தங்கம்(V) புளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தங்கம்(V) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
தங்கம் பென்டாபுளோரைடு
பெர் ஆரிக் புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
57542-85-5 | |
பண்புகள் | |
AuF5 | |
வாய்ப்பாட்டு எடை | 291.959 கி/மோல் |
தோற்றம் | சிவப்பு , நிலைப்புத்தன்மை இல்லாத திண்மம் |
உருகுநிலை | 60 °C (140 °F; 333 K) (சிதைவடையும்) |
சிதைவடையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும், நச்சு |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | SbF5, BrF5, IF5 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்கம்(V)புளோரைடு (Gold(V) fluoride) என்பது Au2F10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கத்தின் புளோரைடு சேர்மமான இது தங்கம் பென்டா புளொரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மிக உயர்ந்த ஆக்சிசனேற்ற நிலையை தங்கம் இச்சேர்மத்தில் வெளிப்படுத்துகிறது. சிவப்பு நிறத்தில் திண்மமாக காணப்படும் தங்கம்(V)புளோரைடு ஐதரசன் புளோரைடில் கரைகிறது. ஆனால் கரைசல் உடனடியாக சிதைவைடைந்து புளோரினை வெளிவிடுகிறது.
திட நிலையில் தங்கம்(V)புளோரைடு மையச்சீரொழுங்கு இடக்குழு அமைப்பைக் கொண்டுள்ளது. ஆறு ஒருங்கிணைவுகளில் தங்கமும், ஒவ்வொரு தங்கம் மையத்தின் மீதும் ஓர் எண்முக வரிசையிலமைந்த புளோரின் மையங்களும் காணப்படுகின்றன.
இருபடிநிலையில் அறியக்கூடிய ஒரே பென்டாபுளோரைடு தங்கம்(V)புளோரைடு மட்டுமேயாகும். மற்ற பென்டாபுளோரைடுகள் (P, As, Cl, Br, I) ஒற்றைப்படிகளாகவும் (Nb, Ta, Cr, Mo, W, Tc, Re, Ru, Os, Rh, Ir, Pt) போன்றவை நாற்படிகளாகவும், (Bi, V, U) போன்றவை பலபடி பென்டாபுளோரைடுகளாகவும் உள்ளன [1]. வாயுநிலையில் ஒற்றைப்படியும் முப்படியும் 82:18 என்ர விகிதத்தில் காணப்படுகின்றன. ஆண்டிமனி பென்டாபுளோரைடைக் காட்டிலும் வலிமையான புளோரைடு ஏற்பியாகவும் தங்கம்(V)புளோரைடு அறியப்படுகிறது.
தொகுப்பு முறை தயாரிப்பு
[தொகு]தங்கத்தை ஆக்சிசன் மற்றும் புளோரினுடன் சேர்த்து 370 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு 8 வளிமண்டல அழுத்தத்தில் சூடுபடுத்தும்போது டையாக்சிசனைல் எக்சாபுளோரோவாரேட்டு தோன்றுகிறது :[2][3].
Au(s) + O2(வா) + 3 F2(வா) → O2AuF6(தி)
180 பாகை செல்சியசு வெப்பநிலையில் இவ்வுப்பு சிதைவடைந்து பென்டாபுளோரைடு உருவாகிறது.
2 O2AuF6(தி) → Au2F10 (தி) + 2 O2(வா) + F2(வா)
வலிமையான ஆக்சிசனேற்றும் முகவராகவும், புளோரினேற்றும் முகவராகவும் கிரிப்டான் டைபுளோரைடு செயலாற்றுகிறது. இதுவே தங்கத்தை உயர்ந்தபட்ச +5 ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றுகிறது :[4].
7 KrF2 (வா) + 2 Au (தி) → 2 KrF+ AuF− 6 (தி) + 5 Kr (வா)
KrF+AuF−6 60 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து தங்கம்(V) புளோரைடு மற்றும் வாயுநிலை கிரிப்டான், புளோரின் போன்றவை உருவாகின்றன :[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ In-Chul Hwang, Konrad Seppelt "Gold Pentafluoride: Structure and Fluoride Ion Affinity" Angewandte Chemie International Edition 2001, volume 40, 3690-3693. எஆசு:[//dx.doi.org/ 10.1002/1521-3773(20011001)40:19<3690::AID-ANIE3690>3.0.CO;2-5 10.1002/1521-3773(20011001)40:19<3690::AID-ANIE3690>3.0.CO;2-5]
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Emeléus, H. J.; Sharpe, A. G. (1983). Advances in Inorganic Chemistry and Radiochemistry. Academic Press. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-023627-3.
- ↑ W. Henderson (2000). Main group chemistry. Great Britain: Royal Society of Chemistry. p. 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-617-8.
- ↑ Charlie Harding; David Arthur Johnson; Rob Janes (2002). Elements of the p block. Great Britain: Royal Society of Chemistry. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-690-9.
.