சுபாங் மக்களவைத் தொகுதி
சுபாங் (P104) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Subang (104) Federal Constituency in Selangor | |
![]() | |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் ![]() |
வாக்காளர் தொகுதி | சுபாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சுபாங் ஜெயா; சுபாங், சிலாங்கூர் கோத்தா டாமன்சாரா, கிளானா ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கான், சா ஆலாம், சுங்கை பூலோ |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
நீக்கப்பட்ட காலம் | சா ஆலாம் தொகுதி |
கட்சி | ![]() |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | வோங் சென் (Wong Chen) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 235,752 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 69 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
சுபாங் மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Subang; ஆங்கிலம்: Subang Federal Constituency; சீனம்: 梳邦国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P104) ஆகும்.
சுபாங் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1995-ஆம் ஆண்டில் இருந்து சுபாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
சுபாங் நகரம்
[தொகு]சுபாங் நகரம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகருக்கு மேற்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்து இருக்கும் இந்த நகரம், சா ஆலாம், சுபாங் ஜெயா பெருநகரங்களுக்கு இடையிலும் அமைந்துள்ளது.[5]
சுபாங் ஜெயா, கிளானா ஜெயா, சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா, கோத்தா டாமன்சாரா, ஆரா டாமன்சாரா, முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், இந்தச் சுபாங் நகரத்திற்கு மிக அருகில் உள்ளன. கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang International Airport) இங்குதான் உள்ளது.
பெட்டாலிங் மாவட்டம்
[தொகு]
இந்த மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால், அண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டின் அதிகாரப் பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,298,123 மக்கள் வசிக்கின்றார்கள்.
பெட்டாலிங் மாவட்டம் சுமார் 484.32 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. ஏராளமான நகர துணைப் பிரிவுகள், பழைய துணை நிர்வாகங்கள் (முக்கிம்) உள்ளன. இவை அனைத்தும் டாமன்சாரா, சுபாங் மற்றும் பெட்டாலிங் போன்ற ஒரே பெயர்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சுபாங் மக்களவைத் தொகுதி
[தொகு]சுபாங் தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சா ஆலாம்; பெட்டாலிங் ஜெயா தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P097 | 1995–1999 | மகாலிங்கம் முத்துக்கிருஷ்ணன் (M. Mahalingam) |
பாரிசான் (மலேசிய இந்திய காங்கிரசு) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | கர்னைல் சிங் நிஜார் (Karnail Singh Nijhar) | ||
11-ஆவது மக்களவை | P107 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | சிவராசா ராசையா (Sivarasa Rasiah) |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | P104 | 2018–2022¹ | வோங் சென் (Wong Chen) |
பாக்காத்தான் அராப்பான் (பி.கே.ஆர்) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது |
குறிப்பு: 1 2018-இல் சுபாங் மக்களவைத் தொகுதி; முன்னாள் கெலனா ஜெயா தொகுதியிலிருந்து தெற்கே சுபாங் ஜெயா நகர மையத்திற்கு மாற்றப்பட்டது
சுபாங் மக்களவை தேர்தல் முடிவுகள்
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
230,490 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
179,578 | 77.07% | ▼ 9.59 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
177,983 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
657 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
938 | - | - |
பெரும்பான்மை (Majority) |
115,074 | 64.65% | ▼ 8.82 |
வெற்றி பெற்ற கட்சி: | ![]() |
பாக்காத்தான் | |
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6] |
சுபாங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
[தொகு]சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
![]() |
வோங் சென் (Wong Chen) |
பாக்காத்தான் (PH) | 138,259 | 77.68% | -5.40 ▼ |
![]() |
ஆங் கியாங் நி (Ang Hiang Ni) |
பெரிக்காத்தான் (PN) | 21,185 | 13.03% | +13.03 ![]() |
![]() |
கோவ் சியோங் வை (Kow Siong Wai) |
பாரிசான் (BN) | 16,539 | 9.29% | -0.32 ▼ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. Retrieved 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. Retrieved 2020-01-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-05-27. Retrieved 2024-05-18.
- ↑ "Subang". www.durianproperty.com.my. DurianProperty.com.my. Retrieved 27 May 2014.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. Retrieved 16 February 2024.