உள்ளடக்கத்துக்குச் செல்

தாலியம்(I) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலியம்(I) அயோடைடு
தாலியம்(I) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாலியம் மோனோ அயோடைடு
தாலசு அயோடைடு
இனங்காட்டிகள்
7790-30-9 Y
ChemSpider 56430 Y
EC number 232-199-7
InChI
  • InChI=1S/HI.Tl/h1H;/q;+1/p-1 Y
    Key: CMJCEVKJYRZMIA-UHFFFAOYSA-M Y
  • InChI=1/HI.Tl/h1H;/q;+1/p-1
    Key: CMJCEVKJYRZMIA-REWHXWOFAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62679
  • I[Tl]
UNII 98W17EMO3C Y
பண்புகள்
TlI
வாய்ப்பாட்டு எடை 331.287 கி/மோல்[1]
தோற்றம் மஞ்சள் படிகங்கள்[1]
அடர்த்தி 7.1 கி/செ.மீ3[1]
உருகுநிலை 441.7 °C (827.1 °F; 714.8 K)[1]
கொதிநிலை 824 °C (1,515 °F; 1,097 K)[1]
0.085 கி/லி (25 °செல்சியசு)[1]
கரைதிறன் ஆல்ககாலில் கரையாது[1]
−82.2·10−6 செ.மீ3/மோல்[2]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H330, H373, H411
P260, P264, P270, P271, P273, P284, P301+310, P304+340, P310, P314, P320, P321, P330, P391
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றி எரியாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தாலியம்(I) புளோரைடு
தாலியம்(I) குளோரைடு
தாலியம்(I) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் காலியம்(I) அயோடைடு
இண்டியம்(I) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)


தாலியம்(I) அயோடைடு (Thallium(I) iodide) என்பது TlI என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது நிலையிலும் உயர் வெப்பநிலை சிவப்பு உருவம் என இரண்டு நிலைகளிலும் இச்சேர்மம் உள்ளது. AgI, CuI, SnI2, SnI4, PbI2 மற்றும் HgI2 ஆகிய உப்புகளைப் போல நீரில் கரையாத உலோக அயோடைடுகளில் இதுவும் ஒன்றாகும்.

தயாரிப்பு

[தொகு]

கரையக்கூடிய தாலியம் உப்பை அயோடைடு அயனியுடன் சேர்த்து இடப்பெயர்ச்சி வினையின் மூலம் நீரிய கரைசலாக தாலியம்(I) அயோடைடு உருவாக்க முடியும்.[3] மாற்றாக, இது பின்வரும் தனிமங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது::[4]

2 Tl + I2 → 2TlI

அதிக அளவு அயோடினை வினைபுரியச் செய்தால் தாலியம் மூவயோடைடு உருவாகும் (Tl+I3−)

இயற்பியல் பண்புகள்

[தொகு]

தாலியம்(I) அயோடைடின் அறை வெப்பநிலை வடிவம் மஞ்சள் நிறமாகவும் சேர்சாய்சதுரக்கட்டமைப்பிலும் உள்ளது.[5] இது உருக்குலைந்த சோடியம் குளோரைடு கட்டமைப்பில் உள்ளதாகக் கருதப்படுகிறது. சிதைந்த அமைப்பு சாதகமான தாலியம்-தாலியம் தொடர்புகளால் ஏற்படுகிறது. மிக நெருக்கமான Tl-Tl பிணைப்பு தூரம் 383 பைக்கோமீட்டர் ஆகும்.[6] 175 °செல்சியசு வெப்பநிலையில் மஞ்சள் வடிவம் சிவப்பு CsCl வடிவமாக மாறுகிறது. இந்த கட்ட மாற்றம் மின் கடத்துத்திறனில் சுமார் இரண்டு அளவு தாவலுடன் சேர்ந்துள்ளது. RbI, CsI, KI, AgI, TlBr மற்றும் TlCl போன்ற பிற ஆலைடுகளுடன் TlI சேர்மத்தை மாசிடுவதன் மூலம் CsI கட்டமைப்பை அறை வெப்பநிலையில் நிலைப்படுத்த முடியும். [7] எனவே, சுற்றுப்புற நிலைமைகளில் கனசதுர மற்றும் நேர்ச்சாய்சதுர TlI கட்டங்களின் நிலைத்தன்மைக்கு மாசுகள் இருப்பது காரணமாக இருக்கலாம். 160 கிலோபார் என்ற உயர் அழுத்தத்தில், TlI ஓர் உலோகக் கடத்தியாக மாறுகிறது. LiF, NaCl அல்லது KBr அடி மூலக்கூறுகளில் வளர்க்கப்படும் நானோமீட்டர்-மெல்லிய TlI படலங்கள் கனசதுர பாறை உப்பு அமைப்பை வெளிப்படுத்துகின்றன.[8]

