பயனர் பேச்சு:VasuVR
வாருங்கள், VasuVR!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் .
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Terrance \பேச்சு 07:15, 8 செப்டெம்பர் 2008 (UTC)
கருநாடக இசை
[தொகு]கருநாடக இசையில் தங்கள் ஆர்வத்தைக் கண்டு மெச்சுகிறேன். நீங்கள் அவ்வப்போது வந்து இராகங்கள் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்துவது கண்டு மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல இராகங்களின் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். தொடர்ந்து பங்களிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 07:57, 9 அக்டோபர் 2008 (UTC)
- நன்றி. என்னால் இயன்ற வரயில் தொடர்ன்து பங்களிக்க முயலுவேன். வாசு 06:03, 10 அக்டோபர் 2008 (UTC)
வாசு, கொமன்சில் உள்ள ஆங்கில படிமத்தை நீங்கள் தான் ஏற்றினீர்கள் என்பதை பின்னரேயே தெரிந்து கொண்டேன். இராகங்களின் படிமங்களைத் தமிழில் தயாரிக்க முடியுமானால் தயவு செய்து தமிழிலேயே படியேற்றுங்கள். உங்கள் பங்களிப்புகள் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றன.--Kanags \பேச்சு 10:07, 16 அக்டோபர் 2008 (UTC)
வாசு நீங்கள் ஹேமவதி கட்டுரையில் விசைப்பலகைப் படம் அருமையாக உள்ளது. இதே போல முக்கியமான ராகங்களுக்கேனும் இட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் விசைப்பலகையில் ரி2 முதலான வேறுபாடுகளைக் காட்டுவதும் தேவையாக இருக்கும். விசைப்பலகையில் கட்டைகளும் தவறாக உள்ளது என்று நினைக்கிறேன். ஹேமவதியின் ஏறுவரிசை, இறங்கு வரிசை கீழ்க்காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம2 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம2 க2 ரி2 ஸ |
படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டைகள் சரியாக பொருந்தி வரவில்லை.--செல்வா 16:07, 21 நவம்பர் 2008 (UTC)
- நீங்கள் தவறாக கணக்கு செய்கிறீர்கள். C (ஒரு கட்டை) யிலிருந்து கணக்கிட்டால், இவையே சரியான சுரங்கள்.
- இந்த பக்கத்தில் சுரங்கள் அருகே காணப்படுவதால் இந்த படிமங்களில் வேறுபாடுகளைக் காட்ட தேவையில்லை. அது மட்டும் இல்லாமல், வேறுபாடுகளைக் காட்ட இடம் குறைவாக இருக்கிறது.
- அனைத்து இராகங்களின் படிமங்களும் செய்வதுதான் என் குறிக்கோள். முன்பே செய்யப்பட்ட படிமங்கள் GIF வகையில் செய்தேன் ஆனால் இப்பொழுது SVG வகையில் செய்ய போகிரேன். மற்ற பக்கங்களை காணலாம் (முக்கியமாக, சுத்த மத்திம மேளகர்த்தா இராகங்கள்). வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 16:32, 21 நவம்பர் 2008 (UTC)
ஆம், நான் தவறாக ஏனோ எழுதிவிட்டேன். ஹேமவதியில் வரும் காந்தாரமும் க:ரஃகரப்ரியாவில் வரும் 'காந்தாரமும் ஒன்றுதான். ஆனால் ஏனோ அதுதான் க2 என்று குறிக்கப்பட்டுளது என்பதனை நினைவில் கொள்ள மறந்துவிட்டேன். நான் வேங்கடமகியின் முறையை (16 சுரம்) ஏற்றுக்கொள்ளாதவன் (நான் 12 அல்லது 22ஐ ஏற்பவன்) எனவே சங்கராபரணத்தில் வரும் காந்தாரத்தை க3 என்று குறிப்பிடும் வழக்கத்தை சில நேரங்களில் மறந்துவிடுவதுண்டு. விவாதி இராகங்கள் பற்றியும், இராகங்களை மத்திம-பிரதி மத்திம இராகங்கள் என்று பிரிப்பது பற்றியும கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளவன் (மத்திமம்-பிரதி மத்திமம் ஆகிய இரண்டும் வரலாம். மேளகர்த்தா 72 என்பது தவறு என்பவன்). நீங்கள் ஹேமவதி இராகத்தில் இட்டுள்ள படமும், ஏறு-இறங்கு வரிசை அட்டவணையில் குறித்துள்ள சுரங்களும் சரியாகத்தான் உள்ளன. என் குழப்பத்துக்கு மன்னிக்கவும்.--செல்வா 18:56, 21 நவம்பர் 2008 (UTC)
நான் தவறுதலாக இரண்டுசுழி னகரத்துடன் மாற்றிவிட்டேன், மன்னிக்கவும். திருத்தியமைக்கு நன்றி. படம் ஒன்றைச் சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும். --செல்வா 15:13, 16 டிசம்பர் 2008 (UTC)
