உள்ளடக்கத்துக்குச் செல்

சிலாங்கூர் சுல்தான் சாலேவுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலாங்கூர் சுல்தான் சாலேவுதீன்
Salehuddin of Selangor
Sultan Salahuddin Shah
1-ஆவது சிலாங்கூர் சுல்தான்
ஆட்சிக்காலம்1766–1782[1]
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னையவர்சுல்தான் இப்ராகிம் சா
சிலாங்கூர் யாங் டி-பெர்துவான் பெசார்
ஆட்சிக்காலம்1743–1766
பிறப்பு1705
இறப்பு1782 (வயது 76–77)
புதைத்த இடம்1857
துணைவர்எங்கு புவான் பிந்தி பதுகா செரி சுல்தான் அலாவுதீன் ரியாவ் ரியாட் சா
குழந்தைகளின்
பெயர்கள்
சுல்தான் இப்ராகிம் சா
ராஜா னல்லா
ராஜா பென்னோ
ராஜா பேராக்
ராஜா சரிபா
பெயர்கள்
Raja Lumu bin Almarhum Opu Daeng Chelak
பட்டப் பெயர்
Sultan Salehuddin Shah Ibni Almarhum Yamtuan Muda Riau II Opu Daeng Chelak
மறைவுக்குப் பிந்தைய பெயர்
மர்கும் சா
மரபுஅரச லூவு பூகிஸ்
ஒப்பு டாயேங் செலாக்
தந்தையாம் துவான் மூடா ரியாவ் II ஓபு டேங் செலக் பின் அல்மர்கும் ஓபு டேங் ரிலாகா
தாய்எஞ்சிக் தொமித்தா[1]
மதம்சன்னி

சுல்தான் சாலேவுதீன் அல்லது சிலாங்கூர் சுல்தான் சாலேவுதீன் (ஆங்கிலம்: Salehuddin of Selangor; மலாய்: Sultan Salehuddin Shah ibni Almarhum Yamtuan Muda Riau II Opu Daeng Chelak; (சாவி: سلطان صالح الدين شاه ابن المرحوم يمتوان مودا رياو ٢ اوڤو داءيڠ چلق; சீனம்: 雪兰莪州的萨勒胡丁) (1705–1782) என்பவர் 1766 முதல் 1782 வரையில் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர்; மற்றும் 1-ஆவது சிலாங்கூர் சுல்தான் ஆவார்.[2] இவரின் இயற்பெயர் ராஜா லுமு பின் ஒப்பு டாயேங் செலாக் (Raja Lumu bin Opu Daeng Chelak).

சுல்தான் சாலேவுதீன், பூகிஸ் போர்வீரர் இளவரசர் ஓபு டேங் செலாக் என்பவரின் மகனாவார். அவர் 1766-ஆம் ஆண்டு சிலாங்கூரின் சுல்தான் சாலேவுதீன் என்ற பட்டத்தைப் பெற்றார். 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் பூகிஸ் மக்கள் ஏற்கனவே குடியேறி விட்டனர்.

பின்னணி

[தொகு]

1705-ஆம் ஆண்டு, சுல்தான் சாலேவுதீன் பிறந்த போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ராஜா லுமு பின் ஒப்பு டாயேங் செலாக் (Raja Lumu bin Almarhum Opu Daeng Chelak). அவர் பூகிஸ் போர் வீரரான டாயேங் செலாக்கிற்கும் முதல் மனைவி எஞ்சிக் தொமித்தாவிற்கும் பிறந்த இரண்டாவது மூத்த மகன் ஆவார். இவர் 1743-ஆம் ஆண்டு, ராஜா லுமு எனும் பெயரில் சிலாங்கூரின் முதல் ராஜா (Raja of Selangor) என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர் 1766-ஆம் ஆண்டு சிலாங்கூரின் முதல் சுல்தானாகப் பதவியேற்கும் வரை ராஜா என்ற பட்டத்தை வைத்திருந்தார்.[3]

சிலாங்கூர் சுல்தான்

[தொகு]

ராஜா லுமுவைத் (சுல்தான் சாலேவுதீன்) தொடர்ந்து, இரண்டு பூகிஸ் தலைவர்கள் சிலாங்கூர் பகுதியில் குடியேறினர்: கிள்ளானில் ராஜா துவா குடியேறினார்; மற்றும் லுக்குட் பகுதிக்கு தெற்கே உள்ள லிங்கியில் டாயேங் கெம்போஜா குடியேறினார்.

ராஜா லுமு முதலில் பேராக் சுல்தான் மற்றும் ஜொகூர் சுல்தான் ஆகிய இரு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே கட்டத்தில் இடச்சுக்காரர்களிடம் இருந்தும் எதிர்ப்பைச் சந்திக்க வேன்டி இருந்தது. ஆனால் இறுதியில் தனது இறையாண்மையை வலுப்படுத்த முடிந்தது. நவம்பர் 1766-இல் பேராக் சுல்தானின் சகோதரர் மகளை மணந்ததன் மூலம் ராஜா லுமுவின் சட்டபூர்வமான தன்மை பலப்படுத்தப்பட்டது.[4]

1766-ஆம் ஆண்டு வாக்கில், புதிதாக முடிசூட்டப்பட்ட சுல்தான் சாலேவுதீன், தன் அரச நிர்வாகத்தின் தளம் சிலாங்கூர் ஆற்றுப் படுகையின் ஓரத்தில் அமைந்து இருந்ததால், 'சிலாங்கூர்' என்ற பெயரை தன் சுல்தானகமாகப் பயன்படுத்தினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ahmad Farhan Abdullah Zakaria; Mohd Samsudin (July 2019). "Pembentukan Istilah dan Stratifikasi Aristokrat Melayu Selangor Era Sultan Salehuddin, Sultan Selangor Pertama, 1766-1782". Journal of Southeast Asia Social Sciences & Humanities 89 (2 (2019)). பன்னாட்டுத் தர தொடர் எண்:0126-5008. http://ejournals.ukm.my/akademika/article/view/26663/9683. 
  2. Winstedt, R. O. (1933). Journal Of The Malayan Branch Of The Royal Asiatic Society Vol: XI (in ஆங்கிலம்). Singapore: The Malayan Branch Of The Royal Asiatic Society. p. 6.
  3. 3.0 3.1 Zakaria, Abdullah (2019). "Pembentukan Istilah dan Stratifikasi Aristokrat Melayu Selangor Era Sultan Salehuddin, Sultan Selangor Pertama, 1766-1782". Journal of Southeast Asia Social Sciences and Humanities 89 (2): 68. https://ejournals.ukm.my/akademika/article/view/26663/9683. 
  4. J M Gullick (2004). A History of Selangor. The Malaysian Branch of the Royal Asiatic Society. ISBN 9679948102.
அரச பட்டங்கள்
முன்னர்
இல்லை
சிலாங்கூர் சுல்தான்
1766–1782
பின்னர்

மேலும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • R.O. Winstedt, "A History of Selangor (1680–1874)", Journal of the Malayan British Royal Asiatic Society (JMBRAS)12(3), October 1934, pp. 1–34

வெளி இணைப்புகள்

[தொகு]