உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 21 - 23

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சி

[தொகு]

திருச்சி மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா பணிமனைப் பயிற்சியானது குமுளூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் S. வின்சென்ட் டி பால் அவர்கள் பயிற்சியைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நிறுவனத்தின் அனைத்துத் துறைத் தலைவர்கள் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநில கருத்தாளராக பட்டதாரி ஆசிரியர் தியாகு கணேஷ் மற்றும் மாவட்ட கருத்தாளர்களாக விரிவுரையாளர் பூங்குழலி மற்றும் பட்டதாரி ஆசிரியை சத்யபிரபா ஆகியோர் பங்கு பற்றினர்.

21.06.2017 அன்று பயிற்சியளிக்கப்பட்ட தலைப்புகள்

[தொகு]

முற்பகல்

[தொகு]
  • புதிய பயனர் கணக்கு உருவாக்கம்,
  • விக்கியின் ஐந்து தூண்கள்,
  • விக்கியின் அடிப்படை நுட்பங்கள்,
  • விக்கியில் செய்ய வேண்டியவை-செய்யக்கூடாதவை
  • மணல்தொட்டி பயிற்சி

பிற்பகல்

[தொகு]
  • பொதுவகத்தில் கோப்புகள் பதிவேற்றம்
  • கட்டுரை தலைப்பிடுதல்
  • கட்டுரை மொழிபெயர்த்தல்
  • விக்சனரி பயன்பாடு
ஒளிக்கோப்பு
[தொகு]

பெரம்பலூர்

[தொகு]

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா பணிமனைப் பயிற்சியானது பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 29 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் பயிற்சியில் மாநில கருத்தாளராக ஹிபாயத்துல்லா மற்றும் மூன்றாம் நாள் பயிற்சியில் மாநில கருத்தாளராக தகவல் உழவன் ஆகியோர் பங்கேற்றனர்.விக்கியில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து விளக்கப்பட்டது. விக்கி அறிமுகம்,கட்டுரை தலைப்பிடுதல்,கட்டுரை உருவாக்கம் ஆகியவை விளக்கப்பட்டது. 83 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன.

அரியலூர்

[தொகு]

வேலூர்

[தொகு]

திருவண்ணாமலை

[தொகு]

விழுப்புரம்

[தொகு]

விழுப்புரம் VRS பொறியியற் கல்லூரியில் பயிற்சி சூன் 21 அன்று தொடங்கியது. 30 பேர் பங்கு பெற்றனர். கணக்கு உருவாக்கம், விக்கி நடை, மணல் தொட்டி ஆகியன பற்றி உரையாற்றினேன். பின் அனைவரும் மணல் தொட்டியில் ஒரு கட்டுரை எழுதினர். பின் மொழிபெயர்ப்புக் கருவி பற்றி செய்து காட்டினேன். --த.சீனிவாசன் (பேச்சு) 08:43, 22 சூன் 2017 (UTC)[பதிலளி]


கடலூர்

[தொகு]

பகுப்பு:கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

நாகப்பட்டினம்

[தொகு]
பயிற்சி வகுப்புப் படிமம்

பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

நாகப்பட்டினம் மாவட்டம் குருக்கத்தி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், சற்றேறக்குறைய 29 ஆசிரிய, ஆசிரியைகளுக்குக் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை தமிழ் விக்கிப்பீடியா முதல் நாள் (21.06.2017) பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி குறித்து நிறுவன முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சென்னையில் பயிற்சி பெற்ற மாவட்ட கருத்தாளர்களான நிறுவன விரிவுரையாளர் திரு.பிரகாஷ் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு ஸ்ரீதர் ஆகியோர் பயிற்சியை வழங்கினர்.

முதல்நாள் நிகழ்வுகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா-அறிமுகம், புதிய பயனர் கணக்கு உருவாக்கும் முறை, மணல்தொட்டி அறிமுகம், மொழிபெயர்ப்பின் அவசியம், நடைக் கையேடு ஆகிய தலைப்புகள் குறித்து மாநில கருத்தாளர் மணி.கணேசன் விளக்கிப் பேசினார். அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய பயனர் கணக்குத் தொடங்கப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்து அனுப்பியிருந்த ஆங்கில விக்கிப்பீடியா தலைப்புகள் மொழிபெயர்த்துப் பதிவேற்றம் செய்திட வேண்டி ஒவ்வொருவருக்கும் பிரித்து அளிக்கப்பட்டது.

இரண்டாம்நாள் நிகழ்வுகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி பணிமனையின் இரண்டாம்நாள் (22.06.2017) நிகழ்வில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் கட்டுரைகள் தாமே இற்றைச் செய்திட வழிகாட்டப்பட்டது. புதிய தலைப்பில் கட்டுரைகள் எழுதிடவும் இற்றைச் செய்திடவும் ஊக்கம் அளிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் நிகழ்வுகள்

[தொகு]

23.06.2017 அன்று புதிய கட்டுரைகள் பதிவேற்றம் செய்திடும் நிகழ்வானது தொடர்ந்தது. இதுதவிர, பொதுவகம் குறித்தும் அதில் தன் முயற்சியில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை இற்றைச் செய்யும் முறைகள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது. சற்றேறக்குறைய 48 கட்டுரைகளை ஆசிரியர்கள் பயிற்சிப் பணிமனையின் முடிவில் இற்றைச் செய்திருந்தனர்.