- மன்னிக்கவும். நான் தவறுதலாக இரண்டுசுழி னகரத்துடன் தொகுத்தேன். :) வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 16:38, 16 டிசம்பர் 2008 (UTC)
- ஓ! அப்படியா! அவசரத்தில் அதைக்கூட நான் பார்க்க மறந்துவிட்டேன்! நான் தொகுப்பு சுருக்கத்தில் விட்ட பிழைகளைப் பார்த்து இம்முடிவுக்கு வந்திருக்க வேண்டும். எப்படியோ சரி செய்தாயிற்று :) --செல்வா 16:52, 16 டிசம்பர் 2008 (UTC)
- ஆங்கில விக்கியிலிருந்த படத்தை கருவி கொண்டு பொதுக்கோப்பகத்துக்கு நகர்த்தி, பின் ஆங்கில விக்கி தகவல்சட்டத்தை மொழிபெயர்த்து இங்கு சேர்த்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 16:46, 16 டிசம்பர் 2008 (UTC)
- நன்றி சுந்தர் :)
கட்டை பற்றிய ஒரு குறிப்பு
[தொகு]பேச்சு:மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு என்னும் பக்கத்தில் கட்டை என்னும் சொல்லாட்சி பற்றிய ஒரு குறிப்பை பதிவு செய்துள்ளேன். பார்க்கவும்.--செல்வா 16:33, 21 டிசம்பர் 2008 (UTC)
- கண்டேன் கண்டுகொன்டேன். நன்றி. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 16:40, 21 டிசம்பர் 2008 (UTC)
2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்
[தொகு]வணக்கம் வாசு:
கருநாடக இசை தொடர்பான கட்டுரைகள் விரிவாக்கம் நன்றாக அமைந்து வருகிறது. நேரம் கிடைக்கும் பொழுது அந்த கட்டுரையையும் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும். நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review
அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
- தற்போது சிறு நேரம் கிடைக்கிறது. ஆதலால் ஆங்கிலத்திலும் தமிழிலும் சில தொகுப்புகள் செய்ய முயல்கிறது. 2009இல் கருநாடக இசை சார்ந்த பக்கங்களை எழுத ஆசை. அதற்கு மேலாக இப்பொழுது ஒன்றும் மனதில் தோன்றவில்லை. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 17:06, 24 டிசம்பர் 2008 (UTC)
- நன்றி. உங்கள் கருத்துக்கள அறிக்கை பேச்சுப் பக்கத்தில் சேக்கிறேன்.
பாராட்டுகள்
[தொகு]நீங்கள் கருநாடக இசை பற்றிய கட்டுரைகள் எழுதி தமிழ் விக்கிப்பீடியாவுக்கும், ஆங்கிலம் முதலான பிற விக்கிப்பீடியாக்களுக்கும் தரும் ஆக்கங்களைப் பாராட்டுகிறேன். நானும் தமிழிசை, வட்டப்பாலை, சதுரப்பாலை, தமிழிசையில் இருந்த கிரகபேதம், உள்ளிசை என்னும் கமகம், தேவாரப் பண்ணிசை, சங்கீத ரத்னாகரம், ராமாமாத்தியாவின் தேசி இசை, பரத முனிவரின் நூலில் உள்ள ஜாதி, மார்க இசைகள், கமகம், தனி ஆவர்த்தனம், வயலின், வீணை, பல்வேறு மத்தள கொட்டு முழக்கிசைகள் பற்றியெல்லாம், இசை பற்றிய குறிப்புகள் உள்ள கல்வெட்டுகள் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கின்றேன், என்று நிறைவேறுமோ?! நீங்கள் இசை பற்றி எழுதுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கின்றது.--செல்வா 16:12, 24 டிசம்பர் 2008 (UTC)
- நன்றி. 2009இல் எனக்கும் அதே ஆசை என்று மேலே கூறியுள்ளேன். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 17:06, 24 டிசம்பர் 2008 (UTC)
இராகம் பக்கம்
[தொகு]வாசு நீங்கள் நீக்கியிருந்த வெளியிணைப்பை மீண்டும் சேர்த்திருக்கின்றேன். அது தமிழில் உள்ள பயனுடைய வெளி இணைப்பு. அவர் ('சீவா) இசை பற்றிய துறைகளில் இங்கு விக்கியில் பங்களித்தவர் மட்டுமல்லாமல் பதிவுலகிலும் பங்களிக்கிறார். நீங்கள் அந்த வெளியிணைப்பை நீக்கியதற்குக் காரணம் ஏதும் தராததால், ஏன் நீக்கினீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. அதனை நீங்கள் 'சீவா அவர் தன்பக்கத்து விளம்பரமாக தந்திருக்கலாம் என நினைத்திருக்கலாமோ என்று எண்ணுகிறேன். பயனுடைய வெளியிணைப்பு என்பதாலேயே மீண்டும் இணைத்துள்ளேன். தவறாக அருள்கூர்ந்து நினைக்க வேண்டாம். நன்றி.--செல்வா 15:03, 6 ஜனவரி 2009 (UTC)
- ஆங்கில விகிபீடியாவில் blogspot.com சேர்ப்பதில்லை என்று உங்களுக்கு தெறியும் என நினைக்கிறேன்.
