பிலிம்பேர் விருதுகள்
பிலிம்பேர் விருதுகள் | |
---|---|
தற்போதைய: 65th Filmfare Awards | |
விருதுக்கான கோப்பை | |
விளக்கம் | திரைப்படத்துறை சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் விருதுகள் |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | 21 மார்ச்சு 1954 |
கடைசியாக வழங்கப்பட்டது | 15 பெப்ரவரி 2020 |
இணையதளம் | Filmfare |
Television/radio coverage | |
நெட்வொர்க் | சோனி தொலைக்காட்சி (2000-2017) கலர்ஸ் தொலைக்காட்சி (2018-முதல்) |
பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) என்பது 1954 ஆம் ஆண்டு முதல் பிலிம்பேர் என்ற இதழால் இந்தி மொழி திரைப்படத் துறையை சார்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் ஒரு பிரபலமான விருது விழா ஆகும்[1][2][3]
இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விருதுகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன. 2000 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கும் விழாவின் பதிப்பு சோனி என்ற தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு முதல் கலர்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. 65 வது பிலிம்பேர் விருதுகள் நிகழ்வு 2020 பிப்ரவரி 16 ஆம் தேதி குவகாத்தியின் சருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.[4]
பிலிம்பேர் விருதுகள் பெரும்பாலும் இந்தி திரைப்படத் துறையின் அமெரிக்காவில் உள்ள அகாதமி விருதுகளுக்கு சமமானவை என்று குறிப்பிடப்படுகின்றன. 1990 களின் நடுப்பகுதி வரை, மும்பையில் பல விருதுகள் வழங்கும் வரை பிலிம்பேர் விருதுகள் பாலிவுட்டில் முதன்மையான மற்றும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளாக இருந்தன. ஆனால் 2000களில் இருந்து பார்வையாளர்களிடம் மிகமோசமான எதிர்மறை கருத்துக்களை பெற்று வருகின்றது.
இதன் பிரிவாக தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், பிலிம்பேர் மராத்தி விருதுகள், கிழக்கு பிலிம்பேர் விருதுகள் போன்ற திரைத்துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mishra, Vijay, Bollywood Cinema: A Critical Genealogy (PDF), Victoria University of Wellington, p. 9, பார்க்கப்பட்ட நாள் 2011-02-24
- ↑ Mehta, Monika (2005), "Globalizing Bombay Cinema: Reproducing the Indian State and Family", Cultural Dynamics, 17 (2): 135–154 [145], எண்ணிம ஆவணச் சுட்டி:10.1177/0921374005058583
- ↑ Boltin, Kylie (Autumn 2003), "Saathiya: South Asian Cinema Otherwise Known as 'Bollywood'", Metro Magazine: Media & Education Magazine (136): 52–5, பன்னாட்டுத் தர தொடர் எண் 0312-2654
- ↑ "Stage set for 65th Filmfare night in Guwahati". in.news.yahoo.com (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.
- ↑ "Filmfare Marathi: Nominations are out - Times of India". The Times of India.