தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
தகவலுழவன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் உற்சாகமாகப் பங்களிக்கத் தொடங்கியிருப்பதையிட்டு மகிழ்ச்சி. உங்களுடைய கட்டுரைகள் ஓரளவுக்கு அகராதிப் பதிவுகள் போல உள்ளன. கட்டுரைகளைக் கலைக்களஞ்சிய அமைப்பில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். மயூரநாதன் 19:31, 22 ஜனவரி 2008 (UTC)
நன்றி. Romanized latin to Tamil என்ற IIT யில் ஒருவர் இயற்றிய Transliterate முறையை நான் உபயோகம் செய்யும்போது சில தவறுகள் செய்துவிடுகிறேன். சில கருநாடக இசையின் பக்கங்களிலும் தவறு செய்துவிடுகிறேன். கவனம் தேவைதான். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 10:45, 14 டிசம்பர் 2008 (UTC)
தகவலுழவன், சாதாரணமாக நபர்களின் பிறப்பு, இறப்புகளை அநதந்த நாட்களின் பிறப்புகள், இறப்புகள் பகுதியில் சேர்க்கவும். நிகழ்வுகள் பகுதியில் சேர்க்க வேண்டாம். சிறப்பாக ஒருவரின் படுகொலை, அல்லது இயற்கையல்லாத இறப்புகளை நிகழ்வுகள் பகுதியில் சேர்க்கலாம். வீரமா முனிவரின் இறப்பு, மற்றும் பிறப்புகளை நிகழ்வுகள் பகுதியில் இருந்து எடுத்துள்ளேன். நன்றி.--Kanags\பேச்சு 12:23, 1 மார்ச் 2009 (UTC)
தங்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவேன்.நன்றி. - தகவலுழவன் 15:12, 2 மார்ச் 2009 (UTC)
தகவலுழவன், நீங்கள் இணைத்திருந்த நிகழ்படம் நன்றாக உள்ளது.--செல்வா 23:32, 30 ஜூன் 2009 (UTC)
வருக!வருக!தகவலுழவன்! மீண்டும் மீண்டும் வருக! நல்லாக்கங்களைத் தருக. உங்களின் அகராதியியல் மீதான ஆர்வம் விக்கியைச் செழுமைப்படுத்தட்டும். பரிதிமதி 02:15, 1 சூலை 2009
தகவலுழவன் உங்கள் வெள்ளாமை தமிழ் விக்கிப்பீடியாவிலும் தொடர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி. பறை போன்ற தமிழிசைக் கருவிகளையும் அவற்றை இசைக்கும் இசைக் கலைஞர்களையும் படம் பிடித்து சேர்த்தது நன்று. இந்த நிகழ்படமும் உங்களுக்கு ஆர்வமூட்டலாம். -- சுந்தர்\பேச்சு 06:06, 11 ஜூலை 2009 (UTC)
தங்கள் மூவரது கருத்துக்களும், என் ஆர்வத்தனைத் தூண்டுவதாக அமைந்தன. மேலும், சிறப்புர முயற்சிக்கிறேன். தகவலுழவன் 15:18, 11 ஜூலை 2009 (UTC)
உங்களுக்கு உதவியாக இருந்தது எனக்கு இன்பமே--Terrance\பேச்சு 11:58, 12 ஜூலை 2009 (UTC)
தகவலுழவன், வாழை கட்டுரையில் படங்களை ஒழுங்குபடுத்தும்போது உங்கள் திருத்தத்தைப் பார்க்கவில்லை. அதனால் மாற்றியமைத்து விட்டேன். தவறாகக் கொள்ள வேண்டாம். -- சுந்தர்\பேச்சு 05:57, 21 ஜூலை 2009 (UTC)
த.உழவன் என்று என்னைக்குறிப்பிட விரும்புகிறேன். உங்களைப்போன்று பலரும், இங்கு திரும்ப பெற முடியாதக் காலத்தைச் செலவிடுகிறீர்கள் என்பதை நன்கு உணருகிறேன். அதனால் ஏற்படும் கவனக் குறைவுகளை, என்னால் ஏற்றுக்கொள்ள இயலுகிறது. நம் நோக்கமும், ஆற்றலும் வலுவடைந்தால் சரி.
நீங்கள் இணைத்த,வாழையின் உறுப்புகள் படத்தை svg கோப்பாக மாற்றினால் நன்றாகத் தெரியுமா?த* உழவன் 15:09, 21 ஜூலை 2009 (UTC)
உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி, த.உழவன். அந்த svg என்பதால் அல்ல, அதைச்சிறிது மாற்றியமைத்தால் ஆகக்கூடும். தமிழில் மொழிபெயர்க்கும்போது முயன்று பார்க்கிறேன். -- சுந்தர்\பேச்சு 16:02, 21 ஜூலை 2009 (UTC)
வாழையைப் பற்றி இலக்கியத்திலுள்ள குறிப்புகளைத் தக்க சான்றுகளுடன் சேர்த்ததற்கு நன்றி, த.உழவன். -- சுந்தர்\பேச்சு 15:52, 22 ஜூலை 2009 (UTC)
எறும்புஊர கல் தேயும் என்பார்கள். என்னால் முடிந்ததை படித்து, படி எடுத்தேன். உங்களின் பாராட்டு, என்னை மேலும் ஒரு படி ஏற வைக்கிறது. இன்னும் பலபடிகள் பாக்கி. என்றும் விக்கியுடன், த* உழவன் 05:19, 23 ஜூலை 2009 (UTC)
மிக்க நன்றி. விக்கியில் எழுத ஆரம்பித்த பிறகு, தொய்வாயிருந்த பறவைகள் மீதான என் ஆர்வம், மீண்டும் தலை தூக்கியுள்ளது. [வெவ்வேறு விதங்களில் நீங்கள் விக்சனரியை எனக்கு நினைவூட்டுவதற்கு நன்றி. என்ன இருந்தாலும் விக்சனரிதான் என் தாய் வீடு. அதை மறக்க முடியுமா!] பரிதிமதி 23:35, 30 ஜூலை 2009 (IST)
கொஞ்சம் கொஞ்சமாக கட்டுரையாக்கங்களுக்கும், நான் கவனம் செலுத்துவேன். தாய்வீடு என்று நீங்கள் சொன்னதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.த* உழவன் 06:13, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
தகவலுழவன், சபாபதி நாவலர் பற்றிய ஒரு விரிவான (முழுமையான) கட்டுரைக்கு மிக்க நன்றி. மிகவும் சிறந்த (விக்கி) முறையில் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.--Kanags\பேச்சு 22:02, 20 ஆகஸ்ட் 2009 (UTC)
மனம் விட்டுச் சொல்லப்போனால், தாகூரைப் பற்றி படித்துக்கொண்டிருந்த போது, தற்செயலாக உங்கள் வலைப்ப்பூவினைப் பார்த்தேன். அதிலமைந்த உங்களின் இடுகை என்னைத் தூண்டியது. அதனால் ஏற்பட்ட உந்துதல். உங்கள் வேலைப்பளுவால், நீங்கள் எனக்கு விட்ட வாய்ப்பு எனக்கருதுகிறேன்.த* உழவன் 13:45, 21 ஆகஸ்ட் 2009 (UTC)
அருமை,த.உழவன்!. சிறப்பாக மேலும் பல பக்கங்களைச் செய்யுங்கள். பரிதிமதி 02:00, 21 ஆகஸ்ட் 2009 (UTC)
தங்களுரை என் கலைப்பை நீக்குகிறது. த* உழவன் 13:45, 21 ஆகஸ்ட் 2009 (UTC)
நான் புனைப்பெயர் வைத்துக்கொண்டதே, என் புறத்தை மறைமுகமாக வைத்துக்கொள்ளத் தான். என் செயல்கள், இங்கு கவனிக்கப்படுகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எனினும், என் செயல்விளைவுகள், எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது? என்பதை அறிய எனக்குள் ஆர்வம் உண்டு.
நிறைய நேரங்களில் மக்கள், முன்னவர் அகத்தை மறக்கிறார்கள். தன்னகத்தை மறைக்கிறார்கள். நானோ, என் பறத்தை மறைக்கின்றேன். நிழற்படம், கல்வி, வேலை போன்றவை புறமாகும். என்னுள் விழுந்த அடிகளால், என் புறத்தை மறைக்கின்றேன்.இதனால் பலர் நட்பு அமைகிறது.
தமிழின் பெருமை, நம் முன்னோர் எடுத்து வைத்த அடிகளில்.. அவர்களோ மண்ணடியில்.. அம்மண்ணடியில் வாழும் வேர் நான். நான் முதன்மை வேரா? அல்லது சல்லி வேரா? என்பதைக் காலம் காட்டும். எது எப்படியிருப்பினும், வேராக இங்கிருப்பேன். வேறாக அல்ல.---(த* உழவன் )
சரி, த. உழவன். உங்கள் படம் போடாமல், தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல், உங்கள் விக்கி பங்களிப்புகளை மட்டுமாவது குறிப்பிட்டு எழுதலாமா?--ரவி13:01, 10 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.
உங்களின் விரிவான பரிந்துரைகளுக்கு நன்றி. கடந்த நான்கு ஆண்டுகளும் நாம் இந்த மாதிரி அறிக்கைகள், முன்பார்வைகள் செய்தோம். இறுதிப் பகுதில் அந்த இணைப்புகள் உள்ளன. பரிந்துரைகள் தொடர்பான கருத்துக்களை விரைவில் முன்வைப்பேன். நன்றி. --Natkeeran 16:12, 25 டிசம்பர் 2009 (UTC)
வணக்கம்! Info-farmer/பயனர் பேச்சு:தகவலுழவன்-பரண் அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்! நன்றி!
வணக்கம், நீங்கள் இங்கு புதிதாக உருவாக்கும் கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியில் இணையான கட்டுரைகள் இருந்தால் தயவு செய்து ஆங்கில விக்கிக் கட்டுரைக்குச் சென்று அங்கு தமிழ் விக்கிக் கட்டுரைக்கு ஒரு இணைப்புக் கொடுத்து விடுங்கள். வேறு மொழி விக்கிகளில் தானியங்கிகள் இவ்வேலையைச் செய்யும். ஆனால் தமிழ் விக்கியில் இந்த வசதி இல்லை. தௌ போல ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு உங்கள் தமிழ் கட்டுரையிலும் தவறாது இணைப்புக் கொடுங்கள். இதனால் பின்னர் வேறு எவரும் இதே கட்டுரையை எழுதாமல் இருக்க உதவும். எப்படி இணைப்புக் கொடுப்பது? ஆங்கில விக்கிக் கட்டுரையின் இறுதியில் (எ+கா: en:Bank of Baroda கட்டுரையில் [[ta:பரோடா வங்கி]] என எழுதிச் சேமியுங்கள். மேலும், உயிரியல் தொடர்பான கட்டுரைகளில், தயவு செய்து அதன் முதல் பந்தியில் அப்பெயருக்கான உயிரியல் பெயரையும் இலத்தீன் மொழியில் அடைப்புக்குறிக்குள் இட்டு விடுங்கள். எ+கா: முதல் பந்தி இப்படி இருக்க வேண்டும்: இந்திய நீள்காது முள்ளெலி (Hemiechinus collaris) என்பது.... அத்துடன் அதற்கிணையான ஆங்கிலப் பெயரையும் அடைப்புக்குறிக்குள் இடுவது ஒரு நல்ல முறை. நன்றி.--Kanags\பேச்சு 00:29, 8 ஜனவரி 2010 (UTC)
ஆங்கில விக்கியில அது போல செய்யும் வழக்கம் உண்டு. இருப்பினும், இரண்டு அர்த்தமாக இருந்தேன். இனி தவறாமல் செய்வேன். முதல் பத்தியில் ஆங்கிலத்தையும், இருசொற்பெயரையும் இனி தவறாமல் குறிப்பேன். தங்களது வழிகாட்டல்களுக்கு நன்றி. இது போல, சுட்டிகளை அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.வணக்கம்.
மீண்டும் வணக்கம், நான் உங்கள் கட்டுரையில் எந்த மொழிபெயர்ப்பையும் நீக்கவில்லையே. எனது திருத்தங்களைப் பாருங்கள்: [1]. கட்டுரையில் சிறு திருத்தங்களையே செய்தேன். எதனையும் நான் அழிக்கவில்லை. அவ்வளவுதான்.--Kanags\பேச்சு 02:53, 8 ஜனவரி 2010 (UTC)
வணக்கம் த. உழவன். தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் தருவதில் மகிழ்ச்சி. உங்கள் தொலைப்பேசியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தயவு செய்து 99431 68304 என்ற என் எண்ணுக்கு உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். நன்றி. அன்புடன், --ரவி 18:36, 11 ஜனவரி 2010 (UTC)
வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)
நன்றி த* உழவன்!கண்டிப்பாக தமிழனின் முயற்சிகள் காலத்தினையும், நாடுகளையும் தாண்ட வேண்டும். மிக நல்ல கருத்து. வரும் நாட்களில் அப்படியே செய்கிறேன்.--Arafat 07:36, 10 மார்ச் 2010 (UTC)
வணக்கம் தகவலுழவன்! நீங்கள் தமிழ் அகரமுதலியில் அதிக பங்களிப்பை வழங்கி வருவதால், எனது ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்பது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். த.வி. யில் Clove என்பது கிராம்பு எனவும், cinnamon என்பது இலவங்கப்பட்டை எனவும் குறிப்பிடப்பட்டு கட்டுரைகள் உள்ளன. அதேநேரம் அகரமுதலியில் Clove என்பதற்கு கிராம்பு என்பதுடன் இலவங்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இலவங்கம் என்பது உண்மையில் எதனைக் குறிக்கின்றது என்பதை அறிய விரும்புகின்றேன். இலங்கையில் cinnamon என்பதை கறுவா அன்றும், அதன் பயன் மிக்க பகுதியான மரப்பட்டையை கறுவாப்பட்டை என்றும் குறிப்பிடுவார்கள். --கலை 23:50, 2 ஏப்ரல் 2010 (UTC)
சிறுவிளக்கத்தை அங்கேயே இணத்துள்ளேன். கருவாப் பட்டையா?அல்லது கருவாப் பட்டையா? அலசிப் பார்த்து, ஒப்பிட்டு, ஒரிரு நாட்களில் கிராம்பு, இலவங்கம், கருவா/கறுவா, தாளிசபத்திரி முதலிய சொற்களைப் பற்றி, தமிழ் விக்சனரியில் ஆவணப்படுத்துகிறேன். தங்களின் தொடர்புக்கு நன்றி. வணக்கம்.த* உழவன் 03:56, 3 ஏப்ரல் 2010 (UTC)
வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)
த*உழவன், நீங்கள் எறும்பு கட்டுரையில் செய்ய விரும்பிய மாற்றத்துக்குத் தேவையான நிரல் மாற்றங்களை இற்றைப்படுத்தியுள்ளேன். இப்போது நான் இங்கு செய்துள்ளதுபோல் முயன்று பாருங்கள். ஏதேனும் சிக்கல் இருந்தால் நான் முயலுகிறேன். -- சுந்தர்\பேச்சு11:14, 27 மே 2010 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி, சுந்தர்! நீங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்திய AWB யை இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதுmono (உபுண்டு)வில் இதுவரை செயல்படவில்லை என்று ஆங்கில விக்கிப்பீடியாத் தெரிவிக்கிறது. நீங்கள் அதற்கு முயற்சித்து, உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாமென்று, இதனைத் தெரிவிக்கிறேன்.நன்றி சுந்தர்!த* உழவன் 01:23, 28 மே 2010 (UTC)[பதிலளி]
த*உழவன், கறையான் கட்டுரையில் கடைசியில் இருந்த இரண்டு படத்தொகுப்புகளில் மட்டும் வெள்ளோட்டமாக சுருக்குதல் வசதியைச் சோதித்துப் பார்த்தேன். அது எனக்குச் சுருங்கித்தான் காட்டுகிறது. உங்களுக்கு எப்படித் தெரிகிறது எனச் சொல்லுங்கள்? இப்போது இன்னுமொரு படத்தொகுதியையும் சுருக்கியுள்ளேன் பாருங்கள். 'நிலை=collapsed' என்ற பண்புக்குறியை அவ்வார்ப்புருவுக்குத் தர வேண்டும். -- சுந்தர்\பேச்சு08:16, 28 மே 2010 (UTC)[பதிலளி]
இப்பொழுது எனக்கும் சுருங்கியே வருகிறது. இந்த மகிழ்ச்சிக்கு, இப்படி ஆட வேண்டும் போலுள்ளது. ஆடவும் தெரியாது. துணைக்கும் ஆளில்லை! விளக்கமாக மாற்றியமைக்கு எனது சிரம் தாழ்ந்த
நான் அலைப்பேசியை வைத்துக் கொள்வதில்லை. தனிமை விரும்பி.tha.uzhavan ATgmailCOM. அதில் பேசலாமே. நான் தினமும் காலை 6.00மணி முதல் 8.00மணி இணையத்தில் தான் இருப்பேன்.8மணிக்கு பிறகு, தினமும் 2மணிநேர தொடர் மின்தடை எங்களுரில் ஏற்படும். மற்ற நேரங்களில் இணைய வேகம் பெரும்பாலும் குறைவாக இருக்கும் என்பதால் காலை நேரமே எனக்கு உகந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள என்ன நேரம் உகந்தது?--த* உழவன் 02:30, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]
கெண்டை, கெண்டைமீன் (குடும்பம்) ஆகிய இரு கட்டுரைகளும் இணைக்க வேண்டியது குறித்து எனது பேச்சுப்பக்கத்தில் தங்கள் செய்தி பார்த்தேன். இரண்டு கட்டுரைகளும் ஒன்றிணைக்கப்படுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. வரலாறு மாறிவிடாமலிருக்க நிர்வாகிகள் யாராவாது ஒன்றிணைக்கட்டும்.நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:29, 11 பெப்ரவரி 2011 (UTC)
நீங்களும் நிருவாகிகளுள் ஒருவர் என நினைத்தேன். காத்திருப்போம். நன்றி.வணக்கம்.--த* உழவன் 02:21, 12 பெப்ரவரி 2011 (UTC)
உள்ளடக்கங்களை ஒன்றிணைத்துக் கொடுத்தால் வரலாற்றை நான் ஒன்றிணைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:41, 12 பெப்ரவரி 2011 (UTC)
இணைக்க வேண்டிய கட்டுரைகளின் ஆரம்பத்தில் {{mergeto|கட்டுரைத் தலைப்பு}} என்ற வார்புருவை இட்டால் நிருவாகிகள் இந்த இணைப்பு வேலைகளைக் கவனிப்பார்கள்.--Kanags\உரையாடுக 03:45, 12 பெப்ரவரி 2011 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:38, 2 ஏப்ரல் 2011 (UTC)
வணக்கம் தகவல் உழவன். நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி13:22, 2 மே 2011 (UTC)[பதிலளி]
இரவி!நீங்கள் சுட்டியபடி, இயன்றளவு செயற்படுவேன். வாரம் ஒரு பதிவாவது, செல்வா குறிப்பிட்டது போல,5000பைட்டுகள் கொண்ட கட்டரையை எழுதுவேன். வணக்கம்.--தகவலுழவன்08:11, 19 மே 2011 (UTC)[பதிலளி]
கருத்துக்களுக்கு நன்றி. தமிழ் நாட்டில் எத்தனை சதவீத மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியைத் தற்போது பெறுகிறார்கள் என ஆதார பூர்வமாக அறிய ஆவல். கேரளாவில் தாய்மொழிக் கல்வி என்ற சட்டம் நிறைவேறு வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. --Natkeeran02:07, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
உடன் பதில் எழுத இயலவில்லை. தினமும் இந்திய நேரம்8-10வரை மின்சாரம் தவறாமல் இருக்காது!
புள்ளிவிவரங்கள் முறையாக எடுக்கப்படவில்லை.எடுக்கவும் விரும்பார். ஆனால், 4-16வயது வரை உள்ள தமிழக பள்ளித்தேர்வுகள், (ஒவ்வொரு நிலையினையும் தாண்ட) மொத்தம் ஐந்து எனலாம்.தனியார் பள்ளிகளில் இந்த ஐந்தில், தமிழ் தேர்வைத்தவிர, மற்ற அனைத்தும் ஆங்கிலத்தில் தான். சில கிறித்தவ தொண்டு நிறுவனங்களில் மட்டும் தான், ஆங்கிலப்ப்பாடம் தவிர, அனைத்தும் தமிழில் கற்றுத்தருகின்றனர்.அப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவும் விரும்புவர் அதிகம். இப்ப இருக்கக்கூடிய சிக்கல், பணம் பண்ண வேண்டுமென்போரின் சூழ்ச்சியே. மொழி மயக்கமாக்கலில் என்றுதான் தமிழகம் தப்பிக்குமோ?
மறுபக்கம் இந்தியை, அனைத்து இந்தியருக்கும் கற்றுத்தர இந்திய நடுவண் அரசு அடித்தளமிட்டு விட்டது. இந்தியாவைப் பொருத்தவரை, ஆங்கிலத்தை விட, இந்தியை தமிழன் கற்றால் தான் முன்பு போல, மேற்பதவிகளில் தலைதூக்க முடியும். இல்லையேல், குடத்தில் இட்ட விளக்கே தமிழகத் தமிழன்.
கேரளத்தைப் பொருத்தவரை, அதிக மக்களுக்கு எதுபயனோ, அதனை அனைத்து திட்டங்களிலும் செய்வர். தமிழகத்தை பொறுத்தவரை, உயர்வு என்று எண்ணிக்கொண்டு, அதிக மக்களை தவிக்கவிடுவர். எடுத்துக்காட்டாக, இந்தி மொழியை எதிர்த்ததால் இன்று நடுவண் அரசுப் பணிகளில் தமிழர் பின்தங்கச் செய்துவிட்டனர்.
அனைத்து நடுவண் அரசுக்குரியப் பணித்தேர்வுகளையும் ஆங்கிலம்,இந்தியில் மட்டும் தான் எழுத முடியும். இந்தி எதிர்ப்பு என்ற உளநாட்டு போரில், தமிழன் வெற்றிபெற்று என்ன பலன்?பளபளப்பான பதக்கத்தை, என் பழைய சட்டையில் எத்தனை நாட்கள் மாட்டிக் கொள்வது?மக்களின் அடிப்படை மனப்பாங்கு மாற வேண்டும். அரசையே குறை கூறவதில் பலனில்லை. கல்வியளார்கள் சிந்தனைப்புயல் தமிழகத்தில் என்று தாக்குமோ?சரி விடுங்க. இங்க ஏதாவது செய்ய முடியுமா பார்ப்போம்.விக்கியை எனக்குப்பிடிக்கும் ஏனென்றால் மொழிகள் குறித்த கட்டுப்பாடுகள் இல்லை.உடனுக்குடன் பிற மொழிக்காரன் என்ன பண்ணுகிறான் என்று அறிந்து கொள்ள இருக்கும் வசதி. அதுவும் குறிப்பாக எடுத்துக்கொண்ட விருப்பப் பாடத்திலே. ஒப்பீடு இருந்தால் தான் முன்னேறம், போட்டி கிடைக்க முடியும் என்பதனைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.அனுதினமும், அணு அளவாவது கற்கிறேன். வணக்கம்.≈05:21, 14 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
இந்தி மொழியை எதிர்த்ததால் இன்று நடுவண் அரசுப் பணிகளில் தமிழர் பின்தங்கச் செய்துவிட்டனர். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் “இந்தியை எதிர்த்து” நடத்தப்பட்டவை அல்ல “ஆங்கிலமும் வேண்டும்” என்று நடத்தப்பட்டவை. அண்ணாத்துரையின் பெரிய நாய், சிறிய நாய் உவமை இதனைத் தெளிவாக விளக்கும். 1965 இல் ஆங்கிலம் இந்தியாவில் ஒழிக்கப்பட்டிருந்தால், இன்று தென் மாநிலங்களின் சேவைத் துறைப் பொருளாதாரம் அம்பேல். (இதை நான் சொல்லவில்லை, பொருளியல் வல்லுனர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு கூற்று) உ.பி, பிகார், மத்திய பிரதேசம் போன்ற இன்னொரு பிமாரு பிரதேசமாகத்தான் தென்னாடும் இருந்திருக்கும்.
இந்தி படித்த மாநிலங்களெல்லாம் நடுவண் அரசுப் பணிகளில் மேலோங்கியுள்ளன என்பது மாயை. இந்தி படித்த மாநிலங்களெல்லாம் மேலோங்க வில்லை. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதற்கு மொழி காரணமல்ல சமூகச் சூழலே. பிமாரு மாநிலங்களில் வேறு வேலை வாய்ப்பே கிடையாது. சீரான தனியார் துறை கிடையாது. சாதியமைப்பு/நிலப்புரப்புத்துவத்தில் ஊறிப் போன சமூகங்கள் அவை. அம்மாநில இளைஞர்களுக்கு இந்திய ஆட்சிப் பணியும், அரசு வேலைகளுமே கனவு வேலைகள். இதனால் தான் அம்மாநில மாணவர்கள் அதிக அளவில் அரசுத் தேர்வுகளை எழுதுகிறார்கள் வேலைக்கு சேர்கிறார்கள். ஆனால் தென் மாநிலங்கள் (சேவைத் துறை வளர்ந்தவை), மகாராட்டிரம், குஜராத் (வர்த்தகப் பொருளாதாரம் கொண்டவை), பஞ்சாப், அரியானா (வேளாண் பொருளாதாரம் கொண்டவை) ஆகிய மாநிலங்களின் மாணவர்களுக்கு அரசுப் பணி தான் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. பிற தெரிவுகள் அதிக அளவில் உள்ளன. எனவே அவர்கள் அரசுத் தேர்வுகளை மட்டும் நம்பி இருப்பதில்லை; குறைவான எண்ணிக்கையில் அதில் சேருகின்றனர். “எண்ணிக்கை கூடல்” மாயைக்கு இரண்டாவது காரணம் மக்கள் தொகை. பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமுள்ள மாநிலங்கள் தங்கள் மக்கள் தொகை வளர்ச்சியை நன்கு கட்டுப்படுத்தி விட்டன. தென்னாடும், குஜராத், மகாராட்டிரா, பஞ்சாப் போன்றவற்றில் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. பிமாரு மாநிலங்களில் நன்றாகக் கூடி வருகிறது. இதனால் அரசுப் பணிகளில் மட்டுமல்ல எங்கும் அவர்கள் எண்ணிக்கை தான் அதிகம் காணப்படும் (நல்ல வேளையாக மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரிப்பதை பிற மாநிலத்தவர் இணைந்து அரசியலமைப்பு சட்ட திருத்தம் மூலம் 2026 வரை தள்ளிப்போட்டுள்ளனர்).