- blog இங்கே இணைக்கக் கூடாது என்பதே என் (பிடி?)வாதம். :-)
- தன் சொந்த blog இணயதளங்களை சேற்ப்பதும் நல்ல வழக்கம் அல்ல என்றும் அறிவீர்.
- அவர் அதே விடையங்களை மாற்றி இங்கே தொகுத்திருக்கலாம். அதுவே சறியான முறை என்று இப்பவும் நான் நினைக்கிறேன்.
- வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 16:46, 6 ஜனவரி 2009 (UTC)
- நான் கொடுத்த சுருக்கத்திலிருந்து blogspot.c தவிற எல்லாவற்றையும் விகிபீடியா விழுங்கி விட்டது. அங்கே விளக்கம் சுருக்கமாக கொடுத்திறுந்தேன். :-( வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 16:59, 6 ஜனவரி 2009 (UTC)
- மறுமொழிக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவில் தலைப்புக்கு பொருத்தமாக இருந்தால் வலைப்பதிவுகளுக்கு இணைப்பு தரலாம். தமிழில் தரமான முதல்நூல்கள், வழிநூல்கள் எல்லாத் தலைப்புகளிலும் இல்லை. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பக்கங்களாகவும் தமிழில் இருப்பது மிகக்குறைவு (இல்லை என்றே சொல்லலாம்). ஆகவே ஆங்கில விக்கிப்பீடியாவில் பின்பற்றும் முறையை இங்கு கைப்பிடிப்பது கடினம், தேவையும் இல்லை. அடுத்ததாக, அருள்கூர்ந்து விக்கிப்பீடியா என்று ககர, பகர ஒற்று (க், ப்) சேர்த்து எழுத வேண்டுகிறேன் (பேச்சுப் பக்கமாயினும்). ஏனெனில் எங்கும் பிழையின்றி கூடியவாறு எழுதுதல் நல்லது. "விகிபீடியா" என்று எழுதினால் தமிழில் Vigibeediyaa என்றுதான் ஒலிக்க வேண்டும் (ஏதோ சிகரெட் பீடி போல :)). தமிழில் கி என்றும் பி என்றும் வல்லினமாக சொல்லிடையே ஒலிக்க வேண்டுமானால் இனமான வல்லின ஒற்று (புள்ளி வைத்த வல்லின எழுத்து) வருதல் வேண்டும். இவற்றை நட்புடனேயே கூறுகின்றேன். எம்மொழியாயினும், அம்மொழிமரபைப் போற்றி ஆள்வது நல்லது என்று நினைக்கின்றேன். --செல்வா 18:01, 6 ஜனவரி 2009 (UTC)
- தொகுப்பில் சிறு தவறுதான் விகிபீடியா என்று எழுதியது (typing mistake). இதைபோல் தவறுகள் வரும். பிழை இல்லாமல் எழுததான் எல்லோருக்கும் ஆசை என்று நம்புகிறேன். கவனித்தால் மாற்றலாம். பேச்சுப்பக்கமாயினும் மாற்றலாம். கட்டுரையாக இருந்தால் நிச்சயமாக மாற்ற வேண்டும். Typing mistake, ஆங்கிலேயர்களுக்கே ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் வருகின்றன அல்லவா. எப்பொழுதும் இதை காணலாம் என்று நம்புகிறேன்.
- blogspot.com பற்றி என்னுடைய வாதம் தொடரும். ஒரு மாற்றமும் கிடையாது. ஆனால் யாரேனும் இணயதளங்களை திரும்பவும் இணைத்தால், நான் விட்டு விடுவேன்.
- அப்பக்கத்தை இராகம் தானம் பல்லவி என்ற பக்கத்தில் இணைத்தால் சரி. இராகம் பக்கத்தில் எதற்கு? அவர் அதே விடையங்களை மாற்றி இங்கே தொகுத்திருக்கலாம். அதுவே சறியான முறை என்று இப்பவும் நான் நினைக்கிறேன்.
- வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 05:12, 7 ஜனவரி 2009 (UTC)
மிக்க நன்றி வாசு. தட்டச்சுப் பிழையெனில் திருத்திக்கொள்ளலாம். பலர் காபி (kaabi) , ஓபன் (Open)என்று எழுதுகிறார்கள் (இவற்றை காப்பி, ஓப்பனென்று எழுதுதல் வேண்டும்). பிரச்சாரம் என்பதை ப்ரசாரம் என்று எழுதுவதைப் பார்த்திருக்கின்றேன் (ப்ரச்சாரம் என்றாவது இருக்க வேண்டும், முதல் எழுத்து மெய்யெழுத்தாக இருப்பது தவறு என்பதை விலக்கிப் பார்த்தாலும்). அதனால்தான் எழுதினேன். தட்டச்சுப் பிழையை நானும் நிறைய விடுபவன்தான். பார்க்கும் பொழுதெல்லாம் நான் விட்ட பிழையைத் திருத்திக்கொண்டேதான் வருகிறேன். வலைப்பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்து நல்லதே, என்றாலும் இன்றைய சூழலில், கெடுதியைவிட அவை நன்மையைச் செய்வதாகவே நினைக்கின்றேன். உங்கள் கருத்துகளைத் தயங்காமல் கூறுங்கள். இராகம் தானம் பல்லவி பக்கத்தில் இணைப்பு தருவது சரியாக இருக்கும் என்று நீங்கள் சொல்வது சரியே. --செல்வா 18:09, 7 ஜனவரி 2009 (UTC)
- வாசு, பிளாகுசுபாட்டு தொடர்பில் உங்கள் கருத்தின் பின்னுள்ள காரணம் புரிகிறது. ஆங்கில விக்கியில் நானும் அதையொத்த நிலைப்பாட்டையே கொண்டுள்ளேன். ஆனால், தமிழிணையத்தில் தரமான உள்ளடக்கங்களைக் கொண்ட தளங்கள் இப்போதைக்கு அரிதாக உள்ளதால் இதில் இசைவு கொண்டுள்ளோம். சீம்பால் போன்ற கட்டுரைகளைப் பார்க்கலாம். தவிர, இவ்விணைப்புகள் 'nofollow' பண்பைக் கொண்டுள்ளதால் தேடுபொறிகளில் இந்த பிளாகுகளுக்கு எந்த கூடுதல் முன்னுரிமையும் நம்மால் கிடைக்காது. -- சுந்தர் \பேச்சு 05:44, 8 ஜனவரி 2009 (UTC)
- coffee, open போன்ற சொற்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்கள் கண்டுபிடிக்கவில்லையா? இன்னும் எவ்வளவு நாளைக்கு நாம் காப்பி, ஓப்பன் என்றெழுதிக்கொண்டிருக்கப் போகிறோம்:-)--Kanags \பேச்சு 09:31, 8 ஜனவரி 2009 (UTC)
- என் கருத்து, சொல்லைப் பற்றி இல்லை, ஒலிப்பைப் பற்றி. காப்பி என்பது தென் எத்தியோப்பியாவில் உள்ள ஓர் இடத்தின் பெயரில் (கா'வ்'வா, Kaffa) இருந்து பெற்றது. ஆகவே காப்பி என்று அழைப்பதில் தவறில்லை. இபூன்னீர் என்றும் கூறலாம் :) ஏன் எனில் அம்ஃகாரா மொழியில் 'பூன் என்னும் செடியில் விளையும் கொட்டையில் இருந்து பெறும் வடிநீர். பழுநீர் என்றும் கூறலாம். தேநீரூம் பழுப்பு நிறமாக இருப்பினும், சிறப்பாக காப்பியை பழுநீர் எனலாம். கரி என்பதற்கு பல பொருள்கள் இருப்பது போல. இடத்தின் பெயரால் ஒன்றுக்கு பெயர் சூட்டப்படுவதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இன்று சென்னை என்று அழைக்கப்பட்டாலும், மதராசாக இருந்தபொழுது பெற்ற பெயரான மதராசுக் கட்டம்(Madras checks), மதராசு வெளுத்தசாயம் (bleeding Madras), மதராசுத் தளம் அல்லது மதராசு மேற்தளம் (Madras ceiling) என்பன போன்று இடம் பற்றி ஏற்படும் பெயர்கள். அவற்றை அப்படியே சொல்வதில் (மொழியில் இயல்பு படி) தவறில்லை. ஆனால் அப்படித்தான் சொல்ல வேண்டும் என்பதொன்றும் இல்லை. --செல்வா 13:17, 8 ஜனவரி 2009 (UTC)
* இது ஒரு பொது பேச்சு அறை போல் அமைந்து விடுமோ? * (ந்கைச்சுவையாகத்தான் கூறுகிறேன்) வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:48, 8 ஜனவரி 2009 (UTC)
இசைத் தமிழ்
[தொகு]- பி.பி.சி. தமிழோசை இணையத் தளப்பக்கத்தில் பன்னாட்டு அறிஞர்கள் இசை குறித்து பகிர்ந்துள்ளனர். இதனை தங்களுக்கும், அறிமுகம் செய்கிறேன். இதன் மூலம் தங்களது இசையறிவு அகலப்படுமென நம்புகிறேன். தங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு, இதனை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.-->த* உழவன் 06:57, 24 ஆகஸ்ட் 2009 (UTC){தொடர்புக்கு..}
2010 செயற்திட்டம்
[தொகு]வணக்கம் வாசு:
நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களை இங்கு காண முடிகிறது. மகிழ்ச்சி.
- விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
- விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
2010 செயற்திட்டம் தொடர்பான கருத்துக்களை மேலே உள்ள இணைப்பில் பதியலாம். நன்றி. --Natkeeran 03:14, 19 டிசம்பர் 2009 (UTC)
- நன்றி. இந்த வருடம் நான் எதிற்பார்த்த அளவுக்கு ஈடுபாடு இல்லை. நேரம் வேலைக்கும் வீட்டிற்க்கும் செலவாகிவிட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் சில தொகுப்புகள் செய்ய முயல்கிறது. 2010இல் கருநாடக இசை சார்ந்த பக்கங்களை எழுத ஆசை. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 15:03, 20 டிசம்பர் 2009 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
[தொகு]விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:47, 18 பெப்ரவரி 2010 (UTC)
மீண்டும் வருக
[தொகு]நீண்ட நாட்களுக்குப் பின்பு நீங்கள் மீண்டும் தமிழ் விக்கியில் பங்களிப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி. --சிவக்குமார் \பேச்சு 09:02, 1 திசம்பர் 2011 (UTC)
- நன்றி. இந்த மாதம் சில பொழுது செய்யமுடியும் என்று நினைக்கிண்றேன். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 09:37, 1 திசம்பர் 2011 (UTC)
பதக்கம்
[தொகு]சிறப்புப் பதக்கம் | ||
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் வந்திருக்கும் உங்களது பங்களிப்புகள் பழைய வேகத்திலேயே உள்ளது கண்டு மகிழ்கிறேன். :) இராகங்கள் குறித்து உங்களது பங்களிப்பு அருமை. உங்களுக்கு இந்தச் சிறப்புப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். :) பணி சிறக்க வாழ்த்துகள். சூர்யபிரகாசு உரையாடுக... 09:57, 20 திசம்பர் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- மிக்க நன்றி, சூர்யபிரகாசு அவர்களே. என்னால் முடிந்தவறை சில தொகுப்புகள் சேற்க்கிறேன். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 11:21, 20 திசம்பர் 2011 (UTC)
கருநாடக இசை
[தொகு]வணக்கம் வாசு, கருநாடக இசை கட்டுரையில் கண்னன்கார்த்திக் என்பவர் எழுதியவை அனைத்தும் கூகுள் தானியங்கி மொழிபெயர்ப்பியினால் தானியங்கியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளவை. தானியங்கி மொழிபெயர்ப்புகள் தமிழ்விக்கியில் ஊக்குவிக்கப்படுவதில்லை. அவர் எழுதிய பகுதியை நீங்கள் திருத்தியமைப்பீர்கள் என்றால் அவற்றை நீங்களே மீள்விக்கலாம் அல்லது கூறுங்கள் நானே மீள்வித்துத் தருகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:06, 12 சனவரி 2012 (UTC)
- நன்றி. இப்போது புரிந்துவிட்டது. நான் அந்த கட்டுரையை விரிவாக்க ஆசை படுகிறேன். ஆனால் சிறு நாட்க்ள் ஆகும் என நம்புகிறேன். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 07:26, 12 சனவரி 2012 (UTC)
சிறு மாற்றங்கள்
[தொகு]பகுப்பு இன்னும் பிற சிறிய மாற்றங்களை 'சுருக்கம்' பெட்டிக்கு கீழே இருக்கும் 'இது ஒரு சிறு தொகுப்பு' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன். இது அண்மைய மாற்றங்களில் பெரிய மாற்றங்களையும் பின்னுக்கு தள்ளுவதை தவிர்க்கும். நன்றி -- மாகிர் 15:29, 13 சனவரி 2012 (UTC)
- இதை கடைபிடிக்க முயல்வேன். நன்றி. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 15:35, 13 சனவரி 2012 (UTC)
நன்றி வாசு, புதிய பகுப்பு, கட்டுரைகளில் 'இது ஒரு சிறு தொகுப்பு' கிடையாது என்பதை அறிக. -- மாகிர் 03:38, 14 சனவரி 2012 (UTC)
Hotcat கருவி
[தொகு]வாசு, பகுப்புகளை கட்டுரைகளில் இணைக்கவும் நீக்கவும் இலகுவாக்க Hotcat என்ற கருவி உள்ளது. இக்கருவியை இணைக்க உங்கள் விருப்பத் தேர்வுகளில் கருவிகள் என்ற பகுதியில் "ஹாட்கேட், எளிதாக ஒரு பக்கத்தில் பகுப்புகளைச் சேர்க்க / நீக்க / மாற்ற உதவும் ஒரு கருவியாகும்" என்பதைத் தேர்ந்தெடுத்து சேமியுங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 11:24, 15 சனவரி 2012 (UTC)
- விக்கிப்பீடியா:ஹாட்கேட் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:40, 15 சனவரி 2012 (UTC)
- இந்த ஹாட்கேட் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறது என்பது தெரியாது. ஆங்கிலத்தில் கூட நான் இதை பயன்படுத்தியதில்லை. இனி உபயோகிக்க முயல்வேன். ஆனால் நான் செய்யவந்த மாற்றங்கள் முடிந்ததோ என்று எண்ணுகிறேன். வழி காட்டியதற்க்கு நன்றி. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 11:52, 15 சனவரி 2012 (UTC)
நன்றிகள்!
