டிசிப்ரோசியம் அசிட்டைலசிட்டோனேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிசிப்ரோசியம்(3+); (Z)-4-ஆக்சோபெண்ட்-2-யீன்-2-ஒலேட்டு
| |
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம்(III) 2,4-பெண்டேன் டையோனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14637-88-8 | |
ChemSpider | 14982472 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14455608 |
| |
பண்புகள் | |
C15H21DyO6 | |
வாய்ப்பாட்டு எடை | 459.83 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத்தூள் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிசிப்ரோசியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Dysprosium acetylacetonate) என்பது Dy(C5H7O2)3(H2O)n என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]டிசிப்ரோசியம்[2]அல்லது டிசிப்ரோசியம் ஐதரைடுடன் [3]அசிட்டைலசிட்டோனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் டிசிப்ரோசியம் அசிட்டைலசிட்டோனேட்டைத் தயாரிக்கலாம். Dy(acac)3·EtOH·0.5Hacac (இங்குள்ள Hacac என்பது அசிட்டைலசிட்டோனைக் குறிக்கும்) அணைவுச் சேர்மத்தை அசிட்டைலசிட்டோனின் எத்தனால் கரைசலில் டிசிப்ரோசியம் நேர்மின்வாயாகக் கொண்டு மின்னாற்பகுப்பு செய்வதன் மூலம் பெறலாம். Dy(acac)3·EtOH மூலம் இதை சூடேற்றி டிசிப்ரோசியம் அசிட்டைலசிட்டோனேட்டு சேர்மத்தைப் பெறலாம்.[4]
பண்புகள்
[தொகு]டிசிப்ரோசியம் அசிட்டைலசிட்டோனேட்டு ஒரு நிறமற்ற திடப்பொருளாகும். இதன் நீரற்ற வடிவம் வறண்ட வளிமண்டலத்தில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும். ஈரப்பதமான காற்றில் நீரேற்றை உருவாக்குகிறது.[5] இது அசிட்டோநைட்ரைலின் மெத்தனால் கரைசலில் Dy(acac)3·2CH3OH மற்றும் Dy(acac)3·CH3OH·CH3CN ஆகியவற்றை உருவாக்கும்.[6]
பயன்கள்
[தொகு]நார்போர்னென் மற்றும் கார்பன் டெட்ராகுளோரைடு ஆகிய சேர்மங்களின் கூட்டு வினையை வினையூக்கம் செய்ய டிசிப்ரோசியம் அசிட்டைலசிட்டோனேட்டு பயன்படுத்தப்படுகிறது.[7] இதன் இருநீரேற்று எக்சுகதிர் படிகவியல் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dysprosium acetylacetonate at American Elements
- ↑ J.R. Blackborow, C.R. Eady, E.A.Koerner Von Gustorf, A. Scrivanti, O. Wolfbeis (March 1976). "Chemical syntheses with metal atoms" (in en). Journal of Organometallic Chemistry 108 (3): C32–C34. doi:10.1016/S0022-328X(00)92025-4. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022328X00920254. பார்த்த நாள்: 2021-09-20.
- ↑ Janice M. Koehler, William G. Bos (December 1967). "A novel synthesis of some anhydrous rare earth acetylacetonates" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 3 (12): 545–548. doi:10.1016/0020-1650(67)80023-0. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0020165067800230. பார்த்த நாள்: 2021-09-20.
- ↑ Kostyuk, N. N.; Shirokii, V. L.; Vinokurov, I. I.; Maier, N. A. Electrochemical synthesis of dysprosium(III) acetylacetonate complex and its thermolysis. Zhurnal Obshchei Khimii, 1994. 64 (9): 1432-1434. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-460X. (in உருசிய மொழி)
- ↑ Trembovetskii, G. V.; Martynenko, L. I.; Murav'eva, I. A.; Spitsyn, V. Synthesis and study of volatile rare earth acetylacetonates. Doklady Akademii Nauk SSSR, 1984. 277 (6): 1411-1414. ISSN: 0002-3264. (in உருசிய மொழி)
- ↑ Pod'yachev, S. N.; Mustafina, A. R.; Vul'fson, S. G. Structure of tris(acetylacetonato)dysprosium and its monoadduct with acetonitrile in a methanol solution. Zhurnal Neorganicheskoi Khimii, 1994. 39 (1): 67-70. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X. (in உருசிய மொழி)
- ↑ R. I. Khusnutdinov, T. M. Oshnyakova (February 2014). "Tetrachloromethane addition to norbornene catalyzed by lanthanide(III) compounds" (in en). Russian Journal of Organic Chemistry 50 (2): 303–305. doi:10.1134/S1070428014020304. பன்னாட்டுத் தர தொடர் எண்:1070-4280. http://link.springer.com/10.1134/S1070428014020304. பார்த்த நாள்: 2021-09-20.
- ↑ Ilyukhin, A. B.; Gavrikov, A. V.; Dobrokhotova, Zh. V.; Novotortsev, V. M. (2018). "New Solvate Polymorphs of Lanthanide Trisacetylacetonates: Crystal Structures of [Ln(acac)3(H2O)2] · Solv (Ln = Eu, Dy; Solv = THF, H2O + EtOH, MeOH)". Russian Journal of Inorganic Chemistry 63 (9): 1186–1191. doi:10.1134/S003602361809005X.