இந்தி எதிர்ப்பு என்ற உளநாட்டு போரில், தமிழன் வெற்றிபெற்று என்ன பயன் - இன்னும் தமிழ்நாட்டில் தமிழ் பேச முடிகறதல்லவா? தமிழ் என்ற ஒன்று இன்னும் இருக்கிறதல்லவா?. பேசாது இந்தியை ஏற்றுக் கொண்ட இடங்களுக்கு என்ன ஆச்சு என்று பார்த்தீர்களா?. பிகாரில் முன்பு பேசப்பட்ட அங்கிக்கா, போஜ்புரி, மைதிலி, மகாஹி, வஜ்ஜிக்கா போன்ற மொழிகளை இந்தி முழுங்கி ஏப்பம் போட்டு விட்டது. இம்மொழிகளின் புதிய தலைமுறை நாங்கள் பேசுவது இந்தி தான் என்று மக்கள் தொகை கணக்காளர்களிடம் சண்டையிடும் அளவுக்கு அடையாளத்தைத் தொலைத்து நிற்கின்றனர். பெங்களூரில் இந்தி பேசா கன்னடருக்கு வேலை கிடையாது, மும்பையில் மராத்திக்கு இதே கதி. இன்று தமிழ்/ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை இருக்கும் போதே தமிழுக்குத் திண்டாட்டம். இந்தி எதிர்ப்பு போராட்டம் எதிர்த்த மும்மொழிக் கொள்கை தொடர்ந்து இருந்திருந்தால், தமிழ் தமிழ்நாட்டில் காணாமல் போயிருக்கும். இன்று ஆங்கில ஆதிக்கம் மேலோங்கி விட்டதென்ற கவலையில் இந்தியை விட்டுவிட்டோமே என்று கவலை கொள்ள வேண்டாம். இரு தீமைகளில், கொடுமை குறைந்த தீமையை (lesser of the two evils) 1965 இல் தேர்ந்தெடுத்ததால், இன்னும் தமிழ் உயிரோடிருக்கிறது. --சோடாபாட்டில்உரையாடுக06:01, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
ஆங்கிலத்தை விட, இந்தியை தமிழன் கற்றால் தான் முன்பு போல, மேற்பதவிகளில் தலைதூக்க முடியும். இல்லையேல், குடத்தில் இட்ட விளக்கே தமிழகத் தமிழன் இப்படி சொல்லித் தான் ஊரை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையெனில் தட்சிண பாரத் இந்தி பிரச்சார் சபையில் இந்தி படித்த லட்சக்கணக்கான தமிழரெல்லாம் அரசு உயர் பதவியில் இருக்கின்றனரா? (நானும் நாலும் வருசம் படித்திருக்கிறேன். நாலு வருசம் வீணடித்ததும், சில நல்ல இந்தி கதைப் புத்தகங்கள் படித்தது தவிர வேறு எந்த பலனுமில்லை). வருடந்தோரும் இந்தி பிரச்சார் சபையின் தேர்வுகள் எழுதுவோர் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வரை உள்ளனர். பிரச்சார் சபா இந்தி மேற்பதவிகளுக்கு உதவாத போது, பள்ளி இந்தி உதவுமோ?. யுபிஎஸ்சி தேர்வில் இந்தி தெரியும் என்று போட்டால் மட்டும் வேலை/பதவி உயர்வு கிடைக்காது. குறைந்த அளவில் மதிப்பெண் கூடக் கிட்டலாம் அவ்வளவே. அதே போல மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இந்தி சொல்லித் தரும் பிற மாநிலத்தவரெல்லாம் அரசு பணிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனரா? கிடையாது. மேலே சொன்ன மாதிரி, இந்திய நடுவண் அரசு அதிகார மையம் பிமாரு மாநில மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களுக்கும் அதி உயர்பதவிகளுக்குள் நுழைய ஆங்கிலம் கண்டிப்பாகத் தேவை. இந்தி படிப்பதால் மட்டும அதனுள் தமிழர் நுழைந்து குன்றில் ஏறிவிடமுடியாது. --சோடாபாட்டில்உரையாடுக06:16, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
இந்தியை விரட்டிய பிறகு தமிழை வளர்க்கவில்லை என்பதே என்கருத்து. வீட்டிற்குள் இருக்கும் திருடனைவிரட்டி விட்டு வீட்டிற்கு எதுவும் செய்யவில்லையே என்பதே என்ஆதங்கம்.மற்றொன்று இந்தியை கற்பதால் மட்டும் தமிழன் வெற்றி பெற முடியாது என்பதனை நானும் உணருகிறேன். அவனுக்கு அவன் மொழியை கறக வில்லையே என்னும் வெறியை நீக்குவதற்கு அது ஒரு வழி அவ்வளவே. வருடக்கணக்கில் இந்திகாரனிடம் சண்டையிடுவதை விட, அவனிடம் அவன் மொழியிலேயே பேசுவதும் நல்லது தானே? கற்பதொன்றும் தவறில்லையென்கிறேன். சரி விடுங்கள். ≈07:34, 14 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
வருடக்கணக்கில் இந்திகாரனிடம் சண்டையிடுவதை விட, அவனிடம் அவன் மொழியிலேயே பேசுவதும் நல்லது தானே? - அவர்கள் வீட்டிற்கு நாம் போனால் கண்டிப்பாக நாம் அவர் மொழி தான் பேச வேண்டும். இங்கு சண்டையே “இணைப்பு மொழி” (link language) தான். எல்லார் வீட்டிலும் அவர்கள் மொழியே பேச வேண்டும் என்று அவர்கள் அடம் பிடிப்பதால் தான் இந்தச் சிக்கல். இந்தி கற்க தமிழ்நாட்டில் தடையேது?. இரண்டாம் மொழியாக எடுத்துப்படிக்க பல பள்ளிகள் உள்ளன. மேலும் தனியே கற்க பிரச்சார் சபா உள்ளது. ஆனால் அவர்கள் கேட்பது “கட்டாய இந்திக் கல்வி”. இங்கு தான் போராட்டம் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு தடுப்பது “கட்டாய இந்திக் கல்வி”யைத் தான் “இந்திக் கல்வி”யை அல்ல. மும்மொழிக் கொள்கை பற்றி சிறிது படித்துப் பாருங்கள். அவர்கள் ஒன்று கற்பர் பிறர் மூன்று கற்றுக்கொள்ளுங்கள் என்றதால் தான் பிரச்சனை பெரிதானது. இதனால் அவர்களுக்கு எவ்வளவு அனுகூலம். அவர்கள் பிள்ளைகளை விட பிற மொழியினர் மூன்று மடங்கு சுமை சுமக்க வேண்டும். வருடக்கணக்கில் நாம் சண்டையிட்டிரா விட்டால், இந்தியா முழுவதும் பிமாரு ஆக்கியிருப்பார்கள் அவர்கள்.
சண்டையிடாமல் சமாதானமாகப் போனவர்களின் கதியைக் (மும்பை/பெங்களூர் இன்னபிற) கண்ட பின்னருமா கட்டாய இந்திக்கு ஆதரவளிப்பது? ;-). இந்த ராஜ்பாஷா கொள்கை எப்படி இந்தியாவை அழிக்கப் பார்க்கிறது என்பது குறித்த பல ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. எ.கா [2] --சோடாபாட்டில்உரையாடுக07:47, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
சோடா பாட்டிலின் கருத்துக்கள் சிந்திக்கவைத்தன. தற்போது "பண்டிட்" சாலமன் பாப்பையா போன்றவர்கள் புதிதாக கருத்துமயக்கத்தை உருவாக்குகிறார்கள் --Nan08:38, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
நன்றி நந்தகுமார். நானும் “இந்தி படித்தால் இந்தியாவில் முன்னேறலாம்” என்று ஏமாந்து இருந்தவன் என்பதால் இதில் நல்ல அனுபவம் உள்ளது. நான்கு ஆண்டுகளில் எட்டு தேர்வுகள் எழுதி 14 வயதில் இந்தியில் “எம் ஏ - நிகர்” பட்டம் பெற்றேன். (பிரவீண் தேர்வு முதுகலைப் பட்டமென இந்திய அரசு கருதுகிறது). கல்லூரி வந்த பின்னரே “இந்தி அட்வாண்டேஜ்” எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பதை உணர முடிந்தது. என்னை இந்தி படிக்கச் சொன்ன (நடுவண் அரசுத் துறை ஊழியரான) என் தந்தையே இப்போது ஒத்துக் கொள்கிறார் ஏமாந்து போனோமென்று. நடுவண் அரசு தேர்வுகளில் சில மதிப்பெண் கூடக் கிடைக்கும் அவ்வளவு தான். ஆனால் இந்திக்காரர்களிடம் சரளமாகப் பேச முடியாது - ஏனெனில் கற்ற இந்தி சமசுகிருதமயமாக்கப்பட்ட தூய இந்தி. சில வட மாநிலத்தவரிடம் மட்டும் தான் புரிந்து கொள்ளும் அளவு உரையாட முடியும், அனைவருடனும் தொடர்பு கொள்ள இயலாது. இதற்கு பதிலாக ஆண்டுக்கு பத்து இந்திப் படம் பார்த்திருந்தால் இந்தி சரளமாக வந்திருக்கும். வட இந்தியாவில் வேலைக்குப் போனால் தேவையான பேச்சு இந்தியறிவு சுற்றியிருப்பவரிடம் கொஞ்சம் முயன்று பேசினாலே 30 நாட்களில் பெற்று விடலாம். தனியார் நிறுவனங்கள் ஆங்கிலமயமாக்கத்துக்குப் பின்னர் இந்தியை மதிப்பதில்லை. தனியார்துறையில் அலுவல் அனைத்தும் ஆங்கிலத்தில் தான். இந்திய நடுவண் அரசிலும் கூட அலுவல் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் - பின்னரே இந்தியில் மொழி பெயர்க்கப்படுகின்றன. இப்படி ஆங்கிலமயமான ஒரு நாட்டில் எப்படி “முன்னேற இந்தி தேவை” என்று இத்தனை பேரை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது
சாலமன் பாப்பையா போன்றோர் என்றாவது ஒரு நாள் வட இந்தியாவுக்குப் போய் விட்டு அங்கு இருப்பவர்களுக்கு இந்தியைத் தவிர வேறெதுவும் தெரியாது என்பதையும் நம்மால் அவர்களுடன் பேச முடியவில்லை என்பதைக் காண்கின்றனர். பின் ஐயோ இந்தியைக் கற்காமல் இழந்து விட்டோமே என்று புலம்புகின்றனர். அதற்காக 12 வருடம் கட்டாய இந்திப் படிப்பு தேவை என்றும் முடிவு செய்கின்றனர். அதாவது தமிழ்நாட்டை விட்டு வெளியே வேலைக்குச் செல்லக் கூடியவர்கள் மொத்த மக்கள்தொகையில் ஒற்றை இலக்க சதவிகிதம். அவர்களுக்குள் இந்தி பேசும் மாநிலங்களுக்குச் செல்பவர் இன்னும் சொற்பம். இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு என்றால் இன்று ஆங்கிலம் கட்டாயத் தேவை; இந்தி தேவையில்லை. இப்படி ஒரு சில பத்தாயிரம் பேருக்காக தமிழ்நாடு முழுவதுக்கும் இந்தி கற்க வேண்டுமென்று சொல்வது என்ன மயக்கமென்று புரியவில்லை. --சோடாபாட்டில்உரையாடுக09:05, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
சரியாகச் சொன்னீர்கள் சோடா பாட்டில். "நமக்கென்ன" என்று பலரும் கருத்துக்களைச்சொல்லாமல் இருப்பதாலும், "வம்பு எதற்கு" என்று ஒதுங்குவதாலும் வெகு சிலரால் இவ்விதம் தவறானக்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. பிறகு இத்தகு தவறானக்கருதுக்களே அனைவராலும் விரும்பப்படுகின்ற ஒன்று என செயல்படுத்த ஆதாரமாகக் கொள்கிறார்கள் --Nan09:41, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
(வழக்கமாக காலையில் மட்டுமே2மணிநேர தொடர்மின்தடை நிலவும். இன்று மதியம்3-6வரையும் மின்சாரம் தடைபட்டதால், உடன் உங்களுடன் இணைய முடியவில்லை.)
என் உரையாடற்பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இதனால் என்னுடைய பார்வை அகலமாகியது. அதனால் அதிகாரப் பரவல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அமைந்துள்ளமைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி சமர்ப்பிக்கிறேன். என்னை எழுதத் தூண்டியமைக்கு நன்றி.
(உரையாடல் தொடர்ச்சி..)
நமது நோக்கம் ஒன்று தான். சரியாக எனது கருத்துக்களை, நான் முன்வைக்கவில்லையென்றே எண்ணுகிறேன். எனவே, நிறைவாக..
இந்தி கற்றால் தான் வாழ்வு என்று நான் கூறவில்லை. பாரதி கூறியபடி ஐந்து மொழிகளையாவது, ஒவ்வொருவரும் கற்க வேண்டுமென்றே எண்ணுகிறேன்.பிற மொழிகளைக் கற்கும் போதுதான், தமிழின் மேன்மை புரிகிறது.
அன்று இந்தி மொழிப்போரில் வெற்றிப் பெற்றோம்.அன்று தோற்றவன், இன்று வேறுவிதமாக (இந்தி திணிப்பு) நம்மைத் தாக்குகிறான். அதை நாம் எப்படி தடுப்பது? எடுத்துக் காட்டாக, மொழி பற்றிய சச்சரவை தீர்க்கவே, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் இணைப்புப் பட்டியலான 8 வது உள்ளது. அதில் அறிவித்து விட்டால் போதுமா? நடைமுறையில்...
இது நடுவண் அரசின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிய தளம். இதில் உள்ள மொழி வசதிகளைப் பாருங்கள். அதில் 8வதுபட்டியலில் இருக்க வேண்டிய பிறமொழிகளின் மொழிபெயர்ப்புகள்....?
நம் தமிழை அதில் கொண்டு வர, இந்தியராக உள்ள நாம் என்ன செய்யவேண்டும்? நான் கற்றவரை, இங்கு என்னால் இயன்றவரை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை ஒன்றிணைக்கிறேன். மக்களாட்சிக்கு, அரசியல் அமைப்பு இன்றியமைதல்லவா? வேறு எங்கேனும் சட்டப்பூர்வமான(Bare Act) தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளதா?≈13:16, 14 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
அனைத்து சட்டங்களையும் 8வது பட்டியல் மொழிகளில் மொழி பெயர்ப்பதில்லை என நினைக்கிறேன். ஆனால் சட்ட நூல் கடைகளில் முக்கிய சட்டங்களின் மொழிபெயர்ப்பு நூலகளை கண்டுள்ளேன். அதிகாரப்பூர்வமானதா, மொழிபெயர்ப்புத் தரம் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் பாடப்புதக்கமாக பயன்படுத்துகிறார்கள்.--சோடாபாட்டில்உரையாடுக13:23, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
தாய்மொழிக் கல்வி இல்லாமல் தமிழ் நலத்துடன் வாழாது. அது மட்டும் மிக உறுதி. பல துறைகளில் மொழியைப் பயன்படுத்தாமல் விட்டு விட்டு (எ.கா அரச வலைத்தளங்கள், நீதி மன்றனக்கள்) மொழி வளம் இல்லை என்று குறை கூறுவது சுத்துமாத்து. தாய்மொழிக் கல்வி, பன்மொழித் தேர்ச்சி என்று நாம் அணுக வேண்டும். அடுத்த ஆதிக்க மொழி ஆங்கிலமாக இல்லாமல், சீனமாக இருக்கலாம். --Natkeeran13:31, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
முழுதும் உடன்படுகிறேன். தமிழ்நாடு அரசு வலைத்தளத்தைக் கூட இயல்புத் தெரிவு ஆங்கிலத்தில் வைத்துள்ளது. உள்ளே அரசாணைகளெல்லாம் தமிழில் பிடிஃப் கோப்புகளாக உள்ளன. ஆனால் வலைத்தளம் ஆங்கிலத்தில் உள்ளது. உள்ளடக்கம் (சட்டம்/அரசாணை) எல்லாம் தமிழில் இருக்க இயல்புத் தெரிவு இடைமுகம் மட்டும் ஏன் மாற்றாமல் ஆங்கிலத்தில் வைத்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை.--சோடாபாட்டில்உரையாடுக13:36, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சோபா! உங்கள் ஊரிலிருந்து புத்தகம் வெளிவந்திருக்கிறது. சட்டப் பேராசிரியர் சனார்த்தனம் எழுதியுள்ளார். கிடைக்குமிடம், உங்கள் ஊருக்கு அருகில் உள்ளதா? நினைவில் வைத்து புத்தக க் கடைகளில் கேட்டுப் பார்க்கவும். நானும் சேலத்தில் (எனது இடத்திலிருந்து50கி.மீ தொலைவு) உள்ளது. நானும் முயற்சிக்கிறேன். நற்கீரன்! உங்களின் கருத்துக்களுக்கும் நன்றி கூற கடமைப்படுகிறேன். நன்றி.≈14:04, 14 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.
உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
Of course.It is a great pleasure to meet you with the the new version. I furnished my experiences through mail.Thanks indeed for the programming.≈02:30, 1 செப்டெம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளனவணக்கம், Info-farmer. உங்களுக்கான புதிய தகவல்கள்
Surya Prakash.S.A. இன் பேச்சு பக்கத்தில் உள்ளன. நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
ஊடகப் போட்டி ஏற்பாடுகள் முடிந்து விட்டன. வலைவாசலையும், பதிவேற்றத்தையும் சோதித்துப் பார்க்க வெளிச் சோதனையாளர்கள் தேவைப்படுகின்றனர் :-). எனவே வலைவாசல்:ஊடகப் போட்டி வழியாக காமன்சு போய் பதிவேற்றி ஏதேனும் முறிந்துள்ளதா, சிக்கல் உள்ளதா என்று சொதித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.--சோடாபாட்டில்உரையாடுக08:23, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
தற்பொழுது உபுண்டுவில், தானியங்கியைச் செயற்படுத்த ஈடுபாடாக உள்ளேன். நமது தளத் தட்டச்சும் வசதி அற்புதம். முன்பெல்லாம் உபுண்டுவில் தட்டச்ச, சற்று தடுமாற வேண்டும். இப்பொழுது எளிதாக உள்ளது. இதனை ஒருங்கிணைத்த உங்களுக்கு மிக்க நன்றி. இன்னும் சிறிது நேரத்தில் பணப்பணிக்குச் செல்ல வேண்டும். இன்று இரவு வந்தவுடன், காமன்சு பதிவேற்றியைப் பற்றி, அறிந்ததைச் சொல்கிறேன்.≈08:41, 8 நவம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..
சோ.பா!
இந்த ஊடகக் கோப்பினை, இப்பதிவேற்றுக் கருவி கொண்டு பதிவேற்றினேன். இதன் மூலம் கீழ்காணும் மாற்றங்கள் இருப்பின் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன்.
கொடையளிக்க ஓர் ஊடகக் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும் என்ற வரிகளில்,கொடையளிக்க என்ற சொல்லுக்கு அடுத்து ,(comma) வர வேண்டும். மேலும், கோப்பை(cup) என்பதனை, கோப்பினைத் என மாற்றுவது நலம்.
அதேபோல, மற்றொரு கோப்பை சேர்க்கவும் என்பதனை, மற்றொரு கோப்பினைச் சேர்க்கவும் என மாற்றுவது நலம்.
அனைத்து பதிவேற்றங்களும் வெற்றிகரமாக முடிந்தன! என்பதில், அனைத்துப் வரவேண்டும்.
விளக்கு என்ற தத்தலை, கோப்பு பற்றிய குறிப்பு/விவரம் என மாற்றுவது நலம்.
பதிவேற்றும் போது, மறைமுகப் பகுப்பில், இயல்பிருப்பாக TamilWiki Media Contest வருகிறது.ஆனால், கோப்பின் விவரப்பகுதியில், இயல்பிருப்பாக, {.{TamilWiki Media Contest|2}} என்பது இணைந்தால் நன்றாக இருக்கும். இதிலுள்ள |2}} என்பது என்ன?
{.{TamilWiki Media Contest|2}} வார்ப்புரு, {.{India loves Wikipedia event}} என்ற வார்ப்புருவைப் போல, சிறியதாக இருந்தால் மிக நன்றாக இருக்கும்.
பயன்படுத்து என்ற தத்தலை பயன்படுத்துக என்று மாற்றுவது நலம்.
ஒலிக்கோப்பினை உருவாக்கும் போது, TA-கோப்பின் பெயர் என்று தானே அமைய வேண்டும்.-(hypen) இல்லாமல் கோப்பினை உருவாக்கலாமா? எடுத்துக் காட்டு File:Ta ஆறு.ogg ≈18:49, 8 நவம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..
விரிவான குறிப்புகளுக்கு நன்றி த.உழவன்
1, 2, 3, 4 மற்றும் 7 டிரான்சிலேட் விக்கியில் இடைமுக மொழிமாற்றில் செய்து விடலாம். எளிதானதே. செய்து விடுகிறேன்.
5 இல் வேறொரு சிக்கல் உள்ளது. காமன்சு நிருவாகி உதவி தேவை. அதுவரை awb கொண்டு ஏற்றும் கோப்புகளில் வார்ப்புரு சேர்க்கத் திட்டமிட்டுள்ளேன். (2 என்பது சோதனையில் சேர்ந்தது. அதை சேர்க்க்த் தேவையில்லை. வெறும் {.{TamilWiki Media Contest}} போதும் )
6. வார்ப்புருவை சிறிது செய்து விடுகிறேன் விட்டேன்.
8. ta- என்பது தேவையான் பெயரிடும் மரபு. எனினும் புதியவர்களை பெயரிடல் மரபினைப் பின்பற்றச் சொல்வது கூடுதல் சுமையென்பதால் வலியுறுத்தவில்லை :-). பெயர் மாற்றும் அணுக்கம் வாங்கி நானே செய்து விடலாம் என நினைத்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக19:07, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நீங்கள் தந்த 5,8-க்கான குறிப்புகள், எனது புரிந்துணர்வை மேம்படுத்தின.நன்றி. தங்கள் பணி செம்மையடைய, ஒரு பயனராக நான் உரைத்தவைகளை ஏற்றமைக்கு மிக்க நன்றி. வணக்கம்.≈07:33, 9 நவம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளனவணக்கம், Info-farmer. உங்களுக்கான புதிய தகவல்கள்
வார்ப்புரு பேச்சு:கை-த.உ பக்கத்தில் உள்ளன. நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
சேலத்தில் முதல் விக்கிப்பட்டறை டிசம்பர் 11, 2011 அன்று பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். மேலும், உங்களுக்குத் தெரிந்த விக்கி ஆர்வமுடையவர்களையும் அழைத்து வரவும்.
நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால் உங்களையும் இப்பட்டறைக்கு அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.
உங்களை 11, டிசம்பர் 2011 இல், சேலம் பட்டறையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மேலதிக தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.
திரு தகவலுழவன் அவர்களுக்கு வணக்கம்.
என் பெயர் முத்துசாமி. சென்னை சைதாபேட்டையில் உள்ளேன். ஒய்வு பெற்ற நூலகர் (நடுவணரசுப் பணி). கடந்த டிசம்பர் 13 , 2011 முதல் விக்கிபீடியாவில் பங்காற்றி வருகிறேன். சில கட்டுரைகளைப் பதிவேற்றியுள்ளேன். என் மகள் வீடு சேலம் என்பதால் அங்கு வருவதுண்டு.
சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர் நீங்கள் என்பது தெரிந்தது. விக்சனரி குறித்து தாங்கள் காட்டி வரும் ஆர்வம் பற்றி தெரிந்து கொண்டேன்.
நான் பணியாற்றிய இடத்தில் குறிப்பிடத் தகுந்த அளவு கலைச்சொற்களை செகரித்த்ள்ளேன். இவற்றை விக்சனரியில் பதிய விருப்பம்.
எ.கா. Digitalwart, Digital Computer, Digital
போன்ற சில சொற்களைப் பதிந்துள்ளேன். இவற்றை படித்து உங்கள் கருத்துக்களை கூறினால் மகிழ்வேன்.