[தொகு]'சங்கீத கலாநிதி விருது' எனும் கட்டுரையில் விரிவாக்கப் பணிகளை செய்து எனக்கு உதவியமைக்கு மிக்க நன்றி! உங்களின் உதவி தொடர்ந்து தேவை. --Selvasivagurunathan m 19:20, 30 சனவரி 2012 (UTC)
- நன்றி. நான் செய்தது என்னவோ சிறிது என்று கருதுகிறேன். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 03:49, 31 சனவரி 2012 (UTC)
கருநாடக இசைக் கலைஞர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் விரிவாக்கத்தை, முழு வீச்சில் செய்து முடித்த உங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுகின்றன!--Selvasivagurunathan m 07:28, 6 பெப்ரவரி 2012 (UTC)
பறவைகள் படிமங்கள்
[தொகு]அருமையான புகைப்படங்களை (வேடந்தாங்கல்-கட்டுரை) சேர்த்துள்ளீர். பணி மேலும் தொடரட்டும்.--பரிதிமதி 16:08, 4 பெப்ரவரி 2012 (UTC)
- பாராட்டுகளுக்கு நன்றி. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 03:46, 5 பெப்ரவரி 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்
[தொகு]வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/வாசு பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி --இரவி 11:57, 3 சனவரி 2012 (UTC)
- "வாசு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பை முடித்தபின் பிட்ஸ் பிலானியில் (Bits, Pilani) பட்டப் படிப்பை முடித்தார். சென்னையில் வசிக்கும் இவர் கருநாடக இசை மற்றும் படப்பிடிப்பை சேர்ந்த பங்களிப்புகள் அளித்து வருகிறார்."
- எனக்கு இதன் மேல் எதுவும் எழுத தோன்றவில்லை. என் பயனர் பக்கங்களிலிருந்து (VasuvR in English) ஏதாவது சேர்க்கலாமா என்று யோசனை கூறவும். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 10:56, 6 பெப்ரவரி 2012 (UTC)
- எந்த ஆண்டிலிருந்து பங்களிக்கத் தொடங்கினீர்கள், காமன்சில் நீங்கள் சேர்த்துள்ள கோயில், பறாவை, கருநாடக இசைப் படங்கள் போன்றவற்றையும் செர்க்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:23, 6 பெப்ரவரி 2012 (UTC)
- "வாசு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பை முடித்தபின் பிட்ஸ், பிலானியில் (Bits, Pilani) பட்டப் படிப்பை முடித்தார். சென்னையில் வசிக்கும் இவர் 2008டிலிருந்து விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். இவர் கருநாடக இசை மற்றும் படப்பிடிப்பை சேர்ந்த பங்களிப்புகள் அளித்து வருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் மேளகர்த்தா இராகங்களின் படிமங்களையும் ஜன்னிய இராகங்களின் படிமங்களையும் சேர்த்திருக்கிறார். இதைத் தவிற, இவரது புகைப்படங்களை விக்கிப்பீடியாவிர்க்காக இங்கே சேர்த்துள்ளார்."
