பிசுமத்தைடு
Appearance
பிசுமத்தைடு (Bismuthide) என்பது Bi3− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அயனியாகும்.
பிசுமத்தைடுகள் அதிக நேர்மின்னூட்டம் கொண்ட தனிமங்களைக் கொண்ட பிசுமத்தின் சேர்மங்கள் ஆகும். இவை பகுதியளவு உலோகம் மற்றும் பகுதியளவு அயனிப் பிணைப்புகளைக் கொண்ட இடை உலோக கலவைகளாக உள்ளன.[1] பெரும்பாலான பிசுமத்தைடுகள் திறமையான பொதித்தல் ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றன. இதனால் அடர்த்தி நிரம்பிய கட்டமைப்புகளாக மாறுகின்றன. இப்பண்பு உலோகங்களிடை சேர்மங்களின் சிறப்பியல்பு ஆகும்.
ஓல்மியம் பிசுமத்தைடு, டிசிப்ரோசியம் பிசுமத்தைடு, நியோடிமியம் பிசுமத்தைடு, பிரசியோடைமியம் பிசுமத்தைடு ஆகியன பிசுமத்தைடு சேர்மங்களூக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "bismuthide". Your Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2020-04-07.