நன்றி வணக்கம்
உண்மையில் வள்ளுவர் கடவுள் வாழ்த்தாக கூறுவது ஒரு மெய் கீர்த்தி அடைந்த ஒருவரைப் பற்றியே கூறுகின்றார். கடவுள் வாழ்த்தில் முதல் குறளில் பகவன் என்பது தனி வார்த்தை அல்ல. ஆதிபகவன் என்று கூறப்படும் சமணர்களின் தீர்த்தங்கரரையே குறிக்கின்றது அல்லது வள்ளுவர் நினைத்த ஒருவரை-கடவுள் என்று கூறப்படும் மனதினால் உருவாகக்கப்பட்ட பொருளை அல்ல. ஆதி என்பது பழமை என்றும், பகவன் கடவுள் என்றும் நமக்குத் தெரிந்த மதத்தை வைத்து பொருள் கூறி உள்ளோம். வள்ளுவன் வாழ்த்தும் கடவுள் செய்யப்பட்டவர் அல்ல என்பதை அவரது நூல் முழுமையும் காண முடிகிறது. கடவுள் தன்மையை அடைந்த ஒருவரையே கடவுள் வாழ்த்தாக எடுத்தாண்டு உள்ளார். மேலும் சில தகவல்களை தங்களுக்கு கூற விழைகிறேன். நான், தங்களை தங்களுக்கு பள்ளியில் சொல்லிக் கொடுத்த பொருளை நினைவுபடுத்தாமல் திருக்குறளின் முதல் அதிகாரத்தை படித்தால், வள்ளுவர் - அவ்வாறே நாம் கூறுகின்றோம், ஆனால் குன்குந்தார் என்னும் சமண முனிதான் திருக்குறளை எழுதினார் என்று விழுப்புரம் பகுதி வாழ் சமண மக்கள் உறுதியாகக் கூறுகின்றனர்- அந்த அதிகாரத்தில் வரும் பெயர்களை தங்களால் அவதானிக்க முடியும், ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், வாலறிவன், இலான், இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறுதியாகவே இறைவன் என்னும் சொல்லைக் கூறுகின்றார். வள்ளுவரின் குருவையோ, அல்லது ஞானம் பெற்ற ஒருவரையோ வள்ளுவர் தனது கடவுள் வாழ்த்துப் பகுதி முழுவதும் எடுத்தாண்டு உள்ளார் என்பது எனது தாழ்மையான கருத்து. ஐயம் இருப்பின் கடவுள் வாழ்த்தை படித்துப் பாருங்கள் வள்ளுவன் கூறும் இன்னொரு கடவுள் தங்களுக்கும் தென்படுவார்.-Pitchaimuthu2050 18:08, 12 பெப்ரவரி 2012 (UTC)
வணக்கம், தகவலுழவன், நீங்கள் ஆலமரத்தடியில் கூறியிருந்ததை பார்த்தேன்.. நான் காமென்சில் அவ்வப்போது பகுப்பாக்கத்தை மட்டும் செய்வேன்.. தங்களுக்கு ஏதாவது குறிப்பிட்ட உதவி தேவைப்படின் என்னால் இயன்ற அளவு செய்ய முயல்வேன்..--shanmugam (பேச்சு) 06:35, 8 மார்ச் 2012 (UTC)
//ஒருவேளை இரவி இல்லையென்றால், நான் கணினி, இணையம் என்பதனை பற்றி அறியாமலேயே, என் வாழ்க்கையைக் கடந்திருப்பேன். //
கொஞ்சம் மிகையா இருக்கே :) எனினும், வாழ்த்துகளுக்கு நன்றி :) --இரவி (பேச்சு) 09:50, 14 மார்ச் 2012 (UTC)
மிகையே அல்ல. எனக்குத்தெரியும் எனது நிலைப்பற்றி..கி.மு, கி.பி என்று சொல்வது போல, எனது வாழ்க்கையில் இ.மு. இ.பி. அதுபற்றியெல்லாம் அங்கு சொன்னால் நன்றாக இருக்காது என்று விட்டுவிட்டேன்.
விக்சனரியில் நான் செய்த பதிவுகளை எல்லாம் எடுத்துப்பார்த்தால், நீங்கள் எனக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்லி கொடுப்பது போல, சொல்லி கொடுத்துள்ளீர்கள். உங்கள் அளவு நான் யாருக்கும் இதுவரை சொல்லித் தந்தது இல்லை. மேலோட்டமாக, அறிமுக உரையோடு விட்டுவிடுவேன்.
TamilBOT கணக்கு ஏன் அவசியம் என்று விளக்கியது. அதுவும் ஒவ்வொரு முறையும், உங்கள் செலவிலேயே பேசியது.அந்த அலைப்பேசியை இன்றும் கூட வைத்துள்ளேன். எனது நண்பர்கள் செங்கல் செட்டு என்று கிண்டல் கூட அடிப்பர்.
கணினியின் அவசியத்தை, இணையத்தின் அவசியத்தை, செம்மொழி மாநாட்டில் நண்பர்களை அறிமுகம் செய்தது, உங்கள் வீட்டில் சில நாட்களை தங்க வைத்தது, அக்கா,மாமா, அவர்கள் பிள்ளைகள் பழகியது..
செம்மொழி மாநாட்டிற்கு வந்த செல்வாவை, விக்கிப்பீடியா திடலுக்கு வரவழைத்தது. கூகுள் மொழிப்பெயர்ப்பு பணிசெய்தவரிடம் விவாதித்தது, இன்னும் பலரை(மயூரன்,சுந்தர்,மாகிர்,முகுந்த்,கோபி,ஆமாச்சு,NHM நிரலர்,சோடாபாட்டில்,அருநாடன்,கார்த்தி..)ஒரே நேரத்தில் அங்கு வரவழைத்தது.
பணிச்சுமையில் மாமாவின் மடிக்கணினியை தவறவிட்டது.அதைத் திரும்ப பெற்றது. இப்படி பல..
எனக்கு 2மணி நேரத்திற்கு ஒருமுறை ஏதாவது தின்றால், மயக்கம் வருவது குறை வாய்ப்புண்டு என்று ஆலோசனை கூறியது.அவ்வாலோசனை, இன்றளவும் நல்ல பலனைத் தருகிறது.
இணையத்தின் மூலம் உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இன்னும் மங்காமல் இருக்கிறது. விக்சனரி பன்மொழி அகரமுதலி என்ற நிலையை உருவாக்குவேன். அதிலுள்ள தடைகளைப் பற்றி சிந்தித்து வருகிறேன்.
அந்தந்த மொழியினரே, அதனைச் செய்வர்.தகுந்த நிகழ்பட முன்னுரையோடு, அசைப்படங்களோடு, ஒலிப்புகளோடு ..
தமிழகப்பள்ளிக்குரிய உயிரியல் பாடங்களையாவது இங்கு மேம்படுத்துவேன்.மூலிகைகளைப்பற்றி..சுற்றுலா தளங்கள் பற்றி...
நான் தமிழில் தட்டச்சுவதை கண்டு, இன்று பலர் என்னைப் பாரட்டுகின்றனர்; வியக்கின்றனர்.தவறு இல்லாமல் எப்படி விரைவாக தட்டச்சுகிறாய்? அப்போதெல்லாம், தமிழ்99விசைப்பலகையின் சிறப்பு என்று நீங்கள் வலைப்பூவில் எழுதிய கட்டுரைதான் ஞாபகம் வரும். மிக்கநன்றி.
இப்ப இரவு மணி 1.00 அயர்ச்சியாக இருக்கிறது. நிறைய எழுதலாம்.
அவ்வப்போது உங்கள் மேலாண்மையை, எனது பதிவுகளில் எதிர்நோக்கி, ஆவலுடன் முடிக்கும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
மேலே கரியத்தடிமனாகத் தெரியும் பகுதியை, அப்படியே நகலெடுத்து, நீங்கள் எங்கு கையொப்பம் இட நினைக்கிறீர்களோ, அங்கே இடவும். உங்கள் பெயரும், கையொப்பம் இட்ட நேரமும், தேதியும் தெரியும். மற்றவை பிறகு. என்றும் நட்புடன், பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
நன்றி தங்கள் கூறியபடி செய்தேன் கையெப்பம் வருகிறது..நேரம் தேதி எல்லாம் வரவில்லை
தேதியும் நேரமும் வரும். நீங்கள் நகல் எடுப்பதில் விடுபட்டு போய்விட்டது. கருப்பாக இருக்கும் அனைத்தினையும் நகல் எடுக்கவும். விளக்கமாகக் கூற வேண்டுமென்றால் வருமாறு:-Iramuthusamy/Signature என்பதற்கு அடுத்து ஒரு | என்ற (pipeline) குறியீடை இடவும். இக்குறியீடு நமது விசைப்பலகையின் enter விசைக்கு மேலே இருக்கும். சில விசைப்பலகையில் இடம் மாறி இருக்கும். அவ்வாறு | என்ற குறியீட்டை இட்ட பிறகு தொடர்ந்து ~ (tilde) குறியை, 4முறை இடவும். தேதியும், நேரமும் வரும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
வணக்கம் தகவலுழவன்,
தற்போது, பைத்தான் மென்பொருளை என்னுடைய மடிக்கணினியில் நிறுவிவிட்டேன். விக்கிதிட்டங்களில் பைத்தான் பயன்பாடு குறித்தும் ஓரளவு அறிந்து கொண்டேன். நாம் மிக விரைவில் அடுத்த முயற்சியினை தொடரலாம் என்று எண்ணுகிறேன். எனது பேச்சு பக்கத்திலோ அல்லது மின்னஞ்சலுக்கோ, பதில் தரவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:32, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]
தினேஸ்!இப்பக்கம் பயனாகுமென எண்ணுகிறேன். இதிலிருந்து தொடங்கலாமா? வழிகாட்டவும். இதன் மூலம் நீங்கள் எனக்குச்சொல்லித்தரும் நேரத்தினைக் குறைக்கலாம் என எண்ணுகிறேன். ஆவலுடன்..பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
வணக்கம். த.உ. எடுகோள்கள் என்பதை விட மேற்கோள்கள் என்ற சொல்லே மிகவும் பரவலாக த.விக்கியில் பயன்படுத்தப்படுகிறது. அச் சொல்லைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:35, 17 சூலை 2012 (UTC)[பதிலளி]
சிந்திக்க வைத்தமைக்கு நன்றி.நற்கீரன். கொள்,கோள்,வியங்கோள்,எடுகோள்,மேற்கோள்,கிடிகோள்,உசாத்துணை,உயவுத்துணை போன்ற சொற்களை சற்று விரிவாகப் பார்த்தேன். இராம்கி.-யின் கருத்தினையும் வாசித்தேன். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இப்போதுள்ள நிலைக்கு, எடுகோள் பொருந்தும் என்றாலும், கட்டுரைகள் வளரும் போது, இச்சொல் பொருந்தாது என்பதனைப் புரிந்து கொண்டேன். நமது கட்டுரைகளில், அடிக்குறிப்புகள் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர். அதுவே, மிகப்பொருத்தமான சொல்லாக <.ref> என்ற வசதிக்கு அமைகிறது.ஏனெனில், ஒரு அடிக்கான(வாக்கியம்) குறிப்பு, மேற்கோளாகவோ, உசாத்துணையாகவோ, எடுகோளாகவோ இருக்கலாம்.அனைத்துமே மேற்கோள் என்பது, பல கட்டுரைகளுக்கு, கூற இயலா நிலையுள்ளது. எனவே, =.=அடிக்குறிப்புகள்== என்றே பயன்படுத்த எண்ணுகிறேன்.தங்கள் எண்ணங்களை எதிர்நோக்கி, இத்துடன் முடிக்கிறேன்--த♥ உழவன் +உரை..06:17, 17 சூலை 2012 (UTC)[பதிலளி]
த,உழவன், அடிக்குறிப்புகள், மேற்கோள்கள் இரண்டும் வேறு வேறான கருத்துகளைத் தரும் என நினைக்கிறேன். ஒரு கட்டுரையில் தரப்படும் ஒரு கருத்துக்கு மேலதிகமான விளக்கம் தேவைப்பட்டால் அதனை அடிக்குறிப்பாகத் தரலாம். கருத்து ஒன்றுக்கு வேறு நூலோ, அல்லது இணையதளமோ மேற்கோளாகக் காட்டப்பட வேண்டும் என்றால் மேற்கோள்களின் கீழ் தாருங்கள் ஒரு கட்டுரையில் இவ்விரண்டும் இருந்தால் அவை வெவ்வேறான உபபகுதிகளாகத் தர வேண்டும். புளூட்டோ கட்டுரையைப் பாருங்கள்.--Kanags\உரையாடுக08:17, 17 சூலை 2012 (UTC)[பதிலளி]
இன்னும் எனக்கு கையாள்வதில் மயக்கமுள்ளது. பெரும்பான்மையானக் கட்டுரைகளில், மேற்கோள்கள் இருப்பதால் அதனடியொற்றுகிறேன்.கறையான் கட்டுரையிலும், புளூட்டோ போன்றே ஏற்கனவே பின்பற்றியுள்ளேன். மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--த♥ உழவன் +உரை..04:13, 22 சூலை 2012 (UTC)[பதிலளி]
//image of Crohn's colitis showing deep ulceration in sigmoid colon.// என்ற படவிவரம் உள்ளது
முன்பு இருந்த படத்தில்
// severe Crohn's colitis showing diffuse loss of mucosal architecture, friability of mucosa in sigmoid colon // என்ற படவுரை உள்ளது.
ஆக, இருபடங்களும் பெருங்குடலைத்தானே குறிக்கிறது.எனவே, அந்த இருபடங்களும், அக்கட்டுரைக்கு பொருத்தமானது தானா? அல்லது அந்நோய் முற்றினால் பெருங்குடல் வரை பாதிக்குமா?--த♥ உழவன் +உரை..09:45, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]
தகவலுழவன், இந்நோய் உணவுக்குழாயில் மட்டுமே, நோய் முற்றிய நிலையிலும்கூட உணவுக்குழாயே பாதிக்கப்படுகின்றது.! மேலும் மரு. பெ. கார்த்திகேயன் கூறியதன்படி படிமம்:Peptic stricture.pngதான் முன்னர் இருந்தது, அப்படத்தில் "இரையக உண்குழலியப் பின்னோட்ட நோயால் பாதிக்கப்பட்ட உணவுக்குழாயின் அடிப்பகுதி: அகநோக்கிப் படம்" எனும் கருத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய விக்கிகளிலும் இதனையே படிமமாக பயன்படுத்தி உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.--செந்தி--ஃ உரையாடுக ஃ--10:31, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஆகா!தவறான படங்களை வைத்துக்கொண்டு உரையாடி விட்டேன்.மிக்க மன்னிக்கவும். என் அறியாமையை போக்கியமைக்கு, இருவருக்கும் மிக்க நன்றி.தற்போதுள்ள படத்தின் நிறத்தைக் குறைத்துள்ளேன். அங்கேயே உங்கள் கருத்தினை இடவும். மீண்டும் பிரிதொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்--த♥ உழவன் +உரை..11:22, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]
நீங்கள் எங்கோ தமிழ் விக்கி நிர்வாகிகளை அப்படி அழைப்பது சரியல்ல என்றும் அணுக்கரென்ரு அழைக்க வேண்டுமென்றும் கூறியதாக நினைவு. ஒருவருக்கு நிர்வக்கிக்க அணுக்கங்களைத் தருகிறார்கள் என்றால் அவர்களும் நிர்வாக்கிகள் தானே? நான் கேட்டதில் ஏதும் தவறா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:59, 3 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்.எனவே, அதுபோல எண்ண வேண்டாம்.//கற்றலின் கேட்டல் நன்று //என்பதனை முழுமையாக ஏற்பவன் நான். நான் பலரிடம் கேட்டே, கற்றே கணினித்தமிழ் ஓரளவு அறிந்து வருகிறேன். முதன்முதலில் இரவியை, விக்சனரியில் சந்தித்த போது, ஒரு விரலில் தமிழில் அடித்துக்கொண்டு இருந்தேன். இப்ப தமிழ்-99 பற்றி அவர் எழுதிய கட்டுரையை படித்த பிறகுதமிழ்-99மேன்மையால் நன்கு அடிக்கிறேன்.
பைந்தமிழ் சொல்லுக்கு, இங்கு பல கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. எனவே, அதுபற்றி மிகக்கவனமாக செயல்பட வேண்டுமென்று எண்ணுகிறேன்.தமிழ் விக்கிக்குடும்பத்தில் நடந்த பிரிவுகளுக்கு, இதுவும் ஒரு காரணம். விரிவான கருத்தோட்டம் தெளிவைத்தரும் என்றாலும், சுருக்கமாகக் கீழ்கண்டவற்றை கூற விரும்புகிறேன்.
இவை தமிழ் சொற்கள் அல்ல என்பது எனது முதல் எண்ணம். மற்றொன்று administrator(நிருவாகி), officer(அதிகாரி), history(வரலாறு), register(பதிவேடு), common(பொது), commons(பொதுவகம்), bureaucrat(மாஅணுக்கர், நுண்அணுக்கர்,மேலணுக்கர்), sysop(அணுக்கர்) என்ற ஆங்கிலச்சொற்களை, ஒரு பள்ளி மாணவனிடம் கொடுத்து, மொழிபெயர்க்கச் சொல்லுங்கள். நிலவரத்தை உணரலாம். இங்குள்ள பெரும்பாலான கட்டுரைகள் பள்ளியளவில்தான் உள்ளன என்பதால், அவர்களிடம் கொடுத்துப்பார்த்தேன்.பள்ளி மாணவருக்கு, அறியவைத்தல் எனது பகுதிநேர வாரப்பணிகளுள் ஒன்று.
தவறான புரந்துணர்வே வராவண்ணம், நமது அடித்தளம் இருக்க எண்ணுகிறேன். நம்மிடம் உள்ள களைகளை, களையும் கலையில் நாம் மேம்பட வேண்டும். மறுசீரமைப்பும் வேண்டும்.
ஆலமரத்தடி எவ்வளவு அழகானச்சொல்.அதனை உருவாக்கியவரை வணங்குகிறேன். நல்லவேளையா village pump என்ற சொல் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்படாமல், மொழியாக்கம் செய்யப்பட்டது.நாம் கிண்ற்றுத்தவளைகளும் அல்ல. கிளிப்பிள்ளைகளும் அல்ல என்பதனை நாம்தான் செயல்பட்டு காட்ட வேண்டும். நம்மை விட்டு பிரிந்தவர்களின் கூற்றிலும், ஓரளவு உண்மைகள் உண்டு.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
என்ற மாண்பு நம்மிடம் குறைவு என்கின்றனர். அனைவருக்கும் பொதுவான எளிய வழிமுறைகளே நம்மை மேம்படுத்தும்.நமக்கு மட்டுமே புரிகிற நடைமுறைகளால், சொற்களால், பிறரை ஒத்துழைக்க அழைக்க முடியாது.நம் சமூகத்தை வளர்க்க இயலாது.
எல்லாவற்றிற்கும் மேலாக இங்கு அதிகாரம் என்பது அளிக்கப்படுவதில்லை. நம்முடைய ஈடுபாட்டால் நமக்கு சில மேலதிகபொறுப்புகள் தரப்படுகிறது. அதனை நாம் அனைவரும் பெற இயலும் என்பதை, நாம் கையாளும் சொற்கள் தான் புரியவைக்கணும்.
இப்பொழுதுள்ள சொற்கள், பொதுவான மக்கள் பயன்பாட்டில் ஏற்படுத்தும் வீச்சைத் தவிர்த்தல், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவதென்றே நான் எண்ணுகிறேன். நம் அறிவை காட்ட, இங்கு பங்களிக்கவில்லை. பிறரிடம் நம் தாய்மொழி பற்றை வளர்க்க முயற்சிக்கிறோம். அவ்வளவே. நமக்கு முன்னே இதுபோன்றவர் எடுத்த முயற்சிகளை, நம் சமுதாயம் ஏன் ஏற்க வில்லை என்பது குறித்து நாம் சிந்தித்து, இங்கு செயல்படவேண்டும். மீண்டும் சந்திப்போம்.
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளனவணக்கம், Info-farmer. உங்களுக்கான புதிய தகவல்கள்
மதனாஹரன் இன் பேச்சு பக்கத்தில் உள்ளன. நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
வணக்கம், Info-farmer/பயனர் பேச்சு:தகவலுழவன்-பரண்!
நீங்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். தாங்கள் புதிதாக கட்டுரைகள் எழுதுவது, மற்ற விக்கிப்பணிகளில் பங்கு கொள்வதுடன் ஏற்கனவே நீங்கள் எழுதிய சில கட்டுரைகளையும் அவ்வப்போது மேம்படுத்த முனைந்தால் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில் உருவாக்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்தலாம். இவ்வாறு செய்வது தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளை எட்டும் நிலையில் அதன் தரத்தை உயர்த்த உதவும். பின்வரும் வழிகளில் உங்கள் கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
தகுந்த இடங்களில் உள்ளிணைப்பு தரலாம்.
பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு பக்கப்பட்டையில் இருந்து இணைப்பு தரலாம்.
எழுத்து, இலக்கணம், தகவல் முதலியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தலாம்.
கட்டுரைக்குப் பொருத்தமான படங்களைச் சேர்க்கலாம்.
தகுந்த உசாத்துணைகள், மேற்கோள்கள் சேர்க்கலாம்.
தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம்.
கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் படித்துப் பார்த்து அதற்கு ஏற்ற மாற்றம் செய்யலாம். உரையாடல் பக்கத்தில் மறுமொழி இடலாம்.
கட்டுரையை விரிவாக்கலாம்.
கட்டுரையில் உள்ள தரவுகளை இற்றைப்படுத்தலாம்.
ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். இது என் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே :) இன்னும் இலகுவான வழிகளில் பல்வேறு பங்களிப்பாளர்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த இயலும் எனில், அது குறித்த உங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
தமிழ் விக்சனரி பக்கம் தலை காட்டினேன். நீங்கள் செய்த சாதனைகளைக் கண்டு வியந்தேன். (அறியாதவர்களுக்கு: ஒற்றை எ.கா: 1500 அரேபிய்/சீன சொற்கள் தமிழ் விக்சனரிக்கு பதிவேற்றல்) எனக்கும் இந்த வித்தையெல்லாம் சொல்லிக் குடுங்களேன்! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:06, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
தமிழ்க்குரிசில்! நான் 3வருடங்களுக்கு முன் இங்கு வந்தபோது, எனக்கு தட்டச்சிடக் கூட தெரியாது. சொடுக்கியின் உதவியால், இதனைக்கொண்டு எழுதிக்கொண்டு இருந்தேன். விக்சனரியில் இரவி அப்பொழுது தொடர்ந்து எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்தார். எனது முதல் ஆசான் அவரே. தொடர்ந்து பலரை அறிமுகப் படுத்தியதால், ஒவ்வொருவரிடமும் இருந்து ஒவ்வொன்று கற்றுக் கொண்டு, இன்று ஓரளவு செயற்படுகிறேன்.அவ்வப்பொழுது நான் செய்த பிழைகளையும் களைந்து வருகிறேன். எனக்குக் கற்றதை நான் அடுத்தவருக்குக் கற்றுத்தர இணைய வழி வழிகாட்டல்களை நிகழ்படங்களாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன். விரைவில் சந்திக்கிறேன். என்றும் நட்புடன்--த♥ உழவன் +உரை..16:38, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
நற்கீரன்!தமிழர் தொழில்நுட்பம் கண்டேன். மகிழ்ந்தேன். என்னால் இயன்றவரை இப்பொழுது பண்டைய தமிழர், நம் முன்னோர்கள் செய்த அரும்பணிகளையும், பதிவுகளையும் விக்கியில் பதிவேன். இங்கு பகலிலேயே 7-8மணி நேர மின்தடை நிலவுகிறது. அதனால் என்னால், இலக்கு நோக்கி சீராக செயல் பட இயலவில்லை.இருப்பினும், தமிழிசைப் பற்றி, கடந்த 4-5 நாட்களாக நடு இரவிலும், பின் இரவிலும் செயற்படுகிறேன். ஒரு மடிக்கணினி வாங்க முயற்சி செய்கிறேன். வரும் தைத்திங்களுக்குள் வாங்கிவிடுவென்று எண்ணுகிறேன். பிறகு அதிகம் இணையத்தில் இணைவோம்.இம்மடிக்கணினி வாங்கலாமென்று எண்ணுகிறேன்.இதுபற்றி உங்களின் கருத்தென்ன? வேறு ஏதாவது மடிக்கணினி இருப்பின், குறைந்த விலையில் தெரிவிக்கவும்.--த♥ உழவன் +உரை..10:14, 15 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:07, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
தகவலுழவன், திரைப்படப் பாடல் முழுவரிகளையும் திரைப்படக் கட்டுரையில் இணைப்பது நல்லதல்ல. இப்பாடல் பற்றிய சிறப்புகளை மட்டும் மிகைப்படுத்தாமல் (முடிந்தால் ஆதாரத்துடன்)) சுருக்கமாகத் தரலாம். திரைப்படப் பாடல்களை முழுமையாக விக்கிமூலத்தில் தரலாம் என நினைக்கிறேன்.--Kanags\உரையாடுக00:14, 30 சூன் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. அப்பக்கம் எனது கவனிப்புப் பட்டியலில் உள்ளதால், அங்கேயேத் தொடருவோம். எனக்கு நீங்கள் செய்யும் மாற்றம் மின்னஞ்சலாக வரும். சேமிக்கும் முன் சுருக்கம்:என்பதில் எழுதப்படும் செய்தியின் கீற்றை ஒட்டினால், அதனை மின்னஞ்சல் படிக்கும் போதே அறிந்துவிடுவேன். இல்லையெனில், ஒவ்வொரு முறையும், விக்கிப்பீடியா பக்கத்திற்கு வரவேண்டும்.--≈ த♥உழவன்( கூறுக )00:44, 27 சூலை 2013 (UTC)[பதிலளி]
தகவலுழவன், உள்ளினங்களைத் தாமாகப் பிரிக்கும் வசதி பற்றிக் கேட்டிருந்தீர்கள். அக்காசியாப் பேரினத்துக்கு மட்டும் முயன்று பார்த்தேன். சரியாகவுள்ளதுபோலத் தோன்றுகிறது. சரி என்றால் நான் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்ட முறையில் செய்ய முடியும். அதை இன்னும் சற்று மேம்படுத்தலாம். ஏற்கனவே சரியாக உள்ளினங்கள் பிரிக்கப்பட்டிருந்தால் அந்த வரிகளை விட்டுவிடும் வசதியைச் சேர்க்கலாம். முதலில் இது பயன்படும் என்றால் சொல்லுங்கள், திருத்தித் தருகிறேன். -- சுந்தர்\பேச்சு08:45, 2 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள்.
குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில் ஒன்று:
கலைச்சொற்கள் பரவலாக்கலில் தமிழ் விக்சனரியின்/விக்கியூடகங்களின் பங்கு
தமிழ் கலைச்சொற்களைத் தொகுத்தலில் விக்சனரியின் பங்கு
வணக்கம் தகவலுழவன், இங்குள்ள கட்டுரைகளில் உள்ள சிவப்பு ஆங்கில இணைப்புகளை தகுந்த தமிழ்க் கட்டுரைகளுக்கு இணைப்பதற்கு இக்கருவியைப் பயன்படுத்திப் பாருங்கள். ஒரு சில செக்கன்களில் கட்டுரை முழுவதிலும் உள்ள ஆங்கில சிவப்பு இணைப்புகளுக்கு தமிழ்க் கட்டுரைகள் (இருந்தால்) தேடித் தரும். உங்கள் உயிரியல் கட்டுரைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.--Kanags\உரையாடுக 12:39, 11 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி.கனகு! உங்களை நினைத்திருந்தேன். நான் நினைத்தபடி வழிகாட்டியபடி வழிகாட்டியமையால் அகமகிழ்ந்தேன். வணக்கம்.--≈ த♥உழவன்( கூறுக ) 12:48, 11 செப்டம்பர் 2013 (UTC)
ஈசல் என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள் பெரும்பாலும் கறையான்களைப் பற்றியே உள்ளன. இரண்டையும் ஒருங்கிணக்கலாமா? அப்படியானால், இல்லாத தகவல்களை கறையான் கட்டுரையில் சேர்த்தால், இரண்டையும் இணைக்கலாம்.--Kanags\உரையாடுக 11:38, 18 செப்டம்பர் 2013 (UTC)
ஈசல், கறையான் என்பதால், கறையான் பற்றியே இருக்கிறது! அங்குள்ள விவரங்கள், இங்கு ஏற்கனவே இல்லாதவையே. கட்டுரையாளர் தொடர்ந்தால், அக்கட்டுரை இன்னும் விரிந்து தனி கட்டுரையாகவே நாம் மாற்றலாம். இல்லையெனில், ஒருங்கிணைத்து விடலாம் என்றே நான் எண்ணுகிறேன். புகுபதிகை செய்யாமல் ஏன் செய்கிறார் என்று பொறுத்திருந்தால், நாம் அறிந்து கொள்ள இயலும். பார்ப்போம். ஒரு மாதம் விட்டு பார்க்கலாமென்றே நான் நினைக்கிறேன்.--≈ த♥உழவன்( கூறுக ) 17:13, 18 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:15, 18 செப்டம்பர் 2013 (UTC)
தவறாமல் கூறியபடிவருகிறேன். தங்களின் அயராத உழைப்பிற்கு தலைவணங்குகிறேன்.வணக்கம்.--≈ த♥உழவன்( கூறுக ) 01:50, 19 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:26, 27 செப்டம்பர் 2013 (UTC)
இதையும் ஒரு 'விக்கியன்பாக' ஏற்று சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நட்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:28, 27 செப்டம்பர் 2013 (UTC)
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் . ஆனால், மேடையில் வாங்க விருப்பமில்லை. இக்கூடலுக்கு உழைத்த அனைவரின் கையொப்பத்தையும் பெற்ற தர இயலுமா? காலதாமதம் ஆனாலும், பரவாயில்லை. சிலநாட்கள் கழித்து, அஞ்சலில் பெற்றுக்கொள்கிறேன்.--≈ த♥உழவன்( கூறுக ) 12:15, 27 செப்டம்பர் 2013 (UTC)
அண்ணா! மருத்துவர் ஜி. வெங்கடசாமி அவர்களின் பேச்சுப் பக்கத்தில் புதுப்பயனர் வார்ப்புரு இட்டு நீங்கள் காட்டிய அன்பை மதிக்கும் அதேவேளையில் ஒரு குழப்பத்தைத் தணிக்க பயனர் வார்ப்புருவை நீக்கிவிட்டேன். பிழையெனில் திருத்திக்கொள்க--நீச்சல்காரன் (பேச்சு) 07:53, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அப்பக்கத்தை படித்துக் கொண்டு இருந்தேன். கட்டுரையை உருவாக்கியதற்கு மிக்க மகிழ்ச்சி. திரு மிகு. ஜி. வெங்கடசாமி வகுத்த தெள்ளிய நெறியால் தான், வருடா வருடம் தமிழகத்தில் இலட்சகணக்கான மக்கள், கண்பார்வை பெற்று வருகின்றனர். ஒரு பைசா செலவு இன்றி, மிகச்சிறப்பாக செயல்படுகின்றனர். பயன் அடைந்தவர்களில், என் தாயும் ஒருவர். எனது தவறானப் பதிவுகளை, விரைந்து நீக்கியமைக்கு நன்றி. வேறொரு பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புருவை, அப்பக்கத்தில் தவறுதலாக இட்டுவிட்டேன். இனி அத்தகைய தவறுகள் வராவண்ணம் செயல்படுவேன். இதுமாதிரி நீக்கலுக்கெல்லாம் பதிலுரைத்து உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டாம். உங்களின் முழுஆற்றலை இணையத்தில் ஆவணப்படுத்துக. அப்படியே விக்சனரி பக்கம் வருக. இங்கு ஒரு மொழி என்பதால், உங்களுக்கு சில இடர்கள் தோன்றக்கூடும். --≈ த♥உழவன்( கூறுக )08:13, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம், தகவலுழவன். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:28, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சன்னல் என்பதற்குரிய தமிழ் சொல் சாளரம். அதுபோல நிருவாகி,நிர்வாகி என்பதனை அணுக்கர் என்று குறிப்பிடுகிறேன். நாம் பல்வேறு நிலைகளில் பிற இணையங்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்பதை நமது சொற்கள் தான் கூறும். village pump ஆலமரத்தடி என்று தனித்துவ அழகோடு சிறப்பது போல... இதற்கு முன் நடந்த உரையாடற் பகுதி ஒன்று. வணக்கம்.--≈ த♥உழவன்( கூறுக )02:39, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி, உழவன். இன்னும் சில பயனர்களிடம் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளேன். எனவே, அனைவருக்கும் பதில் தர அவகாசம் தந்து வரும் திங்களன்று உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:44, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உழவன், வாக்கெடுப்பில் உள்ள கருத்துகள் பகுதியில், இரண்டு இடங்களில் உங்கள் விளக்கத்தைக் கோரியுள்ளேன். கவனிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 02:48, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை
வணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:30, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வேகமாக முன்னேறி வரும் மொழிகளின் தொழில்நுட்பங்களையும், நமது மொழியினர் எழுத த்தொடங்கியுள்ளதால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டும் சில வசதிகளை கருவிகளாக அமைக்க வேண்டும் என்பதுஎன் அவா. அதற்குமுன் கட்டுரைப் பகுதியான தமிழ்விக்கிப்பீடியாவில் உள்ள பல வசதிகள்/ அமைப்புகள் அனைத்து தமிழ்விக்கிதிட்டங்களிலும் இல்லை என்றே எண்ணுகிறேன். விரிவாக ஒவ்வொன்றாக அப்பக்கத்தில் முன் வைக்கிறேன். இங்கு தொழிற்நுட்பம் என்ற பகுதியில் தொடர்ந்து செய்ய / உரையாட/வேண்டியன ஆகும். தனியானதொரு பக்கம் ஒதுக்க வேண்டாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஒரே இடத்தில் செய்வது பல்வேறு பலன்களை தரும். நமக்கு பின்னவர் வருபவருக்கு அது ஒரு வரலாற்றுப் பெட்டகமாக மாறும். --≈ த♥உழவன்( கூறுக )19:54, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் என்ற பக்கதினை நண்பர்கள் முன்மொழிந்தமையால் அங்கு தகவல்களை நகர்த்தியிருக்கிறேன். கருவிகளுக்கான கோரிக்கையை விரிவான கண்ணோட்டத்துடன் அனுக தனிப்பக்கம் சிறந்தது என்று எண்ணியிருக்கிறேன். ஆலமரத்தடி பொது தகவல்கள் நிறைந்த இடம் என்பதால் வல்லுனர்களுக்கு தேடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:22, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. பங்களிப்பாளர்கள், அப்பங்களிப்பாளர்களின் பதிவுகளை சிரக்கச் செய்யும் கணினிநிரலர்கள் என்ற நோக்கிலேயே நான் காண்கிறேன். ஒரே நேரத்தில் பலரது பயனர் பக்கங்களுக்கு சென்று, எண்ணங்களை வெளிப்படுத்துதல் நடைமுறைக்கு சிரமமானது.அத்தகைய செய்திகளை ஆலமரத்தடியில் குறிப்பிடுதல் நலம். ஒவ்வொரு பக்கமாக சென்று கூறுதல், பணியடர்வு ஆகும். தொழிற்நுட்பங்களை பலரிடம் தெரிவிக்க இயலாது. அதனால் அங்கேயே தொழிற்நுட்பபகுதி, அதன் உட்பிரிவே, பயனர் கருவிகள் என்றே அமைய வேண்டும். அப்பொழுதுதான் நுனிமுதல்அடிவரை, பதிவுகளின் அடிப்படையில் அவ்வரலாறு பேணப்படும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி திட்டப்பக்கங்கள் என்பது புதிதாக தேடுபவருக்கு, நல்ல வழிகாட்டலாக இருக்காது. மேலும், 'இங்கு குறிப்பிட வேண்டாம் அங்கு குறிப்பிடுக' என்று நாம் சொல்ல வேண்டிய பணியடர்வு வருகிறது. இதுவே பலமுறை நடந்துள்ளது. அனைத்து விக்கிகளிலும் இதே நடைமுறை. அதனால் தொழிற்நுட்பப் பிரிவு, பிற மொழி விக்கித்திட்டங்களுடன் இணைந்துள்ளது. எனவே, நிரலர்களுக்கு சிரமம் என்பது சரியான கூற்றாகாது. ஒவ்வொரு இடத்திலும், தேடுபொறி வசதியை ஏற்படுத்த நான் முன்மொழிந்து, அமைக்கப்பட்டது அதற்காகத்தான். இப்படி பல வசதிகளை, நமது நண்பர்கள் செய்துள்ளனர். அனைத்து விக்கிகளுக்கும் பொதுவான ஒன்றேயே முன்மொழிந்துள்ளேன். அதனை கவனிப்பார்களென்றே எண்ணுகிறேன். தமிழ் விக்கிப்பீடியா மட்டுமே, தமிழ் விக்கி திட்டமன்று. பலவிதமான பயனர்களுடன் பேசியிருக்கிறேன். பிற தமிழ்த் திட்டங்களையும், இனி நண்பர்களுடன் வளர்த்தெடுப்பேன். வளர்த்தெடுப்போம். வணக்கம்.--≈ த♥உழவன்( கூறுக )12:51, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ--01:52, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
திரு. லோகநாதன் (தகவலுழவன்), நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன்\உரையாடுக04:05, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தகவலுழவன், இங்கு அறிவித்தபடி உங்களுக்கு நிருவாக அணுக்கம் வழங்குவதற்கான பரிந்துரையின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பை மாற்றுக் கருத்து இட்டவர்களிடம் கூடுதல் தகவல்கள் தேவையெனில் கேட்டுப்பெற்று, தேவைப்படும் இடங்களில் உங்கள் நிலை மாறியிருந்தால் அதைக் குறிப்பிடவும், கருத்திட்டவரின் புரிதல் தவறாக இருப்பதாக எண்ணினால் உங்கள் நிலையை விளக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்வது, விக்கியில் மிகத்தேவையான பண்பாக உரையாடி இணக்க முடிவை எட்டும் முறைக்கு வலுச்சேர்க்கும். நன்றி. -- சுந்தர்\பேச்சு07:27, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உங்கள் ஆர்வத்தையும், பங்களிப்பையும் கண்டு மெச்சுகிறேன். 40 மேற்பட்ட சக பயனர்களால் நீங்கள் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்பட்டு அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். நிர்வாகப் பொறுப்பில் செயற்படும் போது தயந்து பொறுமையாக, உணர்சிவசப்படாமல் அணுகுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 17:17, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உழவன், நிருவாகத் தேர்தலில் சுந்தர் கூறிய கருத்துகளை வழிமொழிகிறேன். ஒரு புறம், அதிகாரி / நிருவாகி ஆகிய சொற்களில் உள்ள அதிகாரத்தன்மையைக் கடுமையாக எதிர்க்கிறீர்கள். ஆனால், "நிருவாகிகள் மட்டும் கூடி உரையாடி முன்வைத்தல்" போன்ற உண்மையிலேயே அதிகாரம் மிக்க செயற்பாடுகள், மேலாண்மை போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள். இவை இரண்டுக்கும் உள்ள முரணை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். விக்கியில் செயற்பாடுகள் சரியாக அமையாக உரையாடல்களை முன்னெடுப்பது முக்கியம். கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர வேண்டும். அந்த இழையில் கூற வேண்டியதில் இருந்து விலகிப் பேசக் கூடாது. தமிழ் நடை, விக்கி நடை, விக்கி நுட்பம் போன்ற திறன்களை எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், உளப்பாங்கு தானாக மாறுவது. இதற்குக் காலம் பிடிக்கும். பல வகைப்பட்ட விக்கி பங்களிப்பாளர்களுடன் திறந்த மனதுடன் உரையாடுங்கள். நீங்கள் கொண்டிருக்கிற நிலைப்பாடுகளுக்கு மாற்று நிலைகள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள். இவற்றை மனதில் கொண்டு உங்கள் நிருவாகப் பணிகளை ஆற்றுங்கள். வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 17:03, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சரிங்க. இரவி! என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். //"நிருவாகிகள் மட்டும் கூடி உரையாடி முன்வைத்தல்" // என்பதன் நோக்கம் மற்றவர் உரையாடக்கூடாது என்பதல்ல. முதலில் அனுபவம் மிகுந்த உயர் விக்கிப்பொறுப்பாளர்களும் (அதிகாரி), பிறகு விக்கிப்பொறுப்பாளர்களும்(நிருவாகி) , அதற்கு அடுத்து பங்களிப்பாளர்களும் உரையாடினால் தெளிவான, சச்சரவு இல்லாத, உரையாடல் நடந்து. நல்ல பாதையை நோக்கி அனவரும் நடக்கலாமே என்று கூறினேன். ஒரு வேண்டுகோள். நம் விக்கிப்பீடியாவை எந்தெந்த அளவுகோல்கள் கொண்டு அளக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள ஆவல். நீங்கள் பி.பி.சியிலும், பண்பலையிலும் பேசுவதைக் கேட்டேன்.அந்த அளவுகோல்களை இலக்காக வைத்து செயற்பட எண்ணுகிறேன். வழமை போல என் தவறுகளை மன்னித்து, நல்வழி காட்டுக. வணக்கம்.--≈ த♥உழவன்( கூறுக )01:08, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
த-உழவன், நாளையேப் பங்களிக்க இயலும் என்று மேலே எழுதியிருக்கிறீர்கள். இவ்வாறு எழுதுவது தான் சரியான முறையா? இது தேவையற்ற ஓர் ஒற்று என நம்புகிறேன். ஒரே குழப்பமாயுள்ளது:)--Kanags\உரையாடுக00:29, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நான் இங்கு வந்த பிறேகே, தமிழின் தனித்துவத்தை உணர்கிறேன். நான் சந்தியிலக்கணம் பற்றி முழுமையாக அறியாதவன் ஆகையால், அரிந்து பிறகு சொல்கிறேன். ஆனால், மொழியியல் முனைவர். தெய்வசுந்தரம், இதற்கான மென்பொருள் ஒன்றை சிறப்பாக உருவாக்கியுள்ளார் என முனைவர் பரிதிமாரி சொல்லக் கேட்டிருக்கிறேன். நம் விக்கிக்கும் அதுபோல, ஒரு கருவியை நீச்சலாரிடமும், சென்னை லினக்சு பயனர் குழுவிடமும் கேட்டுள்ளேன். எதிர்காலத்தில் நம் தமிழின் சிறப்பை காக்க, மொழியியல், தமிழியல், கணினியில் அறிஞர்களின் கூட்டுழைப்பே உதவும் என தெய்வசுந்தரம் நடத்திய பயற்சி வகுப்பொன்றில் தெரிந்துகொண்டேன்.--≈ த♥உழவன்( கூறுக )01:07, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பகுப்பு:தமிழ் நூல்பட்டியல்கள் என்ற பகுப்புக்குள் தமிழ் நூற்பட்டியல் தொடர்பான கட்டுரையைச் சேருங்கள். பொதுப் பகுப்பில் அல்ல. துறைகள் வாரியாக (தமிழியல், அறிவியல், சமூக அறிவியல்) நூற்பட்டியல் தொகுப்பது தொடர்பாக ஒரு விக்கித் திட்டத்தைத் தொடங்கலாம். பின்னர் விரிவாக என் கருத்துக்களைப் பகிர்கிறேன். --Natkeeran (பேச்சு) 02:55, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தகவல் உழவன், நான் அண்மையில் குறித்த கட்டுரைப் பக்கமே வரவில்லை. ஒரு வேளை நான் என்னுடைய நகர்பேசியில் விக்கிப்பீடியாவில் உலவும் போது தவறுதலாக "மீளமை" அழுத்தப்பட்டு நீக்கப்பட்டிருக்கலாம். மீளமைத்து விடுங்கள். தவறுக்கு வருந்துகிறேன். --மயூரநாதன் (பேச்சு) 11:31, 29 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உழவன், பகுப்பு:விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள் நீங்கள் சுட்டிக் காட்டியபடி இப்பகுப்பில் உள்ள படங்களை எல்லாம் பொதுவகத்திற்கு எளிதில் மாற்ற ஒரு இடைமுகம் உருவாகிவிட்டது. மேலும் அதுவே பயனரின் பேச்சுப் பக்கத்திலும் செய்தியை இட்டுவிடும். பொதுவகத்தின் வேகக் கட்டுப்பாட்டுக் காரணங்களாலும், மொழிபெயர்ப்பு தேவைப்படுவதாலும் மொத்தமாக மாற்றாமல் ஒவ்வொரு படமாக மாற்றிவிடுகிறேன். இம்மாதியான தேவை கொண்ட படங்களை இப்பகுப்பிற்குள் சேர்த்துவிடலாம். இன்னும் பொதுவகத்தில் தானியங்கி அணுக்கம் நிலுவையில் உள்ளது. சோதனைக்காக இதுவரை மாற்றிய படங்களை நீங்கள் ஒரு முறை பார்த்துவிட்டு திருத்தங்கள் வேண்டின் கூறிவிடுங்கள்.(---நீச்சல்காரன்)
தவறாமல் குறிப்பிடுகிறேன். அவற்றை கவனித்தே வருகிறேன். தொடக்கமே மிகச்சிறப்பாக வருவது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். பொதுவாக இங்குள்ள படங்களைப் போலவே, அங்கும் படவர்ணனை, உரிமம், மூலம் என்பதில் இங்குள்ள பயனரின் பெயரும், பதிவேற்றப்பக்கத்தையும் குறிப்பிடுதல் நலம். எனினும், இன்று மாலைக்குள், மீண்டும் ஒருமுறை நோக்கிவிட்டு என்து எண்ணங்களை கூறுகிறேன். --≈ த♥உழவன்( கூறுக )02:47, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பொதுவில் நகர்த்தக்கூடிய படிமங்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்குள்ள பல படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டாலும், பல படங்களில் pd-self என்ற வார்ப்புரு (தெரிந்தோ தெரியாமலோ) இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறானவற்றை மிகக் கவனமாகத் தெரிவு செய்தே பொதுவகத்திற்கு நகர்த்த வேண்டும். அனைத்து pd-self வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள படங்களையும் ஆராயாமல் நகர்த்த வேண்டாம். சிறிதளவு சந்தேகம் எழுந்தாலும், நகர்த்தாமல் விடுவதே நல்லது. அல்லது குறித்த பயனரிடம் கேட்கலாம்.--Kanags\உரையாடுக08:40, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
உழவன், ஆவணப்படம், நேர்காணல் தொடர்பான பணி நிறைவடைந்து விட்டது. திரும்ப அதில் மாற்றம் கோருவது சற்று கடினமானது. உங்கள் பெயர் எங்கு விடுபட்டுள்ளது என்று தெரிவித்தால் அடுத்த முறை இது போன்ற பிழைகள் நேராமல் பார்த்துக் கொள்ள முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 06:13, 8 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
அருமையான கட்டுரைகளுக்கு மிக்க நன்றி! இயற்கையின் மீது எனக்கு அன்பு உண்டு; என்னுடைய மகனுக்கு காதலே உண்டு. அவன் நன்கு தமிழ் வாசிக்கத் தொடங்கும்போது நீங்கள் எழுதும் கட்டுரைகளை வாசிக்கச் சொல்வேன். உங்களை அவனுக்கும் அறிமுகப்படுத்துவேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:23, 22 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
மலர்களின் இலக்கு, வண்டுகளைக் கவர்வதற்கு - மரந்தச்சேர்க்கைக்கு. . விழாக்களில் ஒலிப்பெருக்கியை நாம் பயன்படுத்துவது போல! கருப்பு மலர்கள் ஒளியை விடுவதில்லை. அனைத்து ஒளிகற்றைகளையும், தன்னகத்தே இழுத்துக்கொள்ளும் இயல்புடையது. பிரதிபலிக்காது. அதனால் தூரத்தில் இருக்கும் பூச்சிகளுக்கு, அதிகம் தெரியாது. பிற நிறங்கள், அதற்குரிய தூரங்களில் பூச்சிகளைக் கவர்கின்றன.
உங்கள் மகன் அருமையான கேள்விகளைக் கேட்டுள்ளார், சிவகுரு! ஆர்வமும் எதையும் உள்ளபடியே வெறுமன ஏற்றுக் கொள்ளாமல் ஏன் என்று கேட்டறிந்தே ஏற்கும் பண்பை வளர்ந்தவர்கள் வளர்ந்துகொண்டிருப்பவர்களிடம்தான் கற்க வேண்டும். உங்கள் மகனின் ஆர்வத்தைத் தொடர்ந்து ஊக்குவியுங்கள். -- சுந்தர்\பேச்சு11:00, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
Pandian என்ற பெயரில் சீனாவில் ஐந்து இடங்கள் உள்ளன. பல சாலைகள் உள்ளன. இந்த Pandian என்ற சொல்லுக்கு சீன மொழியில் "ஆக்ரமிக்கப்பட்ட இடத்தைச் சேர்ந்தவர்கள்/ஆக்ரமிக்கப்பட்ட இடம்" என்று பொருளை சில சீன நிகண்டுகள் தருவதாக ஒரிசா பாலு சொல்கிறார். நீங்கள் உங்களுக்குத் தெரிந்த சீன மொழி விக்சனரியர்களிடம் கேட்டு உறுதிப்படுத்தித் தந்தால் நலம். ஏதாவது இணைய இணைப்பு கிடைத்தால் மேலும் வசதியாய் இருக்கும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:38, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
நற்கீரனுக்கு சீனமொழித்தொடர்பு அதிகம். எனக்கு தெரிந்தவரிடமும் கேட்டுள்ளேன். சீன வானொலியில் பன்மொழி அகரமுதலி நூலாக வெளிவந்துள்ளது. அதில் தமிழ் மொழியும் ஒன்று. அதனைப் பெற முயற்சிக்கிறேன். பொருளாதார காரணங்களால் சற்று காலதாமதம் ஆகலாம். இந்த தளத்தில் நீங்கள் தேடலாம். இத்தளத்தில் சீனசொல் ஒன்றின் சொற்பிறப்பியலை அறிய இயலும். ஆனால், அதில் தமிழில் தேட இயலாது. மற்றவை கிடைப்பின் தெரிவிக்கிறேன்.வணக்கம்.--≈ த♥உழவன்( கூறுக )18:48, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
பகுப்பு ஒன்றின் தலைப்பை கட்டுரைகளை நகர்த்துவது போன்று நகர்த்த முடியாது. பகுப்பில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும் சென்று பகுப்பை மாற்ற வேண்டும். பின்னர் பழைய பகுப்பை நீக்கி விட்டுப் புதிய பகுப்பை உருவாக்க வேண்டும்.--Kanags\உரையாடுக06:45, 27 சனவரி 2015 (UTC)[பதிலளி]
உங்கள் குறிப்புகளுக்கு நன்றி. இதற்குரிய பைத்தான் நிரல் கட்டகம் அமைத்துக் கொண்டு இருந்தேன். பிறகு இயக்கிப் பார்த்த போது நீங்கள் மாற்றியதை உணர்ந்தேன். உரிய விக்கித்தரவினை பகுப்பில் இணைத்துவிட்டேன். --≈ த♥உழவன்(உரை)06:56, 27 சனவரி 2015 (UTC)[பதிலளி]
இனி தவறாமல் கடைப்பிடிக்கிறேன். இவ்வகையான சிறிய படிமங்களை அங்கு பதிவேற்றுவதைத் தவிர்க்க, எனக்கு அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது. புதிய பன்முக கோப்பிற்கு, அதன் உருவாக்குனரிடம் கேட்டுள்ளேன். தருவாரென்று எண்ணுகிறேன். அப்படி நடந்தால், உரிய கோப்புகளிலும், நீங்கள் கூறியபடி உரிய இணைப்புகளைத் தந்து விடுகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.----≈ த♥உழவன்(உரை) 07:24, 14 பெப்ரவரி 2015 (UTC) 19:44, 20 பெப்ரவரி 2015 (UTC)
தாய்ப் பகுப்பு என்பது முதற் பக்கத்தில் இட்ட பகுப்புகளின் தொகுப்பாகவும், தகவல் வகைகளின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது. மாற்றம் தேவை எனின் உரையாடலாம். --Natkeeran (பேச்சு) 17:35, 24 ஏப்ரல் 2015 (UTC)
ஒரு எடுத்துக்காட்டுடன் எனது ஐயங்களை, கலந்துரையாட விரும்புகிறேன்.
