பஹுதி அருவி
பாகுதி அருவி | |
---|---|
பருவ காலத்தில் பாகுதி அருவி | |
![]() | |
அமைவிடம் | பாகுதி, மாவ்கஞ்ச், ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
மொத்த உயரம் | 198 மீட்டர்கள் (650 அடி) |
நீர்வழி | நிகாய் (ஓடா) |
பாகுதி அருவி (Bahuti Falls) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டத்தில் உள்ள ஒரு அருவியாகும்.
அருவி
[தொகு]பாகுதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு அருவியாகும். இந்த அருவியானது நிகாய் அல்லது ஓடா என அழைக்கப்படும் கிளை நதியொன்றின் மீது அமைந்துள்ளது. மாவ்கஞ்ச் பள்ளத்தாக்கின் விளிம்பினை நோக்கி பேலான் ஆற்றுடன் கலக்க இருக்கும் பகுதிக்கருகில் இது அமைந்துள்ளது. பேலான் ஆறு என்பது தமசா ஆற்றின் கிளை நதியாகும்.[1][2][3] இதன் உயரம் 198 மீட்டர் (650 அடி) ஆகும். [4][5]
பாகுதி அருவியானது ஆற்றின் புத்துயிர்ப்பு பெறும் முறிவுத்தானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது புத்துயிர்ப்பு பெறும் நதியின் நீளவாக்குச் சரிவினில் ஏற்படும் இடைவெளிகளைக் குறிக்கிறது. தன் போக்கில் ஏற்படும் முறிவுச் சாய்வு நீர் செங்குத்தாக விழும் ஒரு அருவியை உருவாக்க அனுமதிக்கிறது.[6]
காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
[தொகு]ரேவாவானது சற்றேறக்குறைய ஒரு மேட்டுநில நிலவமைப்பைப் பெற்றுள்ளது. பாகுதி பிரபாத் இந்த மேட்டு நிலத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் காணப்படும் விலங்கின வகைகள் கழுதைப்புலி, நீலான், குள்ள நரி, இந்திய உடும்பு, பனங்காடை, இந்திய சாம்பல் இருவாச்சி, வண்ணாத்திக்குருவி போன்றவை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bahuti Waterfall". Travelomy. Archived from the original on 2012-03-25. Retrieved 2011-06-16.
- ↑ "Chitrakoot". MP Tourism. Archived from the original on 26 September 2010. Retrieved 2010-07-01.
- ↑ K. Bharatdwaj (2006). Physical Geography: Hydrosphere. ISBN 9788183561679. Retrieved 2010-07-11.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Sharma, Shri Kamal (2000). Spatial framework and economic development: a geographical perspective. ISBN 9788172111113. Retrieved 2010-07-02.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ K. Bharatdwaj (2006). Physical Geography: Hydrosphere. ISBN 9788183561679. Retrieved 2010-06-28.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ A.Z.Bukhari (2005). Encyclopedia of nature of geography. ISBN 9788126124435. Retrieved 2010-07-11.
{{cite book}}
:|work=
ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]