தனலட்சுமி பொறியியல் கல்லூரி
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2000 |
முதல்வர் | நீ. இரமேஷ்பாபு |
அமைவிடம் | காஞ்சீபுரம்- 601 301 , , |
வளாகம் | மணிமங்கலம் புதுச்சேரி சாலை |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
தனலட்சுமி பொறியியல் கல்லூரி[1] (Dhanalakshmi College of Engineering) என்பது 2000ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும்.
அறிமுகம்
[தொகு]தனலட்சுமி பொறியியல் கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழக[2] இணைவு பெற்ற தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி ஆகும். இதன் பிரதான வளாகம் சென்னை கிண்டியிலும் துணை வளாகம் சென்னை குரோம்பேட்டையிலும் உள்ளது. தனலட்சுமி கல்வி அறக்கட்டளையின் ஒரு பகுதியான தனலட்சுமி பொறியியல் கல்லூரி 2001-2002ஆம் ஆண்டில் சென்னையில் தாம்பரம் அருகே அமைக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு[3] (ஏ.ஐ.சி.டி.இ) இந்த கல்லூரிக்கு ஒப்புதல் அளித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
[தொகு]தனலட்சுமி பொறியியல் கல்லூரி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம் புதுச்சேரி சாலையில் அமைந்துள்ளது.
படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கலை, கணினி அறிவியல் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல் என பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் அலுவலக இணையதளம் பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம்