுப்பு நடைபெற அடித்தளமிட்டது. [6]
கருத்தியல்
[தொகு]வன்முறை, பாகுபாடு மற்றும் ஆணாதிக்க ஒடுக்குமுறை, வர்க்கம், பாலினம் மற்றும் தேசத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகியவற்றை ஒழிப்பதை இம்முன்னணியின் ஒரு பகுதியாக கருதுகிறது. முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் மத தீவிரவாதம். பெண்களின் வாழ்வுரிமை, அனைத்து வகையான ஒடுக்குமுறை, முன்னேற்றம் மற்றும் அமைதி ஆகியவற்றிலிருந்து பெண்களின் விடுதலை வரை இக்கட்சி தனது போராட்டத்தைத் தொடர உறுதிபூண்டுள்ளது. பாக்கித்தான் மக்கள் ஜனநாயகத்தை நிறுவ வேண்டும். அவர்களின் சித்தாந்தம் சோசலிச-பெண்ணியமும் பெண்களின் அரசியல் போராட்டங்களின் வரலாறும் ஆகும்.
நிறுவன கட்டமைப்பு
[தொகு]கைபர் பக்துன்க்வா, சிந்து, பஞ்சாப் , இசுலாமாபாத்து என்ற நான்கு தேசிய அலகுகளாக பெண்கள் சனநாயக முன்னணி நாடு முழுவதும் இருக்கும் ஒரு கூட்டாட்சி அமைப்பாகும்; பலுசிசுதான் ஒரு கூட்டாட்சி அலகாகும். சர்ச்சைக்குரிய பிரதேசங்களான கில்கிட்-பால்டிசுத்தான், காசுமீர் ஆகிய பகுதிகளில் அலகுகளை உருவாக்கி இந்த பகுதிகளின் பெண்களை இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குவதையும் இக்கட்சி தன்னுடைய நோக்கமாகக் கொண்டுள்ளது. [7]
பின்வரும் பின்னிப் பிணைந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்புகளை இந்த கட்சி கொண்டுள்ளது:
- காங்கிரசு: அரசியல் மற்றும் கருத்தியல் முடிவெடுக்கும் ஒரு அரசியல் அமைப்பு
- கவுன்சில்: தினசரி விவகாரங்களுக்கான முடிவுகளை செயல்படுத்த "அமைச்சரவை" என்று அழைக்கப்படும் ஒரு செயலகம் கொண்ட ஒரு அமைப்பு.
இந்த கட்டமைப்புகள் மாவட்ட, கூட்டாட்சி, மாகாணம், தேசியம் என்ற மூன்று நிலைகளில் உள்ளன.
தலைமைத்துவம்
[தொகு]பெண்கள் சனநாயக முன்னணியின் மத்திய அமைச்சரவை ஐந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது:
தலைவர்: இசுமத் சாஜகான் [6]
பொதுச் செயலாளர்: ஆல்யா பக்சால் [8]
செயலாளர் தகவல் மற்றும் வெளியீடு: தூபா சையத் [2]
செயலாளர் கல்வி மற்றும் கலை: சாசாதி உசைன் [7]
செயலாளர் நிதி: லுப்னா கிஃபாயத்
சலீலா ஐதர் இம்முன்னணியின் F மாகாண தலைவர். [7] இவர் குவெட்டாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். , பலூசிசுதான் பிபிசியின் 100 பெண்கள் பட்டியலில் பெயரிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு செல்வாக்கு மிகுந்த பெண்மணிகள் என்று இப்பட்டியல் தொகுக்கப்பட்டது. பிபிசி [9] [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Women's Democratic Front launched to build a vibrant, socialist and a feminist movement". Daily Times. 9 March 2018. https://dailytimes.com.pk/212473/womens-democratic-front-launched-to-build-a-vibrant-socialist-and-a-feminist-movement/.
- ↑ 2.0 2.1 "WDF demands to repeal ban on media coverage of KP's girls' schools | Pakistan Today". www.pakistantoday.com.pk. https://www.pakistantoday.com.pk/2018/10/30/wdf-demands-to-repeal-ban-on-media-coverage-of-kps-girls-schools/.
- ↑ "Reflection of increasing awareness, acceptance of women's rights" (in en). www.thenews.com.pk. https://www.thenews.com.pk/print/290051-reflection-of-increasing-awareness-acceptance-of-women-s-rights.
- ↑ "Women Democratic Front to be launched on March 8". Awami Workers Party, Pakistan. 14 January 2018.
- ↑ "What made Aurat March possible? | Dialogue | thenews.com.pk" (in en). www.thenews.com.pk. https://www.thenews.com.pk/tns/detail/567420-made-aurat-march-possible.
- ↑ 6.0 6.1 "Pakistan – Aurat Azadi March: WDF launched with a pledge to fight patriarchy, social injustice and violence - Europe Solidaire Sans Frontières". www.europe-solidaire.org. http://www.europe-solidaire.org/spip.php?article43474.
- ↑ 7.0 7.1 7.2 "Leadership". Women Democratic Front. Archived from the original on 2019-10-11. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
- ↑ "`Liberal feminism not enough to address social oppression women face` | ePaper | DAWN.COM". https://epaper.dawn.com/DetailImage.php?StoryImage=26_05_2016_153_005.
- ↑ "BBC 100 Women 2019: Who is on the list?". 16 October 2019. https://www.bbc.com/news/world-50042279.
- ↑ "Hazara woman from Pakistan named in BBC's 100 Women of 2019". https://www.geo.tv/latest/251423-hazara-woman-from-pakistan-named-in.