கபிஸ்தலம்
Appearance
கபிஸ்தலம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°56′55″N 79°15′52″E / 10.948616°N 79.264467°E\ | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 7,300 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு | 91-4374 |
கபிஸ்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது காவேரி ஆற்றின் கரையில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் பாபநாசத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது அரசியல்வாதி ஜி.கே. மூப்பனார் அவர்கள் பிறந்த இடம் ஆகும். இந்த கிராம மக்கள் பட்டு நெசவுக்கு புகழ்பெற்றவர்கள்.
முக்கிய பயிர்கள்: நெல், கரும்பு மற்றும் காய்கறிகள். இந்த கிராமத்தின் பெயர் கஜேந்திரவரத கோவிலின் தொன்மையிலிருந்து பெறப்பட்டது. இது கல்லணை-பூம்புகார் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கஜேந்திரவரத கோயில் ஒரு புனித தலமாகும். (38-ஆவது திவ்யதேசம் ஆகும்)