தங்கம்(I,III) குளோரைடு
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
டெட்ரா-μ-குளோரோடெட்ராகுளோரோடெட்ராதங்கம் | |
வேறு பெயர்கள்
கலப்பு தங்க குளோரைடு, டெட்ராதங்கம் ஆக்டா குளோரைடு,
| |
இனங்காட்டிகள் | |
62792-24-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
Au 4Cl 8 | |
வாய்ப்பாட்டு எடை | 1071.490 கி மோல்−1 |
தோற்றம் | கருப்பு படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்கம்(I,III) குளோரைடு (Gold(I,III) chloride) என்பது Au4Cl8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. தங்கம்(I,III) குளோரைடில் தங்கம் இரண்டு வேறுபட்ட ஆக்சிச்னேற்ற நிலைகளில் காணப்படுகிறது. சதுர-தள தங்கம்(III) மற்றும் கிட்டத்தட்ட நேரியல் வடிவ தங்கம்(I) என்பன அவ்விரண்டு நிலைகளாகும். கலப்பு இணைதிறன் கொண்ட சேர்மத்திற்கும் இதை உதாரணமாக கூறலாம். ஒளி உணர், காற்று உணர், ஈரம் உணர் சேர்மம் என்பதால் தங்கம்(I,III) குளோரைடை கையாள்கையில் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
தயாரிப்பு
[தொகு]தங்கம்(III) குளோரைடுடன் தங்கம் கார்பனைல் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் தங்கம்(I,III) குளோரைடை தயாரிக்க முடியும்[1]. அல்லது அறை வெப்பநிலையில் தயோனைல் குளோரைடிலுள்ள கார்பன் மோனாக்சைடை தங்கம்(III) குளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்[2] . Au2(CO)Cl4 + Au2Cl6 → COCl2 + Au4Cl8 2 Au2Cl6 + 2 CO → Au4Cl8 + 2 COCl2
கட்டமைப்பு
[தொகு]தங்கம்(I,III) குளோரைடின் ஒற்றை படிகங்கள் ஒரு P1 என்ற இடக்குழுவுடன் முச்சரிவச்சு கட்டமைப்பில் காணப்படுகின்றன. இவை சிறப்பு C2h சீரொழுங்கிலுள்ள தனித்தியங்கும் Au4Cl8 மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளன [1]. இவற்றுக்குள் Au(I) மையங்கள் 175.0° (180 என்பது தனிச்சிறப்பு மதிப்பு) பிணைப்புக் கோணம் கொண்ட Cl-Au-Cl நேரியல் பிணைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இப்பிணைப்பின் சராசரி பிணைப்பு நீளம் 2.30 ஆங்சுடிராங்கு ஆகும். அதேவேளையில் Au(III) மையங்கள் சற்றே ஒழுங்கற்ற சதுரத் தள உறுதிப்பாட்டுடன் Au-Cl பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன. விளிம்பு நிலை குளோரைடுகளை பிணைக்கும் 2.24 Å என்ற பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் மேற்கண்ட பிணைப்பிலுள்ள குளோரைடு பாலங்களின் பிணைப்பு நீளம் 2.33 Å ஆக இருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Dell'Amico, Daniela Belli; Calderazzo, Fausto; Marchetti, Fabio; Merlino, Stefano; Perego, Giovanni (1977). "X-Ray crystal and molecular structure of Au4Cl8, the product of the reduction of Au2Cl6 by Au(CO)Cl". Journal of the Chemical Society, Chemical Communications (1): 31. doi:10.1039/C39770000031.
- ↑ Dell'Amico, Daniela Belli; Calderazzo, Fausto; Marchetti, Fabio; Merlino, Stefano (1982). "Synthesis and molecular structure of [Au4Cl8], and the isolation of [Pt(CO)Cl5]− in thionyl chloride". Journal of the Chemical Society, Dalton Transactions (11): 2257. doi:10.1039/DT9820002257.