நேரு பூங்கா, தில்லி
நேரு பூங்கா (Nehru Park), புது தில்லி சாணக்கியாபுரியில் அமைந்துள்ள ஒரு பெரிய பூங்கா ஆகும். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் பெயரிடப்பட்ட இந்த பூங்கா, 80 ஏக்கர் (320,000 மீ 2) பரப்பளவில் பரந்து காணப்படுகிறது[1], இது நகரின் மையத்தில் உள்ளது, இது 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
பசுமைப் பகுதிகளுக்கு முன்னணி இடமாகவும், புது தில்லி மாநகராட்சியால் (NDMC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "மியூசிக் இன் தி பார்க்" நிகழ்ச்சியின் ஒரு பகுதியான 'காலை ராகங்கள் மற்றும் மாலை ராகங்கள் நிகழ்ச்சிகள் நிகழுமிடமாகவும் அமைந்துள்ளது[2]. இது தவிர, கலை நிகழ்ச்சிகள் மற்றும் காலை யோகா வகுப்புகள் ஆகியவற்றிற்கான ஒரு வழக்கமான இடமாக இருக்கிறது. இங்கு பண்டைய சிவன் கோவில் ஒன்றும் உள்ளது[3].
தில்லியில் மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகவும் தில்லிக்கு வருகை தருபவர்கள் பார்க்க வேண்டிய இடமாகவும் அமைந்துள்ளது. ரஷ்யாவின் அக்டோபர் சோசலிசப் புரட்சியின் தலைவரான விளாடிமிர் லெனினின் உருவச் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. அக்டோபர் புரட்சியின் 70 வது ஆண்டு விழாவில் நவம்பர் 1987 இல் சிலை நிறுவப்பட்டது. சோவியத் பிரதமர் நிகோலய் ரைஸ்க்கோவ், இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி மற்றும் அவரது மனைவி சோனியா காந்தி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற இடது சார்புடைய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் லெனினின் பிறந்த ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் இங்கு வருகை புரிவர்[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nehru Park Profile". Archived from the original on 2008-04-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ Nehru Park Concerts பரணிடப்பட்டது 2007-12-03 at the வந்தவழி இயந்திரம் The Hindu, 25 February 2006.
- ↑ Nehru Park
- ↑ "Article in Peoples Democracy over Lenin Statue". Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.