பலராமன் (இதழ்)
படிமம்:Balarama Title.gif | |
முதன்மை ஆசிரியர் | ஆ. வி. அரிசங்கர் |
---|---|
முன்னாள் இதழாசிரியர்கள் | என். எம். மோகன் |
வகை | சித்திரக்கதை இதழ் |
இடைவெளி | வாராந்திரி |
நுகர்வளவு | 1,23,196 (ஏபிசி, ஜூலை-திசம்பர் 2017)[1]
|
வெளியீட்டாளர் | வி. சஜீவ் ஜியார்ஜ் |
தொடங்கப்பட்ட ஆண்டு | 1972 |
நிறுவனம் | மலையாள மனோரமா குழுமம் |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கோட்டயம், கேரளா |
மொழி | மலையாளம் |
வலைத்தளம் | Official website |
ISSN | 0975-0339 |
பலராமன் (Balarama) என்பது இந்திய வாராந்திர சித்திரக்கதை இதழாகும். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மலையாள மனோரமா குழுமத்தின் எம்.எம். பப்ளிகேஷன்ஸ் என்ற புத்தக நிறுவனத்தால் மலையாள மொழியில் வெளியிடப்படுகிறது. இது தற்போது இந்தியாவில் அதிகம் வாசிக்கப்படும் 8வது ஆங்கிலமற்ற சித்திரக்கலை இதழாகவும், 5வது அதிகம் படிக்கப்படும் மலையாள சித்திரக்கலை இதழாகவும் இருக்கிறது.[3] இந்தியாவில் அதிகம் படிக்கப்படும் குழந்தைகள் சித்திரக்கலை இதழாகவும் இது உள்ளது.
1972இல் ஒரு மாத இதழாகத் தொடங்கியப் பத்திரிகை நவம்பர் 1984இல் மாதமிருமுறை வெளியாகும் இதழாக மாறியது. இறுதியாக 1999இல் வாராந்திரமாக வெளிவரத் தொடங்கியது.[4] வாராந்திர இதழ் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவருகின்றன. புத்தகத்தின் உள்ளடக்கத்தில் கட்டுக்கதைகள், பாடல்கள், பாரம்பரிய இலக்கியங்கள், பல்வேறு புதிர்கள் போன்றவை உள்ளன.
பலராமன் அமர் சித்ரா கதையுடன் அதன் பல தசாப்த கால கூட்டணிக்குப் பெயர் பெற்றது. பத்திரிக்கையானது அமெரிக்க இதழ்களான டிஸ்னி காமிக்ஸ், ஹென்றி, டென்னிஸ் தி மெனஸ், டோரா தி எக்ஸ்புளோரர், ஸ்பைடர் மேன், பேட்மேன், மாயாவி , மாண்ட்ரேக் தி மேஜீசியன் போன்றவற்றுடன் கூட்டணி சேர்ந்து அவைகளின் படைப்பையும் வெளியிடுகிறது .
மலையாள மனோரமா இந்தியாவில் நேஷனல் ஜியோகிராஃபிக் கிட்ஸ், மனோரமா டெல் மீ ஒய், பலராமன் டைஜஸ்ட், கலிக்குடுக்கா, மேஜிக்பாட், அக்கட் பக்கட், கலரிங் புக்ஸ் அன்ட் பலராமன் அமர் சித்ரா கதை போன்றவற்றை வெளியிடுகிறது.[5]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manorama Online - Media Kit (April, 2018)". advt.manoramaonline.com. Retrieved 2019-07-13.
- ↑ "Manorama Online - Media Kit (April, 2018)". advt.manoramaonline.com. Retrieved 2019-07-13.
- ↑ "Balarama Magazine Kerala - Read Online Balarama Malayala Manorama Magazine". Just Kerala. Retrieved 2020-07-04.
- ↑ "Children's Magazines and Different Childhoods in Kerala". Sahapedia (in ஆங்கிலம்). Retrieved 2020-07-04.
- ↑ "Manorama Online - Media Kit (April, 2018)". advt.manoramaonline.com. Retrieved 2019-07-13.
வெளியிணைப்புகள்
[தொகு]- Official website [1] பரணிடப்பட்டது 2015-04-07 at the வந்தவழி இயந்திரம்