உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எட்கர் ரைசு பர்ரோசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்கர் ரைசு பர்ரோசு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

எட்கர் ரைசு பர்ரோசு என்று மாற்றலாமா? இந்தக் கடைசி சு குற்றியலுகரம், ஆகவே ஏறத்தாழ ஒலிப்பு ஒன்றே. மேலும், உண்மையிலேயே வாய்விட்டுச் சொல்லிப்பாருங்கள், rice முதலானவற்றில் கடைசியில் சிறிதளவு உயிரொலி இருக்கும். மார்ச் என்று எழுதினாலும், சொல்லும்பொழுது மார்ச்சு என்று சிறிதளவு உயிரொலி கடை மெய் ச்-க்கு அடுத்து வரும். இதனை எல்லாம் தமிழர்கள் நுணுகி ஆய்ந்தாக்கிய முறை. சற்றே எளிமைப்படுத்த (மார்ச்சு என்பதுபோல எழுதும்) முறைமைகள் வகுத்துள்ளார்கள். பலரும் தமிழின் ஒலிப்பு நுட்பத்தையும் முறைமையையும் அறியாமல் தவறாக எழுதிப் பரப்பி வருகிறார்கள். அருள்கூர்ந்து ரைசு, பர்ரோசு என்று எழுத வேண்டுகிறேன். --செல்வா 14:12, 28 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]