உள்ளடக்கத்துக்குச் செல்

காரைச்சல்லி தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைச்சல்லி தீவு
புவியியல்
பரப்பளவு0.109183 km2 (0.042156 sq mi)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
வட்டம்இராமேசுவரம்

காரைச்சல்லி தீவு (Karyachalli Island) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.[1]

விளக்கம்

[தொகு]

இத்தீவானது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், வேம்பாரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழகத்தில் மூழ்கிய தீவுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? - சூழும் மற்றுமோர் ஆபத்து". BBC News தமிழ். Retrieved 2025-01-21.
  2. Kariya Shulli Tivu / Karyachalli Island / Karai Challi Island
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைச்சல்லி_தீவு&oldid=4194927" இலிருந்து மீள்விக்கப்பட்டது