பிரவீன் கே. எல்
பிரவீன் கே. எல். Praveen K. L. | |
---|---|
பணி | திரைப்படத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்றுவரை |
பிரவீன் கே.எல். (Praveen K.L.) என அழைக்கப்படும் குச்சிப்புடி லதா பிரவீன் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். ஆந்திரா மாநிலத்தில் பிறந்த இவர் முக்கியமாகத் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார்.
ஆரம்ப வாழ்க்கையும் படத்தொகுப்பு பணியும்
[தொகு]பிரவீன் தன் தந்தையுடன் சேர்ந்து ஈநாடு தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாரிப்பு துறையில் பகுதி நேர படத்தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். பிரவின் ஈடிவி குழுமத்தின் செய்திகளையும், அன்வேசிதா போன்ற நெடுந்தொடரையும் படத்தொகுப்பு பணியை செய்துள்ளார்..[1]
பாலு மகேந்திரா இயக்கிய தொலைக்காட்சித் தொடரான கதைநேரம் தொடருக்குப் பின், என்.பி.ஸ்ரீகாந்துடன் சேர்ந்து நிறைய வெற்றிபெற்ற தமிழ்ப் படங்களைத் தொகுத்துள்ளார். இதில் வெங்கட்பிரபு இயக்கிய படங்களும் அடங்கும். 4 மொழிகளில் 50 இற்கும் மேற்பட்ட படங்களை முடித்துள்ளார். சென்னையையும் சிங்கப்பூரையும் அடித்தளமாக கொண்டுள்ளார்.[2][3] 2008ம் ஆண்டிற்கான தமிழ் மாநில திரைப்பட விருதான சிறந்த திரைபட தொகுப்பாளருக்கான விருதை சரோஜா படத்திற்காக இந்த இரட்டையர்கள் வாங்கினர்.[4] இவர் ஆரண்ய காண்டம் படத்திற்காக தேசிய விருதிலும் சிறந்த திரைப்பட தொகுப்பாளர் விருதினைப் பெற்றார்.
திரைப்படங்கள்
[தொகு]- 2007: சென்னை 600028
- 2008: சரோஜா
- 2009: செய்ர்டெய்ன் சாப்டர்ஸ் (குறும்படம்)
- 2009: குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்
- 2009: வெடிகுண்டு முருகேசன்
- 2009: கந்தசாமி
- 2009: கஸ்கோ (தெலுங்கு)
- 2010: நாணயம்
- 2010: கோவா
- 2010: குருசேட்திரம் -24 ஹவர்ஸ் ஆங்கர்
- 2010: காதல் சொல்ல வந்தேன்
- 2010: நகரம்
- 2010: கனிமொழி
- 2010: ஒரு நுன்ன கதா
- 2011: பிக்கிள்ஸ்
- 2011: ஆரண்ய காண்டம் (தேசிய விருது சிறந்த படதொகுப்புக்காக கிடைத்தது)
- 2011: மங்காத்தா
- 2012: அரவான்
- 2012: கழுகு
- 2012: செகண்ட் ஷோ (மலையாளம்)
- 2012: கலகலப்பு
- 2012: தடையறத் தாக்க
- 2012: முரட்டுக் காளை
- 2013: மதில் மேல் பூனை
- 2013: அலெக்ஸ் பாண்டியன்
- 2013: தீயா வேலை செய்யணும் குமாரு
- 2013: சம்திங் சம்திங் (தெலுங்கு)
- 2013: வத்திக்குச்சி
- 2013: என்றென்றும் புன்னகை
- 2013: தில்லுமுல்லு
- 2013: பிரியாணி
- 2013: தெரியாம உன்னை காதலிச்சுட்டேன்
- 2013: என்னமோ நடக்குது
- 2013: சிகரம் தொடு
- 2013: விழா
- 2013: வடகறி
- 2013: நீலம்
- 2013: காவிய தலைவன்
- 2013: திருடன் போலீஸ்
- 2013: நாய்கள் ஜாக்கிரதை
- 2013: மெட்ராஸ்
- 2013: அதிதி
- 2014: அஞ்சல
- 2014: காவல்
- 2015: மாசு என்கிற மாசிலாமணி
- 2015: கொம்பன்
- 2015: பசங்க 2
- 2016: உள்குத்து
- 2016: மருது
- 2016: தோழா
- 2016: இது நம்ம ஆளு
- 2016: கபாலி
- 2016: ருக்மணி வண்டி வருது
- 2016: மொட்ட சிவா கெட்ட சிவா
- 2016: சென்னை 2 சிங்கப்பூர்
- 2016: விஜய் 60
- 2016: கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் (தாமதம்)
- 2016: மத கத ராஜா (தாமதம்)
- 2016: வா டீல் (தாமதம்)
- 2016: சென்னை 600028 II
- 2017: ஒரு கிடாயின் கருணை மனு
- 2019: ஜீவி
- 2021: மாநாடு
- 2022: ஜீவி-2
- 2023: வாரிசு
- 2023: பத்து தல
- 2023: ஹரிஹர வீர மல்லு (தெலுங்கு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ P. 10 Eenadu News, Award Winning Editor, Eenadu Cinema, Friday 9 March 2012.
- ↑ Editor Praveen has his hands full – Tamil Movie News. IndiaGlitz. Retrieved on 2011-12-13.
- ↑ What makes 'Saroja' so special? – Tamil Movie News. IndiaGlitz. Retrieved on 2011-12-13.
- ↑ Pickles. Tantrainc.sg. Retrieved on 2011-12-13.