குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
Appearance
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் (GUZILIAMPARAI PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் பதினேழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் குஜிலியம்பாறையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,231 ஆகும். அதில் ஆண்கள் 39,217; பெண்கள் 39,014 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 18,439 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,235; பெண்கள் 9,204 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 19 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7; பெண்கள் 12 ஆக உள்ளனர்.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]
- வாணிக்கரை
- வடுகம்பாடி
- உல்லியகோட்டை
- திருக்கூர்ணம்
- ஆர். வெள்ளோடு
- ஆர். புதுக்கோட்டை
- ஆர். கோம்பை
- மல்லபுரம்
- லந்தக்கோட்டை
- கோட்டாநத்தம்
- கூம்பூர்
- கருங்கல்
- கரிக்காலி
- தோளிப்பட்டி
- டி. கூடலூர்
- சின்னுலுப்பை
- ஆலம்பாடி[4]
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்