மீனாட்சி பல்கலைக்கழகம்
Appearance
மீனாட்சி பல்கலைக்கழகம் (Meenakshi University) அல்லது முறையாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்விற்கான அகாதெமி (Meenakshi Academy of Higher Education and Research (MAHER)) இந்தியாவில் தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமாகும்.
வரலாறு
[தொகு]1991ஆம் ஆண்டில் மீனாட்சியம்மாள் பல்மருத்துவக் கல்லூரி உத்திரமேரூரில் துவங்கப்பட்டது.[1] 2004ஆம் ஆண்டு நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி, இதற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கியது. [2]
இதன் வேந்தராக ஏ.என். இராதாகிருட்டிணனும், துணைவேந்தராக டி. குணசாகரனும் உள்ளனர்.
இணைந்த கல்வி நிறுவனங்கள்
[தொகு]- மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், ஏனாத்தூர், காஞ்சிபுரம்,
- மீனாட்சி அம்மாள் பல்மருத்துவக் கல்லூரி, மதுரவாயல், சென்னை,
- மீனாட்சி பொறியியல் கல்லூரி, கே. கே. நகர்,
- மீனாட்சி செவிலியர் கல்லூரி, மாங்காடு,
- பொறியியல் மற்றும் தொழினுட்பத் துறை, மாங்காடு, சென்னை.
கல்வித்துறைகள்
[தொகு]பட்டப்படிப்புத் துறைகள்
[தொகு]- இளநிலை மருத்துவம் இளநிலை அறுவைமருத்துவம்
- இளநிலை பல்மருத்துவ அறுவை
- இளநிலை அறிவியல் (செவிலியம்)
- இளநிலை இயன்முறை மருத்துவம்
- இளநிலைப் பொறியியல்
பட்டமேற்படிப்புத் துறைகள்
[தொகு]- முதுநிலை மருத்துவக் கல்வி
- முதுநிலை அறிவியல்
- முதுநிலை பல்மருத்துவ அறுவை
- முதுநிலை அறிவியல் (செவிலியம்)
- முதுநிலை இயன்முறை மருத்துவம்
- முதுநிலைப் பொறியியல்
டாக்டர் மற்றும் முனைவர்
[தொகு]மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சையில்
- டாக்டர் பட்டப்படிப்பும் (DM,DS)
- முனைவர் பாடத்திட்டங்களும்
வழங்கப்படுகின்றன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "BDS permission orders" (PDF). மீனாட்சி பல்கலைக்கழக வலைத்தளம். Archived from the original (PDF) on 2016-01-31. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "List of Deemed Universities in India". www.icbse.com. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]