ஜி. என். இரங்கராஜன்
ஜி. என். இரங்கராஜன் | |
---|---|
பிறப்பு | 17 திசம்பர் 1930 |
இறப்பு | 3 சூன் 2021 சென்னை, இந்தியா | (அகவை 90)
பணி | எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் |
பிள்ளைகள் | ஜி. என். ஆர். குமரவேலன் |
ஜி. என். இரங்கராஜன் (G. N. Rangarajan) (17 திசம்பர் 1930 - 3 சூன் 2021) தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றிய ஒரு இந்திய எழுத்தாளரும், தயாரிப்பாளரும் இயக்குனருமாவார்.
திரைப்பட வாழ்க்கை
[தொகு]இயக்குனர் ஏ. பீம்சிங்கின் படைப்புகளால் இரங்கராஜன் ஈர்க்கப்பட்டார். மேலும் 1950களின் பிற்பகுதியில் ஆசிரியர் துரைசிங்கத்துடன் உதவியாளராக சேர்ந்தார். இவர் பணியாற்றிய ஒரு ஆரம்ப படம் பீம்சிங்கின் களத்தூர் கண்ணம்மா (1960), இதில் இளம் கமல்ஹாசன் நடித்திருந்தார்.[1] பின்னர், இவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இயக்குனர் எஸ். பி. முத்துராமன், எழுத்தாளர் பஞ்சு அருணாசலம் ஆகியோருடன் பல படங்களுடன் பணியாற்றினார் . புவனா ஒரு கேள்விக்குறி (1977), ஆறிலிருந்து அறுபது வரை (1979), பிரியா (1978) உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றினார்.[2]
இயக்குனராக, இரங்கராஜன் கமல்ஹாசனுடன் இணைந்து கல்யாணராமன் (1979), மீண்டும் கோகிலா (1981), கடல் மீன்கள் (1981), எல்லாம் இன்ப மயம் (1981) உள்ளிட்ட பல வெற்றிகரமான படங்களில் பணியாற்றினார்.[3] கமல்ஹாசனின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் கோகிலா திரைப்படத்தைத் தயாரிக்கும் போது மகேந்திரனிடமிருந்து இயக்குனர் பணிகளை இவர் கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.[4] பின்னர் இவர் திரைப்படங்களையும் எழுதி தயாரித்தார். குறிப்பாக அடுத்தாத்து ஆல்பல்ட் (1985) , சார், ஐலவ் யூ (1991) ஆகியவற்றை உருவாக்கினார். இவர் இறுதியாக கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மகராசன் (1993) என்றத் திரைப்படத்தை இயக்கினார். இரங்கராஜனுடனான நட்பின் காரணமாக இப்படத்திற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார். இரங்கராஜன் தனது திரைப்படங்களைத் தொடர்ந்து, "ரகுவம்சம்" என்ற தொலைக்காட்சி தொடரில் பணியாற்றினார். மேலும் சிங்கப்பூர் தயாரிப்பாளர்களுக்காக ஒரு தொலைக்காட்சிப் படத்தையும் செய்தார்.[5][6]
கமல்ஹாசனுடனான தொடர்பு காரணமாக, இரங்கராஜன் தனது வீட்டை "கமல் இல்லம்" என்று பெயர் மாற்றினார். இவரது மகன் ஜி. என். ஆர். குமரவேலன் சதி லீலவதி (1995) , மருதநாயகம் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றார். பின்னர் 2000களின் பிற்பகுதியில் இயக்குனராக அறிமுகமானார்.[7][8]
இறப்பு
[தொகு]இரங்கராஜன் வயது தொடர்பான வியாதிகளால் 2021 சூன் 3 அன்று தனது 90 வயதில் இறந்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Patrick, Sylvian (11 December 2019). "80s Tamil Movie Directors | G.N.Rangarajan". Medium. Archived from the original on 4 June 2021. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
- ↑ "Tamil director GN Rangarajan dies at 90". 3 June 2021.
- ↑ "Veteran Tamil director GN Rangarajan passes away at 90". தி நியூஸ் மினிட். 3 June 2021. Archived from the original on 3 June 2021. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
- ↑ "வரலாற்றுச்சுவடுகள் – திரைப்பட வரலாறு 944 – கமல்–ஸ்ரீதேவி நடித்த மீண்டும் கோகிலா". தினத்தந்தி.
- ↑ Admin, C. C. N. "Adoring the legendary filmmaker GN Rangarajan on 90th Birthday". Chennai City News. Archived from the original on 18 December 2020. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
- ↑ "Director G.N.Rangarajan' s 90th Birthday". Royal Reporter. 18 December 2020. Archived from the original on 18 December 2020. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
- ↑ K., Janani (3 June 2021). "Kamal Haasan lost a brother in GN Rangarajan, says he showered me with unconditional love". இந்தியா டுடே. Archived from the original on 3 June 2021. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
- ↑ "Filmmakers should make movies that matter to public: GNR Kumaravelan". Governance Now. 13 October 2016. Archived from the original on 26 September 2020. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
- ↑ K., Janani (3 June 2021). "Kamal Haasan lost a brother in GN Rangarajan, says he showered me with unconditional love". இந்தியா டுடே. Archived from the original on 3 June 2021. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.K., Janani (3 June 2021). "Kamal Haasan lost a brother in GN Rangarajan, says he showered me with unconditional love". India Today. Archived from the original on 3 June 2021. Retrieved 3 June 2021.