உள்ளடக்கத்துக்குச் செல்

சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன்
Sultan Salahuddin of Selangor
Sultan Salahuddin Abdul Aziz Shah
2001-இல் சுல்தான் சலாவுதீன்
11-ஆவது மலேசியப் பேரரசர்
ஆட்சிக்காலம்26 ஏப்ரல் 1999 - 21 நவம்பர் 2001
முன்னையவர்நெகிரி செம்பிலான் துவாங்கு ஜபார்
பின்னையவர்பெர்லிஸ் சிராஜுதீன்
முடிசூட்டுதல்23 செப்டம்பர் 1999
சிலாங்கூர் சுல்தான்
ஆட்சிக்காலம்3 செப்டம்பர் 1960 - 21 நவம்பர் 2001
முடிசூட்டுதல்28 சூன் 1961
முன்னையவர்சிலாங்கூர் சுல்தான் இசாமுதீன்
பின்னையவர்சிலாங்கூர் சுல்தான் சராபுதீன்
பிறப்பு(1926-03-08)8 மார்ச்சு 1926
ஜுக்ரா, கோலா லங்காட், சிலாங்கூர், மலேசியா
இறப்பு21 நவம்பர் 2001(2001-11-21) (அகவை 75)
கோலாலம்பூர், Malaysia
புதைத்த இடம்22 நவம்பர் 2001
துணைவர்
  • ராஜா நூர் சைதாதுல்-இக்சான்
    (தி. 1943; ம.மு. 1956)
  • செ மகிரா (ம.மு. 1954)
  • தெங்கு அம்புவான் ரகிமா
    (தி. 1956; இற. 1993)
  • சரிபா சல்மா
    (தி. 1961; ம.மு. 1962)
  • பரமேசுவரி சித்தி ஆயிசா (தி. 1990)
குழந்தைகளின்
பெயர்கள்
  • தெங்கு நோர் அலிஜா
  • சிலாங்கூர் சுல்தான் சராபுதீன்
  • தெங்கு புத்திரி சோபியா
  • தெங்கு சுலைமான் சா
  • தெங்கு புத்திரி சகாரியா
  • தெங்கு பத்திமா
  • தெங்கு அப்துல் சமாட்
  • தெங்கு புத்திரி அரபியா
  • தெங்கு புத்திரி ஆயிசா
  • தெங்கு அகமட் சா
  • தெங்கு புத்திரி நோர் மரினா
  • தெங்கு புத்திரி நோர் செகான்
பெயர்கள்
Tengku Abdul Aziz Shah ibni Tengku Alam Shah
பட்டப் பெயர்
Sultan Salahuddin Abdul Aziz Shah Al-Haj ibni Almarhum Sultan Hisamuddin Alam Shah Al-Haj
மரபுஅரச லூவூ பூகிஸ்; தென் சுலாவெசி
தந்தைசிலாங்கூர் சுல்தான் இசாமுதீன்
தாய்தெங்கு அம்புவான் ஜெமா
மதம்இசுலாம்

சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா அல்லது சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் (ஆங்கிலம்; மலாய்: Sultan Salahuddin Abdul Aziz Shah Al-Haj ibni Almarhum Sultan Hisamuddin Alam Shah Al-Haj; சீனம்: 蘇丹沙拉胡丁·阿都阿茲沙) (8 மார்ச் 1926 - 21 நவம்பர் 2001) என்பவர் 1960-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர் ஆவார்.

மேலும் 1999-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் மலேசியாவின் பதினோராவது பேரரசர் பதவியையும் வகித்தவர் ஆவார்.[1]

பொது

[தொகு]

சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா சிலாங்கூரின் தெங்கு லக்சமானாவாக 1 ஆகஸ்டு 1946-இல் நியமிக்கப்பட்டார்; மற்றும் சிலாங்கூரின் ராஜா மூடாவாக (முடி இளவரசர்) 13 மே 1950-இல் நியமிக்கப்பட்டார்.

