உள்ளடக்கத்துக்குச் செல்

திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்
பெயர்
புராண பெயர்(கள்):திருஅன்பில் கோவில்
பெயர்:வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்
அமைவிடம்
ஊர்:திருஅன்பில் கோவில்
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வடிவழகிய நம்பி (விஷ்ணு)
தீர்த்தம்:மண்டூக தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமழிசை ஆழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
விமானம்:தாரக விமானம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

திரு அன்பில் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் (Sundararaja Perumal temple), தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள, இலால்குடி நகராட்சிக்கு அருகில், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு ஐந்தாவது திருத்தலம்.

மங்களாசாசனம்

[தொகு]

திருமழிசை ஆழ்வாரால் ஒரே ஒரு பாசுரத்தில் மட்டும் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான் (2417)

படங்கள்

[தொகு]

கோவில் அமைவிடம்

[தொகு]