உள்ளடக்கத்துக்குச் செல்

பாமிர் மலைகள்

ஆள்கூறுகள்: 38°30′N 73°30′E / 38.5°N 73.5°E / 38.5; 73.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாமிர் மலைகள்
பாமிர் மலைகள்
உயர்ந்த புள்ளி
உச்சிகொங்கர் தாக்கா
உயரம்7,649 m (25,095 அடி)
பட்டியல்கள்
ஆள்கூறு38°35′39″N 75°18′48″E / 38.59417°N 75.31333°E / 38.59417; 75.31333
புவியியல்
நாடுதஜிகிஸ்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான், ஆப்கானித்தான் and இரண்டு சீனாக்கள்[upper-alpha 1]
மாகாணங்கள்கோருனோ-பதகுசான் தன்னாட்சி மாகாணம், ஒசு பிராந்தியம், படாக்சான் மாகாணம், சித்ரால் மாவட்டம் & வடக்கு நிலங்கள், பாக்கித்தான் and சிஞ்சியாங்[upper-alpha 2]
தொடர் ஆள்கூறு38°30′N 73°30′E / 38.5°N 73.5°E / 38.5; 73.5

பாமிர் மலைகள் (Pamir Mountains) நடு ஆசியாவில் இமயமலையையும் காரகோரம், இந்துகுஷ் மலைத் தொடர்களை இணைக்கும் மலைத்தொடராகும். பாமீர் மலையில் அமைந்த பாமிர் பீடபூமி 7,649 மீட்டர் (25,095 அடி) உயரத்தில் அமைந்துள்ளதால் இதனை உலகின் கூரை என்றும் பாமிர் முடிச்சு என்றும் அழைக்கப்படுகிறது.[1][2] இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவின், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த இராணுவப் பாசறைகள் மற்றும் இராணுவ விமான தளங்கள், பாமிர் மலைத்தொடரின் சியாச்சின் மற்றும் அக்சாய் சின் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

பாமிர் மலைத்தொடரின் அமைவிடத்தைச் சுருங்க விளக்க இயலாதபடி, விவாதத்திற்குரிய பொருளாகவே உள்ளது.[3] பெரும்பாலான பாமிர் மலைத்தொடர்கள் தாஜிக்ஸ்தானின் கோர்னோ-படாக்சான் தன்னாட்சி பிராந்தியத்தியத்தில் அமைந்துள்ளது. பாமிர் மலைத்தொடரின் வடக்கில் கிர்கிஸ்தானின் அலாய் சமவெளியுடனும் மற்றும் தியான் ஷான் மலைத்தொடர்களுடனும், தெற்கே ஆப்கானித்தானின் இந்துகுஷ் மலைத்தொடருடனும், கிழக்கே சீனாவின் கொங்கூர் தாக் மலைத்தொடர்களுடனும் இணைந்து காணப்படுகிறது.[4].

புவியியல்

[தொகு]
கி மு 100இல் பாமிர் மலை

பாமிர் மலைத்தொடரின் மேற்கில் ஏழாயிரம் மீட்டருக்கும் அதிக உயரமுடைய இஸ்மொயில் சொமொனி கொடிமுடி , ஸ்டாலின் கொடிமுடி , லெனின் கொடுமுடி என மூன்று உயரமான கொடிமுடிகள் உள்ளது.[5] பாமிர் மலைத்தொடரின் கிழக்கில், சீனாவின் பகுதியில் 7649 மீட்டர் உயரமுடைய கொங்கூர் தாக் எனும் கொடிமுடி அமைந்துள்ளது.

அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் துருவப் பகுதிகளுக்கு வெளியே பாமிர் மலைத்தொடரில் அதிக நீளமான உறைபனி மலைகள், பாமிர் மலைத்தொடரில் உள்ளது. அவற்றுள் பெட்சாங்கோ உறைபனிமலைத் தொடர் 77 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பாமிர் மலைத்தொடரின் காரகோரம் பகுதியில் சியாச்சென் பனியாறு 76 கிலோ மீட்டர் நீளமும், பிஃபோ பனியாறு 67 கிலோ மீட்டர் நீளமும், பால்தொரோ பனியாறு 63 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது.

தட்ப வெப்பம்

[தொகு]
இளவேனிற் காலத்தில் பாமிர் மலைத்தொடர்

ஆண்டு முழுவதும் பனிபடந்திருக்கும் பாமிர் மலைத்தொடரில் நீண்ட கடுமையான குளிர்காலமும், குறுகிய மிக இதமான வெப்ப காலமும் கொண்டது. ஆண்டிற்கு 130 மில்லி மீட்டர் அளவு பொய்யும் மழையினால், பாமிர் பீடபூமியின் மேய்ச்சல் புல்வெளி நிலங்கள் பயன் அடைகிறது.[6]

பொருளாதாரம்

[தொகு]

பாமிர் மலைத்தொடரின் மேற்கில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளது. மேலும் ஆடு வளர்ப்பு தொழில் இப்பகுதியின் முதன்மை வருவாய் ஈட்டித் தரும் தொழிலாக உள்ளது.

