சைலோபிசு
Appearance
சைலோபிசு | |
---|---|
அடையாளம் காணப்படாத சைலோபிசு மூணாரில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | ஊர்வன
|
வரிசை: | |
குடும்பம்: | பரேடே
|
துணைக்குடும்பம்: | சைலோபினே[1]
|
பேரினம்: | சைலோபிசு
பெடோமிமி 1878
|
மாதிரி இனம் | |
சைலோபிசு செடெனோரிஞ்சசு (கந்தர், 1875) |
சைலோபிசு (Xylophis) என்ற பேரினம் பரேடே குடும்ப பாம்புகளாகும். சைலோசு பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாக உள்ளன.[2][3] பரேடே குடும்பத்தில் உள்ள ஒற்றை துணைக்குடும்பமாக சைலோபினே உள்ளது. இவை பரேடே குடும்பத்தில் இந்தியாவில் காணப்படும் பாம்புகளாகும். மேலும் தென்கிழக்கு ஆசியாவிற்கு வெளியே காணப்படும் இக்குடும்ப பாம்புகள் இவையே ஆகும்.[1]
இனங்கள்
[தொகு]பின்வரும் 4 சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டச் சிற்றினங்களாகும்[2]
- சைலோபிசு கேப்டனி கெளவர் & விங்ளர், 2007 - கேப்டனின் மர பாம்பு, கேப்டனின் சைலோபிசு
- சைலோபிசு மொசைகசு தீபக், நாராயணன், தாசு, ராஜ்குமார், ஈசா, ஸ்ரீஜித், கெளர், 2020 - ஆனைமலை மர பாம்பு
- சைலோபிசு பெரோடெடி (ஏ. எம். சி. டுமெரில், பைப்ரோன், ஏ. எச். ஏ. டுமெரில், 1854) - பெரோடெட்டின் மலைப் பாம்பு, வரியுடைய, குறுகிய தலை பாம்பு
- சைலோபிசு செடெனோரிங்சசு (கந்தர், 1875) - கந்தரின் மலைப் பாம்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Deepak, V.; Ruane, Sara; Gower, David J. (2019). "A new subfamily of fossorial colubroid snakes from the Western Ghats of peninsular India". Journal of Natural History 52 (45-46): 2919–2934. doi:10.1080/00222933.2018.1557756. (Xylophiinae, new subfamily)
- ↑ 2.0 2.1 Xylophis at the Reptarium.cz Reptile Database. Accessed 2 July 2020.
- ↑ Deepak, V.; Narayanan, Surya; Das, Sandeep; Rajkumar, K.P.; Easa, P.S.; Sreejith, K.A.; Gower, David J. (2020). "Description of a new species of Xylophis Beddome, 1878 (Serpentes: Pareidae: Xylophiinae) from the Western Ghats, India". Zootaxa 4755 (2): 231–250. doi:10.11646/zootaxa.4755.2.2. https://www.mapress.com/j/zt/article/view/zootaxa.4755.2.2.
மேலும் காண்க
[தொகு]- Beddome RH (1878). "Description of a new genus of snakes of the family Calamaridæ, from Southern India". Proceedings of the Zoological Society of London 1878: 156. (Xylophis, new genus).