திருக்குறள் ஆய்வு நூல்களின் பட்டியல்
Appearance
திருக்குறள் ஆய்வு நூல்கள் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெயரால் அறியப்படுகின்ற திருக்குறள் பற்றி அறிஞர்கள் ஆய்ந்து வெளியிட்டுள்ள நூல்களைக் குறிக்கும்.
உரை நூல்கள்
[தொகு]திருக்குறளை ஆய்கின்ற நூல்களுள் முதலிடம் பெறுபவை உரை நூல்கள். இத்தகைய உரை நூல்களுள் 10ஆம் நூற்றாண்டிலிருந்தே எழுதப்பட்ட பழைய உரை நூல்களும் அதன் பின்னர் எழுந்த புதிய உரை நூல்களும் அடங்கும்.
பல வகை உரைகள்
[தொகு]திருக்குறளுக்கு எழுதப்பட்டுள்ள உரைகளின் வகைகளை முனைவர் கு. மோகன ராசு கீழ்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்:[1]
- பொழிப்புரைகள்
- பதவுரைகள்
- ஒரு வரி உரைகள்
- விளக்க உரைகள்
- கருத்துரைகள்
- குறள் தொடர்ந்த கருத்துரைகள்
- பொழிப்புரை கருத்துரைகளின் தொகுப்புகள்
- உரைகளின் தொகுப்புரைகள்
ஆய்வு நூல்கள்
[தொகு]மேற்கூறிய உரைவகைகள் தவிர திருக்குறளை ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற எண்ணிறந்த நூல்கள் குறிப்பாக 20-21ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில:
- மு. சண்முகம் பிள்ளை, திருக்குறள் அமைப்பும் முறையும், சென்னைப் பல்கலைக் கழகம், 1972.
- கருவை பழனிசாமி, திருக்குறளில் மரபும் திறனும், திருமொழிப் பதிப்பகம், சென்னை, 2004.
- எச். இராமசாமி, திருக்குறள் அகராதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004.
- கு. ச. ஆனந்தன், வள்ளுவரின் மெய்யியல், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு: 1986.
- சா. கிருட்டினமூர்த்தி (பதிப்பாசிரியர்), இக்கால உலகிற்குத் திருக்குறள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004, 3 தொகுதிகள்.
- செ. வில்லியம் டெல், குறளும் ஆன்மீகமும், R. கீதா புத்தகாலயம், திருவள்ளூர், 2002.
- ஜி. சுப்பிரமணிய பிள்ளை, வள்ளுவர் விருந்து, மணிவாசகர் பதிப்பகம், 2003.
- கு. மோகனராசு, வீ. ஞானசிகாமணி (தொகுப்பாசிரியர்கள்), கிறித்துவர்களின் திருக்குறள் கொடை, மணிவாசகர் பதிப்பகம், 2004.
- பா. கமலக்கண்ணன், சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு, வானதி பதிப்பகம், சென்னை, 1993, 2005.
- ஆனந்த், திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், பாரதி நிலையம், சென்னை, 2001.
- பா. நடராஜன், வள்ளுவர் தந்த பொருளியல், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, முதற்பதிப்பு: 1965.
- செ. வை. சண்முகம், குறள் வாசிப்பு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
- ப. முருகன் (தொகுப்பு), மனம் கவர்ந்த குறள்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2001.
- இ. சுந்தரமூர்த்தி (தொகுப்பாசிரியர்), குறளமுதம், தமிழ் வளர்ச்சி இயக்ககம், குறளகம், சென்னை, 2000.
- ந. சுப்ரமண்யன், திருக்குறட் கட்டுரைகள், என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், உடுமலைப்பேட்டை, 2004.
- அ. சக்கரவர்த்தி நயினார், திருக்குறள் வழங்கும் செய்தி (The Message of Thirukkural), தமிழாக்கம்: ஊ. கொற்றன்காரி (ஜயராமன்), மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.
- சாமி சிதம்பரனார், வள்ளுவர் வாழ்ந்த தமிழகம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2001.
- மு. சதாசிவம், வள்ளுவர் உள்ளமும் வாழ்க்கைத் தத்துவங்களும், மணிவாசகர் பதிப்பகம், 2004.
- கு. மோகனராசு, திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005.
- கு. மோகனராசு, கன்பூசியசும் திருவள்ளுவரும், மணிவாசகர் பதிப்பகம், 2003.
- சாமி வேலாயுதம், திருக்குறட் சொல்லடைவு, தென்னிந்திய தமிழ்ச் சங்கம், சைவசித்தாந்த கழகம், சென்னை, 2002.
- கு. மோகனராசு, முறை மாறிய திருக்குறள் உரைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005.
- கு. மோகனராசு, திருக்குறளில் திருப்புரைகள், சென்னைப் பல்கலைக்கழகம், 2003.
- மு. சண்முகம் பிள்ளை, அகப்பொருள் மரபும் திருக்குறளும், சென்னைப் பல்கலைக் கழகம், 1980.
- வி. பத்மநாபன், திருவள்ளுவரின் குறள் நெறியும் ஒளவையாரின் அருள் மொழியும் (ஆங்கில விளக்க உரையுடன்), மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2005.
- பொன். சௌரிராசன், திருக்குறளில் பொதுநிலை உத்திகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2005.
- க. வச்சிரவேல், திருக்குறளின் உட்கிடை சைவசித்தாந்தமே, தென்றல் நிலையம், சிதம்பரம், 2002.
- ஜி. கணேசன் (தொகுப்பாசிரியர்), திருக்குறள் கூறும் தொழில் மேம்பாட்டு ஆலோசனைகள் (ஆங்கில விளக்கங்களுடன்), மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2005.
- ப.சு. மணியம், திருக்குறளில் அறிவு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2010.
- கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005.
ஆதாரம்
[தொகு]- ↑ திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005