எட்கர் ரைசு பர்ரோசு
எட்கர் ரைசு பர்ரோசு | |
---|---|
பிறப்பு | சிக்காகோ, இலினாய், அமெரிக்கா | செப்டம்பர் 1, 1875
இறப்பு | மார்ச்சு 19, 1950 என்சீனோ, கலிஃபோர்னியா, அமெரிக்கா | (அகவை 74)
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | அமெரிக்கர் |
காலம் | 1912-1944 |
வகை | சாகசப் புனைவு, தொலைந்த உலகுப் புனைவு, வாளும் கொளும், கோள் நேசம், மென்மையான அறிபுனை, மேற்கத்திய புனைவு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | டார்சான், ஜான் கார்ட்டர் |
எட்கர் ரைசு பர்ரோசு (Edgar Rice Burroughs; எட்கர் ரைஸ் பர்ரோஸ்; செப்டம்பர் 1, 1875 – மார்ச் 19, 1950) ஒரு அமெரிக்க எழுத்தாளர். காட்டு நாயகன் டார்சான் மற்றும் செவ்வாய் நாயகன் ஜான் கார்ட்டர் ஆகிய பாத்திரங்களை படைத்தற்காக உலகப்புகழ் பெற்றவர். சாகச மற்றும் அறிபுனை பாணிகளின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். எழுத்துலகில் மட்டுமல்லாது தனது படைப்புகளை பிற ஊடகங்களின் வழியாக சந்தைப்படுத்துவதிலும் பெருவெற்றி கண்டவர்.
சிக்காகோ நகரில் பிறந்த பர்ரோசு காகிதக்கூழ் இதழ்களில் வரும் கதைகளைப் படித்துவிட்டு தானும் அதே பாணியில் கதைகளை எழுதத் தொடங்கினார். 1912 அவரது முதல் சிறுகதை வெளியானது. அதே ஆண்டு முழுநேர எழுத்தாளராக மாறிய பர்ரோசு டார்சான் பாத்திரத்தை உருவாக்கினார். வெளியான நாள் முதல் டார்சான் புத்தகங்கள் பெருவெற்றி கண்டன. புதினங்கள், சிறுகதைகள், திரைப்படங்கள், படக்கதைகள் என பல்வகைப்பட்ட ஊடகங்களில் டார்சான் பாத்திரத்தைக் கொண்டு படைப்புகளை உருவாக்கினார் பர்ரோஸ். வெளியாகி நூறாண்டுகள் ஆகியும் டார்சன் பாத்திரம் இன்றுவரை ஒரு அமெரிக்கக் கலாச்சார சின்னமாகத் திகழ்கிறது. டார்சானைத் தவிர பல அறிபுனை மற்றும் கனவுருப்புனைவு புத்தகங்களையும் பர்ரோசு எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை செவ்வாய் கிரகத்து ஜான் கார்ட்டர் வரிசை புதினங்கள்.