சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் சா
சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் சா Ibrahim Shah of Selangor Sultan Ibrahim Shah, Selangor | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
![]() சுல்தான் இப்ராகிம் அரச முத்திரை | |||||||||
2-ஆவது சிலாங்கூர் சுல்தான் | |||||||||
ஆட்சிக்காலம் | 1782 – 27 அக்டோபர் 1826 | ||||||||
முன்னையவர் | சுல்தான் சாலேவுதீன் | ||||||||
பின்னையவர் | சுல்தான் முகமட் சா | ||||||||
சிலாங்கூர் யாங் டி-பெர்துவான் பெசார் | |||||||||
பிறப்பு | ராஜா இப்ராகிம் பின் ராஜா லுமு (1736) | ||||||||
இறப்பு | 27 அக்டோபர் 1826 (வயது 89–90) கோலா சிலாங்கூர், சிலாங்கூர் | ||||||||
புதைத்த இடம் | புக்கிட் மெலாவத்தி அரச கல்லறை, புக்கிட் மெலாவத்தி, கோலா சிலாங்கூர் | ||||||||
வாழ்க்கைத் துணைகள் |
| ||||||||
| |||||||||
மரபு | அரச லூவு பூகிஸ் ஒப்பு டாயேங் செலாக் | ||||||||
தந்தை | சுல்தான் சாலேவுதீன் சா இப்னி யாம் துவான் மூடா ரியாவ் II ஒப்பு டாயேங் செலாக் | ||||||||
தாய் | எங்கு புவான் பிந்தி பதுகா செரி சுல்தான் அலாவுதீன் ரியாவ் ரியாட் சா | ||||||||
மதம் | சன்னி |
சுல்தான் இப்ராகிம் சா அல்லது சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் சா (ஆங்கிலம்: Ibrahim Shah of Selangor; மலாய்: Sultan Ibrahim Shah ibni Sultan Salehuddin Shah ibni Yamtuan Muda Riau II Opu Daeng Chelak; (சாவி: سلطان إبراهيم شاه ابن المرحوم سلطان صالح الدين شاه; சீனம்: 雪兰莪州的依布拉欣沙) (1736 – 27 அக்டோபர் 1826) என்பவர் 1782 முதல் 1826 வரையில் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர்; மற்றும் 2-ஆவது சிலாங்கூர் சுல்தான் ஆவார்.[1]
இவர் ஒரு வலிமையான; மற்றும் துடிப்பான ஆட்சியாளராக அறியப் படுகிறார். இவர் ஓர் ஆங்கிலோ பண்பாட்டு ஆர்வலராகவும் (Anglophile) இருந்தார்.[2] சூலை 13, 1784 அன்று, இடச்சுக்காரர்கள் கோலா சிலாங்கூரைக் கைப்பற்றினார்கள்.[3] அந்தக் கட்டத்தில் அந்தப் பகுதியைப் பாதுகாக்க மெலாவத்தி கோட்டை இருந்த போதிலும் கோலா சிலாங்கூர் கைப்பற்றப்பட்டது.
வாழ்க்கை
[தொகு]கோலா சிலாங்கூர் கைப்பற்றப்பட்ட பின்னர், சுல்தான் இப்ராகிம் சா பதவி நீக்கம் செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டார்.[2] 1785-ஆம் ஆண்டு பகாங் மாநில உதவியுடன், சுல்தான் இப்ராகிம் மேற்கொண்ட ஒரு தாக்குதலில் மெலாவத்தி கோட்டையை மீண்டும் கைப்பற்றினார்.[4]
சுல்தான் இப்ராகிம் சா, பேராக் பகுதியில் சயாமியர்களின் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பேராக் சுல்தானகத்திற்கு பெரிதும் உதவினார். அதன் பிறகு, தான் செய்த உதவிக்கு பாதுகாப்புப் பணம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.[5]
1818-ஆம் ஆண்டில் சிலாங்கூர், ஐக்கிய இராச்சியத்துடன் அரசியல் உறவுகளைத் தொடங்கியது.[6] இருப்பினும், சுல்தான் இப்ராகிம் சாவின் வாரிசான சுல்தான் முகமட் சா அரியணை ஏறிய பிறகு, கோலா சிலாங்கூர் பகுதி குறிப்பிட்ட அளவிற்கு சிதைவு அடைந்தது. அங்கு கடற்கொள்ளைகள் மிகுந்தன; மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து வரிகள் வசூலிக்கப்பட்டன; இவையே பின்னர் நாட்களில், உள்ளூர் மக்களின் குடி பெயர்வுகளுக்கும் வழிவகுத்தன.[2][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ahmad Farhan Abdullah Zakaria; Mohd Samsudin (July 2019). "Pembentukan Istilah dan Stratifikasi Aristokrat Melayu Selangor Era Sultan Salehuddin, Sultan Selangor Pertama, 1766-1782". Journal of Southeast Asia Social Sciences & Humanities 89 (2 (2019)). பன்னாட்டுத் தர தொடர் எண்:0126-5008. http://ejournals.ukm.my/akademika/article/view/26663/9683.
- ↑ 2.0 2.1 2.2 Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Marican. p. 214.
- ↑ "Bukit Melawati - Kuala Selangor, Selangor Malaysia". JourneyMalaysia.com. Retrieved 2018-09-24.
- ↑ Leong, Ewe Paik (2017). "More than fireflies in Kuala Selangor". New Straits Times. Retrieved 2018-09-24.
- ↑ The Royal Asiatic Society (1933). Journal Of The Malayan Branch Of The Royal Asiatic Society Vol-XI (in ஆங்கிலம்). The Malayan Branch Of The Royal Asiatic Society, Singapore. p. 11.
- ↑ Great Britain. Colonial Office (1890). Papers Relating to the Protected Malay States [Annual Report]. p. 26. Retrieved 2018-09-24.
- ↑ "Political and statistical account of the British settlements". eresources.nlb.gov.sg. Retrieved 2023-03-05.
மேலும் காண்க
[தொகு]- சிலாங்கூர் சுல்தான்
- மலேசியாவின் முடியாட்சிகள்
- மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை
- மலேசிய மாநிலங்களின் தலைவர்கள்