சேலம் சுகவனேசுவர் கோயில்
சேலம் சுகவனேசுவர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°39′25.3″N 78°09′35.4″E / 11.657028°N 78.159833°E |
பெயர் | |
பெயர்: | சேலம் சுகவனேசுவர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | சேலம் |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுகவனேசுவர் |
தாயார்: | சொர்ணாம்பிகை |

சேலம் அருள்மிகு சுகவனேஸ்வர் திருக்கோயில் என்ற சிவன் கோயில், சேலம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
ஆலய வரலாறு
[தொகு]சுகவன முனிவர் கிளியின் உருவத்தில் இங்கு உள்ள மூர்த்தியை வழிபட்டதால் இக்கோயிலின் இறைவன் சுகவனேசுவர பெருமான் என அழைக்கப்படுகிறார். மேலும் இந்த கோவில் நான்கு யுகங்களாக உள்ளது. இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். அம்பிகையின் பெயர் சொர்ணாம்பிகை.
சொர்ணாம்பிகை
[தொகு]இக்கோயில் குடி கொண்டிருக்கும் தாயார் சொர்ணாம்பிகை ஆவார்.
சுகவன கணபதி
[தொகு]இக்கோயிலில் கணபதிக்கு ஸ்ரீ மதவடி விநாயகர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ சுகவன கணபதி, ஸ்ரீக்ஷிப்த கணபதி,ஸ்ரீ ந்ருத கணபதி, ஸ்ரீ விகடசக்ர கணபதி என பல கணபதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கணபதிக்கும் தனிச் சிறப்பு.
சுகவன சுப்ரமணியர் சுவாமி
[தொகு]முருகனுக்கு தனிச்சன்னதி உள்ளது. அறுபடை வீடுகளில் உள்ள அனைத்து முருகப்பெருமான் அவதாரங்களும் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது.
காலபைரவர்
[தொகு]இங்குள்ள காலபைரவர் சன்னதியில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தட்சணாமூர்த்தி
[தொகு]இக்கோயில் தீர்த்தம் அமண்டுக தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.