ஆய்வுப் பயணம்

[தொகு]
  • 1868 முதல் 1880 முடிய பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது பாமிர் மலைதொடரின் பஞ்ச் பகுதியை இந்தியர்கள் இரகசியமாக ஆய்வு செய்தனர்.
  • 1871 முதல் 1893 முடிய பல ருசிய நாட்டு இராணுவ-அறிவியலாளர்கள் பாமிர் மலைத்தொடர்கள் குறித்த வரைபடத்தை தயாரித்தனர்.
  • 1892இல் ருசிய நாட்டு இராணுவத்தின் படையணி ஒன்று பாமிர் மலையில் உள்ள முர்காப் மாவட்டத்தில் முகாமிட்டது.
  • 1928இல் சோவியத்-ஜெர்மன் ஆய்வாளர்கள் பாமிரின் பெட்சாங்கோ கொடுமுடியை அளவிட்டு வரைபடம் தயாரித்தனர்.

பாமிர் சமவெளி

[தொகு]
பாமிர் மலைத் தொடர், நாசாவின் செய்மதிப் படம், ஏப்ரல் 2012

நான்கு புறங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பாமிர் மேட்டு நிலம் U வடிவம் கொண்டது. இங்குள்ள உறைபனிகள் உருகும் போது கற்களால் ஆன மேட்டு நிலப்பகுதியாகும்.

பெரிய பாமிர் சமவெளி நிலங்கள் சோர்குல் ஏரியால் சூழப்பட்டது. பெரிய பாமிர் சமவெளியின் கிழக்கில், வாகன் எனுமிடத்திலிருந்து தூரக் கிழக்கில் சிறிய பாமிர் சமவெளி அமைந்துள்ளது.[7]

பாமிர் மலைத்தொடரில் பாமிர் ஆறு தென்மேற்கில் பாய்கிறது.

கண்டுபிடிப்புகள்

[தொகு]

1980ஆம் ஆண்டில் தரமான சுடர் விடும் நவரத்தினக் கற்கள் பாமிர் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து

[தொகு]
எம்41 நெடுஞ்சாலை

பாமிர் நெடுஞ்சாலை உலகில் இரண்டாவது உயரமான பன்னாட்டுச் சாலையாகத் திகழ்கிறது. இந்நெடுஞ்சாலை தாஜிக்ஸ்தானின் துஷான்பே நகரத்திலிருந்து முதல் கிர்கிஸ்தானின் ஓஷ் நகரம் வரை கோர்னோ-படாக்ஷான் தன்னாட்சி பிரதேசம் வழியாகச் செல்கிறது. பாமிர் மலைத்தொடர்களை கடந்து பட்டுப்பாதைகள் செல்கிறது.[8]

சுற்றுலா

[தொகு]

சீனாவின் கிழக்கு பாமிர் மலைத் தொடர் மற்றும் தாஜிக்ஸ்தானின் பாமிர் மலைத் தொடர் பகுதிகளில் மலையேற்றப் பயிற்சியாளர்களுக்கு உரிய சுற்றுலா தலமாகும்.[9][10]

போர்த் தந்திர நிலை

[தொகு]
இஸ்மொயில் சொமொனி கொடுமுடி (கம்யுனிசம் கொடிமுடி)
கம்யுனிசம் கொடுமுடியில் மலை ஏறுபவர்கள், 1978

கிழக்கின் சீனாவின் பண்டைய தலைநகரம் ஜியாங் நகரத்தையும், மேற்கே கஷ்கர் நகரத்தையும் இணைக்கும், பாமிர் மலைத்தொடர் வழியாகச் செல்லும் 2600 கிலோ மீட்டர் நீளமுள்ள பட்டுப்பாதை வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருந்த காலத்தில், பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு வழிகோலியது.[11] பாமிர் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் மற்றும் அக்சாய் சின் பகுதிகளின் உரிமை குறித்து இந்தியா - பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது. பாமிர் மலைத்தொடர்களில் சீனா, இந்தியா, உருசியா மற்றும் அமெரிக்கா நாடுகள் தங்கள் இராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளது.[12][13]

