பம்பாய் சகோதரிகள்
பம்பாய் சகோதரிகள் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு |
|
இறப்பு |
|
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
கல்வி | S.I.E.S மத்துங்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தில்லி பல்கலைக்கழகம் |
விருதுகள் | பத்மசிறீ (2020) |
பம்பாய் சகோதரிகள் (Bombay Sisters, சி. சரோஜா (பிறப்பு: 7 திசம்பர் 1936), சி. லலிதா (26 ஆகத்து 1938 – 31 சனவரி 2023) ஆகியோர் கருநாடக இசைப் பாடகர்கள் ஆவர். இவ்விருவரும் இசை மேடைகளில் இணைந்து பாடினர்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பம்பாய் சகோதரிகளான சி. சரோஜா, சி. லலிதா ஆகியோர் கேரளத்தின் திருச்சூரில் முக்தாம்பாள் - என் சிதம்பர ஐயர் ஆகியோருக்கு மகள்களாக பிறந்தனர். சகோதரிகள் இருவரும் அப்போதைய பம்பாயின் மட்டுங்காவில் பள்ளிக் கல்வி பயின்று, தில்லி பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். இவர்கள் எச். ஏ. எஸ். மணி, முசிரி சுப்பிரமணிய ஐயர், டி. கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றனர்.
தொழில் வாழ்க்கை
[தொகு]1963 ஆம் ஆண்டு முதல் பாடி வரும் இச்சகோதரிகள், பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியதால் இருவரும் பம்பாய் சகோதரிகள் என்ற பெயர் பெற்றனர். இவர்கள் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமசுகிருதம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளனர்.
குடும்பம்
[தொகு]வழக்கறிஞரான என். ஆர். சந்திரனை லலிதா மணந்தார். என் ஆர். சந்திரன் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞராவார். லலிதா சந்திரன் 2023 சனவரி 31 அன்று தன் 84வது அகவையில் இறந்தார்.[1]
விருதுகள்
[தொகு]- சங்கீத சூடாமணி விருது, 1991. வழங்கியது ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது,2006. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
- ஆஸ்தான விதுசி; வழங்கியது: காஞ்சி சங்கர மடம்
- சங்கீத கலாநிதி விருது,2010. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நினைவு விருது, 2013. வழங்கியது: மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை[3]
- சங்கீத கலாசிகாமணி விருது 2006 ; வழங்கியது இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- இந்திய அரசின் பத்மசிறீ விருது 2020[4][5]
- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா சந்திரன் காலமானார்". Hindu Tamil Thisai. Retrieved 2023-02-03.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024.
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/award-for-bombay-sisters/article5434131.ece
- ↑ "Padma Awards 2020 Announced". pib.gov.in.
- ↑ The Hindu Net Desk (26 January 2020). "Full list of 2020 Padma awardees" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/full-list-of-2020-padma-awardees/article30656841.ece.
வெளி இணைப்புகள்
[தொகு]- கருநாடக இசைப் பாடகர்கள்
- சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்
- இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள்
- சகோதர இரட்டையர் (வாய்ப்பாட்டு)
- சங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்
- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நினைவு விருது பெற்றவர்கள்
- சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்
- சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்
- தமிழ்ப் பெண் இசைக் கலைஞர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
- சென்னைப் பாடகர்கள்
- இந்தியப் பாடகர்கள்
- ஊர் பெயரால் அறியப்படும் மக்கள்