பராசக்தி (திரைப்படம்)
பராசக்தி | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | பி. ஏ. பெருமாள் முதலியார்[1] |
திரைக்கதை | மு. கருணாநிதி |
வசனம் | மு. கருணாநிதி |
இசை | ஆர். சுதர்சனம் பின்னணி இசை: சரசுவதி ஸ்டோர்சு இசைக்குழு |
நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். வி. சகஸ்ரநாமம் எஸ். எஸ். ராஜேந்திரன் ஸ்ரீரஞ்சனி பண்டரிபாய் வி. கே. ராமசாமி |
ஒளிப்பதிவு | எஸ். மாருதி ராவ் |
படத்தொகுப்பு | பாஞ்சபி |
கலையகம் | ஏவிஎம், நேஷனல் பிக்சர்ஸ் |
விநியோகம் | நேஷனல் பிக்சர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 17, 1952 |
ஓட்டம் | 188 நிமி.[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பராசக்தி (Parasakthi) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத,[3] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய எஸ். எஸ். ராஜேந்திரனை, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.[4] பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்பன் மற்றும் பி. எ. பெருமாள் அவர்கள்.[5] இப்படம் இதே பெயரிலான பாவலர் பாலசுந்தரத்தின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. பராசக்தி இரண்டாம் உலகப் போரின்போது ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த அவலங்களை விவரிக்கிறது.
கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸ் முதலில் பராசக்தி மற்றும் டி. எஸ். நடராஜனின் என் தங்கை ஆகிய நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டது; ஆனால், நடராஜன் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. பராசக்தி படத்தின் உரிமையை ஏ. வி. மெய்யப்பன் ஆதரவுடன் நேஷனல் பிக்சர்சின் பி. ஏ. பெருமாள் வாங்கினார். படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைக்க, ஒளிப்பதிவை எஸ். மாருதி ராவ் மேற்கொண்டார், மேலும் "பஞ்சாபி" என்ற பெயரில் பஞ்சு படத்தொகுப்பு செய்தார். 1950 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் படப்பிடிப்பு தொடங்கியது, ஆனால் படத்தை முடிக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது.
பராசக்தி 17 அக்டோபர் 1952 அன்று தீபாவளி பண்டிகையின் போது வெளியிடப்பட்டது. மேலும் படத்தில் பிராமணர்கள் மற்றும் இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை எதிர்மறையாக சித்தரித்ததால் சர்ச்சைகளை எதிர்கொண்டது. அப்போதைய ஆளும் மாநில அரசு உட்பட சில சமூகப்பிரிவினர் படத்தைத் தடை செய்யக் கோரினர். இந்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும், படம் உரையாடல் மற்றும் நடிகர்களின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது. 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. பராசக்தி தமிழ்த் திரையுலகில் வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்றது. மேலும் பிற்கால தமிழ் படங்களுக்கு உரையாடல் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் ஒரு புதுப்பாங்குக் காட்டியாக மாறியது.
திரைக்கதை சுருக்கம்
[தொகு]தாயை இழந்து தந்தையுடன் மதுரையில் வாழ்ந்து வரும் கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள். அண்ணன்கள் அனைவரும் பர்மா எனப்பட்ட மியான்மரில் வணிகம் செய்து வந்தனர். 1940களில் மூண்ட உலகப் போர் சூழலில் தங்கைக்கு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. போரினால், கதையின் நாயகனான கல்யாணியின் கடைசி அண்ணன் குணசேகரனுக்கு மட்டும் கப்பலில் பயணச்சீட்டு கிடைக்கப்பெற்று, அன்றைய மதராசான சென்னைக்கு வருகிறான். சென்னையில் தான் கொண்டு வந்த அனைத்தும் ஒரு வஞ்சகியின் சூழ்ச்சியினால் இழந்து, மதுரைக்கும் செல்ல வழியின்றி, பசியினால் சமூக அவலங்களைச் சந்திக்கிறான். இவ்வேளையில் கல்யாணம் நிறைவுற்று, பின் மகிழ்வாய் குழந்தை பெற்ற அன்றே விபத்தால் கணவனும் பாலகன் பிறந்த நன்நிகழ்வைக் கூற வந்தபோது விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, கடன் பொருட்டு வீடும் இழந்து, கைம்பெண்கள் சந்தித்தத் துயரத்தை கல்யாணி எதிர்கொள்கிறாள். பின் என்ன நிகழ்கிறது என்பது மீதி கதை.
நடிப்பு
[தொகு]
|
|
கூடுதலாக, கண்ணதாசன் ஒரு நீதிபதியாக அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்துள்ளார்.
வகை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ டி. எம். எஸ். - ஒரு பண்-பாட்டுச் சரித்திரம், வாமனன்
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 327.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- ↑ ராண்டார் கை (24 ஏப்ரல் 2011). "Parasakthi 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/parasakthi-1952/article1762264.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016.
- ↑ https://cinema.dinamalar.com/tamil-news/84607/cinema/Kollywood/Marakka-mudiyuma-:-Parasakthi-movie.htm
- ↑ Parasakthi (motion picture). India: நேஷனல் பிக்சர்ஸ். 1952. Event occurs at 2:03.
- ↑ Parasakthi (motion picture). India: நேஷனல் பிக்சர்ஸ். 1952. Event occurs at 2:17.
வெளியிணைப்புகள்
[தொகு]- 1952 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கறுப்புவெள்ளைத் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்
- மியன்மார் தமிழரைச் சித்தரிக்கும் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய திரைப்படங்கள்