உள்ளடக்கத்துக்குச் செல்

காருண்யா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காருண்யா பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை "எழு, சிறப்புறு"
வகைதனியார்
உருவாக்கம்1986
வேந்தர்முனைவர்.டி. ஜி. எஸ். தினகரன்(சிறப்பு) முனைவர்.பால் தினகரன்
துணை வேந்தர்முனைவர்.பால் பி அப்பாசாமி
கல்வி பணியாளர்
500+
பட்ட மாணவர்கள்4500+
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்2100+
அமைவிடம்
காருண்யா நகர், கோயம்புத்தூர்
, ,
வளாகம்ஊரகம், 700+ ஏக்கர்கள்
சேர்ப்புUGC
இணையதளம்www.karunya.edu

காருண்யா பல்கலைக்கழகம் (முன்னர் காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம்) கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஓர் முழுமையும் தங்கிப் படிக்கும் கிறித்தவ தனியார்த்துறை பல்கலைக்கழகம். இதனை கிறித்தவ சிறுபான்மை அமைப்பாக கிறித்தவ பிரசாரகர்களும் இந்தியாவில் யேசு அழைக்கிறார் அமைப்புகளை நிறுவியர்களுமான மறைந்த முனைவர் டி. ஜி. எஸ். தினகரன் மற்றும் அவரது மகன் பால் தினகரன் நிறுவினர்.

வரலாறு

[தொகு]

1981ஆம் ஆண்டு முனைவர். டி. ஜி. எஸ். தினகரன், தமக்கு இறைவன் இட்ட கட்டளை நிறைவேற்றும் வகையில், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க முயன்றார். அதன்படியே 4 அக்டோபர் 1986 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜூன் சிங் தலைமையில் காருண்யா தொழில்நுட்பக்கழகமாக மலர்ந்தது.கோயம்புத்தூரிலிருந்த பாரதியார் பல்கலைக்கழக்கதின் கீழ் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியாக விளங்கியது. காருண்யா கல்வி அறக்கட்டளை இதனை நடத்தி வந்தது. 2004ஆம் ஆண்டு கல்லூரியின் கல்விச் சிறப்பினை யொட்டி மனிதவளத்துறை அமைச்சகம் இதன் நிலையை காருண்யா பல்கலைக்கழகமாக உயர்த்தியது. [1]


தரவரிசை

[தொகு]

இந்தியாவின் முதற் பதினைந்து தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகவும்[2] பொறியியல் கட்டமைப்புகளில் முதற் பத்து கல்லூரிகளில் ஒன்றாகவும் ஆங்கில இதழ் அவுட்லுக் மதிப்பிட்டுள்ளது.[3]

நிர்வாகம்

[தொகு]

காருண்யா பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராக மறைந்த முனைவர்.டி. ஜி. எஸ். தினகரனும்,வேந்தராக முனைவர். பால் தினகரனும் உள்ளனர். முனைவர். பால் பி அப்பாசாமி துணைவேந்தராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Karunya University under sec. 3 of the UGC Act, 1956 vide Notification No. 9-3-2000-U3 dt. 23.6.2004 of the Government of India.[1].
  2. [1]
  3. [2].
"https://ta.wikipedia.org/w/index.php?title=காருண்யா_பல்கலைக்கழகம்&oldid=2812443" இலிருந்து மீள்விக்கப்பட்டது