உள்ளடக்கத்துக்குச் செல்

குள்ள நரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குள்ளநரி
மசாய் மாராவில் ஒரு கருப்பு முதுகு குள்ளநரி.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Carnivora
குடும்பம்:
பேரினம்:
பகுதியில்
இனங்கள்

பொன்னிறக் குள்ளநரி, Canis aureus
பக்கம் கோடிட்ட குள்ளநரி Canis adustus
கருப்பு முதுகு குள்ளநரி Canis mesomelas

வாழ்விட நிலப்படம்.

குள்ள நரி (குறுநரி) நாய்க் குடும்பத்தில் உள்ள நரி இனத்தில் ஒரு வகை ஆகும்.இவை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. இது அனைத்துண்ணி வகையான விலங்கு. பிற விலங்குகள் தின்னாமல் விட்டுச் சென்றவற்றையும் இவை தின்னும். இவை சுமார் 60-75 செ.மீ (2-2.5 அடி) நீளம் இருக்கும், உயரம் 36 செ.மீ (1 அடி 2 அங்குலம்) இருக்கும்.

பெயர்க்காரணம்

[தொகு]

இது நரியை விட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி ( குறுநரி ) என்று பெயர். தியடோர் பாசுக்கரன் தனது சோலை என்னும் வாழிடம் என்னும் நூலில் இதன் மூலப்பெயர் குழி நரி எனவும் இவை வங்கு எனப்படும் வளைகளில் வசித்ததால் குழி நரி எனப்பட்டு பின்னர் மருவி குள்ள நரி என்றாகி விட்டது என்றும் குறிப்பிடுகிறார்[1] இந்த நரியானது சங்க இலக்கியத்தில் கணநரி என்று குறிக்கபட்டுள்ளது. இவை கூட்டமாக வேட்டையாடுவது கணநரி என்ற பெயருக்கு காரணமாக இருக்கலாம் எனப்படுகிறது.[2]

வாழிடங்களும் வாழ்முறையும்

[தொகு]

இவை ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழும்.

உசாத்துணை

[தொகு]
  1. தியடோர் பாஸ்கரன் (2014). சோலை என்னும் வாழிடம். பக். 20, பாலை எனும் வாழிடம்: உயிர்மை பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81975-95-4.{{cite book}}: CS1 maint: location (link)
  2. மறைந்துவரும் ஊளைச் சத்தம், கட்டுரை இந்து தமிழ், 2021 ஏப்பிரல் 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ள_நரி&oldid=3613994" இலிருந்து மீள்விக்கப்பட்டது