டிசிப்ரோசியம்(III) சல்பைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இருடிசிப்ரோசியம் முச்சல்பைடு, டைடிசிப்ரோசியம் டிரைசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12133-10-7 | |
ChemSpider | 21248508 |
EC number | 235-208-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24837760 |
| |
பண்புகள் | |
Dy2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 421.18 g·mol−1 |
தோற்றம் | பழுப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 6.08 கி/செ.மீ3 |
சிறிதளவு கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிசிப்ரோசியம்(III) சல்பைடு (Dysprosium(III) sulfide) என்பது Dy2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். டிசிப்ரோசியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகும்.[1][2][3][4]
தயாரிப்பு
[தொகு]மந்தவாயுச் சூழல் அல்லது வெற்றிடத்தில் தூய்மையான டிசிப்ரோசியம் மற்றும் கந்தகத்தை சேர்த்து சூடுபடுத்தினால் டிசிப்ரோசியம்(III) சல்பைடு உருவாகும்:
- 2Dy + 3S -> Dy2S3
ஐதரசன் சல்பைடு மற்றும் டிசிப்ரோசியம் ஆக்சைடு ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் டிசிப்ரோசியம்(III) சல்பைடு உருவாகும்:
- Dy2O3 + 3H2S -> Dy2S3 + 3H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]டிசிப்ரோசியம்(III) சல்பைடு மஞ்சள்-ஆரஞ்சு-பழுப்பு நிற படிகங்களை உருவாக்குகிறது: கனசதுர மற்றும் ஒற்றைச்சரிவச்சு அமைப்புகள் உருவாகின்றன.[5]
பழுப்பு-சிவப்பு, கருப்பு அல்லது பச்சை நிறத்தில் படிகங்களை உருவாக்குகிறது என்பதற்கான சான்றுகளும் உள்ளன.
வறண்ட காற்றில் படிகங்கள் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. ஆனால் ஈரப்பதமான காற்றில் அவை மெதுவாக நீராற்பகுப்பு செய்யப்படுகின்றன. இந்த சேர்மம் நீர் மற்றும் அமிலங்களில் மிதமாக கரைகிறது.
வேதிப் பண்புகள்
[தொகு]டிசிப்ரோசியம்(III) சல்பைடு காற்றில் நன்றாகச் சூடுபடுத்தினால் ஆக்சிசனேற்றம் அடைகிறது:
- Dy2S3 + 3O2 → Dy2O2S + 2SO2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bouroushian, Mirtat (23 April 2010). Electrochemistry of Metal Chalcogenides (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-03967-6. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). U.S. Environmental Protection Agency, Office of Toxic Substances. 1980. p. 128. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
- ↑ "Dysprosium Sulfide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
- ↑ "WebElements Periodic Table » Dysprosium » didysprosium trisulphide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
- ↑ Haynes, William M. (4 June 2014). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.