பயன்பாடுகள்

[தொகு]

தாலியம்(I) அயோடைடு ஆரம்பத்தில் பாதரச வில் விளக்குகளின் செயல்திறனை மேம்படுத்த சேர்க்கப்பட்டது.[9] உற்பத்தி செய்யப்படும் ஒளி முக்கியமாக நீரால் குறைவாக உறிஞ்சப்படும் புலப்படும் ஒளி நிறமாலையின் நீல பச்சை பகுதியில் இருந்தது, எனவே இவை நீருக்கடியில் விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[10] நவீன காலங்களில், இது குவார்ட்சு மற்றும் பீங்கான் உலோக ஆலைடு விளக்குகளில் சேர்க்கப்படுகிறது. டிசிப்ரோசியம் போன்ற அருமண் ஆலைடுகளைப் பயன்படுத்துவது அவற்றின் செயல்திறனை அதிகரிக்கவும் சில ஒளி நிறத்தைப் பெறவும் உதவுகிறது. பச்சை நிற உலோக ஆலைடு விளக்குகளை உருவாக்க தாலியம் அயோடைடை மட்டும் பயன்படுத்தலாம். கதிர்வீச்சு உணரிகளில் பயன்படுத்தப்படும் மினுமினுப்பிகளை உருவாக்க தாலியம்(I) அயோடைடு NaI அல்லது CsI சிறியஉடன் அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கைத் தோற்றம்

[தொகு]

தாலியம்(I) அயோடைடு என்பது நடாலியாமலிகைட்டு எனப்படும் ஓர் அரிய கனிமமாகும். உருசியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள 640 °செல்சியசு வெப்பநிலையை (1,184 °பாரங்கீட்டு) எட்டக்கூடிய எரிமலையான அவச்சின்சுகியில், எரிமலைவாய்களில் இருந்து பெறப்பட்ட மாசுகாக்னைட்டில் சிறு மணிகளாகப் பதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[11][12]

பாதுகாப்பு

[தொகு]

அனைத்து தாலியம் சேர்மங்களைப் போலவே, தாலியம்(I) அயோடைடும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். எலிகளில் 24.1மி.கி/கி.கி என்ற அளவுக்கு இதன் உயிர்கொல்லும் அளவு உள்ளது.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Haynes, p. 4.94
  2. Haynes, p. 4.136
  3. E. Dönges (1963). "Thallium(l) Chloride, Bromide and Iodide T1C1, TIBr, TiI". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2. NY, NY: Academic Press. pp. 869–870.
  4. Micke, Heinrich; Wolf, Hans Uwe (2000). "Thallium and Thallium Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a26_607. ISBN 3-527-30673-0.
  5. Lowndes, R. P.; Perry, C. H. (1973). "Molecular structure and anharmonicity in thallium iodide". The Journal of Chemical Physics 58 (1): 271–278. doi:10.1063/1.1678917. Bibcode: 1973JChPh..58..271L. 
  6. Mudring, Anja-Verena (2007). "Thallium Halides – New Aspects of the Stereochemical Activity of Electron Lone Pairs of Heavier Main-Group Elements". European Journal of Inorganic Chemistry 2007 (6): 882–890. doi:10.1002/ejic.200600975. 
  7. Sultana, Saima; Rafiuddin (2009). "Electrical conductivity in TlI–TiO2 composite solid electrolyte". Physica B: Condensed Matter 404 (1): 36–40. doi:10.1016/j.physb.2008.10.002. Bibcode: 2009PhyB..404...36S. 
  8. Schulz, L. G. (1951). "Polymorphism of cesium and thallium halides". Acta Crystallographica 4 (6): 487–489. doi:10.1107/S0365110X51001641. Bibcode: 1951AcCry...4..487S. 
  9. Reiling, Gilbert H. (1964). "Characteristics of Mercury Vapor–Metallic Iodide Arc Lamps". Journal of the Optical Society of America 54 (4): 532. doi:10.1364/JOSA.54.000532. Bibcode: 1964JOSA...54..532R. 
  10. Underwater Journal and information bulletin, IPC Science and Technology Press, (1973), p 245
  11. "Nataliyamalikite: Mineral information, data and localities". www.mindat.org.
  12. Anderson, Natali (July 6, 2017). "New Mineral Discovered: Nataliyamalikite". Sci News. http://www.sci-news.com/geology/new-mineral-nataliyamalikite-05017.html. பார்த்த நாள்: March 16, 2022. 
  13. "SAFETY DATA SHEET - Thallium(I) iodide". Retrieved 2024-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(I)_அயோடைடு&oldid=4198062" இலிருந்து மீள்விக்கப்பட்டது