- மேல் கொடுத்த வாக்கியங்களை பிழை திருத்த வேண்டுகோல். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 04:49, 7 பெப்ரவரி 2012 (UTC)
- மேல் கொடுத்த வாக்கியங்களை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/வாசு பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். நன்றி. --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 12:50, 7 பெப்ரவரி 2012 (UTC)
வேண்டுகோளை ஏற்று உங்கள் அறிமுகத்தை இட்டதற்கு மகிழ்கிறேன். நீங்கள் விரும்பக்கூடிய வகையில் உரை திருத்தியதில் நிறைவே :) --இரவி 16:33, 7 பெப்ரவரி 2012 (UTC)
மேற்கோள்/உசாத்துணை இல்லா கட்டுரைகள்
[தொகு]வாசு, நீங்கள் எழுதிவரும் இசை தொடர்பான கட்டுரைகளில் தயவுகூர்ந்து மேற்கோள்களை சேர்க்கவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் பின்னாளில் நீக்கப்படக்கூடும் என்பதை அறிவீர்கள்தானே. விக்கியில் கட்டுரைகளை சரிபார்ப்பதற்கு மேற்கோள்கள் அவசியம் என்பதை அறியவும். நன்றி -- மாகிர் 10:20, 9 பெப்ரவரி 2012 (UTC)
- நான் ஆங்கில மேற்கோள் சேர்க்க முடியும். இன்னும் சில நாட்களில் சேர்க்க தொடங்க முயல்கிறேன். ஆனால் ஒன்று கண்டேன். எனக்கு முன்பு சிலர் 300க்கு மேற்பட்ட ஜன்னிய இராகம் கட்டுரைகள் இரண்டிரண்டு வரிகளில் சேர்த்துள்ளனர். சில இராகங்களை நான் கேள்விப்பட்டதே இல்லை! என்னிடம் இருக்கும் புத்தகங்களிலிருந்து சேர்க்க தொடங்க முயல்கிறேன். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 11:31, 9 பெப்ரவரி 2012 (UTC)
//மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் பின்னாளில் நீக்கப்படக்கூடும் என்பதை அறிவீர்கள்தானே.// தமிழ்ச் சூழலில் பலவற்றுக்கும் மேற்கோள் தருவதில் சிக்கல் உள்ளது. எனவே, மேற்கோள் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக கட்டுரைகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே. எனினும், மேற்கோள் தருவதன் மூலம் கட்டுரைகளின் நம்பகத்தன்மையைக் கூட்டலாம்--இரவி 11:34, 9 பெப்ரவரி 2012 (UTC)
- உசாத்துணைகள் - பிழை திருத்த வேண்டுகோல். பின்னர் நான் மற்ற கட்டுரைகளில் உசாத்துணைகள் சேர்க்க ஆர்வம். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:19, 9 பெப்ரவரி 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம்
[தொகு]வாசு, உங்கள் முதற்பக்க அறிமுகத்தைக் கண்டு மகிழ்ந்தேன். நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அளித்துவரும் பங்களிப்புகள் பயனுடையவை. உங்கள் பணிகள் தொடர நல்வாழ்த்துகள்! எனக்கும் இசையில் மிகுந்த ஆர்வம் உண்டு. பற்பல நூல்களும் செய்திகளும் இருந்தாலும், இசை இலக்கணங்கள், வரலாறு முதலியவை பற்றி அறிந்திருந்தாலும் உங்களுடன் சேர்ந்து ஆக்கம் தர இயலாமலேயே இருந்து வருகின்றது. வருங்காலத்தில் இயன்றளவு உதவுவேன். மேலே நண்பர்கள் சொன்னவாறு மேற்கோள்கள் தருவது நல்ல வழிமுறை. என்னிடம் உள்ள தரவுகளில் இருந்தும் மேற்கோள்கள் சேர்க்கவும் உதவுவேன். தமிழர்களின் இலக்கணமும், நுணுக்கமும் நிறைந்த இசை மரபு, குறிப்பாக முறைமை சார்ந்தது, உலகிலேயே மிகத் தொன்மையானது (இது உண்மையான புகழ்!). --செல்வா 20:43, 13 பெப்ரவரி 2012 (UTC)
- மிக்க நன்றி. என்னால் இயன்ற வரயில் தொடர்ன்து பங்களிக்க முயல்வேன். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 07:01, 14 பெப்ரவரி 2012 (UTC)
- வாசு, உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. விக்கியில் உங்கள் பங்களிப்புத் தொடர வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 19:48, 15 பெப்ரவரி 2012 (UTC)
- மிக்க நன்றி. --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 02:32, 16 பெப்ரவரி 2012 (UTC)
உதவி தேவை!
[தொகு]கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில்... இறுதியாகப் பாடப்படும் 'மங்களம்' பாடலின் text தந்து உதவவும். முடிந்தால் அர்த்தமும்! நான் எழுதிய 'மங்களம் பாடுதல்' எனும் கட்டுரையின் விரிவாக்கத்திற்கு இது தேவைப்படுகிறது. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் 13:02, 27 பெப்ரவரி 2012 (UTC)
- ப - நீநாமரூபமுலகு நித்ய ஜய மங்களம்
- ச1 - பவமாநஸுதுடு பட்டு பாதாரவிந்தமுலகு
- பிரஹ்லாத பக்தி விஜய கீர்த்தனைகளிலிருந்து, சௌராஷ்டிரம் இராகத்தில் அமைக்கப்பட்ட இந்த உருப்படியின் சரணத்தை முதலில் சௌராஷ்டிரம் இராகத்திலேயே பாடிவிட்டு பிறகு பல்லவியை மத்தியமாவதி இராகத்தில் பாடி முடிப்பர் என்று நினைக்கிறேன். இந்த உருப்படியில் 6 சரணங்கள் இருக்கிறது.
