உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெனி தாகோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனி தாகோர்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்பார்பத்பாய் பட்டேல்
தொகுதிபனசுகந்தா
குசராத் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
14 திசம்பர் 2017 – 4 சூன் 2024
முன்னையவர்சங்கர் சவுத்ரி
பின்னவர்TBD
தொகுதிவாவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 நவம்பர் 1975 (1975-11-19) (அகவை 48)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நாகாஜி தாக்கோர்
தொழில்சமுக சொயற்பாட்டாளர்
As of 18 நவம்பர், 2022
மூலம்: [1]

ஜெனிபன் நாகாஜிபாய் தாகோர் (Geniben Nagajibhai Thakor) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] மேலும் இவர் வாவ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து குசராத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவர் ஆவார்.[2] இவர் 2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சங்கர் சவுத்ரியை எதிர்த்து வெற்றிபெற்றார். இவர் 2024 இந்திய மக்களவைத் தேர்தலில் பனசுகந்தா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2024 பொதுத் தேர்தலில் குசராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே காங்கிரசு வேட்பாளர் இவராவார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

தாக்கோர் 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாவ் தொகுதியிலிருந்து போட்டியிட்டார் ஆனால் தோல்வியடைந்தார்.[3] 2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வாவ் தொகுதியில் போட்டியிட்டு 6655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[4] ஊடக ஆதாரங்களின்படி அல்பேஷ் தாக்கூரின் நெருங்கிய உதவியாளராக இவர் கருதப்படுகிறார்.[5][6] இவர் 2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வாவ் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

சர்ச்சைகள்

[தொகு]

2019 ஆம் ஆண்டில், சமூகத்தின் திருமணமாகாத பெண்கள் செல்பேசிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் தாக்கூர் சமூகத்தின் முடிவை ஜெனி தாக்கோர் ஆதரித்தார். [8] சிறுமிகள் செல்பேசிகளை பயன்படுத்துவதை தடை செய்யும் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை என்றும், "தொழில்நுட்பத்திலிருந்து விலகி, இருந்து படிப்பில் அதிக நேரம் செலவிட வேண்டும்" என்றும் தாக்கோர் கூறினார்.[9] முன்னதாக, 2018 ஆம் ஆண்டில், பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசாரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக அவர்களை எரிக்கவேண்டும் என இவர் மக்களைத் தூண்டினார்.[10][11][12] பின்னர், இவர் 'பெண்களை அமைதிப்படுத்த முயற்சிப்பதாக' தெளிவுபடுத்தினார்.[10]

2023 ஆம் ஆண்டில், காங்கிரஸ் ச.ம.உ. வாக இருந்தபோது, ஜெனிபன் தாகோர், பாஜக ச. ம. உ. வான ஃபதேசின் சவுகானுடன் சேர்ந்து, வயது வந்த பிள்ளைகள் தங்கள் இணையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்யும்போது பெற்றோரின் கையொப்பங்கள் கட்டாயமாக்குமாறு திருமணங்கள் பதிவு சட்டம், 2009 இல் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரினார்.[13] பெற்றோரின் அனுமதியின்றி நடக்கும் காதல் திருமணங்களுக்கு தான் எதிரானவர் என்றும், ஆணோ பெண்ணோ வசிக்கும் அதே வட்டத்தில்தான் இதுபோன்ற திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Candidate profile
  2. "Gujarat Elections 2017: Congress' Thakor Geniben Nagaji wins from Vav Vidha Sabha seat". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  3. https://indianexpress.com/article/political-pulse/geniben-thakor-congresss-north-gujarat-assembly-8243423/
  4. "Vav Assembly Election 2017-18 LIVE Results & Latest News: Election Dates, Exit Polls, Results, Live Updates, Winning Candidates & Parties". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  5. "Congress MLA Geniben Thakor, considered close aide of Alpesh Thakor, says 'rape accused should be burnt alive'". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  6. Correspondent, dna (2019-04-14). "Gujarat: MLA Geniben Thakor contradicts Alpesh Thakor on sale of tickets". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  7. "ગુજરાત વિધાનસભા ચૂંટણી પરિણામઃ કોંગ્રેસના સૂપડા સાફ, માંડ 17 સીટ જીતી, આપ પાર્ટીનો 5 બેઠક પર વિજય". Indian Express Gujarati (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  8. "Inter-caste marriages, mobile phones for girls banned by Gujarat's Thakor community". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  9. "Thakors Ban Inter-Caste Marriages, Mobiles For Girls; Congress MLA Lauds Move". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  10. 10.0 10.1 ""Burn Rape Accused Alive": Gujarat Congress Lawmaker Tells Crowd". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  11. "Finish those who rape, don't hand them over to police: Alpesh Thakor's aide Geniben provokes mob - WATCH video". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  12. Correspondent, dna (2018-10-12). "Rapists should've been burnt alive, says Gujarat Congress woman MLA Geniben Thakor". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  13. 13.0 13.1 Langa, Mahesh (22 March 2023). "Gujarat lawmakers seek change in law to regulate ‘love’ marriages, mandatory signatures of parents". The Hindu. https://epaper.thehindu.com/ccidist-ws/th/th_kolkata/issues/29660/OPS/GRMB16BRJ.1+GL2B172EP.1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனி_தாகோர்&oldid=4004517" இலிருந்து மீள்விக்கப்பட்டது