குறிப்புகள்

[தொகு]
  1. See also One China and the political status of Taiwan.
  2. Also claimed by the தைவான் as part of Sinkiang Province.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Encyclopedia Britannica 11th ed. 1911 பரணிடப்பட்டது 2016-04-23 at the வந்தவழி இயந்திரம்: PAMIRS, a mountainous region of central Asia...the Bam-i-dunya ("The Roof of the World"); The Columbia Encyclopedia, 1942 ed., p.1335: "Pamir (Persian = roof of the world)"; The Pamirs, a region known to the locals as Pomir – “the roof of the world".
  2. Social and Economic Change in the Pamirs, pp. 13-14, by Frank Bliss, Routledge, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-30806-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-30806-9: Pamir = a Persian compilation of pay-I-mehr, the "roof of the world".
  3. According to the Big Soviet Encyclopedia "The question of the natural boundaries of Pamir is debatable. Normally Pamir is regarded as covering the territory from Trans-Alay Range to the North, Sarykol Range to the East, Lake Zorkul, Pamir River, and the upper reaches of Panj River to the South, and the meridional section of the Panj valley to the West; to the north-west Pamir includes the eastern parts of Peter the Great and Darvaz ranges."
  4. N. O. Arnaud, M. Brunel, J. M. Cantagrel, P. Tapponnier (1993). "High cooling and denudation rates at Kongur Shan, Eastern Pamir (Xinjiang, China)". Tectonics Vol. 12 No. 3. American Geophysical Union Publications. pp. 1335–1346. பார்க்கப்பட்ட நாள் 2015-05-02.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. Tajikistan: 15 Years of Independence, statistical yearbook, Dushanbe, 2006, p. 8, in Russian.
  6. Mughal, Muhammad Aurang Zeb. 2013. "Pamir Alpine Desert and Tundra." Robert Warren Howarth (ed.), Biomes & Ecosystems, Vol. 3. Ipswich, MA: Salem Press, pp. 978-980.
  7. Aga Khan Development Network (2010): Wakhan and the Afghan Pamir p.3 பரணிடப்பட்டது 2011-01-23 at the வந்தவழி இயந்திரம்
  8. "Official Website of Pamir Travel". Pamir Travel. Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2007-08-03.
  9. "The Pamir Mountains of Tajikistan". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2015-01-08.
  10. Isaacson, Andy (17 December 2009). "Pamir Mountains, the Crossroads of History". The New York Times. Archived from the original on 2014-08-11.
  11. "''Silk Road, North China'', C.Michael Hogan, the Megalithic Portal, ed. A. Burnham". Megalithic.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2009-08-10.
  12. "The West Is Red". Time. Archived from the original on 2009-02-11. பார்க்கப்பட்ட நாள் 2007-08-26.
  13. "Huge Market Potential at China-Pakistan Border". China Daily. பார்க்கப்பட்ட நாள் 2007-08-26. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Curzon, George Nathaniel. 1896. The Pamirs and the Source of the Oxus. Royal Geographical Society, London. Reprint: Elibron Classics Series, Adamant Media Corporation. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-5983-8 (pbk; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-3090-2 (hbk).
  • Gordon, T. E. 1876. The Roof of the World: Being the Narrative of a Journey over the high plateau of Tibet to the Russian Frontier and the Oxus sources on Pamir. Edinburgh. Edmonston and Douglas. Reprint by Ch’eng Wen Publishing Company. Taipei. 1971.
  • Toynbee, Arnold J. 1961. Between Oxus and Jumna. London. Oxford University Press.
  • Wood, John, 1872. A Journey to the Source of the River Oxus. With an essay on the Geography of the Valley of the Oxus by Colonel Henry Yule. London: John Murray.
  • Horsman, S. 2002. Peaks, Politics and Purges: the First Ascent of Pik Stalin in Douglas, E. (ed.) Alpine Journal 2002 (Volume 107), The Alpine Club & Ernest Press, London, pp 199–206.
  • Leitner, G. W. 1890. Dardistan in 1866, 1886 and 1893: Being an Account of the History, Religions, Customs, Legends, Fables and Songs of Gilgit, Chilas, Kandia (Gabrial) Yasin, Chitral, Hunza, Nagyr and other parts of the Hindukush. With a supplement to the second edition of The Hunza and Nagyr Handbook. And an Epitome of Part III of the author’s “The Languages and Races of Dardistan”. First Reprint 1978. Manjusri Publishing House, New Delhi.
  • Strong, Anna Louise. 1930. The Road to the Grey Pamir. Robert M. McBride & Co., New York.
  • Slesser, Malcolm "Red Peak: A Personal Account of the British-Soviet Expedition" Coward McCann 1964
  • Tilman, H. W. "Two Mountains and a River" part of "The Severn Mountain Travel Books". Diadem, London. 1983
  • Waugh, Daniel C. 1999. "The ‘Mysterious and Terrible Karatash Gorges’: Notes and Documents on the Explorations by Stein and Skrine." The Geographical Journal, Vol. 165, No. 3. (Nov., 1999), pp. 306–320.
  • The Pamirs. 1:500.000 – A tourist map of Gorno-Badkshan-Tajikistan and background information on the region. Verlag „Gecko-Maps“, Switzerland 2004 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-906593-35-5)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமிர்_மலைகள்&oldid=4054658" இலிருந்து மீள்விக்கப்பட்டது