- அர்த்தம் - ச 1 - வாயுவின் மைந்தனான அனுமன் தாங்கும் திருவடித்தாமரைகளும் - ப - உனது திருநாமத்திற்கும் திருவுருவத்திற்கும் என்றும் ஜய மங்களம்.
- டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
- --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:45, 27 பெப்ரவரி 2012 (UTC)
- வேண்டுகோளை ஏற்று உடனடியாக உதவிபுரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! 'மங்களம் பாடுதல்' விரிவாக்கம் செய்யப்பட்டது! --மா. செல்வசிவகுருநாதன் 19:45, 27 பெப்ரவரி 2012 (UTC)
- என்னால் முடிந்த அளவு உதவ எப்பொழுதும் தயார். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 03:11, 28 பெப்ரவரி 2012 (UTC)
ஊடகப்போட்டி
[தொகு]நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களைத்தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. உங்கள் பணியடர்வுகளுக்கும் இடையில், ஊடகப்போட்டியில் உங்கள் இசைக்குறித்த படங்களைக் கண்ட போது மகிழ்ந்தேன்.{{TamilWiki Media Contest}}வார்ப்புருவை உரிய இடத்தில் இடுதலை, உங்கள் பதிவிலிருந்தே கற்றேன். அதற்கு முன் வர்ணனைப் பகுதியில் இட்டேன்.அவைகளையும் மாற்ற வேண்டும். நன்றி.இங்குள்ள படம், இசைக்குறித்து இருப்பதால், உங்களுக்கு பயன்படலாம். இதுவும் ஒரு வகை கட இசைக்கருவியோ?பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
- மிக்க நன்றி. இந்த படம் புதிதாக இருக்கிறது. ஒரு வகை கட இசைக்கருவியா என்று தெரியவில்லை. ஏதாவது தகவல் கிடைத்தால் பங்கு கொள்வேன். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 06:41, 8 மார்ச் 2012 (UTC)
- மகிழ்ச்சி.விவரம் தெரியும் போது எனது உரையாடற்பக்கத்தில் தெரிவிக்கக் கோருகிறேன்.மீண்டும் சந்திப்போம். வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
முகவீணை
[தொகு]படம் பற்றிய ஐயம்
[தொகு]இப்படம் ஷெனாய்.ஷெனாய் என்பதும் முகவீணை என்பதும் ஒன்றா? வேறுபட்ட சொல் பயனாக்கம் உள்ளது. எனவே, எது சரி? மயக்கமுள்ளது.உங்கள் கருத்தினை, பேச்சு:முகவீணை என்பதில் இடவும்.--த♥ உழவன் +உரை.. 06:22, 26 சூலை 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா?
[தொகு]நீங்கள் பங்களித்த வலஜி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 22, 2013 அன்று வெளியானது. |
- மிக்க நன்றி. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 13:11, 24 மே 2013 (UTC)
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:53, 24 சூன் 2013 (UTC)
- இது ஒரு நல்ல ஏற்பாடு. அந்த நாட்களில் நான் சென்னையில் இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். ஆதலால் கலந்துகொள்ள இயலாது என்று நினைக்கிறேன். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:00, 1 சூலை 2013 (UTC)
- ஓ, சரி. அவ்வப்போது சென்னையில் வழக்கமான விக்கிப்பீடியர் சந்திப்புகள் நடைபெறும் போது தெரிவிக்கிறேன். நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 13:03, 4 சூலை 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
- அழைப்பிற்கு நன்றி. அந்த நாட்களில் நான் சென்னையில் இருக்க மாட்டேன். ஆதலால் கலந்துகொள்ள இயலாது. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 02:09, 19 செப்டம்பர் 2013 (UTC)
விக்கித்திட்டம் 100 அழைப்பு
[தொகு]வணக்கங்க. இம்மாதம் தமிழ் விக்கிப்பீடியர் கூடி ஒரே மாதத்தில் 100 பயனர்கள் 100 தொகுப்புகளைச் செய்யும் சாதனை முயற்சியில் இறங்கி உள்ளோம். நீங்களும் இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் பெயர் பதிந்து வைத்தாலும் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நோக்கி.--இரவி (பேச்சு) 16:19, 11 சனவரி 2015 (UTC)
விக்கிக்கோப்பை 2017
[தொகு]வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 22:55, 31 திசம்பர் 2016 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
- Thanks, but No, Thanks. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 05:12, 6 சூலை 2021 (UTC)