நிலத்தரையியல்
நிலத்தரையியல் (Edaphology)(கிரேக்க மொழியிலிருந்து εδαφος εδάφος ' நிலத்தரை ' + - λογίαα′ -λογία logia′) என்பது உயிரினங்கள் , குறிப்பாக தாவரங்கள் மீது மண்ணின் செல்வாக்கைப் பற்றி அக்கறை கொண்டுள்ளது. இது மண் அறிவியலின் இரண்டு முதன்மைப் பிரிவுகளில் ஒன்றாகும் , மற்றொன்று மண்ணியல் ஆகும். இது தாவர வளர்ச்சிக்கு நிலத்தைப் பயன்படுத்துவதிலும் , நிலத்தின் ஒட்டுமொத்த மனிதப் பயன்பாட்டிலும் எவ்வாறு மண் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய ஆய்வு ஆகும். நிலத்தரையியலுக்குள் உள்ள பொதுவான இருதுறைகள் வேளாண் மண் அறிவியல் (சில வட்டாரங்களில் உழவியல் என்ற சொல்லால் அறியப்படுகிறது), சுற்றுச்சூழல் மண் அறிவியல் ஆகியன ஆகும். ( மண்ணியல் மண் உருவாக்கம், மண் உருவவியல், மண் வகைப்பாடு ஆகியவற்றை ஆய்கிறது.)
உருசியாவில் சீக்கல்வியியல் மண்ணியலுக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது , ஆனால் உருசியாவுக்கு வெளியே உள்ள வேளாண் இயற்பியல், வேளாண் வேதியியலுடன் ஒத்துப்போகும் ஒரு பயன்பாட்டு உணர்வைக் கொண்டிருப்பதாக உணரப்பட்டுள்ளது.[1]
வரலாறு.
[தொகு]கிமு 431 - 355 கிமு மற்றும் கேட்டோ (கிமு 234 - 149 கிமு) ஆகிய தொடக்க கால கல்வியியியலாளர்கள் ஆவர். ஒரு உரப்பயிர் பயிரை நிலத்தில் பயிர்செய்வதால் விளையும் நன்மையை செனோபோன் விளக்கியுள்ளார். கேட்டோ வேளாண்மை பற்றி( டி அக்ரி கல்சுரா) எனும் நூலை எழுதினார். இது வேளாண் பயிர்ச் சுழற்சிவழி மண்ணில் தழைச்சத்தை(நைட்ரஜனை) உருவாக்க பருப்பு வகைகளைப் பயன்படுத்துவதை பரிந்துரைத்தது. குறிப்பிட்ட பயிர்களுக்கான முதல் மண் திறன் வகைப்பாட்டையும் அவர் உருவாக்கினார்.
ஜான் பாப்டிசுட்டு வான் கெல்மான்ட்டு (1577 - 1644) ஒரு பெயர்பெற்ற செய்முறையை நிகழ்த்தினார். அதாவது ஒரு பானை மண்னில் ஒரு வில்லோ மரத்தை வளர்த்து ஐந்து ஆண்டுகளுக்கு மழை நீரை மட்டுமே வழங்கினார். மரத்தால் பெறப்பட்ட எடை மண்ணின் எடை இழப்பை விட அதிகமாக இருந்தது. எனவே, வில்லோ தண்ணீரால் ஆனது என்று அவர் முடிவு செய்தார். இது ஓரளவு மட்டுமே சரியானாலும் , அவரது செய்முறை கல்வியியல் மீதான ஆர்வத்தைக் கிளர்ந்தெழுமபச் செய்தது.
அறிவுப் புலங்கள்
[தொகு]வேளாண் மண் அறிவியல்
[தொகு]வேளாண் மண் அறிவியல் என்பது மண் வேதியியல் , இயற்பியல், பயிர்களின் விளைச்சலைக் கையாளும் உயிரியல் ஆகியவற்றின் பயன்பாடாகும். மண் வேதியியலைப் பொறுத்தவரை , வேளாண்மை, தோட்டக்கலைக்கு முதன்மை வாய்ந்த தாவர ஊட்டச்சத்துக்களுக்கு, குறிப்பாக மண் வளத்துக்கும் உர கூறுகளுக்கும் குறித்து முதலிடம் அளிக்கிறது.
இயற்பியல் படிமவியல் பயிர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆகியவற்றுடன் வலுவாக தொடர்புடையது.
மண் பண்படுத்தல் என்பது வேளாண் மண் அறிவியலில் ஒரு வலுவான மரபாகும். மண் அரிப்பு, பயிர் நிலத் தரமிறக்கம் ஆகியவற்றைத் தடுப்பதைத் தவிர , மண் வளத்தை நிலையுறுத்த மண் பதனிகள், உரப்பயிர்களைப் பயன்படுத்தி மண் வளத்தைத் தக்கவைக்க முயல்கிறது.
சுற்றுச்சூழல் மண் அறிவியல்
[தொகு]பயிர் விளைச்சலுக்கு அப்பால் மட்சூழலுடனான நமது தொடர்புகளை சுற்றுச்சூழல் மண் அறிவியல் ஆய்வு செய்கிறது. இந்தப் புலம் வேளாண் மண்டல செயல்பாடுகளின் அடிப்படை, பயன்பாட்டு கூறுகள், அழுகு வடிகால் நிலக் கள மதிப்பீடும் செயல்பாடும், கழிவுநீரின் நிலத் தூய்மிப்பு, புயல் நீர், அரிப்புக் கட்டுப்பாடு, உலோகங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் மண் மாசுபடுதல், மண் மாசைச் சீராக்கல், ஈரநிலங்களை மீட்டெடுத்தல், மண் தரமிறக்கம் சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து மேலாண்மை,. நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் , புவி வெப்பமடைதல், அமில மழை ஆகியவற்றின் பின்னணியில் மண்ணை இது ஆய்வு செய்கிறது.
மேலும் காண்க
[தொகு]- மண் செயல்பாடுகள்
- மண் விலங்கியல்
- பேண்தகு விவசாயம்
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ Tseits, M. A.; Devin, B. A. (2005). "Soil Science Web Resources: A Practical Guide to Search Procedures and Search Engines". Eurasian Soil Science 38 (2): 223. http://soil.msu.ru/downloads/sswebresources_eng.pdf. பார்த்த நாள்: 2008-01-07.