நீதிபதி (1983 திரைப்படம்)
நீதிபதி | |
---|---|
திரையரங்கு வெளியீடு சுவரிதழ் | |
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | சுரேஷ் பாலாஜி |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
ஒளிப்பதிவு | கே.எஸ். பிரசாத் |
படத்தொகுப்பு | வி. சக்கரபாணி |
கலையகம் | சுரேஷ் ஆர்ட்ஸ் |
வெளியீடு | சனவரி 26, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீதிபதி (Neethibathi) என்பது 1983 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் சட்ட நாடகத் திரைப்படமாகும்.[1] ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இப்படத்தை சுரேஷ் பாலாஜி தயாரித்தார். இதில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர்.[2] இது 1982 ஆண்டு வெளியான நீதிபதி சவுத்ரி என்ற தெலுங்கு படத்தின் மறுஆக்கம் ஆகும். நீதிபதி 1983 சனவரி 26 அன்று வெளியானது.[3]
கதைச்சுருக்கம்
[தொகு]ராஜசேகர் திறமையான வழக்கறிஞர். அவருக்கு ராதா என்ற மனைவியும், காவல் ஆய்வாளராக உள்ள சங்கர் என்ற மகனும், வாய்பேச முடியாத கீதா என்ற மகளும் உள்ளனர். ராஜசேகரின் தொழில் போட்டியாளராக சட்டநாதன் உள்ளார். வைரக் கடத்தல் கும்பலின் தலைவரான காளிதாசுக்கு ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்குபவராக அவர் உள்ளார். ராஜசேகர் முன்பு காளிதாசின் சகோதரர் ரஞ்சித்தை அவரது குற்றங்களுக்காக மரண தண்டனை வாங்கித் தரக் கடுமையாக வாதிடுகிறார், இது அவர்களுக்கு இடையே பகையை உருவாக்கியது. சட்டநாதனை மீறி ராஜசேகர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். ஒரு நீதிபதியாக, ராஜசேகர் காளிதாஸின் மற்றொரு சகோதரனான ஜெகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறார். இந்த நிகழ்வு சட்டநாதனும் காளிதாசும் சேர்ந்து ராஜசேகரை வீழ்த்த திட்டமிட காரணமாகிறது.
தியாகு ஒரு இயந்திரப் பழுது நீக்குநரும், மகிழுந்து பந்தய வீரரும் ஆவார். அவர் சிறையில் உள்ள தன் தாயார் ஜானகிக்காக ஒரு பெரிய வீட்டைக் கட்டுவதில் தீவிரமாக இருக்கிறார். தியாகுவின் குழந்தைப் பருவத்தில் அவரைக் காக்கமுயன்று செய்த கொலை பழியை ஜானகி ஏற்கிறார். காளிதாஸ் தப்பிச் செல்ல ஏதுவாக வாகனங்களை ஓட்டும் பணியை தியாகு செய்யத் தொடங்குகிறார். தியாகு சட்டநாதனின் மகளான தேவியைக் காதலிக்கிறார். தியாகுவின் குற்றச் செயல்களை தேவி அறிந்ததும், குற்றச் செயல்களை விட்டுவிட்டு புதிய வாழ்கையைத் தொடங்கும்படி அனை வற்புருத்துகிறாள். ஒரு கட்டத்தில் தன் தாய் ஜானகியைக் கைவிட்டுச் சென்ற தன் தந்தை ராஜசேகரே என்பதை தியாகு அறிகிறான். அதை அறிந்த பிறகு அவன் மிகுந்த சினம் கொள்கிறான். மேலும் அவன் ராஜசேகரை அழிக்க காளிதாஸ், சட்டநாதன் ஆகியோருடன் இணைகிறான். இவர்கள் கீதாவின் கணவரை அவளிடமிருந்து பிரிக்கவும், சங்கரை பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யவைக்கவும் சதி செய்கின்றனர். இதற்கிடையில், ஜானகி சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும் ராஜசேகர் தனக்கு எதிரான சதிகளைப் பற்றி அறிந்து கொள்கிறார். அவர் இப்போது தனது குடும்பத்தைப் பற்றி மறைந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, தன் எதிரிகளை எப்படி வெல்கிறார் என்பதே மீதிக் கதையாகும்.
நடிகர்கள்
[தொகு]- நீதிபதி ராஜசேகராக சிவாஜி கணேசன்
- ராதாவாக கே. ஆர். விஜயா
- ஜானகியாக சுஜாதா
- வழக்கறிஞர் சட்டநாதனாக வி. கே. ராமசாமி
- ஆரோக்யா மேரி அல்லது லூசியாக மனோரமா
- தேவியாக ராதிகா
- தியாகுவாக பிரபு
- காளிதாஸ் மற்றும் ரஞ்சித்தாக ஆர். என். சுதர்சன்
- கீதாவாக மேனகா
- உமாவாக சத்தியகலா
- ரமேசாக விஜயகுமார் (விருந்திரன் தோற்றம்)
- மனோவாக ஏ. ஈ. மனோகரன்
- அந்தோணியாக ஒய். ஜி. மகேந்திரன்
- பூபதியாக வி. கோபாலகிருட்டிணன்
- ராதாவின் தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன்
- ராஜாவின் மகனாக நடராஜன் ராம்ஜி
- "முத்தெடுக்கும் ஆசையிலே" பாடலுக்கு ஆடுபவராக சில்க் ஸ்மிதா
இசை
[தொகு]இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "முத்தெடுக்கும் ஆசையிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||||||||
2. | "தந்தை நான்" | டி. எம். சௌந்தரராஜன் | ||||||||
3. | "போலிஸ் நமக்கு" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | ||||||||
4. | "பாசமலரே" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். பி. சைலஜா | ||||||||
5. | "ஒரு தேவதை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் |
வரவேற்பு
[தொகு]ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தில் சிவாஜி கணேசனின் பார்க்த்து, ரசிக்க முடியாத இன்னொரு படம் என்று குறிப்பிட்டபட்டது.[5] கல்கியின் திரைஞானம் எழுதிய விமர்சனத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பாராட்டினார், ஆனால் நடிகர்களின் பட்டியல் பளிச்சென்று இருக்கும் அளவுக்கு படம் அவ்வளவு பளிச்சென்று இல்லை என்றார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Movie Recos: 15 courtroom dramas in Tamil you might want to watch". சினிமா எக்ஸ்பிரஸ். 7 August 2019. slide 11. Archived from the original on 19 October 2021. பார்க்கப்பட்ட நாள் 19 October 2021.
- ↑ "231-240". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ ராம்ஜி, வி. (26 January 2019). "சிவாஜி... ஜனவரி 26... ரிலீஸ்!". Kamadenu. Archived from the original on 1 April 2019. பார்க்கப்பட்ட நாள் 1 April 2019.
- ↑ "Neethipathi Tamil Film LP Vinyl Record by Gangai Amaren". Mossymart. Archived from the original on 19 October 2021. பார்க்கப்பட்ட நாள் 19 October 2021.
- ↑ "நீதிபதி". ஆனந்த விகடன். 1983. p. 9. பார்க்கப்பட்ட நாள் 11 May 2022 – via Issuu.
- ↑ திரைஞானி (13 February 1983). "நீதிபதி". Kalki. p. 62. Archived from the original on 17 April 2023. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023 – via இணைய ஆவணகம்.
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- 1983 தமிழ்த் திரைப்படங்கள்
- கங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்