சுமன் சஹாய்
சுமன் சகாய் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
கல்வி | முதுகலை முனைவர் பட்டம், 1975 |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் |
பணி | நிறுவன இயக்குநர் |
அமைப்பு(கள்) | மரபணு பிரச்சாரம் |
சுமன் சகாய் (Suman Sahai) ஒரு இந்திய செயற்பாட்டாளர் மற்றும் இந்தியாவில் மரபணு குறித்த பிரச்சாரத்தின் இயக்குநர்.
வாழ்க்கை
[தொகு]சகாய் முதுகலை முனைவர் பட்டத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் 1975 ஆம் ஆண்டு பெற்றார்[1]. பின்னர் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம், ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார். ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தில், அவர் மனித மரபியல் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.[2] சகாய் 40 கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.[3] இதில் பெரும்பாலான மரபியல் ரீதியான கொள்கை வெளியிட்டார். இது மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தொடர்பான கொள்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது.
செயற்பாடுகள்
[தொகு]சகாய் லட்சகணக்கான விவசாயிகளின் ஒன்றுமித்த குரலாக திகழ்க்கிறார். இவர் வேம்பு மற்றும் மஞ்சள் காப்புரிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர். அவர் இயற்கையின் தொழில்நுட்பம் மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி முடியும் என்று நம்புகிறார்.[சான்று தேவை]
சர்ச்சைகள்
[தொகு]ஏப்ரல் 2013 இல் சகாய், அவரது 1986 ஆம் ஆண்டின் ஐடெல்பர்க் பல்கலைக்கழக ஆய்வில் பிறரது படைப்புகளைத் தனதாகக் கையாண்டுள்ளதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.[4][5] அதோடு உண்மையில் ஐடெல்பர்க் பல்கலைக்கழகப் பேராசியராகப் பணியாற்றாமல் தன்னைத்தானே அவ்வாறு போலியாகக் காட்டிக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானார்.[4] ஏப்ரல் 14, 2013 இல் பல்கலைக்கழகமும் அவரது படைப்புத் திருட்டையும், அவர் தன்னை அப்பல்கலைக்கழக பேராசியர் எனக் கூறிக்கொள்ளும் உரிமையற்றவர் என்பதையும் உறுதி செய்ததைத் தொடர்ந்து சகாய் தனது ஆய்வுப் பட்டத்தைத் துறக்க நேர்ந்தது.[4][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "How I made it: Suman Sahai : Aspire". இந்தியா டுடே. 2010-04-29. http://indiatoday.intoday.in/story/How+I+made+it:+Suman+Sahai/1/95201.html. பார்த்த நாள்: 2013-03-29.
- ↑ "Dr Suman Sahai: Curriculum vitae". World Academy of Art and Science. Archived from the original on 2013-04-12. Retrieved 2013-04-12.
- ↑ Web of Science, accessed 2013-03-29.
- ↑ 4.0 4.1 4.2 Köppelle, Winfried (2013-04-09). "Heidelberger Habilitations-Humbug" (in German). Laborjournal (4): 14–17. பன்னாட்டுத் தர தொடர் எண்:1612-8354. இணையக் கணினி நூலக மையம்:85726582 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6FyZ4VTKp?url=http://www.biotech-europe.de/editorials/726.lasso. பார்த்த நாள்: 2015-07-21. English translation
- ↑ "Sahai, Suman: Elucidation of the role of neurotransmitter glutamate in normal and abnormal mental function". HEIDI. University Library Heidelberg. Retrieved 2013-04-12.
- ↑ "Stellungnahme der Medizinischen Fakultät der Universität Heidelberg". UniversitätsKlinikum Heidelberg. Archived from the original on 2013-04-29. Retrieved 2013-04-29.