புளுட்டோனியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் ஒற்றைபாசுபைடு[1]
இனங்காட்டிகள்
12680-25-0
பண்புகள்
PPu
வாய்ப்பாட்டு எடை 274.97
தோற்றம் கருப்பு நிற படிகங்கள்
அடர்த்தி 10.08 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புளுட்டோனியம் பாசுபைடு (Plutonium phosphide) PuP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3]

தயாரிப்பு முறை[தொகு]

தூளாக்கப்பட்ட புளுட்டோனியத்துடன் மிகையளவு பாசுபரசை சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து வினைபுரியாத பாசுபரசை காய்ச்சி வடித்தால் புளுட்டோனியம் பாசுபைடு கிடைக்கிறது.:[4]

பாசுபீனை சூடுபடுத்தப்பட்ட புளுட்டோனியம் ஐதரைடு மீது செலுத்தினாலும் புளுட்டோனியம் பாசுபைடு கிடைக்கிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5660 nm, Z = 4, என்ற அலகு அளபுருக்களுடன் சோடியம் குளோரைடு வகை கட்டமைப்பில் புளுட்டோனியம் பாசுபைடு கனசதுர வடிவத்தில் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lam, D. J.; Fradin, F. Y.; Kruger, O. O. (10 November 1969). "Magnetic Properties of Plutonium Monophosphide" (in en). Physical Review 187 (2): 606–610. doi:10.1103/PhysRev.187.606. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-899X. https://archive.org/details/sim_physical-review_1969-11-10_187_2/page/606. 
  2. Nuclear Science Abstracts (in ஆங்கிலம்). Oak Ridge Directed Operations, Technical Information Division. 1969. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  3. Fundamental Nuclear Energy Research (in ஆங்கிலம்). Atomic Energy Commission. 1964. p. 235. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  4. Reactor Fuel Processing (in ஆங்கிலம்). U.S. Argonne National Laboratory. 1964. p. 188. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  5. NBS Monograph (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1959. p. 65. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  6. Gorum, A. E. (10 February 1957). "The crystal structures of PuAs, PuTe, PuP and PuOSe". Acta Crystallographica 10 (2): 144–144. doi:10.1107/S0365110X5700047X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளுட்டோனியம்_பாசுபைடு&oldid=3520379" இலிருந்து மீள்விக்கப்பட்டது