உள்ளடக்கத்துக்குச் செல்

லியுதேத்தியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியுதேத்தியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்லியுத்தேத்தியம்
இனங்காட்டிகள்
12032-05-2
EC number 234-761-7[1]
InChI
  • InChI=1S/Lu.P
    Key: PQFNNANPDJBCCR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82822
  • [Lu+3].[P-3]
பண்புகள்
LuP
வாய்ப்பாட்டு எடை 205.94[2]
தோற்றம் கருப்பு படிகங்கள்
அடர்த்தி 8,1
கரைசல்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

லியுதேத்தியம் பாசுபைடு (Lutetium phosphide) என்பது LuP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[3][4] லியுத்தேத்தியமும் பாசுபரசும் சேர்ந்து வினைபுரிந்து லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது. கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் கரையாது.

தயாரிப்பு

[தொகு]

லியுத்தேத்தியத்தை சிவப்பு பாசுபரசுடன் சேர்த்து மந்த வாயுச் சூழலில் சூடுபடுத்தினால் லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது.

லியுத்தேத்தியத்தை பாசுபீனுடன் சேர்த்து வினைப்படுத்தினாலும் இச்சேர்மம் உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

F m3m என்ற இடக்குழுவில் a = 0.5533 nm, Z = 4 என்ற அலகுக் கூடுகளுடன் கருப்பு நிறத்தில் கனசதுரப் படிகங்களாக லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது.[5]

காற்றில் நிலைப்புத்தன்மையுடன் உள்ளது. தண்ணீரில் கரையாது. நைட்ரிக் அமிலத்துடன் தீவிரமாக வினைபுரிகிறது.

பயன்கள்

[தொகு]

சீரொளி இருமுனையங்களில், உயர் அலைவரிசை பயன்பாடுகளில், உயர் மின்னளவுகளில் இது குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.[6]

கதிர்வீச்சை உறிஞ்சும் திறன் காரணமாக காமா கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. EINECS: European Inventory of Existing Commercial Chemical Substances (in ஆங்கிலம்). Office for Official Publications of the European Communities. 1987. p. 591. ISBN 978-92-825-7507-9. Retrieved 12 December 2021.
  2. "Landolt-Börnstein Substance / Property Index". lb.chemie.uni-hamburg.de. Retrieved 12 December 2021.
  3. Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. Office of Toxic Substances. 1980. p. 176. Retrieved 12 December 2021.
  4. "Lutetium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 12 December 2021.
  5. Singh, Sanjay Kumar (2019). High Pressure Properties of Lutetium Monopnictides (LuX, X = N, P, As) Theoretical Study at High Pressure : Phase Transition, Electronic and Thermal Properties of LuN, LuP and LuAs Compounds (1. Auflage ed.). Saarbrücken: Scholar's Press. ISBN 9786138913924. Archived from the original on 12 டிசம்பர் 2021. Retrieved 12 December 2021. {{cite book}}: Check date values in: |archivedate= (help)
  6. "CAS 12032-05-2 Lutetium Phosphide - Alfa Chemistry". alfa-chemistry.com. Retrieved 12 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியுதேத்தியம்_பாசுபைடு&oldid=3611045" இலிருந்து மீள்விக்கப்பட்டது