சிவன் கோயில்
சிவன் கோயில் என்பது இந்துக் கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் தெய்வம் சிவன் (லிங்கத் திருமேனி) அம்சமாக இருக்கும் பட்சத்தில் அக்கோயில் சிவன் கோயில் என்றழைக்கப்படுகிறது. அந்த அம்சமானது வெவ்வேறு திருநாமங்கள் கொண்டு காணப்படுகின்றது. உதாரணமாக, சுந்தரேசுவரர், நடராசர், ஆதி சொக்கநாதர், ஏகாம்பரநாதர், பிரம்மபுரீசுவரர், அகத்தீசுவரர், ஐயாறப்பர், லிங்கேசுவரர், கபாலீசுவரர், காசிவிசுவநாதர், கைலாசநாதர், சோமநாத சுவாமி, அக்கினீசுவரர், வெள்ளீசுவரர், ஆதிமூலேசுவரர், வைத்தியநாத சுவாமி, நீலகண்டேசுவரர், நாகநாதர், சொர்ணபுரீசுவரர், சோமலிங்கேசுவரர், லிங்கோற்பவர், சந்திரசேகரர், கந்தழீசுவரர் மற்றும் பட்டீசுவரர் ஆகிய திருநாமங்களில், கோயில்களில் சிவன் அருள்பாலிக்கிறார். சிவன் கோயிலானது, சைவ வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பூசைகள் நடைபெறும் தலமாக விளங்குகிறது.
மதுரையில், சுந்தரேசுவரர் என்ற திருநாமம் பெற்று மீனாட்சி அம்மன் கோயிலில் சிவன் வீற்றிருக்கிறார்.[1] காஞ்சிபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார்.[2] சென்னையின் மயிலாப்பூரில், கபாலீசுவரர் கோயிலில் சிவன் காட்சியளிக்கிறார்.[3] சிதம்பரத்தில், நடராசர் கோயிலில் சிவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Meenakshi Sundareswarar Temple : Meenakshi Sundareswarar Meenakshi Sundareswarar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-01-09.
- ↑ "Ekambara Nathar Temple : Ekambara Nathar Ekambara Nathar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-01-09.
- ↑ "Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000001].,". mylaikapaleeswarar.hrce.tn.gov.in. Retrieved 2023-01-09.
- ↑ "Chidambaram thillai natarajar Temple : Chidambaram thillai natarajar Chidambaram thillai natarajar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-01-09.