படத் தொகுப்பு

[தொகு]

திருவாரூர்

[தொகு]

பகுப்பு:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முப்பது ஆசிரிய, ஆசிரியைகளுக்குக் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை தமிழ் விக்கிப்பீடியா முதல் நாள் (21.06.2017) பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி குறித்து நிறுவன துணை முதல்வர் திரு. சிவசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார். சென்னையில் பயிற்சி பெற்ற மாவட்ட கருத்தாளர்களான நிறுவன விரிவுரையாளர் திருமதி. சுகந்தி மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு. சுரேஷ் ஆகியோர் பயிற்சியை அளித்தனர்.

முதல்நாள் நிகழ்வுகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா-அறிமுகம், புதிய பயனர் கணக்கு உருவாக்கும் முறை, மணல்தொட்டி அறிமுகம், மொழிபெயர்ப்பின் அவசியம், நடைக் கையேடு ஆகிய தலைப்புகள் குறித்து விளக்கம் தரப்பட்டது. அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டன. தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்து அனுப்பியிருந்த ஆங்கில விக்கிப்பீடியா தலைப்புகளில் மொழிபெயர்ப்புச் செய்திட வேண்டி ஒவ்வொரும் நெறிப்படுத்தப்பட்டனர்.

இரண்டாம்நாள் நிகழ்வுகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி பணிமனையின் இரண்டாம்நாள் (22.06.2017) நிகழ்வில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் கட்டுரைகளைத் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடந்தன. புதிய தலைப்பில் கட்டுரைகள் எழுதிவர அறிவுறுத்தப்பட்டது.

மூன்றாம் நாள் நிகழ்வுகள்

[தொகு]

23.06.2017 அன்று தமிழ் விக்கிப்பீடியா சார்பில் மாநில கருத்தாளர் திரு. மணி. கணேசன் அவர்கள் வருகை புரிந்து விக்கிப்பீடியாவில் ஆசிரியர்களின் தொடர் பங்களிப்புகளின் தேவைகள் குறித்தும், விக்கிப்பீடியாவில் தவிர்க்க வேண்டிய இன்றியமையாத செயற்பாடுகள் பற்றியும், சொந்த நடையில் உருவாக்கப்பட்ட விக்கிக் கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்திடும் வழிமுறைகள் குறித்தும் விரிவான விளக்கச் செயல்முறை வழங்கினார். பொதுவகம் குறித்தும் அதில் தன் முயற்சியில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை இற்றைச் செய்யும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். சற்றேறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

படத் தொகுப்புகள்

[தொகு]

தஞ்சாவூர்

[தொகு]

தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா பணிமனைப் பயிற்சியானது ஆடுதுறையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தம் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் விரிவுரையாளர் காந்திமதி மற்றும் பட்டதாரி ஆசிரியர் தாமோதரன் முதல் இரண்டு நாள் பயிற்சி அளித்தனர். மூன்றாம் நாள் பயிற்சியில் மாநில கருத்தாளர்களாக ஹிபாயத்துல்லா, பட்டதாரி ஆசிரியர் தியாகு கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். விக்கியில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, விக்கி அறிமுகம்,கட்டுரை தலைப்பிடுதல்,கட்டுரை உருவாக்கம்,பொதுவகத்தில் கோப்புகள் பதிவேற்றம் ஆகியவை விளக்கப்பட்டது. 86 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இப்பயிற்சியில் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.நிறைவு விழாவில் அதிக கட்டுரை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாதந்தோறும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஒளிக்கோப்பு

[தொகு]

கரூர்

[தொகு]

கரூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு மாயனூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் மாவட்ட கருத்தாளர் பெருமக்களுடன் இணைந்து மாநிலக் கருத்தாளராகக் தியாகு கணேஷ் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் பல்வேறு நுட்பங்களை செயல் வழியாக கற்றுக்கொடுத்தார்.பயிற்சிக்கான ஏற்பாடுகள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அவர்களால் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

22.08.17 அன்றைய நிகழ்வுகள்

[தொகு]

முற்பகல்

[தொகு]
  • தமிழ் விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்,
  • கட்டுரை எழுதுவதற்கான அடிப்படை பயிற்சிகள்,
  • மணல் தொட்டி பயன்பாடு,
  • மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மாயனூர் என்ற பெயரில் புதிய கட்டுரை ஒன்று எழுதிக்காண்பிக்கப்பட்டது
  • கோப்பினை பதிவேற்றம் செய்தல் வழிமுறை- செயல்விளக்கம்
  • ஆசிரியர்களின் ஐயங்களுக்கு விளக்கம்,

பிற்பகல்

[தொகு]
  • மொழிபெயர்த்தல் கட்டுரைகள் எழுதுதலில் உள்ள நடைமுறைகள்,
  • மொழிபெயர்த்தல் நுட்பங்கள்,
  • கட்டுரைத் தலைப்பிடுதல் குறிப்புகள்,
  • விக்கியில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை

நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்

[தொகு]