பகுப்பு:பட்டியல்கள் என்பது தாய்பகுப்பில் இருந்தது. அதன் சேய்பகுப்பாக பகுப்பு:தலைப்புகள் பட்டியல் என்பது இருக்கிறது. ஏனெனில் அது பட்டியல் என்பதால், அங்ஙனம் கோர்த்துள்ளனர் என புரிந்து கொள்ள இயலுகிறது. இவ்வாறு சேய்பகுப்பான ஒன்றே, மீண்டும் தாய்பகுப்பாக இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், இங்கு குறிப்பிட்ட சேய்பகுப்பில், தாய்பகுப்பு குறிப்புகளை நீக்கினேன். இது சரிதானே?
பைலசின் திமோன், விசயேந்திர சரஸ்வதி ஆகிய இரு பக்கங்களையும் சுற்றுக்காவல் புரிந்ததாகக் குறித்திருந்தீர்கள். சுற்றுக்காவல் புரியும்போது கட்டுரையை விக்கித்தரவில் இணைத்து விடுவதிலும் சற்றுக் கவனஞ் செலுத்துங்கள். சுற்றுக்காவல் புரியும்போதும் இணைக்காவிடின், புதிய கட்டுரைகள் விக்கித்தரவில் இணைக்கப்படாமல் தேங்கி நிற்கும் நிலை வந்து விடலாம். விசயேந்திர சரஸ்வதி என்ற கட்டுரையைத் தவறுதலாகக் குறித்து விட்டீர்கள் என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 15:08, 3 செப்டம்பர் 2015 (UTC)
ஆம். மின்தடை ஏற்பட்டதால், அப்புறம் செய்யலாமென்று நினைத்து மறந்து விட்டேன். இனி கவனமாகச் செய்கிறேன். கட்டுரை வளரட்டும் என்றே சுற்றுக்காவல் செய்தேன். சரசுவதி என்று வழக்கம் வந்து விட்டதால், விசயேந்திர சரஸ்வதி என்ற வழிமாற்று தேவையில்லை நீக்கி விடலாமா? --த♥உழவன்(உரை) 05:11, 4 செப்டம்பர் 2015 (UTC)
ஆம், நீக்கி விடலாம். விசயேந்திர சரசுவதி அல்லது விஜயேந்திர சரஸ்வதி என்றே பெரும்பாலும் தேடுவார்கள். --மதனாகரன் (பேச்சு) 09:51, 4 செப்டம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.
இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
(Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.
கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.
கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.
{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.
1996 அமர்நாத் யாத்திரை துயரச் சம்பவம் என்ற கட்டுரையில் படம் பதிவேற்ற்ம் செய்யவும் --கி.மூர்த்தி 16:55, 22 நவம்பர் 2015 (UTC)
Yஆயிற்றுமுன்பு பொதுவகத்தில் இல்லாமல் இருந்தது. அதனால் முன்பு இங்கு தெரியவில்லை. உரிய மாற்றங்களை ஆங்கில விக்கிப்பீடியாவிலும், பொதுவகத்திலும் செய்து விட்டேன்.−முன்நிற்கும் கருத்து info-farmer (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
இங்கு பயனர்:Info-farmer/vector.jsimportScript('பயனர்:Info-farmer/தொடுப்பிணைப்பி.js'); என்பதனைத் சேர்த்துள்ளேன். இங்கு பயனர்:Info-farmer/தொடுப்பிணைப்பி.js என்பதில் நிரல்கள் உள்ளன. தொடுப்பிணைப்பி.js பகுதியில் உங்களுக்குத் தேவையான வார்ப்புருக்களை சேர்க்கலாம்.
taggerGadgetDefaultConfig.editSummary[taggerGadgetDefaultConfig.tags[15]] = '+ விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்பிணைப்பி]] வாயிலாக';
இதன் பின், tags[15] என்பதில் எண்களைக் கூட்டிக் கொண்டு (16, 17, 18 .....), அதற்கு உரிய வார்ப்புருக்களையும் சேர்த்துக் கொண்டு போகலாம். சிறப்பு:Preferences இதில் "கருவிகள்" என்பதை தெரிவு செய்து தொடுப்பிணைப்பி, எளிதாகத் துப்புரவு வார்ப்புருக்களைச் சில சொடுக்குகளில் ஒரு பக்கத்தில் இணைக்க உதவுகிறது. டுவிங்கிள் போன்றது. என்பதன் தெரிவினை நீக்கிவீடுங்கள்.
குறிப்பு: பயனர்:Info-farmer/தொடுப்பிணைப்பி.js என்பதை உலவியில் வைத்து தொகுப்பதில் சிக்கல் ஏற்படலாம். அப்படியாயில் Notepad, MS Word போன்ற ஒன்றில் தொகுத்து, பின் வெட்டி-ஒட்டிவிடுங்கள்.
இது தொடுப்பிணைப்பியில் "தொடுப்பு" என்பதில் "'ஏனையவை -> (தயவுசெய்து தொகுப்புச் சுருக்கத்தையும் தருக)'" என்பதைத் தெரிவு செய்தால் தொடுப்பிணைப்பியில் இல்லாத வார்ப்புவை உள்ளிட {{}} என்ற வெற்று வரிகளை உருவாக்கும். இதில் தேவையான வார்ப்புருவை தட்டச்சு செய்யலாம்.--AntanO05:02, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@பயனர்:Wwarunn [[q:விக்கிமேற்கோள்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|விக்கிமேற்கோள்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] எனச்சுட்டினாலே போதும். முழுமையாகத் தெரிந்து கொண்டு, பிறரிடம் கேட்டு அறிந்து கொண்டு மாற்றங்களை செய்யுங்கள். இதுபோன்ற ஆர்வக்கோளாறு செயல்களை, ஆங்கிலத்திட்டத்தில் செய்தால், அதற்கான பரிசு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் பயனர் கணக்கு தடை செய்யப்படுவது அல்லது அந்த உரிமை நீக்குவது ஆகும்.. இங்கு அவ்விதிகளை, முதலாவது தவறுக்கு, நான் பரிந்துரைக்க விரும்பவில்லை. இனி, எதையும் அதற்குரிய பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து விட்டு செய்யுங்கள். இங்கு பல துப்புரவு பணிகள் தேங்கிக் கிடைக்கின்றன. இதுபோல விக்கியிடைத் துப்புரவு பணியைத்தவிர்க்கவே, இதனைக் கூறுகிறேன். @பயனர்:Shanmugamp7 பேன்றவரே உரிய மாற்றத்தை அதன் வரலாற்றுப் பக்கத்தோடு மீளமைக்க முடியும். இது நம் திட்டம். எனவே, பேச்சுப்பக்கத்தினைப் பயன்படுத்துங்கள். புரிந்துணர்வு நம்மிடம் தழைக்க இது மிக மிக அடிப்படையானதாகும்.--த♥உழவன்(உரை)01:22, 16 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Info-farmer: வழிகாட்டலுக்கு நன்றி! சில புரிதற்பிழைகள் உள்ளன என்றெண்ணுகின்றேன். :)
தவறே செய்ததில்லை என்பவர், புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர் - ஐன்ஸ்டைனின் கூற்று :)
முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், எவரிடம் எங்ஙனம் கேட்பது என்பதில் கோளாறு உள்ளதால் வந்த விளைவு. சிலரை மட்டுமே மீண்டும் மீண்டும் வினவுவது சரிதானா எனச் சற்றுக் குழப்பமாக உள்ளது. (அவர்களின் பிற பணிகளுக்குத் தடங்கலேற்படும்?) :(
தீக்குறும்பு / தீநோக்கிற்கும் அறியாமல் / முழுதாகப் புரியாமல் செய்த தவறுக்கும் விக்கியில் ஒரே வகையான தண்டனைதான் வழங்கப்படுமா? முழுமையாகப் புரிந்துகொள்ளாமைக்கு பயனர் மட்டுமே பொறுப்பா அல்லது சரியான வழிகாட்டலின்மையுமா? காட்டாக: விக்கிப்பீடியா:அகேகே, இன்றுவரை நிபுணரின் பார்வைக்குக் காத்திருக்கின்றது.
பேச்சுப்பக்கத்தை மேலும் பயன்படுத்த முயல்கிறேன். இதுபோல் இருப்பது சரியா !?
இது விக்கியிடைத் துப்புறவா எனத் தெரியவில்லை. விக்கிமேற்கோளில் உள்ள இரு பக்கங்களை இணைக்க எண்ணியபோது ஏற்பட்ட தவறு இது. இரண்டு (இப்பொழுது மூன்று) பக்கங்களும் விக்கிமேற்கோளிலேயே உள்ளன. ஒரே திட்டத்தில் இருக்கும் இரண்டு பக்கங்களை ஒன்றிணைக்கும் வழிகள் என்ன? விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரை சரியாகவே உள்ளது. இங்கு குறிப்பிட்டுள்ள வேண்டுகோள் தவறோ என்றெண்ணுகிறேன். விக்கிமேற்கோளிருந்து விக்கிபீடியாவிற்கல்ல, விக்கிமேற்கோளிலிருந்து விக்கிமேற்கோளிற்கே (விக்கிமேற்கோள்: என்ற முன்னிணைப்பை நீக்கி) மாற்றவேண்டும் !
உண்மையில் இது என் சோதனை முயற்சி. இவ்வாறான பணிகளைப் பயில / பயிற்சி செய்யும் வழிகள் என்ன? காட்டாக கட்டுரைகளை ஒன்றிணைப்பது, பகுப்புகளில் மாற்றம் செய்வது பேன்றவை.
இது நம் திட்டம் என்ற எண்ணமும் ஏதுவான சூழலும் கொண்டுள்ளதாலேயே நானும் பங்களித்துக்கொண்டிருக்கின்றேன். மேலும் இதுபோன்ற சூழல் வ(ள)ராதிருக்க என்னால் இயன்றதைச் செய்துவருகின்றேன்.
@Wwarunn! நீங்கள் உட்பட அனைவரும் திரும்ப பெறமுடியாக் காலத்தை இங்கு அளிக்கின்றனர். நமது பிறரின் காலம் காப்பதே நமது முதற்பணியாக நான் எண்ணுகிறேன். சரி, தவறு என்ற அறிவிப்பு பெரும்பாலும் பங்களிப்பாளரின் மனதையே சென்றடைகிறது. அது அனுபவமின்மையால்/பழக்கமின்மையால் தவறாக மாற வாய்ப்புண்டு. எனவே, உரையாடி செய்யுங்கள். கற்றலின் கேட்டல் நன்று என்பது நமது முதுமொழி. இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. சில வரிகள் அறிவிப்பு செய்வதால், பல வரிகள் மீண்டும் எழுத வேண்டிய நிலை உருவாகாது. அப்பொழுதே வந்தவர் நம்மை விட்டு விலகார். துப்புரவு செய்தல் மட்டுமே, மதிப்பைக் கூட்டுதல் ஆகாது. பல மாதிரிக் கட்டுரைகளை உருவாக்கி, துப்புரவு செய்யவேண்டிய நிலையில்லாக் கட்டுரைகளை, பிறருக்குக் காட்ட வேண்டும். பெருந்தரவைப் பேணும் போது, அதில் ஏற்படும் சிறுமைகளுக்கு முன்னுரிமைத் தரக்கூடாது. எனது வேண்டுகோள் : உங்களைப்பற்றி உங்கள் பயனர் பக்கத்தில் எழுதுங்கள். உங்கள் திறனை, பிறர் அறிந்தால் தானே பிறர் உங்களை நாடுவர். அரிதலில் ஆர்வம் கொள்ளாமல், அறிவிப்பில் ஆர்வம் கொள்ளுங்கள். ஒவ்வொன்றாக கற்போம். அவசரமில்லை. மீண்டும் மற்றுமொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.--த♥உழவன்(உரை)12:13, 16 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இசுக்காண்டியம் சேர்மங்கள் என்ற பகுப்பை உருவாக்க எனக்கு படிப்படியாக சொல்லித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். --கி.மூர்த்தி 02:03, 17 திசம்பர் 2015 (UTC)
அங்கு நீங்கள் உருவாக்க இருக்கும் பகுப்பு ஏற்கனவே உள்ளதா என அரிதல் வேண்டும். அதற்கு அங்குள்ள சாளரத்தில் தேடிப்பாருங்கள். எப்பெயரிலும், அந்த நோக்கமுடைய பகுப்பு இல்லையெனில், கட்டுரையில் அப்பகுப்பை இணைத்து விடவும்.
இணைத்த பகுப்பு சிவப்பாகத் தெரியும். அச்சிவப்புப்பகுப்பை, இத்துறைத் தொடர்புடைய, விக்கிப்பீடியாவில் ஏற்கனவே இருக்கும் பகுப்புடன் இணைத்து விட்டால், உருவாக்கிய பகுப்பு, நீலமாக மாறிவிடும். அதற்கு,
நீங்கள் தற்போது உருவாக்கிய பகுப்பு வேதியியல் சேர்மங்கள் என்பதால்,பகுப்புப்பக்கத்தொகுப்பின் தேடுசாளரத்தில் வேதி என்று தேடிப்பார்க்கவும். குறைந்த அளவு எழுத்துக்களைக் கொண்டு தேடணும். ஏனெனில், வேதியியல் சேர்மங்கள் என்றோ அல்லது வேதிச் சேர்மங்கள் என்றோ பெயர் இருக்கலாம். எனவே, வேதியியல் எனத் தேடாமல், இரண்டுக்கும் பொதுவாக வேதி எனத்தேடினால், பகுப்பு:வேதிச் சேர்மங்கள் உள்ளது தெரிய வரும்.
பகுப்பு:வேதிச் சேர்மங்கள் என்ற பெயரை நகலெடுத்துக் கொண்டு, அதனை சிவப்பாகத்தெரியும் புதிய பகுப்பினுள் ஒட்டி விடவும்.
இப்பொழுது புதிய பகுப்பைக் கட்டுரையுடன் உருவாக்கியிருப்பீர்கள். உருவாக்கிய பகுப்பும், ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் வேதியியல் தொடர்புடைய பகுப்புடன் இணைக்கப்பட்டிருக்கும்.முடிந்தால் , நாம் கற்றதைப் பிறருக்கும் காட்ட, இவ்வார இறுதியில் நிகழ்படப் பதிவு ஒன்றை உருவாக்கி, பொதுவகத்தில் இணைக்கிறேன்--த♥உழவன்(உரை)02:59, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@பயனர்:Kanags! மூர்த்தியும், நானும் இப்பொழுது ஒரே இடத்தில் இல்லை. அலைப்பேசி வழியே கற்றோம். அவர் அலுவலகம் செல்வதற்கான நேரம் வந்தமையால், வழமை போல வார இறுதியில் உரையாடுவோம். அப்பொழுது அவருக்கு அறிமுகப் படுத்துகிறேன்.--த♥உழவன்(உரை)06:59, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
மிக்கநன்றி. இன்னும் சிறப்பாகச் செயற்படவல்ல தானியங்கிப் பயிற்சி எடுத்துக்கொண்ட போது, நீங்கள் கொடுத்தக்குறிப்பு பயனுள்ளதாக இருந்தது. இனி வார்ப்புருவை மெட்டாகுறிப்புகளுக்கு மேலிடு என அமைத்துக் கொள்கிறேன். வெளியிணைப்புகள் என்ற உட்பிரிவு அங்கு இல்லாமல் இருந்ததே, அதற்குக்காரணம். அதையும் உருவாக்கி விட்டேன். தொடர்ந்து கவனித்து, எனக்கு பின்னூட்டம் அளியுங்கள். அது என்னை என் பணியில் மேலோங்க உதவும். சந்திப்போம் . வணக்கம்.--த♥உழவன்(உரை)12:46, 18 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள். நூலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருந்தேன். எனவே, வினவிச்சொல்கிறேன். அத்தளத்தில் பதிப்புரிமை அல்லது கொள்கை மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்..--த♥உழவன்(உரை)00:18, 14 சனவரி 2016 (UTC)[பதிலளி]
நீங்கள் பங்களித்துள்ள தாவரவியல் தொடர்பான கட்டுரைகளின் (எ.கா. வாழைக் குடும்பம், காஃபி குடும்பம் முதலியன) பெரும்பாலான பகுதிகள் தமிழக அரசின் 12ஆம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்திலிருந்து அப்படியே எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பதிப்புரிமை மீறலாக இருக்கக்கூடும். கவனிக்கவும். --சத்தியராஜ் (பேச்சு) 04:58, 18 பெப்ரவரி 2016 (UTC)
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 05:02, 18 பெப்ரவரி 2016 தங்கள் தொலைபேசி எண்ணைக் குறுஞ்செய்தி வழி அனுப்பவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:46, 26 பெப்ரவரி 2016 (UTC)
சத்தியராஜ்! என் பக்கம் வந்தமைக்கு நன்றி. நீங்கள் கூறும் காப்புரிமை குறித்த மாற்று எண்ணங்கள் உள்ளன. உண்மையில் அந்நூல் பல காப்புரிமை யற்ற நூல்களின் தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. எ.கா File:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf என்ற நூல் பல தொகுதிகளாக வந்துள்ளன. தமிழக அரசு அதிகாரிகளிடையே நெருங்கி வினவும் வாய்ப்பு, தற்போது மேற்கொண்டுள்ள உறைவிட விக்கிப்பீடியர் பணியால் வந்துள்ளது. அதனால், சில நடைமுறைசிக்கல்களை அறிய முடிகிறது. காப்புரிமை உள்ளவை அற்றவை என நாம் உரையாடுவதை விட, அது போன்ற தரவுகளை விக்கிக்காக வாங்குவதில் பல பங்களிப்பாளர்களின் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் சென்னையைச்சார்ந்தவரா? அல்ல எனின், உங்கள் அலைப்பேசி எண் தாருங்கள். ஒன்றாக உழைப்போம், உரிய உரிமத்தை பெற்று நம் விக்கிக்கு அளிப்போம். எனது எண் 90-95-34-33-42.ஆவலுடன்..--த♥உழவன்(உரை) 08:33, 3 மார்ச் 2016 (UTC)
@உலோ.செந்தமிழ்க்கோதை: ஐயா! வணக்கம். தற்போது பெங்களூரில் இருந்து விக்கிபணிகளை செய்ய அனைத்து வசதிகளையும் இரவி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். உடல் நலம் முன்பைவிட முன்னேற்றமே. இன்னும் பத்து நாட்களில் சென்னை வருவேன். அடுத்து உங்கள் தலைமையில் உருவான அறிவியல் களஞ்சியங்களை பதிவேற்றலாமென்று எண்ணியுள்ளேன். வழமையான அரசு அதிகாரிகளின் /, பேராசிரியர்களின் மனநிலை தங்களுக்குத் தெரிந்ததே. நேரில் சந்தித்து உங்கள் ஆலோசனையைப் பெறுவேன். வணக்கம்.--த♥உழவன்(உரை) 08:33, 3 மார்ச் 2016 (UTC)
CSVLoader மூலம் கட்டுரை உருவாக்கத்தில் உதவி தேவை. உதவுக--மாதவன் (பேச்சு) 14:00, 7 மார்ச் 2016 (UTC)
No changes
Press the "Skip" button below to skip to the next page. என தோன்றுகிறது.--மாதவன் (பேச்சு) 14:02, 7 மார்ச் 2016 (UTC)
வின்டோசை விட்டு 4-5 வருடங்கள் ஆகிறது. என்ன செய்த போது அங்ஙனம் வந்தது? இப்பக்கத்தில் தேடினீர்களா? -நான் கற்றவரை அனைத்தும் அப்பகுதியில் இருக்கிறது. இல்லையாயின், அதன் பேச்சுப் பக்கத்தில் வினவுங்கள். தவறாமல் பதில் அளிப்பார். -த♥உழவன்(உரை) 15:45, 7 மார்ச் 2016 (UTC)
வழமையான விக்கி நடைமுறை தான். எந்நிலையிலும், திருத்தலாம். ஏதேனும் இடரா?100% நோக்கி பயணிக்கிறோம். பல நேரங்களில், முதல் எட்டிலேயே அமைவதில்லைதானே. இப்பொழுது பள்ளிக்கல்வி மேம்பாட்டு ஆய்வு குழுவினரிடம்.. விரைவில் அனைத்துத் தமிழக கல்வி ஆவணங்களும் பொது உரிமத்தின் கீழ் வரவிருக்கிறது. இதைப் பார்த்தீர்களா?-- த♥உழவன்(உரை)18:07, 8 சூன் 2016 (UTC)[பதிலளி]
2016 இந்திய விக்கி மாநாட்டை ஒட்டி நடைபெறும் பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பில் பங்கேற்க வேண்டுகிறேன். இதன் மூலம் பஞ்சாப் பற்றி நாம் அறிந்து கொள்வதுடன் இந்நிகழ்வை ஒருங்கிணைக்க உழைக்கும் பஞ்சாபியர்களுக்கு நாம் அளிக்கும் அன்புப் பரிசாகவும் இருக்கும். கூடுதல் பைட்டுகள் அல்லது சொற்களைச் சேர்க்கும் சமூகத்துக்குக் கேடயமும் உண்டு. எனவே, இன்றே வாரீர்! கட்டுரைகள் தாரீர் ! :)--இரவி (பேச்சு) 20:45, 15 சூலை 2016 (UTC)[பதிலளி]
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
காப்புச் செய்வதற்கான முறையான காரணம் இருந்தால் காப்புச் செய்யலாம். இல்லாவிட்டால் "பயனர் பக்கம் காப்புச் செய்ய வேண்டாம்" என்ற வழிகாட்டல் உள்ளது. பொதுவாக பயனர் பக்கம் தாக்குதலுக்கு உள்ளாகும்போது மட்டுமே காப்பதை ஆ.வி.யிலும் கண்டுள்ளேன். --AntanO13:11, 9 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
ஓ..மிக்க நன்றி. கட்டக அணுக்கம்(sysop) பெற்றவருக்கான சுருக்கமான ஒரு வழிகாட்டல்களும், தொடர்ந்து விரிவாக அறிவதற்கான மூலப்பக்கமும் இருப்பின் பங்களிப்புகளை சீரமைத்துக் கொள்ள இயலும். அவ்வப்போது உரிய விதிகளை பக்கமொன்றில் தொகுத்து அளியுங்கள். எக்காலமும் அது பலருக்கும் கைகொடுக்கும். அறியாமை இருள் போய் விட்டால், ஒளி தானே! வணக்கம்.--த♥உழவன்(உரை)13:15, 9 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
எனக்கும் நீங்கள் குறிப்பிட்டவாறு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. ஆனால் அங்கு இருப்பவற்றை மொழிபெயர்ப்பது பெரிய வேலை. மேலும், பயனர் ஆர்வம் காட்டாமையும் அவற்றைத் தொடர்ந்து செய்யத் தூண்டுவதில்லை. இன்னும் முக்கிய வழிகாட்டல், கொள்கைகள் என்பன எம்மிடம் இல்லாமலும் அல்லது இற்றைப்படுத்தாமலும் உள்ளன எ.கா: en:WP:NOT. அவ்வப்போது சிலவற்றைச் செய்கிறேன். வழிகாட்டல், கொள்கைகள் போன்றவை இருந்தால் அனைவருக்கும் இலகுவாகவும் இருக்கும். தேவையற்ற கருத்தாடல்களும் குறைந்துவிடும். --AntanO13:28, 9 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
ஆங்கிலபக்கங்கள் பெரியதாக இருப்பதால் தான் சுருக்கத்தையும், விரிவாக என்ற உரியதொடுப்பையும் தருக எனக்கேட்டேன். மாதம் ஒரு வழிகாட்டுதலையாவது, நமது வழிகாட்டுதல் பக்கத்தில் எழுதக் கோருகிறேன். இம்மாதத்திற்கு உரியதை எழுதி விட்டீர்கள்!. உரியபக்கத்தை உருவாக்கி நகலிடுக. அல்லது படித்து ஒலிக்கோப்புகளாக கூட அமைக்கலாம். ஏனெனில் தட்டச்சுப்பணியும் அயர்வை உண்டாக்கும். 2000 மேற்பட்ட import பங்களிப்புகளைச் செய்துள்ளீர்கள். அதுகுறித்து அடுத்த மாதம் குறிப்புகளைத் தருக.--த♥உழவன்(உரை)15:43, 9 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
வணக்கம். பா.ரஞ்சித் போன்ற வழிமாற்றுகளை தேவையற்றதாக நீக்கி வருகிறீர்கள். இந்த வழிமாற்றுகள் இருப்பதில் தவறில்லை. பெரும்பாலாகத் தேடுபவர்கள் பா.ரஞ்சித் என்று எழுதியே தேடுவார்கள். அப்படி இல்லை என்றால் புதிய கட்டுரையே எழுதத் தொடங்கி விடுவார்கள். ஆங்கில விக்கியில் இவ்வாறான வழிமாற்றுகளை நீக்குவதில்லை.--Kanags\உரையாடுக07:09, 10 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
மீண்டும் இணைவதில் மகிழ்கிறேன்.@Kanags:எனது நோக்கம் யாதெனில், தலைப்பு சொல்லில் புள்ளி இருப்பின், அதனை அடுத்து ஒரு இடைவெளி இட்டு, நீங்கள் வழிமாற்றல் இடுவதைக்கண்டேன். ஆனால், பல பக்கங்களுடன் ஒரு கட்டுரை இருப்பின், அவ்விதம் செய்யலாம் இல்லையெனில், வழிமாற்றல் தேவையற்றது என்றே எண்ணுகிறேன். மற்றொன்று நாம் வடமொழியை தவிர்த்தே வருகிறோம். தமிழல்லாத எழுத்துக்களை முடிந்தவரை தவிர்ப்போமே ?எனவே, 'தாசு' என மாற்றினேன். ஒருவரின் இயற்பெயரைக்கட்டுரையிலேயே குறிக்கப்பட்டுள்ளது.எந்த இயற்பெயரையும் மாற்றக்கூடாது என்ற விதியை இனிபின்பற்றவா? ஆங்கில விக்கியின் இந்த மொழியியல் விதிகளை, தமிழுக்கும் பின்பற்ற வேண்டுமா? நம் தமிழ் ஒலியியலில் தான் நாட்டுக்குநாடு வேறுபடுகிறது.தமிழ் மொழியியல் விதிகளில், சீர்மை இருப்பதாகவே எண்ணுகிறேன். ஆங்கிலத்தில் புள்ளி எழுத்துக்களுக்கு(அஃகுபெயர்கள்) தெளிவான நடையில்லை என்பதே நிலவரம். அமெரிக்க ஆங்கில விதி, பிரித்தானிய ஆங்கில விதி என்றே திகழ்கிறது. எந்த விதிகளைக் கொண்டு இனி மேற்கூறிய இலக்கை செய்ய வேண்டும்? --த♥உழவன்(உரை)09:47, 10 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
அக்டோபர் 06 போன்ற தலைப்புகள் வார்ப்புருக்கள் மூலம் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இதனால் சிவப்பு இணைப்புகள் உருவாகும். இவ்வாறான சிவப்பு இணைப்புகளை நீக்குவதற்கு எம்மிடம் தானியங்கிகள் இல்லை. அத்துடன் ஆள்பலமும் இல்லை. 1950 டிஏ போன்ற வழிமாற்றுகளைத் தேவையாகத் தான் உருவாக்கினேன். சில வழிமாற்றுகள் அவசியம் தேவை. இவற்றை வைத்திருப்பதில் ஏதாவது வசதியின்மை உள்ளதா? எழுத்துப்பிழைகள், அல்லது ஒருங்குறியல்லாதவை, அல்லது வேற்று மொழிச் சொற்கள் போன்றவற்றுக்கு மட்டுமே வழிமாற்றுகள் வைத்திருப்பதில்லை.--Kanags\உரையாடுக06:25, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
::அனுபவ பகிர்வுக்கு நன்றி. இருப்பினம் தெளிவுபடுத்தினால்,//இவ்வாறான சிவப்பு இணைப்புகளை நீக்குவதற்கு எம்மிடம் தானியங்கிகள் இல்லை. // நான் தானியங்கி உருவாக்க முயற்சிகளே மேற்கொண்டு முடிப்பேன். அச்சிவப்பு இணைப்புகள் உருவாகமல் இருக்க, வார்ப்புருவிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தலாம். அது கடினம் எனில், சிவப்பு இணைப்புகளை நீக்குதலுக்கான, தானியங்கி நிரல் உருவாக்க இயலும்.விக்கிமீடியக்கருவிச்சாலையில் பற்றி படித்து வருகிறேன். அங்கு இது போன்ற வசதிகளை உருவாக்க இயலும். இல்லையெனில் இதில் அமைக்க முயலுகிறேன். அப்படி உருவாக்கினால், நமது பணியடர்வு குறையுமென நம்புகிறேன்.--த♥உழவன்(உரை)09:15, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
12x9 = 108 வழிமாற்றுகளுக்காக நேரம் செலவழிக்க வேண்டுமா? நீங்களே ஆராய்ந்தறிந்து விரும்பியபடி செய்யுங்கள். இனிமேல் என்னால் இதில் தலையிட முடியாது. நன்றி.--Kanags\உரையாடுக09:25, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
ஆனால், நாம் தமிழில் கரிம புளோரைடுகள், கரிம புரோமைடுகள். கரிம அயோடைடுகள் என்று பகுப்புகள் பிரித்திருக்கிறோம். கரிம குளோரைடுகளும் இருந்தால் தவறில்லை என்று நினைக்கிறேன். --கி.மூர்த்தி (பேச்சு) 08:12, 12 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
கனகு! நீங்களே எனக்கு ஒருமுறை வழிகாட்டியிருக்கிறீர்கள். நாம் ஆங்கில விதிகளை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. எனவே மூர்த்தியின் கூற்றை, நானும் ஏற்கிறேன். மூர்த்தி! வரும் ஞாயிறு அன்று நீங்களே அதனை மாற்றுவதற்கான நுட்பத்தை அறிமுக படுத்த விரும்புகிறேன். சந்திப்போம். வணக்கம்.--த♥உழவன்(உரை)12:02, 12 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:55, 29 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
முன்பே கொடுத்துள்ளேன். எனினும், இந்த அறிவிப்பு எதனால் என்பது புரியவில்லை. கூகுளின் அடிப்படையில் இருப்பதால், இது திறநிலை ஆவணமாக இல்லை. பலரின் எண்ணங்களை அறிய , இது அவசியம். மாற்றுவழி இல்லையா?த♥உழவன்(உரை)01:16, 30 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
வணக்கம் தகவலுழவன், தமிழ் pdf கோப்பு ஒன்றை கணினிக்குப் புரியும்படியான எழுத்துகளாக மாற்றும் மென்பொருளை எங்கிருந்து தரவிறக்கலாம் என்பதை அறியத் தருவீர்களா?--Kanags\உரையாடுக06:20, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
இதனைச் செய்ய உபுண்டு போன்ற லினக்சு வகை இயக்குதளம் வேண்டும். நான் உபுண்டுவில் செய்தேன். அது எளிது. அதனால் தான் இரண்டு மாதங்களில் ~3.5 இலட்சம் பக்கங்களை, விக்கிமூலத்திற்காக எழுத்துணரியாக்கம் செய்ய முடிந்தது. இந்த நிரல் பலரின் அனுபவங்களை உள்வாங்கி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயலாக்கத்தை சீனியின் இந்த ~15 நிமிட https:// [youtu.be/PH9TnD67oj4 யூடிப் நிகழ்படத்தில்] காணலாம். உரிய நிரல்கள் இந்த கிட்அப்பில் இருக்கிறது.--த♥உழவன்(உரை)06:48, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
வணக்கம்!
எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...
உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.
அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!
இரண்டும் ஒன்றே. பல நேரங்களில், ஆங்கிலச்சொல்லும், இலத்தீனிய வகைப்பாட்டு சொல்லும் இவ்விதம் குழப்பத்தைத்தரும் என்பது இயல்பே. en:eudicots ஆங்கில விக்கியில் தாவரவியல் வகைப்பாடு இற்றைபடுத்தப்படாமல் இருக்கிறது. இதனை நாம் சீரான முறையில் சுருக்கமாகச் செய்தால், ஒரே வருடத்தில் தற்போதுள்ள கட்டுரை எண்ணிக்கையை இருமடங்காகச் செய்யலாம். எனக்கு ஆங்கில தட்டச்சு வராது. ஒருவிரல் தட்டச்சுதான். அதனால் தமிழ் அல்லாத இடங்களில் உரையாடற் பக்கத்தினை கையாள்வது சிரமமாக இருக்கிறது. எனினும், பல மணி நேரம் கல்லூரி நூல்களை மறுமுறை படித்த பின்பே, ஆங்கில விக்கியை நாடுகிறேன். சில import முறைகளை உங்களிடம் வினவ எண்ணியுள்ளேன். அதற்கு முன் சில அடிப்படைக் கட்டுரைகளை உருவாக்கிய பின்பு உங்களை அணுகுவேன். வகைப்பாட்டியலுக்கு, நீங்கள் விக்கியினங்கள் திட்டத்தையே நாடவும். அல்லது சீனம், செக் விக்கிப்பீடியர் , தங்கள் கட்டுரைகளில் (பெரும்பான்மை) புதிய செய்திகளை இடுகின்றனர்.--த♥உழவன்(உரை)17:22, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]
தாங்கள் விக்கிப்பொதுவகத்தில் படங்கள் பதிவேற்றல் தொடர்பான காணொளி ஒன்றை உருவாக்கியது எம்மென்பொருளி வைத்து எனக் கூற முடியுமா? காரணம் யானும் அவ்வாறானதொரு விளக்கக் காணொளி யை உருவாக்கவேண்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:48, 19 சனவரி 2017 (UTC)[பதிலளி]
விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள் *மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:22, 25 சனவரி 2017 (UTC)[பதிலளி]
Hi, Info-farmer. Do you speak English? I am trying to find the meaning in English of a Tamil word. At the beginning of this video, there are 2 Tamil words written: எங்கே போறிங்கா. Can you tell me what it means? நன்றி. Stephen G. Brown (பேச்சு) 04:17, 2 பெப்ரவரி 2017 (UTC)
Thanks for sharing the song. i really enjoyed the song .You are asking about the 3rd line. which means, Where(எங்கே) are you going?(போறிங்க not போறிங்கா<--the last letter is wrong) The first line is rhythm of Carnatic music. 2nd line is (வாடி தங்கச்சி) come on! younger sister. Hope you too enjoyed the song. See you later.--த♥உழவன்(உரை) 16:24, 2 பெப்ரவரி 2017 (UTC)
Thank you very much, Info-farmer. Yes, I like this song. Stephen G. Brown (பேச்சு) 23:20, 2 பெப்ரவரி 2017 (UTC)
தங்களோடு உரையாட வேண்டும். தாங்கள் ஏதாவது சமூக வலைத்தளம் பயன்படுத்துகின்றீர்களா?--மாதவன் (பேச்சு) 08:41, 7 பெப்ரவரி 2017 (UTC)
சுகைப்பில் (skype)பேசலாமா? சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது இல்லை?--த♥உழவன்(உரை) 10:35, 7 பெப்ரவரி 2017 (UTC)
என்னிடம் இசுகைப் இல்லை. வைபர் (Viber) உள்ளதா?--மாதவன் (பேச்சு) 10:46, 7 பெப்ரவரி 2017 (UTC)
Viber-ஐ கணினியில் பயன்படுத்த முடியுமா? அதுவும் பயன்படுத்துவது இல்லை? உங்களுக்கு இணைய இணைப்பு வேகம் குறைவாக கிடைக்கிறது என்று எண்ணுகிறேன். மின்னஞ்சல் செய்யுங்களேன். அலைப்பேசியில் பேசி, அதனை ஒலிக்கோப்பாக கூட அனுப்பலாம்? அலைப்பேசியில் இணைய இணைப்பை பெறுதல் எனது செலவுகளுக்கு அப்பாற்பட்டது. வேறு ஏதேனும் குறிப்புகள் தந்தால், மற்ற நண்பர்களின் அலைப்பேசியின் வழியே தொடர்பு கொள்கிறேன்.--த♥உழவன்(உரை) 11:05, 7 பெப்ரவரி 2017 (UTC)
Viberஐ கணினியில் பயன்படுத்தலாம்.([3]) நான் Chat செய்யவே கேட்டேன். அலைபேசியில் கதைப்பது கடினம். விக்கியில் Chat செய்வதும் சிக்கல். உடனுக்குடன் முடியாது. --மாதவன் (பேச்சு) 13:02, 7 பெப்ரவரி 2017 (UTC)
தாங்கள் கூகிள் mail தானே பயன்படுத்துகின்றீர்கள். அப்படியாயின் Hangouts ஐ பயன்படுத்தலாம். viber தேவையில்லை. [hangouts.google.com] எனது mailஐ இணைகுக்குக--மாதவன் (பேச்சு) 13:04, 7 பெப்ரவரி 2017 (UTC)
மாதவன் அவர் சுட்டியதை மீண்டும் காணுங்கள். இருமுறை வந்த தவறுகளை, கனகு சுட்டுகிறார்.--த♥உழவன்(உரை) 11:08, 7 பெப்ரவரி 2017 (UTC)
இது 3வது முயற்சியாக பதில் அளிக்கிறேன். மாதவனும், நீங்களும் மாறி, மாறி பதிவு செய்தமையால், அழிந்து விடுகிறது. தனித்தலைப்பில் உரையாடலைத் தொடங்குங்கள். தற்போதே நிரல் எழுதக் கற்று வருகிறேன். சீனிவாசன், நற்கீரன், சதீஸ் வழிகாட்டுகின்றனர். அதனை முழுமையாக தானியங்கி கணக்கில் செய்ய முயன்றேன். அந்நுட்பம் வேலை செய்யவில்லை. அதனால் சோதனை ஓட்டம், சில மணிநேரத்தில் விக்கியில் திருத்தம் செய்வேன். அதிகம் ஓரிரு நாள் தேவைப்படும். பெரும்பாலும் சில மணிநேரத்தில் திருத்தம் செய்து விடுவேன். அந்த அனுபவங்களை நிரலாக மாற்றுவேன். மீண்டும் சோதனை ஓட்டம்(Test cases)..எனவே, அவசரம் வேண்டாம்.தொடர்ந்து என்ன நடக்கிறது என்று கவனிக்க வேண்டுகிறேன்.--த♥உழவன்(உரை) 11:05, 7 பெப்ரவரி 2017 (UTC)
சோதனை ஓட்டம் என்றால் ஒன்று முடிய ஒன்று ஒவ்வொன்றையும் பார்த்துத் திருத்த வேண்டாமா? முதலாவது தவறென்றால், அடுத்ததற்கு மாற்றம் செய்து பார்க்க வேண்டும். அதுவே சோதனை ஓட்டம்.--Kanags\உரையாடுக 11:23, 7 பெப்ரவரி 2017 (UTC)
நானும் முதலில் அப்படிதான் நினைத்தேன். ஆனால், உயிரியல் பெயரீடு என்பது பிற மொழிகளில் வரும் கட்டுரைகளை அனைத்து நாட்டினரும் புரிந்து கொள்ள தோன்றியதே, தாவரவியல் பெயரீட்டு முறை ஆகும். அதில் தற்போது பின்பற்றப் படும் இருசொற்பெயரீட்டு முறையில் ஒரு பெயருக்கு அடுத்து வருவது அதற்கே உரிய முறையில், அந்த ஆசிரியரை சொற்சுருக்கக் குறியீட்டு முறையில் தான் இருக்க வேண்டுமே ஒழிய, அவரவர் மொழியில் அல்ல.இந்த மூலிகைத் தரவுப்பக்கத்தினைக் காணவும்.. --த♥உழவன்(உரை) 03:59, 9 பெப்ரவரி 2017 (UTC)
ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நபரின் பெயரும் அவ்வாறு இருக்க வேண்டுமா எனத் தெரியவில்லை. ஆனால் அதுவும் கட்டாயமாக இருக்கலாம். ஆனால், பல உயிரியல் கட்டுரைகளில் உயிரியல் பெயரே தரப்படவில்லை. இவற்றை சரி செய்ய வேண்டும். உ+ம்: முள்வேங்கை. இக்கட்டுரையில் பின்வருமாறு எழுதப்பட வேண்டும்: முள்வேங்கை அல்லது அடமருது (Bridelia retusa) என்பது ஒரு மூலிகைஇனத்தைச் சேர்ந்த சேர்ந்த தாவரம் ஆகும். நன்றி.--Kanags\உரையாடுக 04:21, 9 பெப்ரவரி 2017 (UTC)
┌────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────┘
உங்களுடன் உரையாடிய பின்பு பிற மொழி விக்கிகளின் சில பக்கங்களைக் கண்டேன். குறிப்பாக இந்த சீன மொழி பக்கம். பிறகு வந்த கூட்டு எண்ணங்களால், பின்வருவனவற்றை முடிவு செய்ய, உங்களின் அனுபவத்தை, மேலும் பகிர வேண்டுகிறேன்.
ஒரு தாவரவகைப்பாட்டியல் அறிஞரை அதற்கே உரிய விதிப்படி, L. எனக்குறிப்பிடலாமென்று எண்ணுகிறேன். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் பெயர்சுருக்கத்திற்கு தமிழில் விளக்கம் கொடுத்தது போல இருக்கும். வகைப்பாட்டியல் விதிகளை பின்பற்றியதாகவும் ஆகும். இது போல பல இணைப்புகளை உருவாக்கினால், இதுபோல தமிழிலும் பக்கத்தினை உருவாக்கலாம்.
இணைப்புக்கான வகைப்பாட்டியல் கட்டுரை இல்லையெனில், அவற்றின் சிவப்பு இணைப்புகளை நீக்கி, அச்சொல்லை அப்படியே விட்டுவிடுவது. ஏனெனில், இணையத்தில் தேடி விரிவுபடுத்த மிகவும் உதவும். தமிழ் ஒலிப்பாக மாற்றினால், பலர் செய்யும் போது வேறுபடுகிறது.
மேற்கூறியவற்றால், வகைப்பாட்டியலின் சொற்களுக்கான, இதுபோன்ற சிவப்பு இணைப்புகளை நீக்கலாம்-
உரிய தமிழ் பெயருக்கு எது வகைப்பாட்டியல் பெயர் என்பது பலருக்குத் தெரியாது. தெரிந்தவருக்கு இதுபோல இணைப்பு தர முள்வேங்கை எடுத்துக்காட்டையே, வழிகாட்டுதலாக் கூற வேண்டும். கூறுவேன். இயன்ற அளவு நானும் செய்கிறேன்.--த♥உழவன்(உரை) 05:30, 9 பெப்ரவரி 2017 (UTC)
நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கும் ஏற்புடையதே. //உரிய தமிழ் பெயருக்கு எது வகைப்பாட்டியல் பெயர் என்பது பலருக்குத் தெரியாது// அப்படியல்ல. உயிரியல் பெயர் கட்டாயமாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பது பலர் அறிந்திருப்பதில்லை. முள்வேங்கை கட்டுரை எழுதியவர் ஆங்கில விக்கியில் இருந்தே கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், அக்கட்டுரையில் இருந்து உயிரியல் பெயரையும் சேர்த்துத் தர வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.--Kanags\உரையாடுக 05:42, 9 பெப்ரவரி 2017 (UTC)
இந்த மாற்றத்தில் ஒரு ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு தேவையில்லாமல் தமிழாக்கப்பட்டுள்ளது. மேற்கோள்களில் அல்லது வெளி இணைபுகளில் உள்ள வேற்று மொழி நூலின் தலைப்பை நாம் தமிழாக்கம் செய்வதில்லை. நீங்கள் PAWS ஐத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். subspecies என்ற சொல் ஒரு பொதுவான பல பயன்பாட்டுகளிலும் பயன்படுத்தப்படும் சொல். இதனை நாம் ஒரு தானியங்கி கொண்டு மாற்றுவது சரியானதல்ல. ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியே ஆய்ந்தறிந்து தேவைப்படும் இடங்களில் மட்டும் மாற்ற வேண்டும். --Kanags\உரையாடுக 09:07, 11 பெப்ரவரி 2017 (UTC)
இக்கருவி தானியங்கிக்கு பயன்படும் ஒரு நுட்பம். அதற்கான நிரல் ஊட்டங்களை வளர்த்து வருகிறேன். 10சொற்களுக்கு செய்த போது, ஒரு சொல்லுக்கு செய்க என்று வழிகாட்டியமையால், ஒவ்வொரு சொல்லாக செய்து வருகிறேன். அதனால் இந்நுட்பத்தை தவறாகப் பயன்படுகிறேன் என்று கருத வேண்டாம்.--த♥உழவன்(உரை) 09:19, 11 பெப்ரவரி 2017 (UTC)
நீங்கள் இதனை சோதனைக்கு செய்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் நீங்கள் தவறுகளைத் திருத்துகிறீர்கள் இல்லையே?--Kanags\உரையாடுக 09:24, 11 பெப்ரவரி 2017 (UTC)
திருத்தம் வருவதை கவனித்து உரையாடவும்.-த♥உழவன்(உரை) 09:26, 11 பெப்ரவரி 2017 (UTC)
1. ஒரே கணனியில் 2 விக்கிபீடியா கணக்கு உருவாக்குவதன் மூலம் அந்த கணக்கு தடை செய்யப்படுவதற்கான காரணம் என்ன?
2. என்னுடைய Arnav 16 என்ற ஆங்கில விக்கிபீடியா தடை செய்யப்பட்டுள்ளது, Thilakshan என்ற விக்கிபீடியா மூலம் ஆங்கில கட்டுரை எழுத்துவதனால் தடை செய்யவதற்கான வாய்ப்பு உள்ளதா?--Thilakshan 20:27, 14 பெப்ரவரி 2017 (UTC)
Arnav 16 என்பது தவறு. [4] என்பதே சரி. பதிப்புரிமை செய்யப்பட்ட பனுவல்களை பயன்படுத்தியுள்ளீர்களென்று தெரிகிறது. 2013 முதல் பல கட்டுரைகளை, இதுபோல பதிவு செய்துள்ளீர்கள். நாம் எண்ணுவதை எல்லாம் இங்கு பதிவு செய்யக்கூடாது. விக்கிக்கு நாம் நல்லது கெட்டது என முடிவு செய்யாமல் பலருக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை முதலில் மேம்படுத்துங்கள். நமது எண்ணங்களில் தோன்றும், விக்கிப்பற்றிய அதிக ஈடுபாட்டையும், எண்ணங்களையும் குறைத்துக் கொண்டு, காலத்தையும் கடந்து நமது உழைப்பு நிலைநாட்ட எண்ணமிடுங்கள். உங்களது நோக்கத்திற்கு ஏற்ப, பல கட்டுரைகளை பல மொழிகளிலும் பாருங்கள். ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதனையே நாடாதீர்கள். எழுதப்பழகுவதற்கு முன், பல படங்களை தமிழ் கட்டுரைகளில் இணையுங்கள். படங்கள் பொதுவகத்தில் இருந்து, இங்கு எப்படி தெரிகிறது என்று கவனியுங்கள். தங்கள் பணியும், உழைப்பும் சிறக்க வாழ்த்துகள் வணக்கம்--த♥உழவன்(உரை) 02:19, 15 பெப்ரவரி 2017 (UTC)
பல கட்டுரைகள் ஏற்கனவே விக்கித்தரவில் சேர்க்கப்பட்டுள்ளன. எதற்காக வார்ப்புரு?--Kanags\உரையாடுக 20:39, 15 பெப்ரவரி 2017 (UTC)
இதனை மீளமைத்துள்ளீர்கள். ஆனால், விக்கித்தரவில் அது இல்லையே? ஏன்?--த♥உழவன்(உரை) 01:11, 16 பெப்ரவரி 2017 (UTC)
இக்கட்டுரை 2013 ஆம் ஆண்டிலேயே விக்கித்தரவில் இணைக்கப்பட்டு விட்டது. பாருங்கள்.--Kanags\உரையாடுக 06:26, 16 பெப்ரவரி 2017 (UTC)
தகவலுழவன்... சில கட்டுரைகள் தமிழில் மட்டுமே உள்ளன. அவற்றிற்கு இணையான கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லை. அவற்றிற்கும் வார்ப்புரு இட்டுள்ளீர்களே? என்ன செய்வது என்பது எனக்குத் தெரியவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:04, 16 பெப்ரவரி 2017 (UTC)
செல்வா, இவ்வாறான கட்டுரைகளுக்கு வார்ப்புரு தேவையில்லை. இவை சில நாட்களின் பின்னர் தானியங்கிகள் மூலம் விக்கித்தரவில் இணைக்கப்படும். கட்டுரையை ஆரம்பிப்பவர் ஆங்கிலக் கட்டுரைக்கு விக்கித் தரவில் இணைப்பது அவசியம். இல்லாதுவிடின், சில நாட்களின் பின்னர் அவை விக்கித்தரவில் தானியங்கிகள் மூலம் இணைக்கும். ஆனால் அவை ஆங்கில விக்கிக்கோ அல்லது வேறு மொழிகளுக்கோ இணைக்காது.--Kanags\உரையாடுக 01:01, 16 பெப்ரவரி 2017 (UTC)
@Selvasivagurunathan m:! ஆங்கில விக்கியின் நடைமுறைகள் அனைத்தும் நமக்கு ஏற்புடையதல்ல. ஆங்கிலம் நமக்கு அளவு கோலும் அல்ல. ஆங்கில கட்டுரையில் இல்லாத தமிழ் கட்டுரைகளுக்கு நாம் விக்கித்தரவினை உருவாக்கலாம். அதுபற்றி இங்கு கேட்டிருந்தேன். வழிகாட்டுதல் தரப்படவில்லை. அதனால், விக்கித்தரவில் சில மாதங்களிலேயே பல இலட்சம் பங்களிப்பு செய்தவர் பாலஜி. அவரிடம் பேசி, எந்த கட்டுரை தமிழில் உருவாக்கினாலும், தானியக்கமாக பிறமொழிகளில் இல்லாத தமிழ் கட்டுரைகளுக்கு இணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கிறேன். மேலும், மேலே கனகு கூறியது தவறான கூற்று. சாம்பல் நிறத்தில் தெரிவது விக்கித்தரவு இணைப்பில்லை. அவர் அவசரப்பட்டு கூறியுள்ளார். விக்கிமீடியாவின் எதிர்காலமே, விக்கித்தரவு தான். ஏனெனில், இட்டத்தரவு எங்கு இருக்கிறது என்பதை எளிதில் காட்ட உதவும் திட்டமே, விக்கித்தரவு. அதிக பயனர்களை அடையாத திட்டம். ஒரு அருங்காட்சியகம் தான். விக்கிப்பீடியா திட்டம், நூலகமாக மாற, விக்கித்தரவு மிகவும் இன்றியமையாத கட்டகங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது.--த♥உழவன்(உரை) 03:28, 16 பெப்ரவரி 2017 (UTC)
என்ன சொல்கிறீர்கள் என எனக்கு விளங்கவில்லை. குறிப்பிட்ட கட்டுரைகள் விக்கித்தரவில் இணைக்கப்படவில்லையா? அவை இணைக்கப்பட்டுத்தானே உள்ளன?. //ஆங்கில கட்டுரையில் இல்லாத தமிழ் கட்டுரைகளுக்கு நாம் விக்கித்தரவினை உருவாக்கலாம்.// இதனைத் தான் தானியங்கிகள் செய்கின்றன.--Kanags\உரையாடுக 06:17, 16 பெப்ரவரி 2017 (UTC)
ஆம். தவறாகப் புரிந்து கொண்டேன். உரிய வார்ப்புருவை நானே நீக்கிவிடுகிறேன். விக்கித்தரவுத் தானியங்கி சில தவறான இணைப்புகளைத் தந்துள்ளது.உ-ம் அவற்றை நீக்கிய போது, தவறாகப் புரிந்து கொண்டேன். சுட்டியமைக்கு நன்றி. அத்தானியங்கி தவறுகளை மற்றொருமொரு நாளில் காட்டுகிறேன்.--06:29, 16 பெப்ரவரி 2017 (UTC)
இல்லை, அது தானியங்கியின் தவறல்ல. கட்டுரையை (பகுப்பை) உருவாக்கியவர் தகுந்த ஆங்கில விக்கி இணைப்பிற்கு இணைக்கவில்லை. இந்த வரலாற்றைப் பாருங்கள். விக்கித்தரவு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட பகுப்பு. ஆனால் அது ஆங்கில விக்கியின் Category:Social groups of Tamil Nadu என்ற பகுப்புக்கு எப்போதும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. விக்கித்தரவு அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஆங்கில விக்கிக்கு இணைக்கப்படாத கட்டுரைகள், பகுப்புகள் அனைத்தையும் தானியங்கிகள் விக்கித்தரவில் புதிய இலக்கத்தைத் தந்துள்ளன. தானியங்கியை இணைப்பவர் தமிழ் தெரியாதவர். அவருக்கு இந்த இரண்டும் ஒன்று என்பது தெரிந்திருக்க நியாயமே இல்லை.
