உள்ளடக்கத்துக்குச் செல்

பரசினிக்கடவு

ஆள்கூறுகள்: 11°59′00″N 75°23′55″E / 11.98333°N 75.39861°E / 11.98333; 75.39861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரசினிக்கடவு
நகரம்
பரசினிக்கடவில் அமைந்துள்ள முத்தப்பன் கோயில்
பரசினிக்கடவில் அமைந்துள்ள முத்தப்பன் கோயில்
பரசினிக்கடவு is located in கேரளம்
பரசினிக்கடவு
பரசினிக்கடவு
Location in Kerala, India
ஆள்கூறுகள்: 11°59′00″N 75°23′55″E / 11.98333°N 75.39861°E / 11.98333; 75.39861
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுகேஎல்-

பரசினிக்கடவு (Parassinkkadavu) ஒலிப்பு என்பது அந்தூர் நகராட்சியில் உள்ள ஒரு சிறிய கோயில் நகரமாகும். இந்த நகரம் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூர் நகரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது வடக்கு மலபாரிலுள்ளா ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

ஈர்ப்புகள்

[தொகு]

இந்த ஊர் புகழ்பெற்ற முத்தப்பன் கோயிலுக்கு புகழ்பெற்றது. [1][2] கேரளாவில் தெய்யம் என்ற நடனம் தினசரி நடத்தப்படும் ஒரே இந்து கோயில் இதுதான்

பாரம்பரிய வருடாந்திர விழாவான உத்சவம் என்பது "தையில்" குலத்தை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர் தலைமையில் கண்ணூர் குடும்ப வீட்டிலிருந்து ஊர்வலமாகத் தொடங்கி இந்த ஆலயத்தில் முத்தப்பன் ஆலயத்தில் முடிகிறது. இறுதியில் பிரதான பலிபீடத்தில் கடவுளுக்கு ஒரு பூசை (பிரார்த்தனை) நடைபெறுகிறது.

பர்சினிக்கடவு பாம்பு பூங்காவிற்கு இந்த ஊர் குறிப்பிடத்தக்கது. இராச நாகம் உள்ளிட்ட சுமார் 150 வகையான பாம்பினங்கள் பூங்காவில் வாழ்கின்றன.

பாம்புகளிலிருந்து விஷத்தை பிரித்தெடுப்பதற்கான ஆராய்ச்சி மையம்ம் இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் பைத்தான்கள் உள்ளிட்ட விஷமற்ற பாம்புகளின் பெரிய தொகுப்பும் உள்ளது.

விஸ்மயா என்ற கேளிக்கைப் பூங்காவும் இங்கு அமைந்துள்ளது

விஸ்மயா கேளிக்கைப் பூங்கா
பாம்புப் பண்ணை

புகைப்படத் தொகுப்பு

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. A. Sreedhara Menon (1982). The Legacy of Kerala. Department of Public Relations, Government of Kerala. pp. 25–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-264-2157-2. பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.
  2. "Official website of Kannur". Archived from the original on 26 February 2007. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசினிக்கடவு&oldid=3538932" இலிருந்து மீள்விக்கப்பட்டது