எஸ். பி. முத்துராமன்
சுப. முத்துராமன் | |
---|---|
![]() | |
பிறப்பு | முத்துராமன் ஏப்ரல் 7, 1935 ![]() |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
பெற்றோர் | இராம. சுப்பையா விசாலாட்சி |
வாழ்க்கைத் துணை | கமலா |
உறவினர்கள் |
|
சுப. முத்துராமன் (பிறப்பு 7 ஏப்ரல் 1935) தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் கூடுதலான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.[1] தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குநர்களில் இவரும் ஒருவர். துவக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் கமலஹாசன் படங்களை இயக்கி வந்தார். 1970களின் பிற்பகுதிகளில் இவருக்கும் ரஜினிகாந்த்திற்கும் ஏற்பட்ட தொழில்முறை உறவு பலப்பட்டு 25 திரைப்படங்களை இருவரும் இணைந்து உருவாக்கினர்.[2] ரஜனியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கிருந்தது. இவர் இரு தென்மண்டல பிலிம்பேர் விருதுகளையும் தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
விருதுகள்
[தொகு]- 1977 – சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
- 1978 – சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் - புவனா ஒரு கேள்விக்குறி
- 1979 – சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது - ஆறிலிருந்து அறுபது வரை
- 2012 – தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
- 2018 - தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது[3]
இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]குடும்பம்
[தொகு]முத்துராமனின் இணையர் கமலாவின் தாத்தா வை. சு. சண்முகனார், சுயமரியாதை இயக்க முன்னோடிகளுள் ஒருவர் ஆவார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajinikanth deserves all the love he gets: SP Muthuraman". The Indian Express (in ஆங்கிலம்). 2018-12-12. Retrieved 2022-02-11.
- ↑ Kosalairaman, Muthu Vinayagam, "சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆஸ்தான இயக்குநர்! ப்யூர் டைரக்டர் எஸ்.பி. முத்துராமன்", Tamil Hindustan Times, retrieved 2024-05-13
- ↑ "The 59th Idea Filmfare Awards 2011(South)". Bennett, Coleman & Co. Ltd. 8 July 2012. Archived from the original on 24 May 2017. Retrieved 8 July 2012.
- ↑ Dravidam 100 (2024-12-31), சாதி வெளிப்படையாக இல்லை! மூளையின் உள்ளே அப்பிக் கிடக்கிறது! | கோபமாகப் பேசிய சுபவீ... | Subavee, retrieved 2024-12-31
{{citation}}
: CS1 maint: numeric names: authors list (link)
வெளியிணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எஸ். பி. முத்துராமன்
- SP. Muthuraman's team பரணிடப்பட்டது 2012-01-04 at the வந்தவழி இயந்திரம் at PixMonk.com