அவரின் தந்தை, சுல்தான் இசாமுதீன் ஆலாம் சாவின் மறைவுக்குப் பிறகு, 3 செப்டம்பர் 1960-இல், சிலாங்கூரின் எட்டாவது சுல்தானாகப் பதவியேற்றார். 28 சூன் 1961-இல் சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா என்ற பட்டப் பெயருடன் முடிசூட்டு விழா நடைபெற்றது.

கோலாலம்பூர் உடன்படிக்கை

[தொகு]

1 பிப்ரவரி 1974-இல், கோலாலம்பூர் மாநகரை ஒரு கூட்டரசுப் பிரதேசமாக அமைப்பதற்காக, சிலாங்கூரில் இருந்து மத்திய அரசுக்கு மாற்றும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர் சுல்தான் சுல்தான் சலாவுதீன் ஆவார்.[4] கையெழுத்திட்ட பிறகு சுல்தான் சலாவுதீன் அழுதார் என்றும் அறியப்படுகிறது.

ஏனெனில் அவர் கோலாலம்பூர் நகரத்தைத் தன் சிலாங்கூர் மாநிலத்தின் பெருமைக்குரிய நகரமாகக் கருதினார். ஆனாலும் அவர் மலேசியாவின் எதிர்கால நன்மைக்காக கோலாலம்பூரை விட்டுக் கொடுத்தார்.

கோலாலம்பூர் மாநகரை சுல்தான் சலாவுதீன் விட்டுக் கொடுத்தற்காக, கோலாலம்பூர் - [[சிலாங்கூர் எல்லைப் பகுதியில்; கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலையில், 1981-இல், கோத்தா தாருல் எசான் (Kota Darul Ehsan) எனும் வளைவு அமைக்கப்பட்டது.[2]

சா ஆலாம் உருவாக்கம்

[தொகு]

1978-இல் புதிய சிலாங்கூர் மாநிலத் தலைநகரமாக சா ஆலாம் நகரத்தை நிறுவினார். கோலாலம்பூர் ஒரு கூட்டரசு பிரதேசமாக மாறியதால் அதற்குப் பதிலாக ஒரு புதிய நவீன மாநிலத் தலைநகரம் தேவை என்றார்.

அந்தக் கட்டத்தில், அதாவது கோலாலம்பூர் பிரிந்து சென்ற பிறகு, கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது. தற்போது சா ஆலாம் மாநகரில் பல கட்டிடங்களும், சாலைகளும் சுல்தான் சலாவுதீன் பெயரால் அழைக்கப்படுகின்றன.

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம்

[தொகு]

சா ஆலாம் மாநகரம் மலேசியாவில் நவீனமாக வடிவு அமைக்கப்பட்ட ஒரு புதிய நகரம் ஆகும். மலேசியாவில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் சா ஆலாம் முதல் நகரமாகப் புகழ் பெறுகிறது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ அல்லது 16 மைல்கள் மேற்கே அமைந்து உள்ளது. 1974-ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேசமாக கோலாலம்பூர் அறிவிக்கப்பட்டது. அதுவரை கோலாலம்பூர் நகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகவும், மலேசியாவின் தலைநகரமாகவும் விளங்கி வந்தது.

விருதுகள்

[தொகு]

சிலாங்கூர் விருதுகள்

[தொகு]

மலேசிய விருதுகள்

[தொகு]

வெளிநாட்டு விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Making Of Galeri Diraja Sultan Abdul Aziz, Klang பரணிடப்பட்டது 25 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம், Pertubuhan Arkitek Malaysia CPD Committee 2007, Laurent Lim Aun Giap
  2. The Nation Mourns The Passing Of A Great Ruler பரணிடப்பட்டது 30 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம் 24 November 2001, MySinchew.com
  3. "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 2001" (PDF). Archived (PDF) from the original on 28 May 2016. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
  4. "A royal gesture". The Straits Times: pp. 8. 14 July 1975. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19750714-1.2.37.2. 
  5. "Kelantan Honours Selangor Ruler". The Straits Times: p. 11. 10 July 1966. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19660710-1.2.13.54. 
  6. "Two Sultans honoured". The Straits Times: pp. 5. 23 June 1964. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19640623-1.2.40. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]