உள்ளடக்கத்துக்குச் செல்

டார்சான் (கதாப்பாத்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டார்சான் (Tarzan) என்பது ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் ஆகும். ஆப்ரிக்க காடுகளில் கான்வளர் குழந்தையாக மாங்னி எனும் குரங்கால் வளர்க்கப்பட்ட மனிதனாகும். எட்கர் ரைசு பர்ரோசு முதன் முதலாக இக்கதாப்பாத்திரத்தை உருவாக்கினார். டார்சன் முதன்முதலில் 1912 ஆம் ஆண்டு ஒரு இதழில் வெளியான டார்சான் ஆப் த ஏப்ஸ் எனும் நாவலில் தோன்றினார். முதன்முதலாக டார்சான் புத்தகத்தில் தோன்றியது 1914 ஆம் ஆண்டு ஆகும். பின்னர் பல புத்தகங்களிலும், இதழ்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் டார்சன் கதாப்பாத்திரம் வரத்தொடங்கியது.

கதாப்பாத்திரத்தின் சுயசரிதை

[தொகு]

குழந்தைப்பருவம்

[தொகு]

டார்சான் பிரித்தானிய நாட்டின் நிலப்பிரபுவான தாய்க்கும், தந்தைக்கும் பிறந்தவர். டார்சானின் தாய் தந்தையர் ஆப்ரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் கலகக்காரர்களால் தனித்து விடப்பட்டவர்கள். டார்சான் குழந்தையாக இருக்கும்பொழுதே அவரின் தாய் இறந்தார். பின்னர் கெர்சாக் எனும் மனிதக் குரங்கால் டார்சானின் தந்தை கொல்லப்பட்டார். பின்னர் கெர்சாக் குரங்கே டார்சானை தத்தெடுத்து வளர்க்கத்தொடங்கியது. அதிலிருந்து டார்சான் கான்வளர் குழந்தையாக வளர்கிறார். இம்மனிதக் குரங்கு வகைகள் மாங்னி என்று அழைக்கப்படுபவை ஆகும். இவை அறிவியல் வரலாற்றில் மிகப் பெரிய மனிதக் குரங்கு இனமாகக் கருதப்படுகின்றது. கெர்சாக் அப்பகுதியிலிருந்த மனிதக்குரங்குகளின் தலைவனாக இருந்தது. காலா டார்சானின் வளர்ப்புத் தாய் குரங்காகும். டார்சானின் பதின்ம வயது வரை நடைபெற்ற கதைகளை எட்கர் ரைசு பர்ரோசு 'ஜங்கிள் டேல்ஸ் ஆப் டார்சான் எனும் புத்தக்கத்தின் ஆறாவது பாகத்தில் எழுதியுள்ளார். டார்சான் என்பது மனிதக் குரங்குகளின் குழுவில் வைத்த அவனது பெயராகும். இதற்கு வெள்ளைத் தோல் என்பது பொருள். இவனது ஆங்கிலப் பெயர் ஜான் கிளேடோன்.[1][2]

இளமைப்பருவம்

[தொகு]

டார்ஜானுக்கு பதினெட்டு வயது ஆகும்போது ஜேன் எனும் அமெரிக்கப் பெண்மணியை சந்திக்கிறார். ஜேன், அவளது தந்தை மற்றும் சிலரையும் டார்சானின் தாய் தந்தையைப் போலவே சிலர் வனப்பகுதியில் தனித்து விட்டு விட்டு செல்கின்றனர். பின்னர் அமெரிக்கா திரும்பும் ஜேனைத் தேடி டார்சானும் காட்டை விட்டு விட்டு வெளியுலகிற்கு வருகிறார். தி ரிட்டர்ன் ஆப் டார்சான் எனும் புத்தகத்தில் டார்சானிற்கும், ஜேனிற்கும் திருமணம் நடைபெறுகிறது. பின்னர் அவர்கள் இங்கிலாந்தில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஜாக் எனும் குழந்தையும் உள்ளான். ஜாக்கின் குரங்குப் பெயர் கொராக். இதற்கு கொலைகாரன் என்று பொருளாகும்.

பண்புரு வருணனை

[தொகு]

எட்கர் ரைசு பர்ரோசின்படி குறை நிறைகளைக் கொண்டு டார்சான் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. டார்சான் உயரமாகவும், கட்டுடலுடனும், சாம்பல் நிற விழிகளையும், நீளமான கருத்த தலைமுடிகளையும், சிறிது பழுப்பாகிய மஞ்சள் நிறத்தினையும் கொண்டிருந்ததாக விவரிக்கின்றார். வேறு எந்தப் பெண்ணையும் நினைக்காமல் ஜேனை மற்றும் காதலிப்பவனாகவும் இக்கதாப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. வலியோர், எளியோர் என்று வருகையில் எளியோரின் பக்கம் நிற்பவனாகவும், விசுவாசமுடையவனாகவும், ஒரு மனிதனாக கருணையுள்ளம் கொண்டவனாகவும், ஒரு தலைவனாக அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவனாகவும் டார்சான் உருவாக்கப்பட்டுள்ளார்.

எழுத்தாளர் இரட்யார்ட் கிப்ளிங் உருவாக்கிய கதாப்பாத்திரமான மோக்ளியின் சாயலை டார்சான் கதாப்பாத்திரம் கொண்டுள்ளது.

திறமைகள்

[தொகு]

காட்டிலேயே பிறந்து வளர்ந்ததால் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் பல திறன்களை டார்சான் கொண்டிருந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பர்ரோசின்படி டார்சான் மற்ற மனிதர்கள் போல் அல்லாமல் ஓடுதல், தாண்டுதல், மரம் விட்டு மரம் தாவுதல், நீச்சல் ஆகியவற்றில் தன்னிகரில்லாமல் இருந்துள்ளான். கூர்மையான கேட்கும் திறனும், நுகர்வுத் திறனும் கொண்டு விலங்குகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் திறனும் இருந்துள்ளது. டார்சான் நன்றாக வளர்ந்த மனிதக் குரங்குகளுடனும், சிங்கம், காண்டாமிருகம், பாம்புகள், புலிகள், திமிங்கலங்கள், முதலைகள் ஆகியவற்றுடன் சண்டைப் போட்டுள்ளான். சாதாரணர்களைப் போல் அல்லாமல் சில நாட்களிலேயே ஒரு மொழியைக் கற்கும் திறன் வாய்ந்தவனாகவும் இருந்துள்ளான். அதன்படி டார்சானுக்கு குரங்குகளின் மொழி, பிரெஞ்ச், ஆங்கிலம், அரபு, டச்சு, ஜெர்மன் இன்னும் பல மொழிகளைக் கற்றவனாக எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. In Burroughs, Edgar Rice (1914). "Chapter XXV". Tarzan of the Apes. Somehow, even against all reason, I seem to see him a grown man, taking his father's place in the world—the second John Clayton—and bringing added honors to the house of Greystoke. (Check the next reference)
  2. Farmer, Philip José (1972). "Chapter One". Tarzan Alive: A Definitive Biography of Lord Greystoke. p. 8. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)