தாண்டிக்குடி
தாண்டிக்குடி | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தாண்டிக்குடி (ஆங்கிலம்:Thandikudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்[3][4]. மேற்குத்தொடர்ச்சி மலையான பழனி மலையின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3705 அடி உயரத்தில் கொடைக்கானலிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியாக திகழ்கிறது
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4058 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தாண்டிக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாண்டிக்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
முக்கிய பயிர்
[தொகு]இந்த மலைக் கிராமத்தில் காபி, வாழை, பலா, மிளகு, ஆகிய பணப்பயிர்கள் அதிக அளவிலும், பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளைகின்றன.
வெளி இணைப்பு
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-25. Retrieved 2013-12-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-12-07.
- ↑ "Rural - Dindigul District;Kodaikanal Taluk;thandikudi Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. Retrieved 2013-12-07.