டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகை | சுயநிதி கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2006 |
முதல்வர் | பி. ஆனந்த முருகன் |
அமைவிடம் | கோவில்பாளையம்புதூர் திருப்பூர் மாவட்டம் , , |
டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Terf 's Academy College of Arts And Science) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் கோவில்பாளையம்புதூரில் செயற்பட்டுவரும் கலைக் கல்லூரியாகும். இது திருப்பூர்- தாராபுரம் சாலையில் அவிநாசிபாளையம் அருகில் உள்ள கோவில்பாளையம் புதூரில் 2006 ஆண்டு துவக்கப்பட்டது. இது தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது. மேலும் இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையமாகவும் செயல்பட்டுவருகிறது. இக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களின் வசதிக்காக கல்லூரி நூலகம் செயல்பட்டு வருகிறது.
வழங்கும் படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளநிலை
[தொகு]- கணிதம் (சி.ஏ)
- பி.சி.ஏ.
- கணினி அறிவியல்
- தகவல் தொழில்நுட்பம்
- வணிக மேலாண்மை
- பி.காம். (சி.ஏ)
முதுநிலை
[தொகு]- எம்.காம் (சி.ஏ)
ஆராய்ச்சிப் படிப்பு
[தொகு]ஆரிய்சிப் பிரவில் வணிகவியல், மேலாண்மை கணினித் துறை சார்ந்த படிப்புகள்