எனவே, கட்டுரை ஒன்று நீண்ட காலமாக விக்கித்தரவில் கட்டுரையாளராலோ அல்லது வேறு ஒரு பயனராலோ அதற்கேற்ற விக்கித்தர்வில் இணைக்கப்படாதிருந்தால், அக்கட்டுரை தமிழ் விக்கிக்கு எனத் தனித்தன்மையானது என தானியங்கி கருதிக் கொண்டு அதற்கு ஒரு புதிய விக்கித்தரவு எண்ணைத் தரும். எனவே நாம் ஆங்கிலக் கட்டுரை இருந்தால் மட்டுமே அதனை விக்கித்தரவில் இணைக்க வேண்டும். தமிழ் விக்கிக்கு எனத் தனித்தன்மையான கட்டுரைகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இதனைத் தான் நான் உங்களுக்கு முன்னர் ஒரு தடவை வேறோர் இடத்தில் கூறியிருந்தேன்.--Kanags\உரையாடுக 06:44, 16 பெப்ரவரி 2017 (UTC)
அற்புதம். //தானியங்கியை இணைப்பவர் தமிழ் தெரியாதவர். அவருக்கு இந்த இரண்டும் ஒன்று என்பது தெரிந்திருக்க நியாயமே இல்லை.// இதுபோன்ற கட்டுரைகளை நாம் இனம் காண இயலுமா? நாம் இதுவரை இணைத்துள்ள விக்கித்தரவு சரியானாத என எப்படி கண்டறிவது? Eudicots பற்றி படித்துக்கொண்டிருந்தபோது, இதுபோல மற்றொரு தவறைக் கண்டேன். விக்கித்தரவில் சரிபார்த்த இணைப்புகளை அடையாளமிட ஒரு பகுப்பினை உருவாக்கலாமா?--த♥உழவன்(உரை) 06:51, 16 பெப்ரவரி 2017 (UTC)
இங்கு உள்ளது. இவை அனைத்தும் தற்போது விக்கித்தரவில் (புதிய எண் தரப்பட்டு) தானியங்கியால் இணைக்கப்பட்டு விட்டன..--Kanags\உரையாடுக 06:56, 16 பெப்ரவரி 2017 (UTC)
சரி. பிற மொழிகளில் இல்லாத கட்டுரைகளுக்கு விக்கித்தரவு உள்ளதைத் தெளிவா இப்பொழுது அறிந்து கொண்டேன். {{commons}} வார்ப்புரு தமிழ் கட்டுரையில் இருந்து, பொதுவகத்திற்கு இருப்பது போல, நீங்கள் கொடுத்த பக்கங்களுக்கு இணைப்புத்தர ஒரு {{விக்கித்தரவு}} வார்ப்புருவை உருவாக்கி இணைக்கலாமா? இதன் வழியே எளிமையாக , விக்கித்தரவினை ஒரு சொடுக்கில் அடைய இயலும். தற்போது நகலெடுத்து அங்கு சென்று ஒட்டி, தேடி என பல படிகள் உள்ளது. இதுபற்றிய உங்கள் எண்ணமென்ன?--07:12, 16 பெப்ரவரி 2017 (UTC)
//தற்போது நகலெடுத்து அங்கு சென்று ஒட்டி, தேடி என பல படிகள் உள்ளது.// இல்லையே. கட்டுரைப் பக்கத்திலேயே நேரடி இணைப்பு உள்ளதே. கட்டுரையின் இடப்பக்கம் உள்ள கருவிப்பெட்டியில் விக்கித்தரவுஉருப்படி என்பதைச் சொடுக்குங்கள்.--Kanags\உரையாடுக 07:28, 16 பெப்ரவரி 2017 (UTC)
2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் என்பதனைப் பார்த்தேன். எனக்கு இடப்புறம், விக்கித்தரவுஉருப்படிஎன்று எதுவுமே இல்லையே? ஒரு திரைப்படிப்பை, நேரம் இருக்கும்எடுத்துத் தரக்கோருகிறேன். பலருக்கும் பயனாகும். இப்பொழுது சில மணிநேரம் வெளியே செல்கிறேன்.வந்தவுடன் காண்கிறேன். வணக்கம்--த♥உழவன்(உரை) 07:34, 16 பெப்ரவரி 2017 (UTC)
நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை விக்கித்தரவில் இணைக்கப்படவில்லை. (தானியங்கி தவறி விட்டது போல் தெரிகிறது. இவ்வாறு ஒரு சில கட்டுரைகள் இணைக்கப்படாமல் உள்ளதைக் கண்டுள்ளேன். இந்தக் கட்டுரையைப் பாருங்கள்.--Kanags\உரையாடுக 07:40, 16 பெப்ரவரி 2017 (UTC)
நாம் ஒவ்வொன்றாக திறந்து பார்த்து கண்டறிவது காலவிரயம் என்பதால், சில நிரலாக்க முயற்சியை மேற்கொள்கிறேன். நல்ல பலன் கிடைக்குமெனின் பகிரந்து கொள்கிறேன். நல்லதொரு ஆக்கச் சிந்தனையை வித்திட்டமைக்கு நன்றி. --த♥உழவன்(உரை) 11:31, 16 பெப்ரவரி 2017 (UTC)
இந்த மாற்றங்களைக் கவனியுங்கள். புதிதாக விக்கித்தரவில் சேர்க்க முன்னர் Andrographis echioides என்பதை (ஆங்கில விக்கியில் இல்லாது விட்டால்) விக்கித்தரவில் தேடுங்கள். கிடைத்தால், அதற்கு புதிய கட்டுரையை இணையுங்கள். இல்லையேல், புதிய உருப்படியைத் தொடங்கலாம்.--Kanags\உரையாடுக 08:41, 17 பெப்ரவரி 2017 (UTC)
திரினிப்பழம் இங்கு தீருத்தம் மீளமைக்கப்பட்டது ஏன்? --AntanO 19:27, 17 பெப்ரவரி 2017 (UTC)
விக்கித்தரவு உள்ளது என்பதால். உங்கள் உலாவியினை purge செய்யுங்கள்.--த♥உழவன்(உரை) 19:29, 17 பெப்ரவரி 2017 (UTC)
விக்கித்தரவு வார்ப்புரு பற்றி நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. நிற்க, திரினிப்பழ மரத்தின் அறிவியல் பெயரைக் குறிப்பிடுங்கள் மேலதிக கருத்தைத் தெரிவிக்கிறேன். --AntanO 19:42, 17 பெப்ரவரி 2017 (UTC)
மீளமைத்தல் எங்கு செய்யலாம் என்பது பற்றி ஆங்கில விக்கியில் வழிகாட்டுதல் உள்ளது. திரினிப்பழம் கட்டுரையில் மேற்கொண்ட மீளமைத்தல் ஏற்புடையதல்ல. அல்லது குறைந்தபட்சம் ஏன் மீளமைக்கப்படுகிறது என்று தொகுப்புச் சுருக்கத்தில் தெரிவித்திருந்தாலும் அது ஒரு நல்ல விக்கிப் பண்பாக இருந்திருக்கும். ஒரு வார்ப்புவை இணைக்கும்போது ஏன் இணைக்கிறேன் என்று அறியாமல் செய்ய, நான் விக்கிக்கு புதியவனல்ல. பாராமரிப்பு வார்ப்புருவை நீக்கியதற்கான எச்சரிக்கை வார்ப்புருவை நான் பதிலுக்கு உங்கள் பேச்சுப்பக்கத்தில் இட்டிருந்தால், உங்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும். அப்போது தொடர்பங்களிப்பாளர், மூத்த பயனர், நிர்வாகி என்ற காரணங்கள் என் மீது அடுக்கப்பட்டிருக்கும். தயவுசெய்து இவ்வாறு செய்ய வேண்டாம். --AntanO 10:03, 18 பெப்ரவரி 2017 (UTC)
வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:23, 26 பெப்ரவரி 2017 (UTC)
தங்கள் வருகைக்கு நன்றி. நான் கருத்திட வேண்டுமெனில், நீங்கள் கூறியபடி விக்கிக்கோப்பையில் கலந்து கொண்டபோது, உருவாக்கிய கட்டுரையான க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 என்பதில் உங்களின் கருத்தினை எதிர்பார்க்கிறேன். அதன் உரையாடற்பக்கம் காண்க. அதற்கும் முன் கட்டுரையில் வரலாற்றுகளை ஒப்பிட்டு எப்படி கட்டுரை மாற்றப்பட்டிருக்கிறது என்பதையும் ஒரு முறை கவனிக்கவும். தமிழக அறிஞரைப் பற்றி எழுதினால், அவரைப் பற்றி, தமிழகத்திற்கு வெளியே வாழ்பவர், தொடர்ந்து மாற்றுக்கருத்திடுவது சமூகு வளர்ச்சிக்கான முறையாகப் படவில்லை. தமிழகத்தின் வரலாற்றில் புதைந்துள்ள உண்மைகள் பல உள்ளன. அவற்றைத் தேடி பிடித்து எழுதுபவருக்கு இது மன உலைச்சலை ஏற்படுத்துகிறது. சமூக ஒற்றுமை என்பது, பிறமொழி சமூக ஒப்புதல் பெற்ற முடிவுகளை செயற்படுத்துதல் அன்று. நம் சமூகத்தார் அனைவரின் கருத்தினையும் உள்வாங்கி செயற்படுவதே ஆகும். நீங்கள் உங்களின் எண்ணத்தை தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.ஏனெனில், சில மணிநேரம் படித்துவிட்டு, ஒரு அரைமணிநேரம் கட்டுரை எழுதினால், அதனை நீக்குவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளதால், உங்களோடு தொடர்ந்து ஈடுபடுவது குறித்து சிந்தித்து வருகிறேன் --த♥உழவன்(உரை) 02:39, 28 பெப்ரவரி 2017 (UTC)
இது தமிழ்நாட்டுக்கோ ஈழத்துக்கோ சொந்தமான கலைக்களஞ்சியம் அல்ல. மேலும் கட்டுரையை பிரதேச, இன, மத வேறுபாடுகளின்றி யாரும் தொகுக்கலாம், கேள்விக்குட்படுத்தலாம். குறிப்பிட்ட வகையினர்தான் தொகுக்க வேண்டும் என்று, நிருவாகியாக இருந்து கொண்டு கருத்திட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். --AntanO 03:07, 28 பெப்ரவரி 2017 (UTC)
ஆன்டன் என் பேச்சுப்பக்கத்தில் நானும் மற்றொருவரும் உரையாடுகிறோம். இடையில் உங்கள் கருத்துக்களை நாங்கள் உரையாடிய பின் இடக்கோருகிறேன். ஏற்கனவே, பேச்சு:மூங்கில் என்ற பக்கத்தில் ஏற்கனவே உங்கள் கருத்தினை இட்டுள்ளீர்கள். மீண்டும் மீண்டும் ஒரே கருத்தினை இடுதல் (பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1), சகபங்களிப்பாளரின் பதிவுகளை தொடர்ந்து மதிப்பிடுவது தவறு. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டது எனக்கு வருத்தமே. பல மென்மையான. பட்டுப்பூச்சிகளை பற்றிய அருமையான கட்டுரைகளை உருவாக்கிய ஆன்டன் வன்மையாக பதிவுகள் செய்யாமல் உரையாடக் கோருகிறேன் ஏனெனில், மனித உள்ளம், வண்ணத்துப்பூச்சிகளைப் போல மென்மையானது; முழுமையறறது. வாழ்க்கை முழுமையை நோக்கிய பயணம். சுட்டுங்கள். ஒருமித்து செயற்படுவோம். நான் இன்னும் கூட்டுப்புழுவாக இருப்பதாக நினைத்தால், சிறகடித்துப் பறக்க வழிகாட்டுங்கள். --த♥உழவன்(உரை) 03:28, 28 பெப்ரவரி 2017 (UTC)
தவறு என்றால் தக்க இடத்தில் முறையிடலாம். அப்போது சரியா தவறா என என்னால் பதிலளிக்க முடியும். நிற்க, என்னுடைய கருத்தைத்தான் இங்கு பதிவு செய்துள்ளேன், குறித்த உரையாடலில் பங்குபெறவில்லை என்பதைக் கவனிக்க. --AntanO 04:14, 28 பெப்ரவரி 2017 (UTC)
கருத்திட்டாயிற்று. திட்டம் தொடர்பில் கருத்திடுங்கள் தகவலுழவன் ஐயா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:38, 28 பெப்ரவரி 2017 (UTC)
நன்றி. ஸ்ரீஹீரன்! அந்நூலைப் பேணலாம் என்று கூறுவதாக அறிந்தேன். அப்படித்தானே? ஆம் எனில், வாக்கிடக் கோருகிறன்.--த♥உழவன்(உரை) 10:43, 28 பெப்ரவரி 2017 (UTC)
//தமிழக அறிஞரைப் பற்றி எழுதினால், அவரைப் பற்றி, தமிழகத்திற்கு வெளியே வாழ்பவர், தொடர்ந்து மாற்றுக்கருத்திடுவது சமூகு வளர்ச்சிக்கான முறையாகப் படவில்லை. தமிழகத்தின் வரலாற்றில் புதைந்துள்ள உண்மைகள் பல உள்ளன. அவற்றைத் தேடி பிடித்து எழுதுபவருக்கு இது மன உலைச்சலை ஏற்படுத்துகிறது. சமூக ஒற்றுமை என்பது, பிறமொழி சமூக ஒப்புதல் பெற்ற முடிவுகளை செயற்படுத்துதல் அன்று. நம் சமூகத்தார் அனைவரின் கருத்தினையும் உள்வாங்கி செயற்படுவதே ஆகும். நீங்கள் உங்களின் எண்ணத்தை தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.//
இக்கருத்து விக்கிப்பீடியா கொள்கைக்கு முரணாகவும் தமிழ் விக்கிப்பீடியர் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவும் உள்ளது. தாங்கள் தொடர்ந்து பல அடிப்படையான செயற்பாடுகளுக்குக் கூட சரியான புரிதல் இன்மையுடன் பங்களித்து வருவது, ஒரு நிருவாகியாக முன்மாதிரியான செயற்பாடு அன்று. --இரவி (பேச்சு) 10:07, 28 பெப்ரவரி 2017 (UTC)
//பல அடிப்படையான செயற்பாடுகளுக்குக் கூட சரியான புரிதல் இன்மை// எவை என அறிய விரும்புகிறேன். ஒவ்வொன்றாகக் கூறினால் எனது எண்ணங்களைத் தெரிவிக்கிறேன். தவறு என்னில் சரியானச் சொன்னால் திருத்திக் கொள்கிறேன்.
இதன் தொடக்கப்புள்ளி, க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 குறிப்பிட்ட நூலில் உங்களின் கருத்தை வாக்கிடக்கோருகிறேன். ஆன்டன் அவர்களே, அவருக்கு அந்நூல் பற்றி தெரியாது என்கிறார். ஆனால், தொடர்ந்து நீக்க வேண்டும் என்று கூறுகிறார். அதனால் தான் வாக்கெடுப்பு. அம்முறை தவறா?
//ஒரு நிருவாகியாக முன்மாதிரியான செயற்பாடு// வாக்கெடுப்பு நடத்தக்கூடாதா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன். அல்லது நீக்கத்தான் வேண்டுமெனில், நான் என்ன செய்வது? விக்கிமீடியா தண்டனைக் களமோ அல்லது கருத்துகளமோ அல்ல என்பதை வாக்கெடுப்பு அனைவருக்கும் தெளிவு படுத்தும் என்றே எண்ணுகிறேன்.--த♥உழவன்(உரை) 10:43, 28 பெப்ரவரி 2017 (UTC)
தங்களுக்குத் தேவையான வழிகாட்டலை ஏற்கனவே பல்வேறு பக்கங்களில் உடன் பங்களிப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றைக் கவனித்துச் செயற்படுத்த வேண்டுகிறேன். //இதன் தொடக்கப்புள்ளி, க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 குறிப்பிட்ட நூலில் உங்களின் கருத்தை வாக்கிடக்கோருகிறேன். // இவ்வாறு தொடர்பற்ற இடங்களில், தொடர்பற்ற பயனர்களை ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் கருத்திடுமாறு விக்கியிலும் விக்கிக்கு வெளியேயும் கேட்பதே முறையன்று. அவ்வாறு கருத்திட்டால் தான் மற்றவரின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பேன் என்பதும் முறையன்று (நீங்கள் இங்கு சிறிகீரனிடம் வேண்டியது போல). இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
நீக்கல் வேண்டுகோள்களை கட்டுரையின் உரையாடற் பக்கத்தில் எதிர்கொள்ளல், உரையாடல்களில் இணக்க முடிவு இல்லையெனில் வாக்கெடுப்பு நோக்கி நகர்தல் ஆகியவை வழக்கமான செயற்பாடுகளே. இதில் நான் கருத்து கூற ஒன்றும் இல்லை. --இரவி (பேச்சு) 13:59, 5 மார்ச் 2017 (UTC)
ஒரு கட்டுரை உருவாக்கப்படும் போதும், நீக்கப்படும் போதும் அந்தந்த பயனர்களுக்கு அறிவிப்பு இட்டு மாற்றங்களைக் கோருவது பல விக்கிகளில் நடைமுறையில் உள்ளது. நீக்குதலுக்கும் சில நாட்கள் தரப்படுகிறது. நமது தமிழ் சமூகத்திலும் அத்தகைய நிலைவரின், நமது பயனர் எண்ணிக்கை அதிகமாகும் என்பதை பல சூழ்நிலையில் எண்ணி ஏங்கியிருக்கிறேன்.
நாம் நம்மை மாற்றிக் கொள்வது எளிது. பிறரின் மனநிலை அறிதல்/மாற்றுவது கடினம்.
என்றதன் வாயிலாக நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன? குறித்த பயனர் தான் செய்தது சரியென்றும், என் மீது தன்னிலை விளக்க குற்றச்சாட்டும் சுமத்திக் கொண்டிருக்க, நீங்கள் ஏன் பொருத்தமற்ற விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களால் ஏன் விக்கி கொள்கையை விளக்க முடியவில்லை? en:Wikipedia:Criteria for speedy deletion#G8._Pages_dependent_on_a_non-existent_or_deleted_page என்பதன்படி கட்டுரையை உடனடியாக நீக்கலாம் என்று தெரியாதா? ஒரு நிருவாகி நடுநிலையுடன்தான், விக்கி நடைமுறைப்படி செயற்படுகிறார் என ஏன் உங்களால் குறிப்பிட முடியவில்லை. நான் செயற்பட்டது பிழை என்கிறீர்களா? அல்லது செயற்பட்டது நான் என்பதால் தவிர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா? மேலும், மின்னல் கருவி வழியாக பயனர்களுக்கு அறிவிப்பு நீக்கலாம். ஆனால், 27 திசம்பர் 2015 அன்று தொழினுட்ப, மொழிபெயர்ப்பு உதவி கேட்டிருந்தேன். இதுவரை எந்தளவிற்கு பங்களிப்பு நல்கப்பட்டது? இவற்றையெல்லாம் விடுத்து, தமிழ் விக்கியை குற்றம் சுமத்துவதும், பயனர்களிடம் தமிழ் விக்கியில் குறையுள்ளதாகவும் குறிப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். குறையே இல்லாத விக்கிப்பீடியா ஒன்றைக் காட்ட முடியுமா? குறித்த பயனரின் கட்டுரை ஆ.வியிலும் நீக்கப்பட்டது. அங்கு இங்குபோல் இந்தளவிற்கு விட்டுக்கொடுப்பு இருக்குமா? ஆர்தி ரானா கட்டுரையை நான் இரண்டு தடவைகள மட்டுமே தொகுத்துள்ளேன் என பயனர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பதை இதைக் காணும் நிர்வாகியால் கண்டறிய முடியும். --AntanO 08:55, 2 ஏப்ரல் 2017 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:29, 10 ஏப்ரல் 2017 (UTC)
My name is David Alves (User:Horadrim~usurped), and I'm an Wikipedian in Residence at RIDC NeuroMat (User:Horadrim). I've reach your contact through the Wikimedian in residence page in Outreach. As you may know, Wikimania 2017 is coming! I am here because, as a fellow WiR, I believe this would be a great opportunity for us to share experiences, discuss difficulties and exchange solutions, creating a community among us capable of supporting in other projects that would benefit from residents.
In that sense, I have submitted a proposal of a Birds of a Feather activity to Wikimania that you can check out here. I hope to count with your support in this project and would like to invite you to join us if you participate in Wikimania. In case of any doubts, please feel free to contact me, either in my talk pages or by e-mail at david.alvesoutlook.com.
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...
கூட்டுழைப்புக்கு அழைத்தமைக்கு நன்றி. இதுபோல ஆயிரகணக்கான கட்டுரைகள் வர உள்ளன. எனவே, ஆசிரியர்களிடத்தில் பயிலுமிடத்தின் (மணல்தொட்டி முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதற்குரிய ஒருங்கிணைப்புகளை நீங்கள் செய்தால், அது இதனை விட மிகுந்த பலனை உண்டாக்கும். அப்பொழுதே திரண்டு வரும் கட்டுரைகளைச் சமாளிக்க முடியும். இல்லையேல், நீக்கல் என்ற முறையே ஓங்கி,புதியவர்களை தக்க வைக்கா சமூகச் சூழல் தோன்றும். இது குறித்த உங்களது எண்ணங்களையும், ஆசிரியர்களுக்கு ஒருங்களிணைப்புப் பக்கத்தில் குவிக்கக்கோருகிறேன். புறத்தோல் என்ற கட்டுரையாளர் என்னிடம் வினவிய போது, இது குறித்தத் தேவையை அவருக்கு உணர்த்தியுள்ளேன். அவரும் தொடர்ந்து அவரது பயிலுமிடத்தில் உருவாக்கி என்னிடம் அவ்வப்போது, அவரது சூழ்நிலைக்கு ஏற்ப கலந்துரையாடி வருகிறார். வணக்கம்.--த♥உழவன்(உரை)07:39, 28 மே 2017 (UTC)[பதிலளி]
தற்போது அலுவலகப் பணியின் காரணமாக இந்தியாவிற்கு வெளியே இருப்பதால், ஆசிரியர்களுக்கான பயிற்றுவிப்பு முயற்சியில் முழுமையாக பங்குகொள்ள இயலாத நிலையிலுள்ளேன். எனவே எனது பங்களிப்பாக, இந்தப் பகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ள கட்டுரைகளை வகைப்படுத்தியுள்ளேன். உங்களைப் போன்ற துறைசார் ஆர்வலர்கள் மூலமாக கட்டுரைகளை விக்கிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:48, 28 மே 2017 (UTC)[பதிலளி]
மகிழ்சசி. வகைப்படுத்துதல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. . அது உந்து கோலாக இருக்கிறது. பலருக்கும் பயனாகும். விக்கிப்படுத்துவோம். வணக்கம்.--த♥உழவன்(உரை)01:44, 29 மே 2017 (UTC)[பதிலளி]
தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:
👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...
