தலையாரித் தீவு
புவியியல் | |
---|---|
பரப்பளவு | 0.4366 km2 (0.1686 sq mi) |
நிர்வாகம் | |
இந்தியா | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | இராமேசுவரம் |
தலையாரித் தீவு (Talairi Tivu or Thalayari Island) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவாகும்.
விளக்கம்
[தொகு]இத்தீவானது கீழக்கரைக்கு தென் கிழக்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதில் சுண்ணாம்புக் கல் படிவங்கள் காணப்படுகின்றன.[1] அலைகள் குறைவாக இருக்கும் காலத்தில் வாளைத் தீவுடன் மணல் திட்டுகள் வழியாக இத்தீவு இணைக்கப்படும். மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[2]