உள்ளடக்கத்துக்குச் செல்

தாளவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாளவாடி (Talavady) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாளவாடி ஊராட்சி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் வருவாய் கிராமம் ஆகும்.[1]தாளவாடி வருவாய் கிராமம், மாவட்டத் தலைமையிடமான ஈரோட்டிற்கு தென்மேற்கே 116 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்யமங்கலத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாளவாடி, ஈரோடு மாவட்டம் - கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள காட்டின் தமிழகத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இதனருகே சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. தாளவாடியின் அஞ்சல் சுட்டு எண் 638 461 ஆகும். இதனருகே சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் நகரங்கள் அமைந்துள்ளது. இதனருகில் தெங்குமரஹாடா ஊராட்சி அமைந்துள்ளது.

கல்வி நிலையகள்

[தொகு]
  1. தாளவாடி அரசு மேனிலைப் பள்ளி
  2. தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
  3. தாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாளவாடி&oldid=4184622" இலிருந்து மீள்விக்கப்பட்டது