விக்கித்தரவு பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்வது தொடர்பான விவரங்களுக்கு trulytito @ gmail dot com அணுகுங்கள். உதவி தேவையெனில் என் எண்ணை அழையுங்கள். --இரவி (பேச்சு) 10:53, 5 சூன் 2017 (UTC)[பதிலளி]
நீங்கள் ஒலி விலகல் என்ற கட்டுரையை இன்னொரு கட்டுரை இருப்பதாகக் குறிப்பிட்டு நீக்கியுள்ளீர்கள். அக்கட்டுரை எதுவெனக் கண்டுபிடிக்க
முடியவில்லை. அந்தக் கட்டுரைக்கு ஒலி விலகலை வழிமாற்றி விடுகிறீர்களா?--Kanags\உரையாடுக11:21, 19 சூன் 2017 (UTC)[பதிலளி]
மீளமைத்துள்ளேன். பக்கத்தினை நகர்த்துதலின் போது, இந்நிகழ்வு நடந்தது. இனி இருமுறை சரிபார்த்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. வணக்கம்.--த♥உழவன்(உரை)13:54, 19 சூன் 2017 (UTC)[பதிலளி]
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
நடந்து முடிந்துள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டு சிறப்பாக வழிகாட்டியமைக்காகவும், ஒரு புதுப்பயனரின் பார்வையில் இருந்து நாம் செய்ய வேண்டிய மாறுதல்கள், ஒருங்கிணைப்புகளைப் பற்றிய புரிதலைக் கூட்டியமைக்காகவும் இப்பதக்கத்தை வழங்குகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:58, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]
வணக்கம். சர் சி வி ராமன் கட்டுரையைச் சுற்றுக்காவல் செய்ததாகக் குறித்துள்ளீர்கள். ஆனால், கட்டுரை விக்கி நடையில் இல்லை. குறித்த தலைப்பில் ச. வெ. இராமன் என்று இன்னொரு கட்டுரை விரிவாக உள்ளது. இந்தச் சூழலில் புதிய கட்டுரையின் பொருத்தமான உள்ளடக்கங்களை பழைய கட்டுரையுடன் சேர்க்க வேண்டும். அல்லது, புதிய கட்டுரையை நீக்க வேண்டும். பயனருக்கு இது குறித்து வழிகாட்டி அறிவுறுத்த வேண்டும். சுற்றுக்காவல் நடைமுறைகளைக் கவனித்துப் பார்க்க வேண்டுகிறேன். இவற்றின் அனைத்துப் படிகளையும் கவனிக்காமல் ஒரு கட்டுரையைச் சுற்றுக் காவல் செய்ததாகக் குறிக்க வேண்டாம். ஐயங்கள் இருந்தால் கேட்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:22, 16 சூலை 2017 (UTC)[பதிலளி]
அப்படி குறிக்க வேண்டாம். ஒரு வேளை, உங்களுக்கு வேறு பணிகள் வந்து இக்கட்டுரையை மீண்டும் கவனிக்க இயலாமல் போனால், வேறு பயனர்களின் பார்வையிலும் போகும் வாய்ப்பு உண்டு. ஒரு கட்டுரை சுற்றுக் காவல் வரையறைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டும் சுற்றுக்காவல் முடித்ததாக குறிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 09:46, 16 சூலை 2017 (UTC)[பதிலளி]
நெல் தொடர்பான கட்டுரைகளை இயற்றி வருகிறேன், ஒவ்வொரு நெல் வகைக்கும் இனம், மற்றும் பேரினம் (species / genus) மாறுபடுமா, அல்லது அனைத்து நெல் வகைக்கும் இனம், மற்றும் பேரினம் ஒன்றுதானா. தெளிவுப்படுத்த இயன்றால் உதவுங்கள். நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ
ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
--இரண்டாயிரம் கட்டுரைகளுக்கு மேல் எழுதிய பயனர்களில் ஒரு பயனரான எனக்கு இரண்டாயிரமவர் பதக்கம் வழங்க வேண்டுகிறேன். நன்றி.-- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 18;48, 27 சனவரி 2018 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:28, 18 பெப்ரவரி 2018 (UTC)
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி. --இரவி (பேச்சு) 09:42, 10 மார்ச் 2018 (UTC)
கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:49, 13 மார்ச் 2018 (UTC)
வணக்கம், நீங்கள் பயனர் ஒருவர் பங்களிப்பதற்கு ஒரு வார காலத் தடை வித்திருக்கிறீர்கள். இது அவசியமானதாக எனக்குத் தெரியவில்லை. அப்புதிய பயனர் புடலங்காயைப் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில் எத்தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனை மீள்வித்திருக்கிறீர்கள். மற்றைய கேள்வி அக்கட்டுரைக்குத் தேவையற்றதே. ஆனாலும், தடை விதிப்பதற்கான அவசியமான பங்களிப்பாக எனக்குத் தெரியவில்லை. தொடர்ந்து ஒருவர் தவறான கருத்துகளைக் கூறியிருந்தால் தடை விதிப்பதற்குக் காரணம் இருக்கலாம். இப்பயனருக்கான தடையை மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags (பேச்சு) 23:03, 21 ஏப்ரல் 2018 (UTC)
எவ்வளவு நாட்கள் தரலாம்? புதிய களமொன்றை புரிந்து கொள்ள ஒரு வாரம் தேவை என்றே கருதுகிறேன். மற்றொன்று தடை என்ற சொல், அடுத்தவர் மனதிற்கு நெருடலாக இருக்கும் என்பதால், அச்சொல்லைத் தவிர்த்து, அவரது பேச்சுப்பக்கத்தில் உரையாடி உள்ளேன். இதுபோல நிகழ்வு, தொடக்க காலத்தில், ஆங்கில விக்சனரியில் எனக்கு நிகழ்ந்துள்ளது. அதற்குப்பிறகே விக்சனரியில் ஓரளவு பங்களிப்பு செய்ய முற்பட்டேன்.--த♥உழவன்(உரை) 01:37, 22 ஏப்ரல் 2018 (UTC)
எல்லோரும் தவறு விட்டுத்தான் விக்கிநடையைப் புரிந்து கொள்வார்கள். முதல் பங்களிப்பிலேயே, அதுவும் கட்டுரையில் அல்லாமல், பேச்சுப் பக்கப் பங்களிப்புக்காக, ஒரு வாரத் தடை என்பது அதிகம். தடையை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags (பேச்சு) 01:53, 22 ஏப்ரல் 2018 (UTC)
ஒரு நாளாக மாற்றியுள்ளேன். அக்கட்டுரையை சிறிது விரிவாக்கச் செல்கிறேன்.--த♥உழவன்(உரை) 02:02, 22 ஏப்ரல் 2018 (UTC)
வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)
வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.
நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி
வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி
இங்குள்ள தொகுப்பு மறுப்பு விக்கிப்பீடியாவின் எவ்விதியின் கீழ் அடங்குகிறது? இதற்கென தனித்துவமான அனுமதி விக்கிச் சமூகத்தில் பெறப்பட்டதா? தடை, காப்பு, மட்டுப்படுத்தப்பட்ட வேண்டுகோள் ({{In use}}, {{Under construction}}) தவிர "தொகுக்க வேண்டாம்" எனக் அறிவிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது? காண்க: Terms of Use --AntanO (பேச்சு) 07:36, 28 மே 2018 (UTC)[பதிலளி]
நண்பரே! நடந்து கொண்டு இருக்கும் கட்டுரைப் போட்டியில் தமிழ் முன்னிலை வகிக்க என்னால் இயன்றதை செய்கிறேன். சமவெளி என்ற கட்டுரையினை உருவாக்கிக் கொண்டு இருந்த போது மற்றொரு நண்பர் மேற்கூறிய வார்ப்புரு இருந்தும் தொகுத்ததால் தமிழுக்குரிய புள்ளி வர இயலாது நிலை ஏற்பட்டதாகவே கருதுகிறேன். அதனால் அக்கட்டுரைய அவரது தொகுக்கப் பட்ட பிறகு மீண்டும் சொற்களை அதிகரித்து, போட்டி பட்டியலில் இணைத்தேன். மீண்டும் அது நடக்கா வண்ணம் இருக்க, நான் மேற்கொள்ளும் வழிமுறை தவறு எனில், பிற வழிமுறையைக் கூறவும். பின்பற்றுகிறேன். --த♥உழவன்(உரை)07:52, 28 மே 2018 (UTC)[பதிலளி]
{{In use}} இணைத்துவிடுங்கள். அவற்றை என் கவனிப்புப் பட்டியலில் வைத்திருந்து, மற்றவர்கள் தொகுத்தால், விளக்கி, அக்கட்டுரையை தவிர்க்க வைக்கிறேன். --AntanO (பேச்சு) 07:58, 28 மே 2018 (UTC)[பதிலளி]
அப்படி செய்தால் கூட, புள்ளி கணக்கு விட்டு போய்விடுமென்றே கருதுகிறேன். எனினும் இட்டுள்ளேன். fountain கருவியல் இணைத்து விட்டு எழுதலாமா?--த♥உழவன்(உரை)08:10, 28 மே 2018 (UTC)[பதிலளி]
நீங்கள் பயன்படுத்திய {{Under construction}} வார்ப்புருவைவிட {{In use}} வார்ப்புரு மற்றவர்களுக்கு தெளிவாக தொகுத்தலைத் தவிர்க்க அறிவிக்கின்றது. தேவைப்பட்டால், en:Template:In creation என்ற வார்ப்புவையும் இங்கு உருவாக்கிவிடலாம். மற்றவர்கள் தொகுப்பதால் புள்ளி கணக்கு விட்டு போய்விடுமா? அப்படியாயின், அந்த விதிமுறை தளர்த்தப்படுவது அல்லது மாற்றப்படுவது அவசியம். --AntanO (பேச்சு) 11:52, 28 மே 2018 (UTC)[பதிலளி]
வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி
ஏற்காடு குறித்த தலைப்புகள் கட்டுரைப் போட்டியில் எந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்று சுட்டி உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:53, 31 மே 2018 (UTC)[பதிலளி]
பட்டியலைப் பார்க்கவில்லை. கருவி ஏற்கிறதா என பார்த்தேன். ஏற்றது. அதனால் தொடர்ந்து, எனது வாழிடங்களைப் பற்றி எழுதினேன். பொருத்த மற்றது எனில் நீக்கி விடவும்.--த♥உழவன்(உரை)15:14, 31 மே 2018 (UTC)[பதிலளி]
தெளிவுபடுத்தியதற்கு நன்றி. போட்டியின் விதிகள் கருதி இவற்றுக்குப் புள்ளிகள் தராமல் Fountain கருவியில் இருந்து விலக்கியுள்ளேன். ஒரு இடைவெளிக்குப் பிறகு நீங்கள் மீண்டும் முனைப்பாக கட்டுரைகள் ஆக்குவது கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:51, 1 சூன் 2018 (UTC)[பதிலளி]
வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி
தகவல் உழவன் நீங்கள் என்று எந்த விமானத்தடக் குழுமத்தில் இராஞ்சி செல்ல பதிவு செய்ய உள்ளீர்கள் என அறிவிக்கவும். கி. மூர்த்தி அவர்களையும் கலந்துகோள்ளவும். சிறப்பு பயிற்சிக்கு நாம் மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரவி கூறியுள்ளார்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:52, 15 சூன் 2018 (UTC)[பதிலளி]
AYYA! Vannakkam.
Sorry to write in English. I am using third person mobile. Moorthy informed about this. CIS will call with journey tickets. In my experience, I know that Ravi always take care. Take full rest till they announce participants list. If they call, we will plan._த♥உழவன்(உரை)14:21, 15 சூன் 2018 (UTC)[பதிலளி]
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)
வணக்கம் தகவல் உழவன், தாங்கள் விக்கிப்பீடியா ஆசிய மாதம் தொடர் தொகுப்புப் போட்டியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் இன்னும் மூன்று கட்டுரைகள் புதிதாக, நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் உருவாக்கினால் உங்களுக்கு சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டை அனுப்புவர். முயற்சிக்கவும். நன்றி. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:54, 27 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
கூகிள் என இருக்கும் கட்டுரைகளின் தலைப்பை கூகுள் என தங்களால் மாற்றித்தர இயலுமா? அல்லது நானே மாற்றலாமா? அவ்வாறு மாற்றும் போது அதன் பேச்சுப் பக்கத்தையும் மாற்றலாமா? தங்களின் உதவி தேவை நன்றி ஸ்ரீ(talk)04:56, 13 மே 2019 (UTC)[பதிலளி]
இதனை நிரலாக்கம் வழி செய்யலாம். பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாகவும், மன அலுப்பின் காரணமாகவும் தள்ளிப் போட்டு வருகிறேன். தற்போது விக்கிமூலத்தில் உள்ள நிரல்களை முழுமை செய்ய படித்து வருகிறேன். அவற்றை ஓரிரு மாதங்களில் முடித்து விடுவேன். இப்போதைக்கு, வழிமாற்றே போதும். பிற ஆக்கப்பணிகளில் இறங்குங்கள்.--த♥உழவன்(உரை)05:45, 13 மே 2019 (UTC)[பதிலளி]
@ஞா. ஸ்ரீதர்: நீங்களே மாற்றலாம். கட்டுரைகள் அதிகமில்லை. வழிமாற்றை வைத்திருங்கள். கூகிள் என எழுதுவதும் சரியானதே. பேச்சுப் பக்கத்தை வழிமாற்றில்லாமல் மாற்றலாம். கட்டுரைத் தலைப்புகளை மாற்றிய பின்னர், {{கூகுள்}} என்ற வார்ப்புருவில் உள்ள இணைப்புகளையும் சரியான தலைப்புகளுக்கு மாற்றுங்கள். பகுப்புகளை மாற்ற விரும்பினால் எனக்கு அறியத்தாருங்கள். தானியங்கி மூலம் மாற்றி விடலாம்.--Kanags\உரையாடுக07:59, 13 மே 2019 (UTC)[பதிலளி]
தங்களின் பகிர்வு மகிழ்ச்சியளிக்கிறது. மொழியியல் அடிப்படையில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் 5000சொற்களை, நடுவன்அரசின் ஆய்வு நிறுவனத்திடம் கேட்டுள்ளேன். அது வந்ததும் செயற்பட வேண்டியதுதான். எத்தகைய உதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தமிழில் இருந்து பல இந்திய மொழிகளுக்கான எனது எண்ணங்களை இவ்வருட இறுதிக்குள், ஓரிரு மொழிகளில் செய்து முடிப்பேன். இன்று இரவு உங்களுக்கு நேரம் இருப்பின், எனது எண்ணுக்கு (10-15நிமிடங்கள் போதும். அதிகம் அறுக்க மாட்டேன்!) அழைக்கவும். நீங்கள் தெரிவித்தவகையில் ஊக்கத்தொகை பெறுவது குறித்து நீங்களோ மற்றவரோ உதவ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். வணக்கம்--≈ த♥உழவன்( கூறுக ) 11:55, 2 மார்ச் 2014 (UTC)
வணக்கம்! முத்துப்பாண்டி பாண்டியன் எனும் பயனர், என்னுடைய பேச்சுப் பக்கத்தில் கீழேயுள்ள உதவியினைக் கேட்டுள்ளார். தயவுசெய்து உதவுங்கள்...
மா என்ற தமிழ் பக்கத்திற்க்கான ஆங்கில பக்கம் (Mangifera) என்று வறுகிறது. ஆனால் இப்பக்கத்தில் தமிழ் கொஞ்சம் விசயம்தான் உள்ளது. ஆனால் (Mango) என்று அமைந்துள்ள ஆங்கில பக்கத்திற்க்கு தமிழ் பக்கம் இல்லாமல் உள்ளது. மா என்று அமைந்துள்ள பக்கத்தை (Mango) என்ற பக்கத்தில் இணைக்கலாமா என்று முடிவு செய்யுங்கள்
கட்டுரைகள் ஒத்துப் போகாத காரணத்தால் தவறாகவே இணைக்கப் பட்டிருந்தது. மாங்கோ எனும் ஆங்கிலப் பக்கமும் மா எனும் தமிழ்ப் பக்கமும் ஒத்துப் போவதால் ஆங்கில இணைப்பை சரி செய்துள்ளேன்..., Mangifera என்பது மா உள்ள குடும்பம் ஆக இருக்கவேண்டும் நன்றி..--♥ ஆதவன் ♥。◕‿◕。♀ பேச்சு ♀ 03:52, 8 மார்ச் 2014 (UTC)
கருத்திட்டுள்ளேன். போச்சு, எது நடக்கக் கூடாதோ நடந்திருச்சு...., இங்குமா, என்ன கொடுமை சரவணா??, நான் ஆதவன். :) :) :) --♥ ஆதவன் ♥。◕‿◕。♀ பேச்சு ♀ 04:14, 8 மார்ச் 2014 (UTC)
பால்வெளி பொருட்களின் பட்டியல் கட்டுரையை கவனித்து உதவ வேண்டுகிறேன்.
--கி.மூர்த்தி 15:55, 18 அக்டோபர் 2014 (UTC)--கி.மூர்த்தி 15:55, 18 அக்டோபர் 2014 (UTC)
எனக்கும் தங்கள் கருத்து சரியென்றே தோன்றுகிறது. எனவே ஆங்கில உரைக்கு நிகரான தலைப்புக்கே கட்டுரையை வழிமாற்ற உதவ வேண்டுகிறேன்.--கி.மூர்த்தி 09:46, 20 அக்டோபர் 2014 (UTC)
பூஞ்சைகள் பழைய வகைப்பாட்டு முறைப்படியே தாவரங்களுடன் வகைப்படுத்தப்பட்டன. முற்காலத்து அறிவியலாளர்கள் பூஞ்சைகள் கலச்சுவரைக் கொண்டிருந்ததாலும், மண்ணில் வளர்ந்ததாலும் தாவரமென வகைப்படுத்தினார்கள். எனினும் தற்போது இரண்டுக்குமிடையே மிகப்பாரிய கூர்ர்பு இடைவெளி உள்ளது. எனவே பூஞ்சை ஒரு இராச்சியமாகவும் (இலங்கை வழக்கு- kingdom உக்கான தமிழக வழக்கு என்னெவென்று தெரியாது) தாவரம் தனி இராச்சியமாகவும் உள்ளது. பிரதான வித்தியாசங்கள்:-
பூஞ்சையால் ஒளித்தொகுப்பு செய்ய முடியாது. தாவரங்களால் முடியும். (ஒளித்தொகுப்பு புரியாத தாவரங்களிலும் பச்சையுருமணியின் (பசுங்கனிகம்) முன்னோடியான Plastid (உருமணிகள்) உள்ளன.
அனைத்து தாவரங்களினதும் கலச்சுவர் பிரதான செல்லுலோசால் ஆனது. அனைத்து பூஞ்சைகளினதும் கலச்சுவர் கைட்டினால் ஆனது.
உங்கள் பக்கத்தில், நான் கேள்வியெழுப்பியதால், அனைவரும் போலவே உங்கள் பக்கத்திலேயே இனி பதிலளிக்க வேண்டுகிறேன். எங்கு கேள்வி எழுப்பப்படுகிறதோ, அங்கேயே பதில் எழுதினால், பின்னாளில் படிக்கும் போது கோர்வையாக இருக்கும். மற்றவருக்கும் பயனளிக்கும். நாம் இனி அத்தகைய வழமையைப் பின்பற்றுவோம்.
//பழைய வகைப்பாட்டு முறைப்படியே தாவரங்களுடன் வகைப்படுத்தப்பட்டன. // என்ற உங்களின் தொடக்கமே, அற்புதமான பதில். பின்னர் அளித்த விரிவான விளக்கங்களுக்கு நன்றி. பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தே மொழிபெயர்க்கப்படுகின்றன. அங்கே நீங்கள் கூறியபடி இன்னும் பழமையான வகைப்பாட்டியலையே பின்பற்றுகின்றனர். அதை ஒட்டி மொழிபெயர்க்கப்படும் பல மொழி கட்டுரைகள், அந்த பழைமையான நடைமுறையையே பின்பற்றுகின்றனர் என்பது வேதனையே. இதை மாற்ற எண்ணி, ஆங்கில விக்கிப்பீடியாவில் எனது எண்ணங்களைக் கூறினேன். அதனை மாற்ற வேண்டியது அவர்களது பங்களிப்பாக இருக்கவேண்டும் என்பதால், அங்கு தொடரவில்லை. நம் விக்கிப்பீடியாவில் உரையாடி, நடைமுறை படுத்த எண்ணுகிறேன். நாம் இங்கு உயிரியல் வகைப்பாட்டியலை வளர்த்தெடுத்து, பின்பு தாவரவியல் வகைப்பாட்டினை தெளிவுப்படுத்தி, அனைத்துக் கட்டுரைகளிலும் இருக்கும் வகைப்பாட்டியல் வார்ப்புருத் தொடங்கி மாற்ற வேண்டும். எனவே, நேரம் கிடைக்கும் போது, விரிவாக்குங்கள். நானும் உங்களுடன் இணைந்து பங்களிப்பேன். நான் இப்பொழுது APGIII குறித்தக் குறிப்புகளை எடுக்கிறேன்.ஏனெனில், அது பல இலட்சம் தாவரங்களுக்குப் பொருந்தும். இது குறித்த உங்களது எண்ணங்களை, இவ்விடத்தில் கூறுக. மற்றவை உங்கள் உரை கண்டு.வணக்கம்.--≈ த♥உழவன்( கூறுக )02:18, 6 மே 2014 (UTC)[பதிலளி]
நான் தங்கள் கையெழுத்திலுள்ள கூறுக என்பதைச் சொடுக்கி விட்டேன் அதனாலேயே இங்கு வந்து விட்டது. இயலுமானவரை தங்களைப் போல் பங்களிப்பேன். எனினும் ஆழமான தாவரவியல் வகைப்பாடு எனக்குத் தெரியாது. அடிப்படை உயிரியலில் என் பங்களிப்பு அதிகமாக இருக்கும். ஆழமான வகைப்பாடு இன்னும் எங்கள் பாடசாலையில் பயிற்றுவிக்கப்படவில்லை. சிறிது காலம் பொறுக்க வேண்டும். இன்னொரு பிரச்சினை உள்ளது: தாங்கள் காழ்க்கலன் என்ற கட்டுரையை உருவாக்கி உள்ளீர்கள். அத்தலைப்புடன் எனக்கு சிறிது முறன்பாடு உள்ளது. அதை அதன் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கிறேன். தங்கள் தன்னலமற்ற சேவைகள் தொடர வாழ்த்துக்கள். வணக்கம்.--G.Kiruthikan (பேச்சு) 09:59, 6 மே 2014 (UTC)[பதிலளி]
காலம் தாழ்ந்த பதிலுக்கு பொறுத்தருள்க! இங்குள்ள அனைவரும் தன்னலமற்ற சேவைகள் செய்பவரே. தலைப்பிற்குரியத் தமிழ்சொல்லை மாற்றி, கட்டுரையை மேம்படுத்த உதவுக. விக்சனரிக்குரிய வசதிகளையும், 25000 தமிழ்ச்சொற்களைச் சேர்ப்பதற்கான முயற்சியிலும், முனைப்பாக ஈடுபட்டுள்ளேன். அதற்குரிய நிரலாக்கத்தை படிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. என்னால்10-15 நிமிடங்களே கணினித்திரையைக் காண இயலும். இன்னும் ஒரு வருடத்திற்குள், என் கண்களைத் தேற்ற வேண்டிய நிலையில் உள்ளேன். பின்னர் கட்டுரையை உருவாக்கும் போது, அதுபற்றிய எனது மாறுபட்ட எண்ணங்களை, உரிய கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கிறேன். பொதுவாகத் தமிழகத்தில் பயன்படும் தாவரவியல் சொற்களும், இலங்கை வழக்கும் வேறுபடுகின்றன. சுருக்கமாகக் கூறுவதென்றால், இலங்கை வழக்கில் சமசுகிருதச் சொற்களின் ஆளுமையும், தமிழகச் சொற்களில் ஆங்கில ஆளுமையும் அதிகம் இருக்கிறது. காழ் என்பதை, விக்சனரியில் விரிவாக்கி வருகிறேன். மீண்டும் சந்திப்போம். இலங்கை வழக்கை அறிய, மின்னூலுக்குரிய பக்கத்தொடுப்புக்கு நன்றி. வணக்கம்.--≈ த♥உழவன்( கூறுக )17:26, 9 மே 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் Info-farmer! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
வணக்கம் Info-farmer/பயனர் பேச்சு:தகவலுழவன்-பரண்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.